இறப்பிற்கு பின் வாழ்வு?


அறிவியல் வளர்ச்சி :

                                                                                                                              வி.இ.குகநாதன்



soul-false 18-11-16 பிரித்தானிய ஊடகங்களில் அலசப்பட்ட ஒரு முக்கிய விடயமாக 14 வயது சிறுமி (புற்றுநோயால்) தனது இறப்பிற்கு பின்னரான வாழும் ஆசையினை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததனைக் குறிப்பிடலாம். 
அதாவது இன்றைய நிலையில் குறித்த புற்றுநோயிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 
ஆனால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். 
உதாரணமாக நூறு வருடங்களிற்கு முன்னர் உயிர்க்கொல்லி நோய்களான மலேரியா, கசம் போன்றவற்றுக்கு இன்று மருந்து இருப்பது போன்றது. எனவே இறந்த சிறுமியின் உடலினை கடுங்குளிரூட்டல்..(Cryogenics)மூலம் நூறு வருடங்களிற்கோ அல்லது மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை சேமித்து வைப்பதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியிருந்தது.
தாய் சிறுமியின் விருப்பத்திற்கு இணங்கியபோதும் விவாகரத்து மூலம் பிரிந்துள்ள தந்தை முதலில் இதனை விரும்பவில்லை ,
ஏனெனில் குறித்த வருடங்களிற்கு பின்னர் உயிர்ப்பிக்கப்படும்போது அவரது உறவினர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்பதாகும். ஆனால் தந்தையும் இறுதியில் மகளின் விரும்பத்திற்கு இணங்கினார். நீதிபதியும் மருத்துவமனைக்கே சென்று அனுமதி வழங்கினார். இச் சிறுமி ஒக்டோபர் 17 அன்று இறந்தார்.
எனினும் இந்த விடயம் சில சட்ட நடைமுறைகளிற்காக இப்போதே வெளியிடப்படுகிறது. இப்போது இச் சிறுமியின் உடல் கடுங்குளிரூட்டலுடன் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு Michigan Cryonics Institute இல் பராமரிக்கப்படுகிறது.
கடுங்குளிரூட்டல் மூலம் செல்களை உயிருடன் பராமரிக்கும் முறை:
இவ்வாறான பராமரித்தல் முறையினை CRYOPRESERVATION என அழைப்பார்கள். இங்கு குளிரூட்டலிற்கு பனிக்கட்டிகளைப்பயன்படுத்த முடியாது, பனிக்கட்டிகள் உடலிலுள்ள உயிருள்ள செல்களை கொன்றுவிடும். 
எனவே நிட்ரோஐன் (Nitrogen) வாயுக்களை கணனி கட்டுப்பாட்டுடன் (computer control by nitrogen)வைத்து பின்பு நிட்ரோஐன் (nitrogen)திரவத்தின் உதவியுடன் உடலின் செல்களை காலவரையன்றி சேமித்துவைக்கமுடியும். இவ்வாறு இங்கு (Michigan Cryonics Institute) சேமித்து வைக்கப்படும் 143வது நபர் இச் சிறுமியாகும். 
இச் செயல்முறைக்கு 37000 பவுண்ஸ் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தங்களது உடல்களையும் எதிர்காலத்தில் சேமித்து வைக்குமாறு Seth Mcfaiane(Family guy creator), Larry King9talkhow host), Birtney Spears(singer) போன்ற பிரபலங்களும் முன்பதிவு செய்துவைத்துள்ளனர். பேராசிரியர் வாரி புல்லர் ( Barry Fuller, a professor in surgical science and low temperature medicine, at University College London) இந்த கடுங்குளிரூட்டல் முறை மூலமான மருத்துவமுறையானது அண்மைய எதிர்காலத்தில் பயன்தரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மூளையின் எண்ணங்கள், நினைவுகளினை பராமரித்தல்:
human-cryoஅறிவியல் துறையில் ஏற்பட்ட மற்றொரு வளர்ச்சியாக மனித மூளையில் சேமிக்கப்பட்டுள்ள எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைத்திறன் என்பவற்றினை ஒரு சிறப்புக் கணனியுடன் இணைப்பதன் மூலம் அவற்றினை மனிதனின் இறப்பிற்கு பின்னரும் செயற்படவைக்கும் இன்னொரு செயற்திட்டமாகும்.
எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைத்திறன் போன்றன மனித மூளையில் நியூரோன்களின் இணைப்பின் (connections between neurons) மூலமே செயற்படுகின்றன. இதனை கணனிமயப்படுத்தி இறப்பிற்கு பின்னரும் செயற்படவைக்கும் முறையாகும். 
இங்கு இந்த கணனிமயப்படுத்தப்பட்ட செயற்கை மூளையானது மனித இயற்கையான மூளையின் மிகவும் சிக்கலான செயற்பாட்டுக்கு ஈடாகுமா என்பதில் விஞ்ஞானிகளிற்குள் கருத்துவேறுபாடுகள் உள்ளபோதும் அடிப்படையில் மூளையின் செயற்பாட்டில் எல்லோருமே ஒன்றுபடுகிறார்கள்.
கேள்விக்குள்ளாகும் மதநம்பிக்கைகள்:
reincarnationமேற்குறித்த இரு அறிவியற் கண்டுபிடிப்புக்களும் சகல மதங்களினதும் உடல், ஆன்மா, மறுமை , சொர்க்கம், நரகம் , ஆவி போன்ற பல கருத்துகளிற்கு மரண அடி கொடுத்துள்ளன. எனவே இத்தகைய கண்டுபிடிப்புக்கள் மதப்பிழைப்புவாதிகளின் வயிற்றில் புளியினை க் கரைக்கப்போவது நிச்சயம். அதாவது நவீன அறிவியல் வளர்ச்சியில் ஒரு மனிதனின் இறப்பினை எளிமையாக விளங்கிக்கொள்வதற்கு நாம் அது ஒரு கணனி காலப்போக்கில் தனது செயற்பாட்டினை நிறுத்திக்கொள்வதுடன் ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளலாம்.
இங்கு கணனியிலிருந்து இறுதியில் எதுவுமே வெளிச்செல்வதில்லை, அதுபோன்றே மனிதனின் உடலிருந்தும் ஆன்மாவோ, ஆவியோ எதுவுமே வெளியேறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு ஆன்மா, ஆவி என்று எதுவுமேயில்லை. ஏற்கனவே டார்வினின் பரிணாமக்கோட்பாட்டினாலும்.(இப்போது பரிணாம நிகழ்வு என்றே குறிப்பிடுகிறார்கள் –Fact not a theory) பெருவெடிப்பு நிகழ்வினாலும் ( Big bang)கடவுளின் படைத்தல் தொழில் அடிவாங்கியிருந்தது. அடுத்த தொழிலான காத்தலிற்கு மதவாதிகளே இப்போது கடவுளை நம்பாமல் சிவசேனா, ஐ.எஸ் (IS) ,பொதுபலசேனா போன்ற அமைப்புக்களை உருவாக்கி கடவுள்களையே அவர்கள்தான் பாதுகாக்கிறார்கள். இங்கு மேற்கூறிய அறிவியலின் புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் கடவுளின் எஞ்சியிருந்த அழித்தல் தொழிலும் பறிபோய் கடவுள் செயலற்றவராக்கப்பட்டுள்ளார்.
மேற்குறித்த அறிவியல் கண்டுபிடிப்பாகவிருக்கப்போகும் எல்லையற்ற வாழ்வு நிச்சயமாக நிகழுமா என்பது பற்றி விஞ்ஞானிகளிடமே முற்றுமுழுதான உடன்பாடில்லை என்பது உண்மையே. இதனை இரு கோணங்களில் பார்க்கலாம். முதலாவது கோணத்தில் சில நூற்றாண்டுகளிற்கு முன்பு சாதாரண மாரடைப்புக்கே மருத்துவம் இல்லாத காலத்தில் இன்று சாத்தியமாகும் இருதய மாற்றுச்சிகிச்சையினை கற்பனையே பண்ணிருக்கவே முடியாது. அதேபோல இன்று கற்பனை போலத்தோன்றும், ஆனால் அறிவியல் அடிப்படைகளைக்கொண்டுள்ள செயற்திட்டங்கள் ஒரு சில நூறு வருடங்களில் சாத்தியமாகலாம்.. மற்றைய கோணம் எல்லையற்ற வாழ்வு என்றுமே சாத்தியமில்லை என்று தெரிந்து கொண்டே சில விஞ்ஞானிகளும், சில நிறுவனங்களும் நிதி ஒதுக்கீட்டினைப் பெறுவதற்காக இவற்றின் மீதான நம்பிக்கையினை அதிகப்படுத்திக் காட்டுகிறார்கள் என்பதாகும். இவ்விரு கோணங்களில் எது உண்மை என்பதனைக் காலம் தீர்மானிக்கும். இவற்றில் எது உண்மையானாலும் இரண்டு உண்மைகளை மறுக்கமுடியாது.
1. இக் கண்டுபிடிப்புக்கள் மூலம் மருத்துவத்துறை முன்னேற்றமடைந்து மனித வாழ்வு தரத்திலும், காலத்திலும் அதிகரிக்கும்.
2. இவ்வடிப்படைகள் மூலம் மதம், கடவுள் என்பவற்றின் மீதான நம்பிக்கைகள் தகர்த்து எறியப்படும்.

karlமதரீதியான மறுவாழ்வு, ஆன்மா என்பனவெல்லாம் கற்பனைகள் என்பதனை அறிவியல் தெளிவுபடுத்தியுள்ளது. அறிவியல்ரீதியான எல்லையற்ற வாழ்வு என்பதில் சில அடிப்படைகள் கண்டுகொள்ளப்பட்டுள்ளபோதும் இன்னும் பல வினாக்கள் தொக்கிநிற்கின்றன. ஆனால் ஒரு மனிதன் தனது வாழ்வினை சக மனிதர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதன் மூலம் எல்லையற்ற வாழ்வினை வாழலாம். அவ்வாறு வாழ்ந்துவரும் ஒரு மனிதனின் பிறந்த ஆண்டின் இருநூறாவது ஆண்டினையே அடுத்தாண்டு கொண்டாடவுள்ளோம். 
அவர்தான் கார்ல் மார்க்ஸ்.
====================================================================================
ன்று,
நவம்பர்-21.
சி.வி.ராமன்


  • உலக மீனவர்கள் தினம்

  • உலக தொலைக்காட்சி தினம்

  • இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)

திருவானைக்காவலில் நவம்பர்-7ல் பிறந்தவர்சி.வி.ராமன்

இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றபோது வயது 18. ஐ.எஃப்.எஸ். தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

 லண்டனில் இருந்து வெளிவரும் அறிவியல் இதழில் 18 வயது இளைஞனின் ஆய்வுக் கட்டுரை வெளியானது சர்வதேச ஆராய்ச்சியாளர்களை வியக்கவைத்தது. அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித் துறை துணை தலைமைக் கணக்கராக பணியில் சேர்ந்தார்.

 மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக் கருவி களின் அதிர்வுகள், ஒளிச் சிதறல் பற்றி ஆய்வு செய்தார்.

 கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரி யராக 16 ஆண்டுகள் பணியாற்றினார். பெங்களூர் இந்திய அறிவியல் கழக இயக்குநராகவும் இயற்பியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

 இங்கிலாந்தில் இருந்து கப்பலில் நாடு திரும்பும்போது, கடல் ஏன் நீல நிறமாக உள்ளது என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டது. கல்கத்தா திரும்பியதும் இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.
 ‘திரவப் பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச் சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மைக்கு ஏற்ப உண்டாகும் வேறுபாடுகளால் கடல் நீல நிறமாகத் தோன்றுகிறது’ என்று கண்டறிந்தார். 

‘ராமன் விளைவு’ என அறிவியல் உலகம் போற்றும் இந்த கண்டு பிடிப்புக்காக 1930-ல் நோபல் பரிசு பெற்றார்.
 வெறும் 200 ரூபாய் செலவில், தானே உருவாக்கிய கருவி யைப் பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தினார். 
இந்தி யாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை.

 ராமன் விளைவை அடிப்படையாகக் கொண்டு அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 1500 ஆராய்ச்சிக் கட்டுரை கள் வெளியாயின. இந்த ஆய்வுகள் உலக தொழில் துறை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன.
 லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக 1924-ல் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1929-ல் பிரிட்டிஷ் அரசு ‘நைட்ஹுட்’, ‘சர்’ பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தது. 1954-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

 பெங்களூரில் இவரது சொந்த முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட ராமன் ஆய்வு மையத்தில் இறுதிக் காலம் வரை பணி யாற்றினார். பல விஞ்ஞானிகளை உருவாக்கிய இந்த மேதை 82-வது வயதில் காலமானார்..
====================================================================================
இந்தியாவில் இணையதள சேவையை பயன்படுத்துவோர் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டது அதன் மூலம் சென்ற  மார்ச் வரை இந்தியாவில் 342.65 மில்லியன் பேர் இணையதளத்தை  பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. 

 29.47 மில்லியன் பயனர்களுடன்   மகாராஷ்ட்ரா பெற்று முதல் இடத்தில் உள்ளது.அடுத்தபடியாக 28.01 மில்லியன் பயனர்களை பெற்று தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
தமிழகத்தில் நகர்ப்புறத்தில் மட்டுமே  21.16 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர். 
அடுத்த மூன்று,நான்காவது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
இமாச்சல பிரதேசம் இந்த பட்டியலில்  கடைசி இடத்தை பெற்றுள்ளது.  3.2 மில்லியின் பேர்கள் மட்டுமே  இமாச்சல பிரதேசத்தில் இணையதளம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
===================================================================================
எந்த ஏடிஎம்களில் பணம் உள்ளது..? 
இந்த வெப்சைட் மூலம் அறியலாம்
ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்றதுடன் திரும்புகின்றனர். இந்த சிரமத்தை நீக்கவும் பொதுமக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க, கடந்த 10 மாதங்களாக ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு கடந்த 8- ஆம் தேதி பிரதமர்மோடி, 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதை தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் மக்கள் பணத்தை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்தெந்த இடங்களில் எந்தெந்த வங்கி ஏடிஎம்கள் செயல்பாட்டிலுள்ளது என்பதை துல்லியமாக காட்ட http://atmkaro.in/ என்ற வெப்சைட் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?