ஞாயிறு, 13 நவம்பர், 2016

ஜி.எஸ்.டி, வரி குழப்பம்?சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி.,  யை, வரும் நிதியாண்டில் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் அதிகாரம் தொடர்பாக, 
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அதிகார போட்டி நிலவுகிறது.
இதனால், ஜி.எஸ்.டி.,வரியை நடைமுறைக்கு கொண்டு  வரும் நாள் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரி விகிதங் களுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை  கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
2017ம்  ஆண்டு, ஏப்ரல்1ல் இருந்து, நடைமுறைப்படுத்த மத்திய அரசு  திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்த வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடிய உயர் அமைப்பான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர்தலைமையில்  தற்போது  நடந்தது. இதில் உறுப்பினர்களாக உள்ள, மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விகிதம், 5 சதவீதம் முதல், 28 சதவீதம் வரை நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் பல மாநிலங்கள் சில நடைமுறையாக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாலும் ,மத்திய,மாநில அரசுகளுக்கான பங்கை தீர்மானிப்பதில்  சில பிரச்னைகள் ஏற்பட்டதால் கூட்டத்தில் தீர்வு காணப்படவில்லை. 

ஜி.எஸ்.டி.,ஆணையத்தை  கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய,மாநில அரசுகளுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பது மாநிலங்களின் கோரிக்கை ஆகும்.
 அதேசமயம், அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வாய்த்துள்ளது.

அதுபோலவே, சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்ட பிறகு  அதே பொருட்களுக்கு பிற வடிவில், மாநில அரசுகள் வரிகள் விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது; 

ஆனால் பல மாநிலங் களில் பல விதமான வரிகள் உள்ளன, கேளிக்கை வரி, உள்ளாட்சி வரி என்ற பெயரில் சில வகை வரிகள் விதிக்கப்படுகின்றன. 

இதை விட்டுக்கொடுக்க மாநிலங்கள் தயாரில்லை. இதனால், முடிவெடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, திட்டமிட்டபடி, 2017 ஏப்ரல், 1ல்ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. 
ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் நிதியமைச்சகம் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. சில விஷயங்களில், கருத்து வேறுபாடு நிலவுகிறது.இரு அரசுகளுமே தங்கள் அதிகாரத்தை விட்டு கொடுக்க தயாராக இல்லை.
இதனால் ஜி.எஸ்.டி., வரி நடைமுறை பற்றி முடி வெடுப்பதில் தாமதம் உண்டாகியுள்ளது . 
மத்திய நிதியமைசர் அருண் ஜேடலி ஒவ்வொரு மாநில முதல்வர்களையும் தனித்தனியாக கண்டு சரிப்படுத்தி(?)வருகிறார்.இதன் மூலம்  அரசியல் ரீதியாக பிரச்னைக்கு தீர்வு ஏற்படலாம்.பின்னர்   நவம்பர்24 , 25 தேதிகளில்  மீண்டும் ஜி.எஸ்.டி.,ஆணையம்  கூட்டம் நடைபெறும். அதில்  இறுதி முடிவு எட்டப்படலாம் என் று மத்திய நிதிஅமைச்சக அதிகாரிகள்  நம்புகின்றனர் .
அநேகமாக இது நடக்கலாம்.கடைசிவரை எதிர்த்த தமிழக அரசை ஜி.எஸ்.டி., வரி மட்டுமில்லாமல் ,உதய் மின்திட்டத்துக்கும் வலிய ஒப்புதல் அளிக்க வைத்த மோடி அரசுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் அல்ல.அந்த அளவு தனிப்பட்ட கருப்பு சலுகைகள்,வாக்குறுதிகள்  அள்ளிவிடப்படும்.மேலும் மாநில முதல்வர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்களுக்கு மாநில நலனை விட மற்ற நலன்கள் முக்கியம்தான்.

 மாநிலங்கள் வேறு சில வரிகள் விதிக்க கோரு வதை, மத்திய அரசு எதிர்க்கிறது.
 ஜி.எஸ்.டி., வரி இழப்பீடு, கூடுதல் வரி தொகுப்பில் இருந்து ஈடு செய்வதாக மத்திய அரசு கூறுகிறதது.ஆனால்  மாநிலங்கள் இதை ஏற்கவில்லை. 
 தங்கத்துக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்புதொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை.

-இவைதான் தற்போது மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள். 
இருந்தாலும் தற்போது நடந்த ஜி.எஸ்.டி.,ஆணைய  கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அவை:- 
1, நான்கு அடுக்கு வரி விதிப்பு முறை 5, 12, 18, 28 சதவீதங்களாக  ஏற்படுத்தப்படும்
2, இதில், மக்கள்  பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த பட்சமாக, 5 சதவீத வரி விதிக்கப்படும்.
3, ஆடம்பர பொருட்களுக்கு, அதிகபட்சமாக, 28 சதவீத வரி விதிக்கப்படும்
4, இந்த அதிகபட்ச வரியுடன், ஆடம்பர கார்கள், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள், மது வகைகள் மற்றும் குளிர்பானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்
5, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு கொண்டு வரப்படுவ தால், மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பை, ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் மத்திய அரசு ஈடு செய்யும் அளவுக்கு மானியமாக நிதி உதவி செய்யும்..

இருப்பினும் ஜி.எஸ்.டி., வரி விஷயத்தில் மத்திய,மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாகவும்,தனிப்பட்ட முறையிலும் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் பல இன்னமும் உள்ளது . 

500,1000 செல்லாது என்பது இந்தியாவுக்கு இது முதல் முறை அல்ல.
1946களில் 1000,5000,10000 ரூபாய் தாட்கள் தடை செய்யப்பட்டன.ஆனால் இந்திய மக்களில் 95%பேர்கள் அந்த ரூபாய் தாள்களை கண்ணால் பார்த்தது கூட இல்லை.அதனால் இந்த தடை பொது மக்களை பாதிக்கவில்லை.பாமர மக்களுக்கு இந்த தடை பற்றி செய்தியே  தெரியாது. ஆனால்1954 ஆண்டில் மீண்டும்  1000,5000,10000 ரூபாய் தாட்கள் வெளியிடப்பட்டன.
======================================================================================
ன்று,
நவம்பர்-13.

  • உலக பரிவு    தினம்

  • கிரீஸ் நாட்டின் புதிய அரசியலமைப்பு பெறப்பட்டது(1864)

  • கார்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது(1957)

  • உலக வலைப் பின்னல்(WWW) ஆரம்பம் 1990)

=======================================================================================
மோடி செய்த தேவையற்ற பதட்டத்தின் காரணம் புரிகிறதா மக்களே?