சனி, 25 பிப்ரவரி, 2017

பூமி அழிந்து விடுமா?

மாயன்களின் விளையாட்டு மற்றும் மாயன்களின் காலம் பற்றி பார்த்து வருகிறோம். சூரியன் அழியாது என்றதும், எஞ்சி இருப்பது பூமியின் அழிவு மட்டும்தான் என்று மாயன்கள் நம்பினார்கள். பூமியின் அழிவிலும் இரண்டு விதமான அழிவு உண்டு என்றும், அதில் முதலாவது, பூமியுடன் ஏதாவது மோதுவதால் பூமி அழிவது என்பதாகும். ‘நிபிரு’ அல்லது ‘பிளானெட் எக்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு கோள், பூமிக்கு அருகே வரலாம் என்பது மாயன்கள் கருத்து.

இந்த “நிபிரு” என்ற ஒன்று இருப்பதையே நாஸா மறுக்கிறது. அப்படி ஒரு கோள் இருந்தால், அது இப்போதே விஞ்ஞானிகளின் கண்களுக்கு அகப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள், அவர்கள். ஆனால் அந்த நிபிருவின் வேகம் மிக அதிகம் என்பதால், அது பூமியை அண்மிப்பதற்கு மிகச் சிறிய காலம்தான் தேவை எனவும், தற்போது அது நமது கண்ணுக்குத் தென்படாத தூரத்தில் இருப்பதாகவும், நாஸாவை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள்.
nibiru

அத்தோடு அது ஒரு கருமையான கோள் என்றும், பிரபஞ்சத்தில் ஒளிபடாத, கருமையான எதுவுமே தெரிவதற்கு சாத்தியம் குறைவு என்றும் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்த “நிபிரு” என்ற ஒன்று இருப்பதற்கு 50-க்கு 50 என்ற சாத்தியங்கள்தான் இருப்பதாக நாம் எடுக்க வேண்டும். அப்படி அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், விரைவில் அது நிச்சயம் நமக்குத் தெரியத் தொடங்கி இருக்க வேண்டும். எனவே நாம் காத்திருக்கலாம். அப்போதும் நமக்கு “நிபிரு” தெரியாத பட்சத்தில் அந்தப் பயத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ளலாம். தெரிந்தால், மூட்டையைக் கட்டலாம் என்பது நாஸாவின் கருத்தாக உள்ளது.
இதற்கு அடுத்ததாக சொல்லப்படும் பூமியை நோக்கிய மோதல் என்றால், அது விண்கற்கள்தான். உண்மையில் இது மிகப் பெரிய ஆபத்தான ஒரு விஷயமும் கூட. பூமி, விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதற்கு நூறு விகிதம் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அது எப்போது? என்பதுதான் கேள்வி. பூமியை நோக்கி வந்து தாக்கக் கூடிய விண்கற்கள், எமது சூரியக் குடும்பத்திலேயே, பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. அவற்றில் இதுவரை கணித்ததன்படி ஆயிரம் விண்கற்கள் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் அளவு பெரியவை. இவை போல ஒன்று தாக்கித்தான், முன்னர் இருந்த டைனசார்கள் எல்லாம் அழிந்தன. இப்படிப் பூமியை ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடிய ஆயிரம் விண்கற்கள் விண்வெளியில் வலம் வருகின்றன.
Nibiru-y-el-Apocalipsis-Final-659x450
உலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும்,ஒரு அட்டவணை போட்டு, இந்த ஆயிரம் விண்கற்களில் ஒவ்வொரு கற்களையும் தனித்தனியே, தினமும் கண்காணித்து வருகின்றனர். ஏதாவது ஒரு விண்கல்லின் திசையாவது பூமியை நோக்கித் திரும்பும் பட்சத்தில், அவர்கள் உடன் அறிவிக்கத் தயாராக இருக்கின்றனர்.
இதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கும் என்பதற்குச் சாத்தியம் மிகக் குறைவு. இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். “இப்போதைக்கு விண்கல் தாக்காது” என்றுதான் வான்லை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே ஒழிய, விண்கல் என்றுமே தாக்காது என்று சொல்லவில்லை. அவர்களே சொல்லும் ஒன்று, நம்மை நடுங்க வைக்கிறது. அதாவது பூமி நிச்சயம் ஒரு விண்கல் தாக்கி எப்போதாவது அழியும் என்பதுதான்.
எனவே, “நிபிரு” என்ற ஒன்றினால் ஆபத்து வருமென்றால், நமக்கு ஏற்கனவே புரிந்து இருக்கும், விண்கல் பயம் என்பது தேவையில்லாதது. இப்போது நம்மிடையே எஞ்சியிருக்கும் பூமியின் அழிவு என்பது பின்வரும் நான்கு வகையில்தான் அனேகமாக இருக்கலாம்:-
1. சுனாமி, பூகம்பம் போன்ற தொடர்ச்சியான் இயற்கை அழிவுகள்
2. பூமிக்குள் குமுறிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் வோல்கான்’ (Supervolcan) எனப்படும் பாரிய எரிமலைகளின் வெடிப்பு.
3. பூமியின் வட தென் துருவங்கள் இடம் மாற்றம் (Pole shift)
4. சூரிய வெப்பக் கதிரின் தாக்குதலும், அதன் மூலம் ஏற்படும் மின்காந்த விளைவுகளும்.
maxresdefault
இவை எல்லாவற்றையும் நாம் சரியாக கவனித்துப் பார்த்தால், இவை எல்லாமே ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விளைவுகளையே கொடுக்கும். உதாரணமாக, பூமியின் வட-தென் துருவங்கள் இடம் மாறுவதை நாம் கருத்தில் கொள்வோம்.
துருவமாகத் தற்போது இருக்கும் இடம் வெப்பப் பிரதேசமாகவும், வெப்பப் பிரதேசம் துருவமாகவும் மாறினால், தற்சமயம் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து போகும். பூமியின் அத்தனை நிலப்பகுதிகளும் பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு நீரினால் மூழ்கிவிடும். அதன் ஆரம்பக் கட்டமாக ஏற்படுவது பாரிய சுனாமிகளும்,பூகம்பங்களுமாகத்தான் இருக்கும். மாயன்களிடமிருந்து எமக்குக் கிடைத்த நான்கு புத்தகங்களில், ‘ட்ரெட்னர் கோடெக்ஸ்’ (Dredner Codex) என்பதில்தான் உலக அழிவு பற்றி விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி பூமியானது நீரினாலும், நெருப்பினாலும் சூழப்பட்டு அழிவதாகத்தான் உள்ளது.
nibiru__s_crossing_by_shaquenova
பூமியின் துருவங்கள் இடம் மாறுவதற்கும், பூமியில் தனித்தனியாக சுனாமிகளும், பூகம்பங்களும் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதற்கும் சாத்தியங்கள் தற்சமயம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சுனாமிகளும், பூகம்பங்களும் தனித்தனியே ஆங்காங்கே ஏற்பட்டாலும்,அவை ஒட்டுமொத்த உலகில் அழிவை ஏற்படுத்திவிடாது. அதுவும் இப்போதைக்கு ஏற்படவே முடியாது. இதனடிப்படையில் கடைசியாக, நம்மிடையே எஞ்சியிருப்பன இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும்தான். அவை
1.சூரியனின் வெப்பக் கதிர் வீச்சு,
2. சூப்பர் வோல்கான்.
இந்த இரண்டினாலும் ஏற்படப் போகும் அழிவை, எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. இவை இரண்டிற்கும், அழிவுக்கும் சம்பந்தம் இருக்கலாமா? என்று கேட்டால், உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இல்லை என்று பதில் சொல்வதே இல்லை. “இவற்றிற்கு சாத்தியங்கள் இருக்கலாம்” என்று சந்தேகத்துடன் ஒரு சாரார் சொல்ல, “இருக்கிறது” என்று ஒரு சாரார் அடித்துச் சொல்ல, எஞ்சியவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இல்லை என்று மறுக்கவில்லை…
=================================================================================================
ன்று,
பிப்ரவரி-25.
  • குவைத் தேசிய தினம்
  • சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்(1836)
  • தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)
  • மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
=================================================================================================