குப்பை மேனி,

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. 
மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.
குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் / கொழுப்பைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து குப்பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
குப்பைமேனி
குப்பைமேனி தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலுமுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும் சாதாரணமாக பரவிக் காணப்படுகின்ற ஒரு களைச் செடி. இரண்டரை அடி வரை உயரமுள்ளது.
குப்பைமேனி மாற்று அடுக்கிலும் வட்ட அடுக்கிலுமாக அமைந்த, ஓரத்தில் பற்களுடன், பல அளவுகளில் உள்ள இலைகளை உடைய தாவரம். இலைக்காம்புகளின் இடுக்குகளில் அமைந்த பசுமையான, கொத்தான பூக்களைக் கொண்டது.
குப்பைமேனி தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், சாதாரணமாக களைச் செடியாக பரவிக் காணப்படும். பூனைவணங்கி என்கிற மாற்றுப் பெயரும் வழக்கத்தில் உள்ளது. குப்பைமேனி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.
தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும் அல்லது குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வரலாம். நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை, ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம், மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றி வர வேண்டும்.
1 பிடி குப்பைமேனி வேர், கழுவி சுத்தம் செய்து கொண்டு, 1 லிட்டர் நீரில் இட்டு, 200மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, குடிக்க பூச்சிகள் வெளியாகும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. இந்த நிலையில் தயிர் சாதம் கொடுக்கலாம். சிறுவர்களுக்கு இந்த அளவில் ¼ பங்கு மட்டும் கொடுக்க வேண்டும்.
குப்பைமேனி இலைச் சாற்றினை 4 துளிகள் அளவு நாக்கில் தடவலாம் அல்லது குப்பைமேனி இலையைக் காய வைத்துத் தூள் செய்து, ¼ தேக்கரண்டி அளவு உட்கொண்டுவர கோழை வெளிப்படும்.
குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.
குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவை சம அளவாக எடுத்துக்கொண்டு, வாணலியில் ஒன்றாக விட்டு, சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
மூட்டுவலியுள்ள பகுதிகளில் இதனை நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும்.
வண்டுக்கடி வீக்கம் குணமாக இலையை அரைத்து வீக்கத்தின் மீது பற்றுப்போட வேண்டும்.
தேக ஆரோக்கியத்திற்கு: பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவிவர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.
10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்.
மாந்திரீக மூலிகையான குப்பைமேனியில் உள்ள‍ மருத்துவ குணங்கள்
நம் சித்த‍ர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல அரிய வகையான மூலிகைச் செடிகளை, கண்டடெடுத்து
நமது உள்ள‍த்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளிதரும் வழிக ளைச்சொல்லிச் சென்றுள்ள‍னர். ஆனால் காலப்போக்கில் நாம் அவற்றை பின்னுக்குத் தள்ளி, மேல்நாட்டு மோகம் காரணமாக இவற்றின் அருமை பெருமைகளை அறியாமல் விட்டுவிட்டோம். இந்த இந்த குப்பைமேனி மூலிகைச் செடி, பல்வேறு மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. மேலும் இது மாந்திரீக பயன்பாட்டுக்கும் பயன்படுவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.
ஆம்! பிறரை வசீகரப்படுத்தும் இயல்புடைய இந்த குப்பைமேனி ஒரு மாந்திரீக மூலிகையாகும்.
குப்பைமேனியின் மகத்துவங்கள்
இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள் , உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை போக்கவல்லது. இதன் வேரை கிராம் 200 மி.லி நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறி து மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த் திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச் சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப் பூச்சி வெளியேறும்.
குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத் து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும்.
குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் அழகு கொடுக்கும்.
நாம் உட்கொள்ளும் உணவு எப்போதும் நமக்கு ஜீரணமாகும் என கூற முடியாது. சில நேரங்களில் அது நமக்கு வயிற்றில் தொல்லை களையும் ஏற்படுத்தலாம், அதுபோன்ற இன்னல்களை எளிதாக குணப்படுத்த கூடியது தான் குப்பைமேனி.
இதை யாரும் வளர்ப்பதில்லை என் றாலும் காடுமேட்டில் தானே வளரும் தன்மை உடையது.
சிறு செடியாக வளரும், இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவ மாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும்.
இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப்புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இரு க்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும்.
குப்பைமேனி துவையல்
முதலில் குப்பைமேனி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு கொஞ்சம் கடுகு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பின்பு நறுக்கிய இலைகளை வாணலியில் போட்டு நன்கு தாளித்து பின்பு சிறிது நீருடன் மிக்சியில் அடித் தால் குப்பைமேனி துவையல் ரெடி.
பயன்கள்
இதை சாப்பிட்டு வந்தால் தீராத தலைவலியும், பக்க வாத நோய்களும் பறந்துவிடும்.
மூல நோயிற்கு இந்த துவையல் ஒரு சிறந்த மருந்து. மேலும் நாளடை வில் மூலம் குறைய வாய்ப்பு உண்டு.
குப்பைமேனி கஷாயம்
வாணலியில் குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக் கரைத்து வைத்து, சுண்டக் காய்ச்ச வேண்டும்.
இதில் உப்பு ‘பூர்த்து’ மிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதன் பிறகு குப்பைமேனியில் இருந்து வடிந்த நீருடன் சிறிது மிளகு சேர்த்து கொதிக்க விட்டால் குப்பை மேனி கஷாயம் தயார்.
பயன்கள்
இந்த கஷாயத்தை தினசரி இருவேளை சாப்பிட்டு வந் தால், வாயு மற்றும் அஜீரண கோளாறுகள் நீங்கும்.
நெஞ்சுக்கோழையை நீக்கும், இருமலைக் கட்டுப்படுத்தும், மேலும் விஷக் கடி போன்ற நோய்களை குணப்படுத்தும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?