குதிரை பேர பாஜக

மத்தியில் ஆளுங்கட்சியான மோடியின் பாஜக தமிழ் நாட்டின் சசிகலா அதிமுகவின் தரத்துக்குத்தான் உள்ளது.

ஊடகங்களும் அதன் வெற்றியை மட்டுமே பூதாகரமாக்குகிறதே தவிர பாஜக ஆட்சியை இழந்த பஞ்சாப்பை பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களிலேயும் ஆளுங்கடசிகளுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதிலும் உபி மாநிலத்தில் முலாயம்.அகிலேஷ் இருவரின் குடும்ப சண்டையில் கட்சியின் சின்னம் சைக்கிளை முடக்கும் அளவுக்கு போனது மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கி விட்டதும்,அதை பாஜக அறுவடை செய்ததும்தான் உண்மை.

மேலும் திமுகவின் வெற்றியை 61 தொகுதிகளை வாங்கி 4 மட்டும் வென்று திமுகவுக்கு எதிர்க்கடசி தகுதியை கூட இல்லாமல் ஆக்கிய காங்கிரசு உபி யிலும் தகுதிக்கு மீறி 104தொகுதிகளை வாங்கி 13 மட்டுமே வென்று அகிலேஷின் வீழ்ச்சிக்கு அடிகோலியுள்ளது.

திமுக எளிதாக வெல்லக்கூடிய தொகுதிகளை வாங்கி எப்படி இங்கு கவிழ்த்ததோ அதேதான் அங்கும்.

சமாஜ்வாடி,காங்கிரசு ஆண்ட உபி ,உத்தரகண்ட் மாநிலங்களை பாஜகவும் ,பாஜக ஆண்ட பஞ்சாப்,கோவா மாநிலங்களில் காங்கிரசும் முன்னேறியுள்ளன.

ஆனால் இந்திய முழுக்க பாஜக ,மோடி பெரிதாக சாதனை செய்து விட்டதாக ஊடகங்கள் ஊதிக்கொண்டிருக்கின்றன.உண்மை நிலையை அவை எடுத்து கூறவில்லை.பாஜகவின் தோல்விகள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன.
உபி தேர்தலில் மோடி அரசு தமிழ்நாட்டில் ஜெயலலிதா கையாண்ட உத்திகளை கையாண்டுதான் வென்றுள்ளது.இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தை என்பதுதான் அசிங்கம்.
காலங்காலமாக பாஜகவுக்கு எதிராகவே வாக்களிக்கும்  முஸ்லீம் தொகுதிகளிலும் பாஜக வென்றிருப்பதுதான் மோடி,தேர்தல் ஆணைய கூட்டணியை உறுதிப்படுத்துகிறது.

இதைத்தான் மாயாவதியும் அறிக்கைகளாக விட்டு வருகிறார்.

தேர்தல் ஆணையம் மறுத்தாலும்,தேர்தல் ஆணையம் ஜெயலலிதா ,அதிமுகவுக்கு ஆதரவாக எப்படி எல்லாம் நடந்து கொண்டது என்பதும் திமுக முன்னணி இடங்கள் எல்லாம் மோடியின் 11 மணி வாழ்த்துக்குப் பின்னர் எப்படி அதிமுக வென்ற இடங்களாக மாற்றப்பட்டது என்பது நாம் அறிந்த விசயங்கள்தான் .

மோடியின் தோழிக்கே தேர்தல் ஆணையம் இப்படி செயல்பட்டது என்றால் மோடிக்கு?

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை கைப்பற்றியுள்ள பாஜக, போதிய எம்எல்ஏ-க்கள் பலம் இல்லாத கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் குறுக்கு வழியில்ஆட்சியைப் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்தான், கோவா மாநில முதல்வர் என்றும் பாஜக-வினர் அறிவித்துள்ளனர்.


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு சனிக்கிழமையன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 இடங்களையும், உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 57 இடங்களையும் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்குவந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ்தனிப்பெரும்பான்மை பெற்றது. 
அக்கட்சி மொத்தமுள்ள 117 இடங்களில் 77 இடங்களைகைப்பற்றியது. 

இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின், காங்கிரஸ் கட்சி பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்துள்ளது.

அதேநேரம் மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக-வைப் பின்னுக்குத் தள்ளி,தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்திருந்தாலும், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. 
இதனை சாதகமாக பயன்படுத்தி, ஆட்சிக்கு வருவதற்கான குதிரை பேரங்களைபாஜக துவங்கியுள்ளது.

40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத் தில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. 
ஆனால், தற்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜகவுக்கு 14 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 

ஆட்சியமைப்பதற்கு 21 எம்எல்ஏ-க்கள் வேண்டும் என்ற நிலையில், காங்கிரசுக்கு இன்னும் 3 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், 14 எம்எல்ஏ-க்களை வைத்துள்ள பாஜகவானது, கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிர கோமந்தக் கட்சிமற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் 8 பேரின் ஆதரவைப் பெற்று, ஆட்சிக்கு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 
8 எம்எல்ஏ-க்களை தங்களுக்கு சாதகமாக இழுக்க- அமைச்சர் பதவி உள்ளிட்ட ஆசைகளைக் காட்டி, குதிரை பேரங்களை நடத்தி வருகிறது.மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், நிதின் கட்காரி ஆகியோர் இந்த பேரத்தை நடத்தி வருகின்றனர்.

பேரம் படியும் பட்சத்தில், மனோகர் பாரிக் கரே கோவா முதல்வராக பதவியேற்பார் என்றுகூறப்படுகிறது.மனோகர் பாரிக்கரை, முதல்வராக பாஜகதலைமை தேர்வு செய்யும் பட்சத்தில், முதல்வர்பதவிக்கான போட்டியிலிருந்து விலகத் தயார் என கோவா மாநில பாஜக தலைவர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். 

ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரைச் சந்திக்கவும் பாஜகவினர் நேரம் கேட்டுள்ளனர்.மறுபுறம் 18 இடங்களைப் பெற்ற காங்கிரஸ்கட்சியையே, கோவாவில் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.கோவா மாநிலத்தைப் போன்றதொரு நிலையே மணிப்பூரிலும் ஏற்பட்டுள்ளது. 

60 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில், காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 21 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்திலும், சிறிய கட்சிகளில் நாகா மக்கள் முன்னணி, தேசியவாத மக்கள் கட்சிஆகியவை தலா 4 இடங்களிலும், ராம்விலாஸ்பஸ்வானின் லோக் ஜனசக்தி ஒரு தொகுதியிலும் சுயேச்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர்.மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. 

பாஜக-வுக்கு 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் கட்சி எம்எல்ஏ, நாகா மக்கள் முன்னணி மற்றும்தேசியவாத மக்கள் கட்சி எம்எல்ஏ-க்களை பாஜக பக்கம் இழுப்பதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகின்றது.

மணிப்பூரில் நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என்று பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் கூறியுள்ளார். 

மணிப்பூரில் நாங்கள்ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையை பெறுவோம் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவா, மணிப்பூர் மாநில நிலைமைகள்தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாஜகவின் தேசியத் தலைவர்அமித் ஷா, “பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக-தான் ஆட்சி அமைக்கும்” என்று ஏற்கெனவே கூறியுள்ளதால், 

தலைமையின் முழுமையான ஆதரவுடன் ஆட்சியைப் பிடிப்பதற்கான சித்து வேலைகளில் பாஜக-வினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில், 
அது வடகிழக்கு பிராந்தியத்தில் அசாம், அருணாச்சலப் பிரதேச வரிசையில் பாஜக ஆட்சி நடக்கும் 3-ஆவது மாநிலமாக மாறும்.

======================================================================================
* அரசியல் வர்த்தகமாகி விட்டது. 

* அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது தகுதி.


* திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்ல முடியாது.

* நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். 


* தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தேர்வு செய்து கொள்ளட்டும் 


* ஜெயலலிதா மரணம்குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. 


* எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்க வேண்டும். 


* ஜல்லிகட்டு போராட்டம் எரிமலையின் நுனி


* தவறுகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். 


* சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும். 


* வாக்குகளுக்கு விலை பேசும் போது கேள்விகள் எழுப்ப முடியாது 


* தமிழகத்தில் தேர்தல் வேண்டும். 

* தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்று கொள்ள வேண்டும்.


                                                                                               தொலைக்காட்சி பேட்டியில் கமல்ஹாசன் 
====================================================================================
ன்று,
 மார்ச்-13.

  • ஆக்ஸிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)
  • வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)
  • இந்தியாவின் நவீன தொழிற்துறையின் முன்னோடியான ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)
  • மங்கோலியா, சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1921)
  • தமிழறிஞர் கா.நமச்சிவாயம் இறந்த தினம்(1936)
=====================================================================================
சர்வதேச நாடுகளின் ரகசியங்கள், அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் அணு சோதனைகள் குறித்த தகவல்களை வெளியிட்டதாக கூறிவிக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சே-வை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. தற்போது ஈக்குவேடார் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அசாஞ்சே அங்கிருந்தும் தனது வேலையை காட்டி வருகிறார்.
இந்நிலையில், வால்ட் 7 என்ற பெயரில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். சி.ஐ.ஏவின் ரகசிய ஹாக்கிங் திட்டத்தைப் பற்றிய 8,761 ஆவணங்கள் வெளியாகியுள்ளன. 
இந்த ஆவணங்களில் ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்ட், சாம்சங் டிவிக்கள், விண்டோஸ் போன் போன்றவற்றை ஹாக் செய்து ரகசிய மைக்ரோபோனாக பயன்படுத்தும் அளவுக்கு சி.ஐ.ஏ திட்டமிட்டுள்ளது.  

இத்தகைய தொழில்நுட்பங்களை அமெரிக்க பொறியாளர்களே வடிவமைத்து கொடுக்கின்றனர்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?