'2ஜி' சி.பி.ஐ., அமைதி
'2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர் பாக, சி.பி.ஐ., தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பிலும், வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், டில்லி பாட்டியாலா கோர்ட்டில், இறுதிகட்டமாக, சுருக்கமான வாத பிரதிவாதங் கள், துவங்கியுள்ளன.
நேற்று நடந்த விசாரணையின் போது, சி.பி.ஐ., வழக்கறிஞர், குரோவர் வாதிட்டதாவது:
ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு வந்திருந்த, 575 விண்ணப்பங்களில், சில நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறுவதற்காக தன்னிச்சையாக தேதியை, ராஜா மாற்றியுள்ளார்; இதற்கான கோப்பு களில், அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர். விசாரணையின்போது, தான் வெறுமனே ஆவணங் களில் கையெழுத்து போட்டதாகவும், மனப்பூர்வ மாக ஒப்புதல் தரவில்லை என்றும், அப்போதைய அரசுசெயலர், மாத்துாரே கூறியுள் ளார்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை கேட்டதும் கடும் கோபமடைந்த நீதிபதி, சைனி கூறியதாவது:
தொலைத் தொடர்பு துறையின் அரசு செயலர், கூடு தல் செயலர், சிறப்பு செயலர், உரிமங்கள் வழங்கும் இயக்குனர், துணை இயக்குனர் என அனைவருமே பதிவு செய்து ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ளனர்; அதைதான், ராஜா ஏற்றுள்ளார். அப்படியானால், இந்த கோர்ட், ஆவணங்களை நம்ப வேண்டுமா அல்லது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்த பின், கோர்ட்டிற்கு வந்து, 'நான் உடன்படவில்லை; வெறும் கையெழுத்துதான் போட்டேன்' என்ற வாய்மொழி சாட்சியை, நம்ப வேண்டுமா?
அரசு செயலர், அமைச்சரவை செயலருக்குத்தான் கட்டுப்பட்டவர்; அமைச்சருக்குஅடிமை அல்ல. மனப்பூர்வமான ஒப்புதல் இல்லை என்றால், அதையாவது, தன் குறிப்பில் பதிவு செய்திருக்க லாமே; அதை, யாரும் தடுக்க போவதில்லையே. நிர்வாக சட்டத்தை நன்கு படித்துவிட்டு இந்த கோர்ட்டிற்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் விதத்தில், வாதங்களை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். நீதிபதியின் கிடுக்கிப் பிடி கேள்விகளால் ஆடிப் போன, சி.பி.ஐ., வழக்கறிஞர், குரோவர் சிறிது நேரம் அமைதி காத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:
இந்த வழக்கில் கோப்பு பதிவு களையும், வாய்மொழி சாட்சியங்களையும், உங்கள் முன் வைத்துள்ளேன். முடிவு எடுக்க வேண்டியது கோர்ட்டு தான். முடிவைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சட்டென எழுந்த ராஜா, ''ஆவணங் களையும், சட்டத்தையும் மட்டும்தான் நான் நம்புகிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல,'' என பதிலடி தரவே, மீண்டும் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
=====================================================================================
இன்று,இந்த வழக்கில் கோப்பு பதிவு களையும், வாய்மொழி சாட்சியங்களையும், உங்கள் முன் வைத்துள்ளேன். முடிவு எடுக்க வேண்டியது கோர்ட்டு தான். முடிவைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சட்டென எழுந்த ராஜா, ''ஆவணங் களையும், சட்டத்தையும் மட்டும்தான் நான் நம்புகிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல,'' என பதிலடி தரவே, மீண்டும் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பிப்ரவரி-23.
- ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)
- ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)
- புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)
- உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)
- கயானா குடியரசு தினம்(1970)
ரகசிய வாக்கு பதிவு என்பது இந்தியாவில் நடைமுறை இல்லை
- வைகோ
:>>அட்டை பெட்டிக்கு பின்னாடி ஒளிச்சு வச்சு ஒட்டு போடுற மானஸ்தன் அண்ணன்தான்..
:>>அட்டை பெட்டிக்கு பின்னாடி ஒளிச்சு வச்சு ஒட்டு போடுற மானஸ்தன் அண்ணன்தான்..