புதன், 9 நவம்பர், 2016

ரத்தக்கண்ணீர்தான்

 நள்ளிரவு முதல் ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது. 
* வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை மாற்றிக்கொள்ளலாம். 
* ஏ.டி.எம்.க்கள் நவ. 9 மற்றும் 10-ம் தேதிகளில் செயல்படாது.
* நவம்பர் 9ம் தேதி வங்கிகள் செயல்படாது.
* காசோலை, டி.டி. கிரிடிட், டெபிட் ,கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
* நவ. 11-ம் தேதி வரை விமான நிலையங்கள்,ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைபயன்படுத்தலாம்.

புதிய ரூபாய்கள் 

* மேலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
* தற்போதைய 500 ,1000 ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து வங்கிகள்,தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
* இனி புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுக்களை அரசு விநியோகிக்க உள்ளது. 

கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு கொடுத்த இந்த திடீர் அறிவிப்பு மூலம் தற்போது உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் கறுப்புப் பணக்காரர்கள் அல்ல.
அன்றாடங்க்காய்ச்சிகள் தாம்.
இன்றைய நிலையில் முந்தைய 10,50 ரூபாய் நிலையில் அன்றாடம் அவர்கள் கையில் புழங்குவது 500/,1000/-ரூபாய் தாட்கள்தான்.
அவர்கள்தான் இந்த திடீர் அறிவிப்பால் பாதிக்கப்பட்டார்கள்.500/-தாளை வைத்து பேருந்தில் ஊர் திரும்ப காத்திருந்தவர்கள் இறக்கி விடப்பட்டார்கள்.
உணவகத்தில் இரவு,காலை சாப்பாடு சாப்பிட 500/ -வைத்திருந்தவர்கள் பட்டினி.
பெட்ரோல் போடுமிடங்களில் செல்லாமல் போன 500/-தாட்களை வாங்க  கூறினாலும் இரவு 8 மணிக்கு மேல் வாங்கமறுத்து விட்டார்கள்.ஆனால் ரஜினி காந்த் போன்றவர்கள் அறிவிப்பு வெளியான ஐந்து நிமிடத்திலேயே வாய்ஸ் கொடுத்துள்ளார்கள்.
மளிகைக்கடையில் பொருட்களை வாங்க முடியாமல் திணறுகிறார்கள்.அப்படி உள்ளவர்கள்தான் உடனடியாக இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்த்து பேசினார்கள்.
அதை எதிர்ப்பவர்கள் கையிருப்பே இரண்டு 500களும்,ஒரு 1000முமாகத்தான் இருக்கும்.
அவர்களுக்கு இந்த இரு நாட்களைக்கடத்துவது பயங்கரகனவு.பணத்தை மாற்ற வங்கியில் காத்திருப்பார்களா.அடுத்த வேலை சோற்றுக்கு கூலி வேலைக்கு போவார்களா?
இந்ததிடீரை மோடியின்  மத்திய அரசு  வேறுவிதமாக செய்திருக்கலாம்.
பொதுமக்கள் கடைகளில் வாங்கும்  கொடுக்கும் பணம் சிறு வியாபாரி,பெரு வியாபாரி,தயாரிப்பாளர் கடைசியில் வங்கி என்றுதான் போகிறது. அங்கே வங்கியில் இந்த 500/-,1000/- நிறுத்தி வைத்து விட்டு,ஏ.டி.எம்,,பணம் எடுப்போர்களுக்கு புதிய 500/-100/-தாள்களை கொடுத்து வந்தாலே இரண்டு மாத்ததில் பழையரூபாய்கள் புழக்கத்தில் இருந்து மறைந்து விடும்.அப்படித்தானே இப்போது ஒரு ரூபாய்,ஐந்து ரூபாய்கள் காணாமல் போனது.
அதன் பின்னர் பதுக்கி வைத்திருப்பவர்கள் பழைய தாள்களை மாற்ற கெடு விதிக்கலாம்.
இப்படி செய்தால் பாமர மக்கள் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.இரண்டு நாளில் ஊருக்கு செல்லமுடியாமலும்,ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் சாப்பிட முடியாமலும்,மளிகை சாமான்கள் வாங்க தொழிலாளர்கள் துன்பப்படுவதை தவிர்த்திருக்கலாம்.
மத்திய அரசு செய்யும் சீர்திருத்தம் தற்போதைக்கு தேவையானதாக இருப்பினும்,அதை நடை முறைபடுத்திய விதம் சின்னப்புள்ளதனமாக அமைந்து விட்டது.
இதனால் வீண் பதற்றம்,விபரமில்லா பாமர மக்களிடம் தேவையற்ற பயம்.அன்றாட வாழ்க்கை முடக்கம் உண்டாகிவிட்டது.
ஆனால் கணக்கில் கறுப்பை ஏற்றியவர்கள் அரசு திட்டத்தை ஆதரித்து அறிவித்து வருகிறார்கள்.மத்திய அரசு அமைசர்கள்,அதிகாரிகள்பாஜக ஆதரவு பணமுதலைகள்   இந்த அறிவிப்பு வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே தயாராகியிருப்பார்கள்.
கறுப்புப் பணத்தை இந்த அறிவிப்பு முற்றிலுமாக வெளிக்கொணருமா என்றால் இல்லை.கொஞ்சம் பதுக்கியவர்கள் துணிந்தவர்கள் தங்களைப்பற்றிய செய்தி வராது என்பதால் கறுப்பை வங்கியில் செலுத்தி,வருமானவரி செலுத்தி வெள்ளையாக்கி விடுவார்கள்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியவர்களும் தப்பிவிடுவார்கள்.
ஆனால் 3000 கோடிகள் ,கன்டெய்னர்களில் ஆயிரம் ரூபாய் தாட்களாக வைத்துக்கொண்டு இருப்பவர்கள் ,அன்புநாதன் தயவிலும் ,சிவாஜி பட சுமன் பாணியிலும்  ஒளித்து வைத்திருக்கும் தலைகள்தான் பாவம். 
ரத்தக்கண்ணீர்தான் .
மெல்லவும் முடியாது ,மாற்றவும் முடியாது.யாரிடமும் தங்கள் சோகத்தை சொல்லவும் முடியாது.மாற்றினால் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று சொல்ல வேண்டும்.மக்களுக்கு சொல்வதைப்பற்றி கவலை இல்லை.
தலைமைக்கு தெரிந்தால் .?
ஒரே நாளில் ஓட்டாண்டியான நல்லநேரம் எம் ஜி ஆர் கதைதான்.நிலைதான்.நகைகள்,நிலம்,பங்களாக்கள் மட்டுமே மிஞ்சும் .
மற்றபடி வீடு முழுக்க கழிவு துண்டு தாள்கள்தான்.மிக்சர் ,வடை கடைக்காரன் கூட அளவு சரியில்லை என வாங்க மாட்டான்.பஜ்ஜி எண்ணையையும் உரியாது .
என்னும் போது நமக்கே வலிக்கிறது.
=======================================================================================
ன்று,
நவம்பர்-09.
  • அமெரிக்கா, ஹவாய் தீவின் பியர்ல் துறைமுக உரிமையைப் பெற்றது(1887)
  • கம்போடியா விடுதலை தினம்(1953)
  • நேபாளத்தில்  மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது(1990)
  • டார்ம்ஸ்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1994)
  • உத்தராஞ்சல், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(2000)
========================================================================================