இதுவும் கொஞ்ச காலம்தான்
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோர் விபரம் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.வருமானவரி செலுத்தாமல் தவறு செய்திருந்தால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவுமே, பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்தியர்களை, நியாயமாக வரி கட்டுபவர் களாக மாற்றுவதே, இதன் மற்றொரு நோக்கம். அதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்போருக்கு, இந்த திட்டத்தை பயன்படுத்தி, அபராதம் விதிக்கப்படும்.
நாட்டில், புழக்கத்தில் உள்ள, 17 லட்சம் கோடி ரூபாய் கரன்சியில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 88 சதவீதம் ஆகும். எனவே, கணிசமான தொகை பதுக்கி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
வங்கிகளுடன்தொடர்பு கொண்டு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பழைய நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டு பெறுவோர்; இரண்டு லட்சலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, 'டெபாசிட்' செய்வோரின்விபரங்களை கேட்டுப் பெற,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அவர்களின் விபரங்கள், வருமான வரிக் கணக் குடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்.
வரி செலுத்தா மல் போயிருந்தால்,தவறுக்கேற்ப,200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பாகிஸ்தானில் இந்திய ரூபாய் நோட்டுகள் கள்ளத்தனமாக அச்சிடப்பட்டு பயங்கரவாதிகள் மூலம், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த கள்ள நோட்டுகள் இந்திய அரசு ரூபாய் அச்சிட இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யும் தனித்துவமிக்க காகிதங்களிலேயே பாகிஸ்தான் பணம் அச்சிடும் அச்சகத்திலேயே அச்சிடுவதால் உண்மையான ரூபாய்க்கும் இதற்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பது சிரமம்.
இந்திய பகாசுர முதலாளிகள்,அரசியல்வாதிகள் மிகப் பெரிய தொகையை, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் செய்பவர்கள் கறுப்புப் பணத்தை நம்பியே தொழில் செய்கின்றனர்.
ரியல் எஸ்டேட், தங்க நகை வியாபாரிகள் வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ள சாதாரண மக்கள் ,அரசு ஊழியர்கள் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
அதே நேரத்தில், கறுப்புப் பண, கள்ள நோட்டு முதலைகளுக்கு, இது தற்போதைக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். ஆனால் அதுவும் கொஞ்ச காலம்தான்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றாலும், கறுப்புப் பணத்தை உருவாக்கக் கூடிய மிகப் பெரிய ஓட்டைகளை அடைக்காத வரை, இதில் வெற்றி பெற முடியாது.
கறுப்புப் பணம் உருவாவதற்கு முக்கிய காரணம், அதிக வரி விதிப்பு முறைகள் மற்றும் ஊழல் நிர்வாகமும் ,அரசியல்வாதிகளும்தான்.
'ஸ்டாண்டர்ட் அண்ட் புவர், பிட்ச்' போன்ற நிதி சேவை நிறுவனங்கள், இந்தியா குறித்த தனது தர நிர்ணயத்தை உயர்த்த முடியாது என்று கூறியுள்ளன. இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன; அரசின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை என்று அவை கூறியுள்ளன.
ஒருதயாரிப்பு ஆலையை நடத்துபவர், மாதத்துக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை தயாரிக்கிறார். இதற்காக, கலால் வரி, விற்பனை வரி, வருமான வரி என, 35 லட்சம் ரூபாயை மாதத்துக்கு செலுத்த வேண்டும்.
ஆனால், ஊழல் அதிகாரிகளுக்கு, இரண்டுலட்சம் ரூபாய் கொடுத்து, 33 லட்சத்தை அவர் சேமிக்கிறார்.
இந்த பணத்தை வைத்து, அந்த தொழிற்சாலை அதிபரும், ஊழல் அதிகாரியும், தங்கம் வாங்கு கின்றனர். அதை உள்நாட்டில் வாங்கினால் சிக்கல் என்பதால்,வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்பி, தங்கத்தை வாங்குகின்றனர்.
அதேபோல், அதிகாரிகளுக்கு பசையான பதவியை அளிக்க அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகின்றனர். அந்த அதிகாரிகள், இதுபோன்ற மோசடி அதிபர் களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, வரி ஏய்ப்பை கண்டு கொள்வதில்லை.
தற்போதைய நிலையில், ஏற்கனவேஇவர்கள் மோசடி செய்த பணம், கறுப்பு பணமாக உள்ளதால், அதற்கு சிக்கல் ஏற்படலாம்.

தற்போதைய அறிவிப்புக்கு உண்மையான, நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், முதலில், வரி விகிதங்களை குறைக்க வேண்டும்;
ஊழல் அதிகாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைவரும் பலன் பெறும் வகையில், உள்கட்டமைப்பு திட்டங்களில் செலவிட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எடுக்காமல், பணத்தை செல்லாது என்ற அறிவிப்பது,கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு முழுமையான பலனை அளிக்காது.
கறுப்புப் பணம் உருவாவதற்கு முக்கிய காரணம், அதிக வரி விதிப்பு முறைகள் மற்றும் ஊழல் நிர்வாகமும் ,அரசியல்வாதிகளும்தான்.
'ஸ்டாண்டர்ட் அண்ட் புவர், பிட்ச்' போன்ற நிதி சேவை நிறுவனங்கள், இந்தியா குறித்த தனது தர நிர்ணயத்தை உயர்த்த முடியாது என்று கூறியுள்ளன. இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன; அரசின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை என்று அவை கூறியுள்ளன.
ஒருதயாரிப்பு ஆலையை நடத்துபவர், மாதத்துக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை தயாரிக்கிறார். இதற்காக, கலால் வரி, விற்பனை வரி, வருமான வரி என, 35 லட்சம் ரூபாயை மாதத்துக்கு செலுத்த வேண்டும்.
ஆனால், ஊழல் அதிகாரிகளுக்கு, இரண்டுலட்சம் ரூபாய் கொடுத்து, 33 லட்சத்தை அவர் சேமிக்கிறார்.
இந்த பணத்தை வைத்து, அந்த தொழிற்சாலை அதிபரும், ஊழல் அதிகாரியும், தங்கம் வாங்கு கின்றனர். அதை உள்நாட்டில் வாங்கினால் சிக்கல் என்பதால்,வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்பி, தங்கத்தை வாங்குகின்றனர்.
அதேபோல், அதிகாரிகளுக்கு பசையான பதவியை அளிக்க அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகின்றனர். அந்த அதிகாரிகள், இதுபோன்ற மோசடி அதிபர் களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, வரி ஏய்ப்பை கண்டு கொள்வதில்லை.
தற்போதைய நிலையில், ஏற்கனவேஇவர்கள் மோசடி செய்த பணம், கறுப்பு பணமாக உள்ளதால், அதற்கு சிக்கல் ஏற்படலாம்.
ஆனால், இந்த ஊழல், லஞ்சம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.என்ன வித்தியாசம் ?புதிய 500,2000 ரூபாய்களில் அந்த ஊழல் நடக்கும்.!
அதேபோல், பாகிஸ்தானில் உள்ள அச்சகங்களில், புதிதாக வரும் பாதுகாப்புள்ள ரூபாய் நோட்டுகள் கள்ளத்தனமாக அச்சடிப்பது துவங்கிவிடும்.
இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப் பின் பலன் தற்காலிகமானது தான் என்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இந்த நடவடிக்கை யில் கறுப்பு பணம் குறையலாம்; தொழிற்சாலைகள், செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தலாம்.
அவ்வாறு உரிய வரியை செலுத்துவதால், அதிக பணத்தை செலவிட வேண்டியிருப்பதால் பொருட்களின் விலை உயரும். அதனால், சாதாரண மக்கள் ஏ.சி,க்கு பதிலாக, டேபிள் பேனை வாங்குவர்.

இது, பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். கறுப்புப் பணத்தை தடுப்பதால் சேமிக்கும் பணத்தை, அரசு எவ்வாறு செலவிடப் போகிறது என்பது தான், இந்த திட்டத்தின் பலன் எவ்வாறு இருக்கும் என்பதை நிர்ணயிக்கப் போகிறது.
நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், ஊரக வேலைவாய்ப்பு திட்டங் களுக்கும்,உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்கும், இந்த கூடுதல் வருவாயை அரசு செலவிடலாம்.அவ்வாறு செலவிடும் போது, நெடுஞ்சாலைகள் உருவாவதால், போக்குவரத்து செலவு குறைவதால், கூலரின் விலை குறையும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால், மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். உள்நாட்டிலேயே ஆயுதங்கள் தயாரிப்பதால், வேலை வாய்ப்புகள் அதிகரித்து, மக்களிடம் பணம் இருக்கும். அப்போது, டேபிள் பேனுக்கு பதிலாக கூலரை வாங்குவர். அது, நம் பொருளாதாரத்தை உயர்த்தும்.
ஆனால், இந்த கூடுதல் வருவாயை, ஏற்கனவே ஊழலால் மோசமான நிலையில் உள்ள பொது துறை வங்கிகளுக்கோ, ஊழல் அரசு அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு செலவிட்டாலோ, ஆயுதங்கள் இறக்குமதிக்கு செலவிட்டாலோ, நம் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அடியாக அது அமைந்து விடும்.

ஒரு பிரபல பொருளாதார நிபுணர் வாக்குமூலம் :-
“மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வருவது பெரும் தொழில் அதிபர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தெரியும்.
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு தொழில் அதிபர் என்னை வந்து சந்தித்து, என்னிடம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளன. அவற்றை நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தர முடியுமா..
இப்படி மாற்றித் தந்தால் 25 சதவீதம் கமிஷன் தருவ தாகவும் கூறினார்.
நோட்டுகளை மாற்றுவதற்கான காரணத்தை கேட்டபோதுதான் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திட்டத்தை பற்றிக் கூறினார்.குஜராத் பணியாட்கள்,பார்சிகள்,ராஜஸ்தான் மார்வாடிகள் போன்றவற்றின் பணமுதலைகள் ஏற்கனவே பணமாற்றம் செய்ய ஆரம்பித்து 40 நாட்களாகி விட்டன."
======================================================================================
இன்று,
நவம்பர்-10.
தமிழ்வாணன்
நவம்பர்-10.
- ஏகே 47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்கையில் கலாஷ்னிகோவ் பிறந்த தினம்(1919)
- நேரடி கடலோர தொலைத்தொடர்பு அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1951)
- சந்திரனுக்கு சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் லூனாகோட் என்ற தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது(1970)
- தமிழ்வாணன்நினைவு தினம்(1977)
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் விற்பனைக்கு வந்தது(2001)
தமிழ்வாணன்
இதழியலாளரும், தமிழில் படு சுவாரஸ்யமான துப்பறியும் நாவல்கள் படைத்து வல தரப்பினரையும் கவர்ந்தவர் தமிழ்வாணன்.
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார். இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு ‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார். என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம் வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார். எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும், எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது. ‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர் வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.
ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’ என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார். இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம். இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.
குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’ வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தார். ‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படித்தனர். இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.
கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா, அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.
மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார். 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார். பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர். கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார். வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை பார்ப்பதில் வல்லவர்.
‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய 2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார். ‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதி, தயாரித்து வெளியிட்டார்.
தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை. ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு வந்துவிடுமாம்.
இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும் மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால் 56-வது வயதில் (1977) இதே நாளில்தான் காலமானார்.

ஏகே 47
சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றான ஏகே 47 துப்பாக்கியை இராணுவ வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் துப்பாக்கியை இயக்குவது எளிதானது என்பதால் தேசிய இராணுவங்களும், கிளர்ச்சிப்படைகளும் அதனை விரும்பிப் பயன்படுத்தினர்.
இந்தத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்ஹையில் கலாஷ்னிக்கோவ், இரண்டாம் உலகப் போரின்போது சோவியத்தின் டாங்கிப் படைகளில் மெக்கானிக்காக பணியாற்றியவர்.
போரில் காயப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சமயம், சோவியத் படைகளின் தாக்குதல் திறன் குறித்து கவலைப்பட்ட அவர் புதிய துப்பாக்கியை உருவாக்கினார். 1947 இல் அந்த துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்ததால் அது ஏகே 47 என்று அழைக்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம் குறித்து பிபிசியிடம் பேசிய பிரிட்டனின் இராணுவ தளவாட நிறுவனத்தில் துப்பாக்கி நிபுணராக இருக்கும் ஜானாத்தன் பெர்குசன், “இந்தத் துப்பாக்கி மற்ற துப்பாக்கிகளைவிட சிறப்பாக இருந்தது. போல்ட் ஆக்ஷன் துப்பாக்கியை போல இது சக்திவாய்ந்தது கிடையாது என்றாலும், இது பயன்படுத்த எளிதானது” என்றார்.
மிக்ஹையில் கலாஷ்னிக்கோவ் ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடன் கூடப் பிறந்தவர்கள் 19 பேர். இந்தக் கண்டுபிடிப்பால் அவருக்கு தனிப்பட்ட முறையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அதேநேரம் சோவியத் அரசும், பின்னாளில் ரஷ்ய அரசும் அவருக்கு அரச விருதுகளை அளித்து கௌரவித்துள்ளன.
சோவியத் ஒன்றியத்திலும், பிறகு சீனாவில் டி 56 என்ற பெயரிலும், இன்ன பல நாடுகளிலும் ஏகே துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. 10 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட நாடுகளும், பல கிளர்ச்சிக் குழுக்களும் இந்த துப்பாக்கியை ஒரு கட்டத்தில் பயன்படுத்தின.
இன்னமும் இவை ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கின்றன.
ஏராளமான உயிர்சேதத்தை இந்த துப்பாக்கி விளைவித்துள்ளது. இருந்தும் இந்த துப்பாக்கியை கண்டுபிடித்தற்காக தான் வருந்தவில்லை என்றே இறுதிவரை கலாஷ்னிக்கோவ் கூறிவந்தார்.
‘நாட்டைக் காக்க நான் தயாரித்த ஆயுதத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு நான் பொறுப்பேற்க முடியாது’ என்றே அவர் தொடர்ந்து கூறிவந்தார்.
ஏகே 47 துப்பாக்கி தற்போது பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குடிசைத் தொழிற்சாலைகளில் கூட தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பாளர் இறந்து போனாலும், ஏகே 47-இன் பயன்பாடுகள் இன்னும் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும்.
======================================================================================
மார்க்கண்டேய கட்ஜு பதிவு:-
" மத்திய அரசின் விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த அறிவிப்பு. இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். இந்தக் காலத்தில் யாரிடம்தான் 500 ரூபாய் நோட்டு இல்லை. மேலும் பணவீக்கம் அதிகம் உள்ள இந்த நாளில் இந்த பணத்துக்கு மதிப்புதான் ஏது. கிராமங்கள் பலவற்றில் வங்கிகள் கிடையாது, தபால் அலுவலகங்கள் கிடையாது அந்த மக்கள் எங்கு போய் பணத்தை மாற்றுவார்கள். யார் இந்த ஐடியாவை மத்திய அரசுக்குக் கொடுத்தது என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் கட்ஜு.
அடுத்து அவர் போட்டிருந்த பதிவில், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் அரசின் ஸ்டண்ட்தான் இந்த ரூபாய் ஒழிப்பு. அனைத்து நிலைகளிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது என்று கூறியிருந்தார்.
அடுத்த பதிவில், 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று நான் ஏற்கனவே கூறியது உண்மையாகியுள்ளது. இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பால் உண்மையிலேயே கருப்புப் பணத்தை ஒழித்து விட முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா… இது பெரும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். அது ஏற்கனவே ஆரம்பமாகியும் விட்டது"
- என்றிருந்தார் கட்ஜு.
====================================================================================================