வியாழன், 20 அக்டோபர், 2016

இந்திய குழந்தைகள் வங்கி

இப்போது புதுவிதமான 100 ரூபாய் கள்ள நோட்டுகள் , புழக்கத்திற்கு வந்துள்ளது. 
இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும், கரன்சி நோட்டு போலவே, கள்ள நோட்டுகள் பல இடங்களில் வெளியாகி புழங்குகின்றன. 
அதில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து கூட அச்சு அசலாக தெரியும். 
ஆனால் தற்போது  ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக, 'இந்திய குழந்தைகள் வங்கி' என்ற பெயரில் 'சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா' என்ற ஆங்கில வாசகம் ரிசர்வ் வாங்கி வடிவமைப்பிலேயே அடங்கிய, கள்ள நோட்டு புழக்கத்தில் வந்துள்ளது. 
அதில் கீழே  ரிசர்வ் வங்கி கவர்னர்க்கு பதிலாக  கிறிஸ்துமஸ் தாத்தா, 'சான்டா கிளாஸ்' பெயரில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. 

மேலும், 'ஒன் அண்ட்ரட் ருபீ' என்பதற்கு பதிலாக, 'ஒன் அண்ட்ரட் கூப்பன்' என்று அச்சிடப்பட்டுள்ளது.  பார்ப்பதற்கு, அசல், 100 ரூபாய் போலவே தோற்றம் அளிக்கிறது; இதை, சட்டவிரோத கும்பல் தான் புழக்கத்தில் விடுகிறதா அல்லது விளையாட்டுத்தனமாக, யாராவது இப்படி செய்கின்றனரா என புரியாமல், போலீசாரும், வங்கித் துறையினரும் குழப்பம் அடைந்துள்ளனர். 
இந்தி  நடிகை மேகா சக்ரவரத்தி, சில தினங்களுக்கு முன், அந்த ரூபாய் நோட்டை, ஆட்டோ டிரைவரிடம் இரவு நேரத்தில் வாங்கி ஏமாந்ததை, தன் முகநுால் பக்கத்தில், படத்துடன் வெளியிட்டுள்ளார். தற்போது வட மாநிலங்களில் பரவி வரும் இந்த சின்னப்பிள்ளைத்தனமான 100ரூபாய் கள்ள நோட்டு நம் பக்கம் விரைவில் வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இனி 1000,500 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி 100ரூபாய் நோட்டுகளையும்  உள்ள வாசகங்களை படித்து பார்த்து பின்னர் கையில் வாங்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.
யாரோ 100 ரூபாய் கள்ள நோட்டு அடிக்க புறப்பட்டு ஏதோ தொழில் நுட்ப  கோளாறால் இப்படி சின்னப்புள்ளத்தனமா அச்சடித்து விட்டார்கள் போலிருக்கிறது.ஆனால் தைரியமாக புழக்கத்திலும் விட்டு விட்டார்களே.

வாரமானால் பையுடன் சென்று பிராய்லர் கோழி வாங்கி சமைத்து உண்டு மகிழ்பவரா நீங்கள்.?
உங்கள் கவனத்துக்கு 

பிராய்லர் கோழி பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளுக்கு பறவைகாய்ச்சல் பரவி உள்ளது. 
இதுவரை 2 இலட்சம் கோழிகள் இறந்துள்ளன.
உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
ஏற்கனவே தடை செய்யப்பட மருந்துக்கள் பிராய்லர் கோழி எடையை கூட்ட கோழிகளுக்கு ஊசியாக போடப்படுகிறது.அதனால் அதன்  இறைசியை உண்பவர்களுக்கு பல ஹார்மோன் கோளாறு பிரசினைகள்,வியாதிகள் உண்டாவதாக செய்திகள் உண்டு . இப்போது பறவை காய்சசல் .


 பறவைகாய்ச்சல் பாதிப்பால் தாக்கப்பட்ட பிராய்லர் கோழி இறைச்சி 

=====================================================================================
ன்று,
அக்டோபர்-20.
  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)
  • கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)
  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
  • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)

=====================================================================================
அடையாளம் தெரியவில்லை.....,

துபாயில் புதிதாக திருமணமான நபர், தன் மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அடையாளம் தெரியவில்லை என விவாகரத்து செய்துள்ளார்.

கடற்கரைக்கு தன் மனைவியுடன்  சென்ற அந்த நபர், நீச்சலடித்துவிட்டு வந்த அவரின் மனைவியின் உண்மையான முகத்தை பார்த்து அடையாளம் தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம். 


அளவுக்கதிமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். 

இந்த சம்பவத்தில் மனமுடைந்தப் பெண், உளவியல் நிபுணர் டாக்டர் அப்துல் அஜிசிடம் உதவிக் கோரியுள்ளார். அந்த உளவியல் நிபுணர் ஊடகங்களில் அளித்த பேட்டியில், “அந்த பெண் திருமணத்திற்கு முன்னர்  பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார். மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார்.. ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. 

இனி அவர்கள் சேர்வது கடினம்” இவ்வாறு கூறியுள்ளார்.