"நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; லட்சியமும் வேறு'' என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இருக்காதா பின்னே....? வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான அந்த இளைஞனிடம் இருந்து அப்படியொரு முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லையே!
கடந்த சில மாதங்களாகவே அவனது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். மக்கள் நலன், சுதந்திரம் என எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தான். வீடு தேடி வந்த பெரும் காவல் படையோ, ''எங்கே உங்கள் மகன்? அவன் வீட்டுக்கு வந்தால் எங்களிடம் மரியாதையாக ஒப்படைத்து விடுங்கள்'' என்று மிரட்டினர். நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களை என்னவென்று ஊகிக்க முடியாத நிலையில் இருந்த பெற்றோர் முன் அப்படியொரு தீர்க்கமான முடிவை உதிர்த்த அந்த இளைஞன்தான் பின்னாட்களில், 'தமிழீழ தேசிய தலைவர்' என உலகத்தாரால் போற்றிப் புகழப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன்! அவரது பிறந்த தினம் இன்று.
1954-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். உலகையேத் திரும்பிப் பார்க்கவைத்த மாவீரனாக பிரபாகரன் உருவெடுத்ததற்கான ஆரம்ப விதை அவரது சிறுவயது பிராயத்தில் நிகழ்ந்தது. ஒரு ராணுவ வீரன், ஒரு முதியவரை ரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம் ''ஏன்? இப்படி துன்புறுத்துகிறார்?'' என்று கேட்டார். அவரது தந்தையோ, ''நாம் ஒன்றும் செய்ய முடியாது? நம்மிடம் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களிடமோ ராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது'' என்றார்.
உடனே பிரபாகரன், "இதே ராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன்" என்றார் சட்டென்று. சொன்னதுபோலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் ராணுவக் கட்டமைப்பை உருவாக்கி உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார்.
தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் வரலாற்றுத் தடங்கள் சில...
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த காலத்தில், ஒரு வேதியியல் பொறியியலாளர் பிரபாகரனைச் சந்தித்து "நீங்கள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளில் மயக்க மருந்தையும் கலந்து வெடிக்கச் செய்தால், எதிரிகள் இறப்பதோடு மட்டுமல்லாமல், தப்பித்துச் செல்ல நினைக்கும் எதிரிகளும் மயக்கம் அடைந்து விடுவார்கள். இதனால், நாம் அனைத்து எதிரிகளையும் மிக எளிதாக அழிக்கலாம்" என்று ஆலோசனை தந்தார். இதனைக் கேட்டு கடும் கோபம் கொண்ட பிரபாகரன், ''இது கோழையின் செயல். நேருக்கு நேர் நின்று எதிரிகளோடு சண்டையிடுபவர்கள்தான் விடுதலைப் புலிகள். இது உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. யுத்த நியதிகளை புலிகள் ஒருபோதும் மீறமாட்டார்கள்'' என்று உறுதியாகப் பதிலுரைத்தார்.
கட்டுநாயக்க பன்னாட்டு விமான தளத்தோடு இணைந்தே இலங்கை விமானப் படைத் தளமும் இருந்தது. 2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதியன்று இந்த விமான தளத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த விமான தளத்துக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரபாகரன், ''பயணிகளில் ஒருவருக்குக்கூட எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய பின்புதான் தாக்குதல் நடத்த வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார். அதன் பின் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றியும் பெற்றார்
தமிழகத்தில் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதி ரகு, பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழகத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்த்தார். ''போலீஸ் சோதனைகள் நிறைய இருந்திருக்குமே.... எப்படித் தப்பித்து வந்தாய்?'' எனக் கேட்டார் பிரபாகரன். "நம்முடைய ஆயுத வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றி அமைத்து கொண்டு வந்தேன்" எனக் கூறினார். சட்டென கோபமடைந்த பிரபாகரன், ''ஆம்புலன்ஸ் என்பது மனிதர்களின் உயிரைக் காக்கும் வாகனம். புனிதமான அந்த வாகன சின்னத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை ஏன் எடுத்து வந்தாய்? இதுமாதிரி செயல்களுக்கு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்'' என்று கடுமையாக எச்சரித்தார்.
இறுதிகட்டப் போரில், பிரபாகரனோடு நேருக்கு நேர் யுத்தம் புரிந்த இலங்கை ராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பிரபாகரனைப் பற்றிக் கூறிய வரிகள் இவை : "பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்தே வாழ்ந்து வந்தார். பெண்களுக்கு மரியாதையையும்,பாதுகாப்பையும் கொடுத்தவர். அவர் ஒரு இயக்கத்தின் தலைவனாக இருந்த போதும் அன்பான குடும்ப மனிதராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். அவற்றில் ஒரு புகைப்படத்தில் கூட, மதுக் கோப்பையுடனோ அல்லது சிகரெட் பிடித்த நிலையிலோ பிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லை. அவர் ஒரு ஒழுக்கமானத் தலைவராக இருந்தார். அனைவரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன." என்றார்.
ஒழுக்கமற்றக் காரியங்களையோ, குறுக்குவழி சதி செயல்களையோ விரும்பாதவர் பிரபாகரன். ஆனால், அந்த மாவீரனுக்கு உலக நாடுகள் செய்தது என்னவோ சதியைத் தவிர வேறொன்றும் இல்லை.
பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பிரபாகரன் கூறிய பதில் மிகவும் பிரசித்தி பெற்றது. "இந்தியாவில் நீங்கள் அமைதி போராட்டம் செய்து வெற்றி கண்டீர்கள், அப்படி இருக்க இலங்கையில் மட்டும் ஏன் ஆயுதம் ஏந்திப் போராடுகிறீர்கள்?" என நிருபர் ஒருவர் கேட்க... பிரபாகரன் அளித்தப் பதில் இது... "இந்தியா அமைதியை மதிக்கும் ஒரு நாடு. அதனால் அங்கு அஹிம்சை ஆயுதம் ஏந்திப் போராடினேன். ஆனால், இலங்கையோ அஹிம்சையை மதிக்காத சர்வாதிகார நாடு. நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்தனர்" என்றார்.
-ஜெ.அன்பரசன்.
நன்றி:விகடன் தளம்.
=================================================================================== இன்று, நவம்பர்-26.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)
சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் தனது முதலாவது செய்மதியான ஆஸ்டெரிக்ஸ்-1 ஐ விண்ணுக்கு அனுப்பியது(1965)
கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்.
பிடல் காஸ்ட்ரோ
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியும், புரட்சியாளருமான சே குவேராவின் உயிர்த் தோழர், க்யூபப் புரட்சியாளர் ஃபிடெல் காஸ்ட்ரோ ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. இவர் என்ன தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கியூபாவின் மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.
அமெரிக்கா, அதுவென்ன அவ்வளவு சாதாரண வார்த்தையா? உலகில் உள்ள பெருமுதலாளிகள் அனைவருக்கும் ஒரு மந்திரச் சொல்லாக இருப்பது தான் அமெரிக்கா. இருபதாம் நூற்றாண்டின் வல்லரசு நாடாக திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ.
அமெரிக்காவும் பிடல் காஸ்ட்ரோவும்:
அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் அதனுடைய கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கமுடியவில்லை. அமெரிக்காவின் பல பெரு முதலாளிகள் கியூபாவில் கால்பதித்து கியூபா நாட்டு அரசின் துணையுடன் அங்கு தொழில் செய்து கியூபா நாட்டு மக்களையும் அதன் செல்வத்தையும் சுரண்டிக்கொண்டிருந்தனர்.
இதனைக் கண்டு கொதித்தெழுந்த பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தேர்ந்தெடுத்த கொள்கைதான் கம்யூனிசம். பிடல் காஸ்ட்ரோ கல்லூரி படிக்கும்பொழுதே கம்யூனிச கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.
அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது. முதலில் காஸ்ட்ரோவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க நினைத்து திட்டங்களை தீட்டியது. ஆனால் அதனுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என காஸ்ட்ரோ அறிவித்தார். மேலும் கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார் காஸ்ட்ரோ அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.
26,ஜனவரி1959 டைம் இதழ் அட்டையில் காஸ்ட்ரோ
கியூபாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது பிடல் காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்தது ரஷ்யா தான். கியூபாவின் பொருட்களை ரஷ்யா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டது. மேலும் கியூபா மக்களும் தங்கள் நாட்டிற்காக கடுமையாக உழைத்தனர்.
இதனால் அமெரிக்க நிறுவனக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. எனவே காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.
பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா சதி திட்டம் தீட்டியதை பிரிடிஷ் ஊடகமான Channel 4 ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு “பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” என்ற தலைப்பையே வைத்தது. அதில் முக்கியமானவை, பிடல் காஸ்ட்ரோவுக்கு விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டது. பிடல் காஸ்ட்ரோவை கியூபாவில் உள்ள மாஃபியா கும்பலை வைத்து கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
( இந்த திட்டங்கள் குறித்த செய்திகள் எல்லாம் சிஐஏ வின் தணிக்கை பிரிவில் இடம்பெற்றுள்ளது. )
பிடல் காஸ்ட்ரோவை கொல்ல மேற்கொண்ட சூழ்ச்சிகள்:
இந்த ஆவணங்களின்படி, காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்பது சி.ஐ.ஏ.வின் நோக்கமாக முதலில் இருக்கவில்லை. மக்களிடம் அவருக்குள்ள நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியே முதலில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
உதாரணமாக தாடிக்காரர், விலங்குகளின் முடியைத் தாடியாகக் கொண்டவர் என்பது மாதிரியான கேலி வார்த்தைகளை அதிகமாகக் கசிய விட்டிருக்கிறார்கள். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை குறிப்பாக அந்த ஆண்டின் பிற்பகுதியில் காஸ்ட்ரோவின் பேச்சுக்களைத் திரிக்கும் வேலையில் சி.ஐ.ஏ. இறங்கியிருக்கிறது.
தனது திட்டங்களையும், செயலையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அவ்வப்போது ரேடியோவில் காஸ்ட்ரோ உரையாற்றுவார். அப்போது அவர் பேசும் மைக்கில் ரசாயன பவுடரைத் தெளிக்கலாமா என்று யோசித்ததாக உயரதிகாரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் ஒரு சி.ஐ.ஏ. அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அது யோசனையுடன் நின்றுவிட்டது.
அதேபோல் உரை நிகழ்த்துவதற்கு முன் சுருட்டுப் பிடிப்பது காஸ்ட்ரோவின் வழக்கம். அப்போது அவருக்கு விஷ சுருட்டு கொடுக்கலாமா என்றும் முயற்சி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக காஸ்ட்ரோ அணியும் சூவுக்குள் நச்சு ரசாயனத்தைத் தெளிக்கலாமா என ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் யோசித்திருக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு காஸ்ட்ரோ சுற்றுப்பயணம் செய்யும்போது, ஹோட்டல் சிப்பந்தி மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி நடந்துள்ளது. ஆனால், இதுவும் நிறைவேறவில்லை. இதன் தொடர்ச்சியாக விபத்து மூலமாக கியூபாவில் உள்ள முக்கியமான மூன்று தலைவர்களை அழிக்க முடியுமா என 1960களில் சி.ஐ.ஏ. முயற்சி செய்துள்ளது. முன்னோட்டமாக காஸ்ட்ரோவை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒரு கியூப குடிமகனை இந்தத் திட்டத்துக்கு தேர்ந்தெடுத்தார்கள். பல கட்ட மூளைச்சலவைக்குப் பின் குடும்பச் சூழ்நிலைக்காக கார் மூலம் விபத்து ஏற்படுத்த அந்த கியூபன் ஒப்புக் கொண்டான். ஆனால், இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறவில்லை.
காஸ்ட்ரோ-சே குவெரா.
இதே காலகட்டத்தில் சி.ஐ.ஏ.வின் மருத்துவ பிரிவு 1960 ஆம் வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி, விஷ சுருட்டுகள் அடங்கிய பெட்டியை சி.ஐ.ஏ. ஏஜென்டிடம் கொடுத்துள்ளது. அதில் உள்ள எந்தச் சுருட்டை எடுத்து காஸ்ட்ரோ தன் உதடுகளில் வைத்தாலும் உடனே மரணம் நிகழும். அந்தளவு சக்தி வாய்ந்த அந்த ரசாயன சுருட்டுப் பெட்டி, காஸ்ட்ரோவிடம் போய்ச் சேர்ந்ததா என்பதற்கான குறிப்பு இந்தத் தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்களில் இல்லை.
இதுதவிர, காஸ்ட்ரோவுக்கு விஷ மாத்திரை கொடுக்கலாமா என்றும் கூட சி.ஐ.ஏ. பரிசீலித்திருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 1963 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டாஸ்க் போர்ஸ் மூலமாக காஸ்ட்ரோவை அழிக்க முடியுமா என சி.ஐ.ஏ. உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது.
இதற்கெல்லாம் முடி சூட்டுவது போல ஒரு முயற்சியை சிஐஏ தீட்டியது, அதுதான் பிடல் காஸ்ட்ரோவின் காதலியை வைத்தே பிடல் காஸ்ட்ரோவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. அதற்கு பிடல் காஸ்ட்ரோவின் காதலியும் சம்மதம் தெரிவித்தார். பிடல் காஸ்ட்ரோவுடன் இருக்கும்போது அவரது காதலி பிடல் காஸ்ட்ரோ பயன்படுத்து நறுமணப் பொருளில் பயங்கர நச்சு கலந்த விஷத்தை கலந்து வைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். தனது காதலியின் சூழ்ச்சியை அறிந்த பிடல் காஸ்ட்ரோ அவரை அழைத்து தனது துப்பாக்கியை அவரிடம் கொடுத்து அவரை சுட சொன்னார். ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் காதலியோ மனம் உருகி அழுது தன்னால் பிடல் காஸ்ட்ரோவை கொல்ல முடியாது என கூறினார்.
இப்படி பல முறை அமெரிக்காவின் சிஐஏ பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய முயற்சி செய்தாலும் இன்று வரை அவரை யாராலும் ஒன்று செய்ய முடியவில்லை.
அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90வது வயதில் மறைந்தார். இவர் தனது அதிபர் பதிவியிலிருந்து விலகினாலும் தனது நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்ட்ரோவின் கடைசி உருக்கமான உரை:
கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு இந்த வருடம் ஏப்ரல் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அப்போது பிடெல் காஸ்ட்ரோ நிகழ்த்திய உரையில் “இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும். நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். அதன்பின்னர் நானும் மற்ற வயதானவர்களைப் போலவே இருப்பேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்த உலகத்தின் சிறந்த உதாரணமாக திகழ்வார்கள்.
கம்யூனிஸ சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்கே உரிய மரியாதையுடனும் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்த பொருளாதார, கலாச்சார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும்” என்றார்.
வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்.
1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.
1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை வைப்பு
1955: பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து வி்டுதலை.
1956: செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடக்கம்
1959: பட்டிஸ்டா அரசை தோற்கடித்து, கியுபாவின் பிரதமராகப் பதவியேற்பு
1961: கியுபாவிலிருந்து வெளியேறி நாடுகடந்த நிலையில் இருந்தவர்களால், அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏவின் உதவியுடன் நடந்த ‘ பன்றிகள் குடா’ ( Bay of Pigs) ஆக்ரமிப்பு தோற்கடிப்பு.
1962: சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை கியுபாவில் நிலைநிறுத்துவதற்கு உடன்பட்டதன் மூலம், அமெரிக்காவுடன் போர் மூள வைத்திருக்கக்கூடிய `கியூபா ஏவுகணை நெருக்கடி`தூண்டப்பட்டது.
1976: கியுபாவின் தேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்வு
1992: அமெரிக்காவுடன் கியூபா அகதிகள் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்படுகிறது.
2008: கியூப அதிபர் பதவியிலி்ருந்து உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகல்.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக துப்பு துலக்கினர் இந்நிலையில், திடீர்திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் (32) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை நாகேந்திரன்விரைவில் கைது செய்யப்பட உள்ளார். கொலையின்...