மறு தேர்தல் வரும்?
அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பதால், தமிழகத் தில், விரைவில் குடியரசுத்தலைவர் ஆடசி வந்து மறுத் தேர்தல் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
அ.தி.மு.க.,வினர், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவாளர்கள் தனியாகவும் உள்ளனர். இதில், பன்னீர்செல்வத்திற்கு, ஒன்பது, எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆனாலும், 'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என, கவர்னரை சந்தித்து, பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
அதே நேரம், சசிகலா சிறைக்கு போய் விட்ட தால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சட்டசபை கட்சி தலைவராக, சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள் ளார்.
ஆளுநர் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அழைத்தாலும் சசிகலா ஆதரவு ச.ம.உ,க்கள் பட்டியலை வைத்திருந்தாலும் அதில் உள்ள சிலர் தற்போது எதிர் தரப்பில் மாறி சென்றுள்ளதால் அதை பற்ரிய வினாக்களை எழுப்புவார்.பட்டியலில் உள்ளவர்களை தன் முன் நிறுத்தவே சொல்லுவார்.
கவர்னர் விரைவில், முதல்வர் பன்னீர்செல்வம் அல்லது அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க, வாய்ப்பு வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல், இருவருக்கும், ஒரே நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு வாய்ப்பு வழங்கும் போது, பெரும்பான்மையை நிரூபிக்க, இருவரும் தவறினால், சட்டசபைமுடக்கப்படும்.
ஆறு மாதங்களுக்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத் தப்படும். அதன்பின், சட்டசபை தேர்தல் நடத்த, நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இது போன்ற நிலை ஏற்படுவதை தவிர்க்க, அ.தி.மு.க.,வில் சிலர், இரு தரப்பினரிடமும், பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதை, அடைத்து வைக்கப் பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பலர் ஏற்றுக் கொண்டுள்ள னர்.
ஆனால் காய் நீட்டி பல கோடிகளை பெற்றுக்கொண்டுள்ளதை சசிகலா தரப்பு ஆதாரங்களுடன்வைத்துள்ளதால் இதற்கு ஒப்புக்கொள்ள தயங்குகின்றனர்.
இதனால், முடிவு எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு தப்பினருக்கும் இடையே, சமாதானம் ஏற்படாவிட்டால், ஜனாதிபதி ஆட்சிக்கான சூழலே அதிகம் உள்ளது என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.க.,வில் உள்ள இரு அணிகளாலும் பெரும் பான்மையை நிரூபித்து, ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகும், எனவே, ஆட்சி அமைக்க, அடுத்த வாய்ப்பு ஆளுநரிடம் தி.மு.க கேட்டால் பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.
தி.மு.க.,வில், 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். காங்கிரசில், எட்டுஎம்.எல்.ஏ.,க்களும், முஸ்லிம் லீக் கட்சியில், ஒரு எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். தி.மு.க., அணியில் மொத்தம், 98 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தா லும், ஆட்சி அமைக்க, கூடுதலாக, 20 எம்.எல்.ஏ.,க் கள் தேவை.
ஆனால் ஸ்டாலினோ இந்த பின்வழி வாய்ப்பை விட மறு தேர்தல் வந்தால் இன்றைய சூழலில் திமுக அறுதி பெரும்பாண்மையில் வெல்லலாம்.அதற்கான சூழல் மக்களிடம் உள்ளது என்று எண்ணுகிறார்.அது திமுகவின் செல்வாக்கை உயர்த்துவதுடன்,தேவையே இல்லாத தேர்தலை கொண்டுவந்த அதிமுகவிடம் மக்களுக்கு உள்ள அதிருப்தியையையும் அதிகரிக்கும்.
ஜெயலலிதா இல்லாத அதிமுக செல்லாக்காசு என்பதையும் பொது உலகிற்கு உணர்த்தும்.அதிமுகவின் அழிவை அது ஆரம்பித்து விடும்.
சசிகலாவையே மக்களும் ,அதிமுக தொண்டர்களும் விரும்பாத நிலையில் அவர் வலிந்து கடசியில் திணித்து வரும் மன்னார் குழுமத்தை சேர்ந்த தினகரன்,வெங்கடேஷ் ,திவாகரன் ஆகியோரை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
அவர்களிடம் கையேந்திய சிலர் மட்டும் துணை நிற்க எதிர்காலத்தில் சமக,லட்சிய திமுக,பச்ச முத்து கட்சிகள் போல் மாறிவிடும்.
இந்த வாய்ப்பை அதிமுகவுக்கு கொடுக்கவே திமுக தலைவர் ஸ்டாலின் தர விரும்புகிறார்.
அதுதான் நடக்க வாய்ப்பும் உள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் சடடமன்றத்தேர்தல் நடக்க வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது.
=======================================================================================
இன்று,
பிப்ரவரி-16.
- லித்வேனியா விடுதலை தினம்(1918)
- வொலஸ் கரோத்தேர்ஸ், நைலானுக்கான காப்புரிமம் பெற்றார்(1937)
- இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி தாதாசாஹெப் பால்கே இறப்பு (1944)
- எக்ஸ்புளோரர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது(1961)
- கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது(2005)
இந்திய சினிமாவின் தந்தையான, தாதா சாகிப் பால்கே என, அழைக்கப்படும், துண்டிராஜ் கோவிந்த் பால்கே, சினிமா உலகின் தந்தையாக கருதப்படுபவர்.- சினிமாவை, முதன்முதலில் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர். பால்கே, 1870 ஏப்., 30ல் பிறந்தார். மும்பையில் உள்ள, சர் ஜெ.ஜெ.கலைக் கல்லுாரியில், 1885ல் பயின்றார்.
- 1910 - 1940 வரை, பல திரைப்படங்களை இயக்கினார்.
- துவக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல; ஒலி இல்லாத ஊமை படங்களாகவே வெளிவந்தன.
- பால்கே, தன் தீவிர முயற்சியால், அரிச்சந்திரா என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கினார். தன் குடும்பத்திலிருந்த, 18 பேரை நடிகர்களாக ஆக்கினார்.
- முதல் இந்திய சினிமா, ஒரு குடும்பப் படமே. 1944 பிப்., 16ல் இறந்தார். அவரது நினைவாக நிறுவப்பட்டது தான், பால்கே விருது!
- =======================================================================================
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 'இஸ்ரோ' 15.02.2017,அன்று 'பி.எஸ்.எல்.வி., - சி-37 ராக்கெட் மூலம்,104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, புதிய சாதனை படைத்தது. இஸ்ரோ இந்திய விண்வெளி,வரலாற்றில்மட்டுமல்ல உலக அளவிலும் இது மிகப் பெரும் சாதனையாகும்.
இதற்கு முன், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், ஒரே முயற்சியில், 37 செயற்கை கோள்களை அனுப்பியது சாதனையாக இருந்தது. தற்போது, ஒரே முயற்சியில், 10 செயற்கை கோள்களை அனுப்பியதன் மூலம், 'இஸ்ரோ' அந்த சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளது. .
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' வர்த்தக ரீதியாக, செயற்கை கோள்களை, விண்ணில் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 'பி.எஸ்.எல்.வி., - சி 37' என்ற ராக்கெட் மூலம், பூமி ஆய்விற்காக, இந்தியாவின், 'கார்டோசாட் - 2' செயற்கை கோளை, நேற்று, 9:28 மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த செயற்கை கோளுடன், இந்தியா - 2, அமெரிக்கா - 96, இஸ்ரேல் - 1, கஜகஸ்தான் - 1, நெதர்லாந்து - 1, சுவிட்சர்லாந்து - 1, ஐக்கிய அரபு எமிரேடு - 1 என, ஏழு நாடுகளின்,179 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.
இந்த செயற்கை கோளுடன், இந்தியா - 2, அமெரிக்கா - 96, இஸ்ரேல் - 1, கஜகஸ்தான் - 1, நெதர்லாந்து - 1, சுவிட்சர்லாந்து - 1, ஐக்கிய அரபு எமிரேடு - 1 என, ஏழு நாடுகளின்,179 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.
இந்த ராக்கெட், விண்ணில் செலுத்தப்பட்ட, 17வது நிமிடத்தில், 'கார்டோசாட் - 2' செயற்கை கோள், பூமியில் இருந்து, 510 கி.மீ., உயரத்திலும், மற்ற செயற்கை கோள்கள், 18, 28வது நிமிடங்களில், 524 கி.மீ., உயரத்திலும் நிலை நிறுத்தப்பட்டன.
ஏற்கனவே, 2015 ஜூனில், ஒரே முயற்சியில், 23 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, இஸ்ரோ சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 'கார்டோசாட் - 2' செயற்கை கோள், 714 கிலோ எடை உடையது. பூமியில் இருந்து, 510 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பூமி ஆய்வு, நதி நீர் மேம்பாடு, நில பயன்பாட்டு வரைபடங்கள் தயாரித்தல், சாலை இணைப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். \