செவ்வாய், 8 நவம்பர், 2016

ஜி.எ.ஸ்டி., சாதகமா? பாதகமா?

ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியின் மிக முக்கிய கட்டமாக, 4 அடுக்கு வரி விதிப்பை முடிவு செய்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில். 
5%, 12%, 18%, 28% என்று நான்கு வகையாக இது விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு இதனால் சாதகமா? பாதகமா என்ற விவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன. 
பல்வேறு யூகங்கள் கிளம்பின. தற்போதுள்ள வரி அமைப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. 
பொருள் உற்பத்தியில் இருந்து நுகர்வோர் கையில் சேர்வது வரை உற்பத்தி வரி, விற்பனை வரி, நுழைவு வரி என்று ஏகப்பட்ட வரி விதிப்புகள் வரிசையாக சேர்க்கப்படுகின்றன. 
இதனால் பொருள் கனக்கிறதோ இல்லையோ, விலை நிச்சயமாக கனமாக இருக்கும். இதுதான் தற்போதைய வரி விதிப்பில் உள்ள பாதகம்.

ஜிஎஸ்டி வந்தால் இதெல்லாம் காணாமல் போய்விடும். ஒரு பொருளுக்கு ஒரே வரிதான் என்றனர். வரியை முடிவு செய்து விட்டாலும் இன்னும் இதற்கான தெளிவு வந்தபாடில்லை. 

எந்த பொருள் எவ்வளவு உயரும் அல்லது குறையும் என்பது பற்றி இன்னமும் யூகங்கள்தான் உலவுகின்றன. 
இருந்தாலும், உணவு தானியம் உட்பட, மக்கள் அத்தியாவசியம் பயன்படுத்தக்கூடிய, நுகர்வோர் உற்பத்தி புள்ளியில் உள்ள உணவு தானியங்கள் உட்பட பாதி பொருட்களுக்கு வரி கிடையாது என்பது ஆறுதல். அதேநேரத்தில் பொத்தாம் பொதுவாக கூறக்கூடிய அளவுக்கு இது அவ்வளவு எளிதல்ல.

அதேநேரத்தில், தனியா, கருப்பு மிளகு, ரீபைண்ட் ஆயில், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றுக்கு தற்போது ஜிஎஸ்டியில் உள்ள ஆரம்ப வரிதான் என்பதால் இவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. 

இதுபோல் தற்போது 29 சதவீத வரி விதிப்புக்கு உட்பட்ட ஷேவிங் கிரீம், முக பவுடர், ஷாம்பு, சோப்பு,ஹேர் ஆயில் ஆகியவற்றின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. 

ஏனெனில், ஜிஎஸ்டியின் உச்ச பட்ச வரி 28 சதவீதம்தான்.  பூச்சிக்கொல்லி மருந்துகள், காஸ் அடுப்பு, போன்றவற்றின் விலை உயரலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட, ஜிஎஸ்டியால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு சேவை வரிதான். சேவை என்று வகைப்படுத்தாதவை மிக மிக சொற்பம்தான். 

விமான டிக்கெட், பத்திரபதிவு, கிரெடிட் கார்டு கட்டணம், சினிமா டிக்கெட், ஓட்டல் பில், போன் பில் என ஏராளமானவற்றுக்கு சேைவ வரி விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு 12.36 சதவீதமாக இருந்த சேவை வரி சிறிது சிறிதாக உயர்ந்து 15 சதவீதத்தை எட்டிவிட்டது, இது ஜிஎஸ்டி புண்ணியத்தில் மேலும் உயர்ந்து 18 சதவீதம் ஆகிவிட்டது. 
மாநிலங்களுக்கு இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட ஆடம்பர கார்கள், சிகரெட், குளிர்பானங்கள் போன்றவற்றுக்கு செஸ் வரி கூடுதலாக விதிப்பது போல சேவை வரியையும் உயர்த்திவிட்டது மத்திய அரசு. இதனால் மாநிலங்களுக்கு இழப்பீடு வரும். ஆனால் சாமானிய மக்களின் பர்சை இது பதம் பார்த்துவிடும்.
 
டிவி, பிரிட்ஜ்: அதிக அளவு விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் டிவி, பிரிட்ஜ் போன்றவை அதிகம். வெளிநாடுகளில் சாதாரணமாக 42 அங்குல எல்இடி டிவி வாங்கி வந்த மக்கள் தற்போது 48 அங்கு ல டிவி வாங்க விரும்புகின்றனர். 

சிறிய எல்இடி பேனல்களை உற்பத்தி செய்வது குறைந்துவிட்டது. 
இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு எல்இடி பேனல் விலை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து விட்டது.

இந்தியாவில்தான் 32 அங்குல எல்இடி டிவி வாங்குகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் சிறிய பேனல்களுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும் என்பதால், பண்டிகைக்காக நிறுவனங்கள் விலையை உயர்த்தாவிட்டாலும் ஜிஎஸ்டி அமலாகும்போது விலை உயர்ந்துவிடும் என்று துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 தற்போது அதிக வரி விதிப்புக்கு உட்பட்ட சில பொருட்கள் 18 முதல் 28 சதவீதத்துக்குள் வரும்போது, தற்போதைய வரிவிதிப்பை விட குறைவாகவே இருக்கும். செஸ் வரி விதிப்பு கூடுதலாக இருந்தாலும், நீண்டகால பலன் நுகர்வோருக்கு சாதகமாக அமையும். இதனால் விலை குறையும்போது, விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு என நுகர்வோர் பொருட்கள் துறையினர் தெரிவிக்கின்றனர்.

2 சமையல் எண்ணெயை பொறுத்தவரை சுமார் 75 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இறக்குமதி வரியையும் கருத்தில் கொண்டு இதற்கு ஏற்ப நுகர்வோர் பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.

3 நுகர்வோர் விலைப்புள்ளி குறியீட்டுக்குள் அடங்கும் பொருட்களில் 50 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு கிடையாது. இதுமட்டுமின்றி அன்றாட உபயோகத்தில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு அடிப்படை ஜிஎஸ்டி வரியான 5 சதவீதம் மட்டுமே இருக்கும். இது விலைவாசியை கட்டுக்குள் வைக்க உதவும்.


1 நுகர்வோர் விலை குறையீட்டில் வரும் 50 சதவீத பொருட்களுக்கு வரி இல்லை

2 அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி. இவற்றுக்கு தற்போது 3 சதவீதம் மற்றும் 9 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

3 நிலையான வரிகளில் ஒன்றாக 12 சதவீதம் உள்ளது. இது தற்போது 9 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விதிக்கப்படும் பொருட்களுக்கு வகைப்படுத்தப்பட உள்ளது.

4 18 சதவீத வரி விதிப்பில் தற்போது 15 சதவீதம் முதல் 21 சதவீதம் வரையிலான பொருட்களை சேர்க்க வாய்ப்புகள் உள்ளன.

5 தற்போது 21 சதவீதத்துக்கு மேல் உள்ள பொருட்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம்.

6  உச்ச பட்ச ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்துடன், ஆடம்பர மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும், உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு செஸ் வரி கூடுதலாக விதிக்கப்பட இருக்கிறது.

7 மேற்கண்ட வரி விதிப்பு பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கான செயலாளர்கள் குழு இவற்றை வரையறை செய்த பிறகே முழு விவரம் தெரியும். சில பொருட்கள் விலை உயரும், சில விலை குறையும்.

ஏப்ரல் 1ம் தேதியை நோக்கி வரும் நிதியாண்டு முதல் ஜிஎஸ்டியை அமல்படுத்த ஏதுவாக, 4 அடுக்கு வரி விதிப்பை வரையறை செய்தது முக்கிய மைல்கல். அடுத்தது எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்று முடிவு செய்வதுதான். இதற்கான செயலாளர்கள் குழு இவற்றை வரையறுக்கும். இதன்பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் இவற்றை ஆராய்ந்து இறுதி செய்யும். குளிர்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி சட்டம் இறுதி செய்யப்படும்.


ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு ஏதுவாக சாப்ட்வேர் தயாராக உள்ளது. இது சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரி விதிப்பு பொருட்கள் வரையறை செய்யப்பட்ட பிறகு அவை இதில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன்பிறகும் சில சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும்.


ஆண்டுதோறும் அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே, வீடுகளிலும் பட்ஜெட் கணக்குகள் தயாராக தொடங்கிவிடும். எந்த பொருள் பட்ஜெட்டுக்கு பிறகு அதிகரிக்கும், எது குறையும் என்று கணிப்புகளை பார்த்து ஒரு வழியாக முடிவு செய்வார்கள். அப்படித்தான் சொகுசு கார் வாங்குபவர்களும், ஜிஎஸ்டி வந்தால் விலை குறையும் என்று காத்திருந்தனர். 

எதிர்பார்த்தபடி 28 உச்ச வரி விதித்தது மத்திய அரசு. இது தற்போதைய 52 சதவீத வரியை விட குறைவுதான். 
இருப்பினும் இத்துடன் சேர்த்து, தற்போதைய வரி  செஸ் வரியும் வசூலிக்கப்பட இருப்பதால் விலை குறைய வாய்ப்பில்லைதான். ஆனாலும் நடுத்தர குடும்பங்கள் சற்று மகிழ்ச்சி அடையலாம். 
ஏனெனில், சொகுசு கார்களுக்கு மட்டுமே கூடுதல் செஸ் வரி என்பதால், சிறிய ரக கார்களின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்கின்றனர் துறை நிபுணர்கள்.

======================================================================================
ன்று,
நவம்பர்-08.

  • உலக நகர திட்டமிடல் தினம்
  • வில்ஹெம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்(1895)
  • பிரிட்டன் இந்திய பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது(1965)


  • 1680 தமிழ் வளர்சிக்காக வாழ்ந்து, தமிழ் மொழியை போற்றிய தமிழறிஞர் 'கான்ஸ்டான்சியஸ் ஜோசப் பெஸ்கி' என்னும் இயற்பெயர் கொண்ட வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.

  • 1923 ஜெர்மனியில் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற ஹிட்லர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றார். சிறையிலிருந்த 9 மாதத்தில் அவர் 'மெயின் கேம்ப்' என்னும் நூலை எழுதினார்.

  • வங்காளதேச முன்னாள் அதிபர் முஜிபுர் ரஹ்மான் படுகொலையில் சமந்தப்பட்ட 15 பேர் தூக்கிலிடப்பட்டனர்

ஊடு கதிர் அலைகள்,(எக்ஸ் கதிர்கள்)  கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரிவீச்சு என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது. காந்த, மின் புலங்களால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. 
எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்பு முறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. 
இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.


ஊடு கதிர் அலைகள்,(எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். 
இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. 
இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும்.
 இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரிவீச்சு என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது. 
காந்த, மின் புலங்களால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. 
ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்பு முறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காகஊடு கதிர் அலைகள், மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும்.

மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், வானூர்தி தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன. இப்பண்பே அவைகள் நோயறி கதிரியலில் (Diagnostic Radiology) கதிர்ப்படம் எடுக்கப் பயன்படுகிறது. இக்கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பண்பு அவைகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும்.
இம்முறை கதிர் மருத்துவம் (Radiation therapy) எனப்படும். இக்கதிர்கள் கேட்மியம் சல்பைடு, சிங்கேட்மியம் சல்பைடு போன்ற சில பொருட்களில் விழும்போது உடனொளிர்தலைத் தோற்றுவிக்கின்றன. 
இப்பண்பே எக்ஸ் கதிர்களைக் கண்டுகொள்ள உதவியது. 
மேலும் உடனொளிர் திரையிலும் வலுவூட்டும் திரையிலும் பயன்படக் காரணமாகும். படிக இயல் ஆய்விலும் தொழில் துறையிலும் பெரிதும் பயன்பாட்டிலுள்ளன. 
எக்ஸ் கதிர்கள், சாதாரண ஒளி அலைகளைப்போல் அதே திசைவேகத்துடன் பயணிக்கின்றன.

ஓளிஅலைகளின் பண்புகள் யாவும் இதற்கும் பொருந்தும். எக்ஸ் கதிர்கள் என அழைக்கப்படும் ராண்ட்ஜன் கதிர்கள் 1895 நவம்பர் 8-ம் நாள் ஊர்சுபெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த வில்ஹெம் ராண்ட்ஜன், குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆய்ந்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக, அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சையனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதைக் கண்ணுற்றார்.

மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும் இல்லாத போது ஒளிராமலும் இருக்கக் கண்டார். இதற்கு குழாயின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் எனக் கருதினார். இக்கதிர்களை அவர் எக்ஸ்-கதிர்கள் என அழைத்தார்.

======================================================================================
 மிகப்பிரபலமான @Nike நிறுவனத்தின் வாசகம் 'Just do it' என்பது Gary Gilmore என்ற கொலைகாரனின் மரண தண்டனைக்கு முந்தைய கடைசி வார்த்தை களாகும்!! .” . “ இரு கண் புருவங்களுக்கு இடையில் உள்ள இடைவெளி கிலாபெல்லா எனப்படும்!.” 
. “ Kopimism என்று ஒரு மதம் இருக்கு! Missionary Church of #Kopimism அதன் தலைமையிடம்! Ctrl+C,Ctrl+V தான் அவங்க மந்திரமாம்! காப்பி பேஸ்ட் மதம் ! .” 
. “ குளிர் சாதனமான பிரிட்ஜ்க்கு முன் ரஷிய மற்றும் பின்லாந்து காரர்கள் பால்-Milk கெட்டுப் போகாமலிருக்க பாலில் உயிருள்ள தவளையை போட்டு வைப்பார்களாம்.” 
 “ RoyRaymond தன் மனைவிக்கு உள்ளாடை வாங்கும் போது ஏற்பட்ட மோசமான அனுபவமே உலகின்சிறந்த பெண்கள் உள்ளாடை நிறுவனம் VictoriasSecret உருவாக காரணமானது! .” 

=======================================================================================