உங்களுடன் இருக்கும் உளவாளி......?

இன்று இணையத்தில் நாம் என்ன செய்கிறோம், எதைத் தேடுகிறோம், எதைப் பற்றி படிக்கிறோம் என்று உளவு பார்க்க இவர்கள் யார்? 
நம்மை உளவு பார்க்கும் உரிமை இவர்களுக்கு யார் கொடுத்தது? 
அதை வைத்துக் கொண்டு இவர்கள் என்ன செய்கிறார்கள்?
நண்பர் ஒரு கட்டுரையின் இணைப்பை மின்னஞ்சல் அல்லது சமூக வலைத்தளம் மூலம் நான் படிப்பதற்காக என்னுடன் பகிர்கிறார். கட்டுரையின் தலைப்பே படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது, சரி படிக்கலாம் என்று இணைப்பை சொடுக்கினால் (Click) அந்த கட்டுரையின் வலைப்பக்கம் முழுவதுமாக என்னுடைய உலாவியில் (Browser) இறக்குமதியாகி முடிப்பதற்கு ஒரு 3 நிமிடமாவது ஆகிவிடுகிறது. சரி முழுவதும் இறக்குமதி ஆன பின் படிக்கலாம் என்று ஏற்கனவே சற்று ஆர்வம் குறைந்த நிலையில் இருக்கும் எனக்கு மற்றொரு ஏமாற்றம். 
எழுத்துக்கள் மறைந்து திடீரென எங்கிருந்தோ ஒரு விளம்பரக் காணொளி அல்லது புகைப்படம் கண் முன் தோன்றுகிறது. முதலில் குழப்பம், பின்னர் அதிர்ச்சி வருகிறது.
என்ன காரணமென்றால், நான் சற்று நேரத்திற்கு முன் சில ஆன்லைன் வர்த்தக தளங்களில் தேடிய பொருட்களும் அதைச் சார்ந்த சில பொருட்களும் விளம்பரத்தில் இடம் பெறுகின்றன. இதை என்றாவது உணர்ந்து அதிர்ச்சியாகியுள்ளீர்களா?
இதேபோல், ஃபேஸ்புக்கிலும் (Facebook) வலது பக்கத்தில் நான் தேடிய அல்லது, நண்பரோடு ஃபேஸ்புக்கில் தனிமையில் உரையாடிய சில பொருட்கள் பற்றியும் விளம்பரங்கள் வருகிறது. 
நானும் நண்பரும் தனிமையில் உரையாடியது பற்றி இவர்களுக்கு எப்படி தெரிந்தது? 
அதுவும் உடனடியாக?
அவுட்லுக் மெயில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நண்பருக்கு ஜிமெயில் மூலம் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அனுப்பி முடித்த அடுத்த 5 நிமிடங்களில் வலது பக்கம் அல்லது மேலே நடுவில் நான் அனுப்பிய செய்தி சார்ந்து ஒரு விளம்பரம் வந்ததைக் கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்தேன்.
ஒரு கட்டத்தில் ஏன் இப்படி இணையத்தில் எங்கு பார்த்தாலும் நம்மை விளம்பரங்கள் துரத்துகின்றன என்று எண்ணி குழப்பமடைந்தேன். அடிக்கடி வரும் விளம்பரங்களால் எரிச்சலும் வருகிறது. இதற்கு காரணம் என்ன? 
இதனை எவ்வாறு தடுப்பது என்று தேடிய போது தான் சில பதில்கள் விளங்கின.
இணையத்தில் பல வலைதளங்களில் நாம் எதைப் பற்றி படிக்கிறோம், எதைத் தேடுகிறோம், எதைப் பேசுகிறோம் என்று அந்த வலைத்தளங்களே தொடர்ந்து உளவு பார்த்து, நம்முடைய தகவல்களை சேமித்து அதனை விளம்பரதாரர்களுக்கு விற்று விடுகிறார்கள். 
அதெப்படி 2-3 நிமிடங்களில் விற்றுவிட முடியும்? 
சரியான கேள்விதான். 
அதை செய்வது ஒரு மனிதன் அல்ல மாறாக அதைச் செய்வது ஒரு மென்பொருள்தான். நாம் உள்ளிடும் தகவல்கள் அனைத்தும் டேட்டாபேஸ் (Database) எனப்படும் இடத்தில் சர்வரில் (server) சேமிக்கப்படுகிறது. பின்னர் சேமிக்கப்பட்ட தகவல்களை சர்வரில் உள்ள ஒரு மென்பொருளிடம் உள்ளீடாகக் கொடுத்தால் அது அதனை ஆராய்ந்து, அதனை மையமாக வைத்து விளம்பரத்தை தயாரித்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்படும் விளம்பரங்கள் உடனுக்குடன் நமக்குக் காட்டப்படும்.
இந்த விளம்பரதாரர்கள் யார்? 
இதன் மூலம் யாருக்கு இலாபம்?
முதலில் நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் இந்த சேவைகளை பயன்படுத்த முதன்முதலில் இணையும்போது எந்த கட்டணமும் செலுத்துவதில்லை. 
உதாரணமாக ஃபேஸ்புக்கில் இணையும் பொழுது நாம் ஏதேனும் கட்டணம் செலுத்தினோமா? இல்லையே. எனவே, இலவசம் என்று நினைத்து நாம் உள்ளே வருகிறோம், நண்பர்களையும் உள்ளே வரவழைத்தோம், கூட்டம் கூடிய பின்னர் நம்முடைய சமூக நடவடிக்கைகளை கண்காணித்து நம்மையே இவர்கள் விளம்பர முதலாளிகளிடம் விற்றுவிடுகிறார்கள். நாம் வந்த பின் நம்மை விற்கவில்லை. 
இதில் இணையும் போதே நாம் விற்கப்படுகிறோம். ஃபேஸ்புக், ஜிமெயில் போன்ற சேவைகள் தொடக்கத்தில் பிரபலமடையாத காலத்தில் அதனை உருவாக்க அதில் பணம் என்ற மூலதனத்தை துணிகர முதலாளிகள் (Venture Capitalists / Angel Investors) முதலீடு செய்கிறார்கள். 
அவர்கள் அந்த முதலீட்டை செய்வதன் காரணம் இந்த சேவை வளர்ந்து பிரபலமடையும் போது அதில் உள்ள தகவல்களை மூன்றாம் தரப்பிடம் விற்றுவிடலாம் என்றும், அவ்வாறு விற்று அதனை பங்குச் சந்தையில் (IPO) விட்டு இலாபத்தை பெருக்கிக் கொண்டே போவதுதான் திட்டம். 
மனிதர்களை வாங்கவும் விற்கவும் செய்தது ஆண்டான் அடிமை முறையில்தான். இன்று முதலாளித்துவம் அதை இணையம் வழியாக செய்கிறது.
கார்ல் மார்க்ஸ் சொன்னது போல முதலாளித்துவம் அதன் தர்க்க விதிகளின்படி, மூலதனத்தை மேலும் மேலும் பெருக்க வேண்டுமாயின் அதன் சந்தைகளை விரிவுபடுத்த வேண்டும். 
அங்கே உழைக்கும் மக்கள் ஏதேனும் ஒரு வகையில் சுரண்டப்பட வேண்டும். இங்கே ஃபேஸ்புக், கூகுள் போன்ற சேவைகளின் முதலாளிகளுக்கு நாம் தினம் தினம் இலவசமாக தகவல்களைக் கொடுத்து நேரம் காலம் பார்க்காமல் கணினியின் திரை முன் உழைக்கிறோம். 
நம் உழைப்பின் ஊதியம் – பங்குச் சந்தையின் முதலாளிகளிளுக்கு இலாபம்.
அது மட்டுமா? 
முதலாளித்துவத்தை ஆதரித்தும், அவர்களின் ஆதரவில் செயல்படும் அரசுகள் இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்களை இந்த சேவை நிறுவனங்களிடமிருந்து பெற்று, அரசுக்கு எதிராக யார் கருத்து சொல்கிறார்கள் என்று அதன் குடிமக்களையே உளவு பார்க்கிறது.
 இதைத்தானே அமெரிக்காவின் NSA (National Security of Agency) செய்து வருவதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார் எட்வேர்டு ஸ்னோடன் மற்றும் ஜீலியன் அசாஞ்சே. 
ஜனநாயகத்தில் உங்களுக்கு கருத்துச் சுதந்திரம் உண்டு. நீங்கள் விமர்சனம் செய்ய உரிமை உண்டு. ஆனால் உங்களை எப்போதும் கண்காணிப்போம் என்றால் அது எப்படி சுதந்திரமாகும்?
சரி விளம்பரங்களிலிருந்தும் உளவாளிகளிடமிருந்தும் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
  1. முடிந்த வரையில் கட்டற்ற மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்தத் துவங்குவோம்.  ஒரு மென்பொருளை உருவாக்க நிரல் மொழியில் குறியீடுகளை உள்ளீடு செய்து அந்த மென்பொருள் என்ன செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் மென்பொருட்களின் நிரலை மறைத்து வைப்பதுதான் தனியுடமை மென்பொருட்களான விண்டோஸ், ஆப்பிளின் மேக் போன்றவை. குனு/லினக்ஸ் என்று அழைக்கப்படும் இயங்குதளம் ஒரு கட்டற்ற மென்பொருள். அதன் நிரல்கள் மறைக்கப்படாது.
  2. பாதுகாப்பு வளையம் – Firefox போன்ற கட்டற்ற மென்பொருள் உலாவியை பயன்படுத்துவது நல்லது. அதில் விளம்பரங்கள் வராமலும், நம்முடைய தகவல்களை விளம்பர நிறுவன சேவைகளுக்கு அனுப்பாமலும் தடுக்க பல Add-on கள் உள்ளன. அவற்றில் சமீபத்தில் பிரபலமாகி வரும் ஒரு கட்டற்ற Addon ‘uBlock‘ எனப்படும். அதனை நிறுவ இங்கே செல்லவும்.
  3. மறை குறியாக்கம் – முடிந்த வரை இணையத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு உரையாடல், செய்தி, தகவல் பரிமாற்றங்களை மறைகுறியீடு (end-to-end encrypted) செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பினால் தகவலை அனுப்பியவர், பெறுநரை தவிர்த்து யாரும் அதை புரிந்து கொள்ள முடியாது.
  4. மின்னஞ்சல் – மேற்சொன்னது போல் செயல்படும் ஒரு மின்னஞ்சல் சேவைதான் ‘Tutanota‘ (டியுடாநோடா). இதில் இணைந்து தகவல்கள், இணைப்புகளை பரிமாறிக் கொள்ளும்போது அனைத்தும் end-to-end வகையில் மறை குறியாக்கம் செய்யப்பட்டே அனுப்பப்படும். விளம்பரங்கள் இல்லை. இதுவும் ஒரு கட்டற்ற மென்பொருள் சேவைதான்.
  5. மக்கள் இணையம் – தற்போது இயங்கிவரும் ஃபேஸ்புக், ஜிமெயில், வாட்ஸ்அப் போன்ற சேவைகள் அனைத்தும் ஒரு மத்தியமயப்படுத்தப்பட்ட அமைப்பில் இயங்குகிறது. இவ்வாறு இயங்கும் சேவைகளை விடுத்து Diaspora போன்ற சேவைகளை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.
                                                                                                                                                -பிரசன்னா,
நன்றி:மாற்று.

=======================================================================================
"மோடியின் அறிவிப்பை ஆதரித்து பேசிய ரஜினி புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று வாய்ஸ்  (அறிக்கை) விடுகிறார். 

இதுவரை எத்தனையோ பிரச்சனைகள் நடைபெற்றுள்ளன. எதற்காகவாவது ரஜினி அறிக்கை விட்டுள்ளாரா? 
மோடி அறிவித்தவுடன் அறிக்கை விடுகிறார் என்றால், மோடிக்கும் ரஜினிக்கும் இடையே இருக்கும் கள்ள நட்பு.
ரஜினி அவர்களே, புதிய இந்தியா பிறந்துவிட்டது என்கிறீர்களே, உங்கள் பழைய இந்தியாவில் உங்கள் கபாலி படம் வெளியானதே அதற்கான விலை எவ்வளவு என்று தெரியுமா? 
150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்றீர்களே. 
அரசு நிர்ணயம் செய்த விலையில் நீங்கள் டிக்கெட் விற்றீர்களா? 
உங்கள் சம்பளம் என்ன? 
கபாலி படத்தின் வியாபாரம் என்ன? 
அத்தனையும் கணக்கில் வந்துள்ளதா? 
நீங்களா  கருப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறீர்களா?உங்கள் வீட்டில் இரண்டு முறை வருமான வரி சோதனை நடந்துள்ளதே .பெண்களிரில் நீங்கள் வாங்கியுள்ள சொத்துக்கள்,தொழில்கள் கணக்கு வழக்குகள் முறையாக உள்ளதா.நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வதின் மர்மம் மக்களுக்கு தெரியாதது அல்ல."
                                                                                                                                     - இயக்குநர் அமீர் .
======================================================================================
ன்று,
நவம்பர்-15.

  • பிரேசில் குடியரசு தினம்(1889)
  • உலகின் முதல் மைக்ரோபுரோசசரான 4004 ஐ இன்டெல் நிறுவனம் வெளியிட்டது(1971)
  • வெனின்சுலா ஐநாவில் இணைந்தது(1945)
  • பாலஸ்தீன விடுதலை தினம்(1988)
  • இந்தியாவில்  தனி மாநிலமாக ஜார்க்கண்ட் உருவாக்கப்பட்டது(2000)


=======================================================================================







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?