மக்களை வதைக்க
நமது பணத்தை நாம் எடுக்கவே பணமதிப்பு நீக்கம் என்று மோடி கொண்டுவந்து பெரும்பாலான மக்களை வதைத்தார் என்றால் இப்போது வங்கிகள் அதே இந்திய பாமரர்களை வதைக்க ஆரம்பித்துள்ளது.
முதலில் சேமிப்பு கணக்குக்கான வட்டை 12% வட்டியாக இருந்ததுஇப்போது 6 % ஆக உள்ளது.
சேமிப்பு கணக்கில் 0 கணக்கு கூட இருந்த காலம் போய் 100,500 குறைந்த அளவு கணக்கில் இருப்பு இருந்தாக வேண்டும் என்பது போய் 1000 ஆகி இப்போது 5000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 5 முறை வங்கியில் நீங்கள் ஏதாவது எடுத்தல்,போட்டல் செய்தால் அதற்கு தனியாக சேவைக்கட்டணம் என்ற பெயரில் பணம் உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால் இப்படி பொது மக்களை வதைக்கும் வங்கிகள் தனது நடவடிக்கைகளை மட்டும் பொதுமக்களுக்கு எதிராகவே செய்கின்றன.
கருப்பு பண தொழிலதிபர்களுக்கு பல்லாயிரம் கோடிகளில் வராக்கடன்களை அள்ளி விட்டு,விட்டு விவசாயக்கடன்,கல்விக்கடன் என்று 50000 வாங்கிட்டவர்களை வதைக்கிறது.தற்கொலைக்கு தூண்டிவிடுகிறது.
இன்றைய விவசாயிகள் தற்கொலைகளுக்கு பின்னால் வறட்சியை விட வங்கிக்கடன் ,வட்டி,அபராதம் கெடுபிடிகள்தான் உள்ளது.
2017 ஏப்., – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், 17,750 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது.
இது, தொடர்பாக, 3,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், வங்கி ஊழியர்கள், 450 பேரும் அடங்குவர்.
மோசடியில், பண மதிப்பின் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த வங்கிகளில், முறையே, 2,237 கோடி ரூபாய், 2,250 கோடி ரூபாய் மற்றும், 1,998 கோடி ரூபாய் அள
விற்கு மோசடி நடைபெற்றுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மோசடி பட்டியலில், தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதலிடத்தில் உள்ளது.
அடுத்த இடங்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க், எச்.டி.எப்.சி., பேங்க், ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க் ஆகியவை உள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவைச் சேர்ந்த, 64 ஊழியர்கள் மீது, பண மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
========================================================================================
சமூக வலைதளங்களில், பல அரசியல் விமர்சனங்களைக் கூறிவரும் கமல்ஹாசன் , சமீபத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். 'தவறு செய்யும் அரசியல்வாதிகளை ஆதாரத்தோடு தட்டிக்கேட்க வேண்டும்.தரக்குறைவாக அவர்களை பேசக்கூடாது.அது நம்மையே தாக்கும் ஆயுதமாக்கி விடும் என, அவர்களுக்கு கமல்ஹாசன்அறிவுரை வழங்கினார்.
=======================================================================================
இன்று,
மார்ச்-14.
======
கார்ல் மார்க்ஸ் (1818-83)
ஒரு ஜெர்மானிய தத்துவ நிபுணராக உருவாக்கி தனது "மூலதனம்"நூல் மூலமாக உலகையே புரட்டி போட்டார்.
அவரது கொள்கை தத்துவங்கள் மூலம் உருவான பொதுவுடமை இடது சாரி கட்சிகள் காலம்கடந்தும் தனது பங்களிப்பை உலக அரசியலிலும் ஏழ்மை,விளிம்பு நிலை மக்களுக்கும் செய்துவருகிறது.
சரிவை நோக்கி போய் கொண்டிருக்கும் முதலாளித்துவத்துக்கு சரியான மாற்றாக கம்யுனிசமே உள்ளது.அப்பெருமை காரல் மார்க்ஸையே சாரும்.
அவரின் சிந்தனைகள், தத்துவம், பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு, இலக்கியம் என பலதுறைகளில் இருந்தன. இன்றும் இவரின் சிந்தனைகள் இத்துறைகளில் மட்டுமல்லாது மற்ற துறைகளில் உள்ளவர்களும் ஊன்றி படித்து தெரிந்துகொள்ள முயல்வது இவர் சிந்தனையின் சிறப்பு. படித்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்திலாவது மார்க்ஸின் சிந்தனையைத் தொடாமல் இருந்திருக்க முடியாது.
==================================================================================

''என்னை அமைதிப்படுத்தலாமே தவிர, யாராலும் கட்டுப்படுத்த முடியாது,''
உலகநாயகன் கமல்ஹாசன் .
சமூக வலைதளங்களில், பல அரசியல் விமர்சனங்களைக் கூறிவரும் கமல்ஹாசன் , சமீபத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். 'தவறு செய்யும் அரசியல்வாதிகளை ஆதாரத்தோடு தட்டிக்கேட்க வேண்டும்.தரக்குறைவாக அவர்களை பேசக்கூடாது.அது நம்மையே தாக்கும் ஆயுதமாக்கி விடும் என, அவர்களுக்கு கமல்ஹாசன்அறிவுரை வழங்கினார்.
இதனால், கமல் விரைவில் அரசியலுக்கு வருவார் என, அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
குரல் கொடுப்பேன் : இந்நிலையில், தனியார் 'டிவி' ஒன்றுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குரல் கொடுப்பேன் : இந்நிலையில், தனியார் 'டிவி' ஒன்றுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியில், கமல்ஹாசன்கூறியதாவது:
"அரசியல் தற்போது வியாபாரமாகி விட்டது. நிகழ்கால அரசியலுக்கு தீங்கு ஏற்படுமானால், நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். என்னை அமைதிப்படுத்தலாமே தவிர, யாராலும் கட்டுப்படுத்த முடியாது. என் வாழ்வில், எந்த ஊழலுக்கும் இடம் தரவில்லை.
ஓட்டை, விலைபேசி விற்று விட்டால், அவர்கள் ஆட்சி முடியும் வரை, கேள்வி கேட்கும் அருகதை, வாக்காளர்களுக்கு கிடையாது.
யாருடைய ஆட்சியாக இருந்தாலும், குற்றத்தை யார் செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டும்.
விஸ்வரூபம் படத்திற்கு, இஸ்லாமியர்களால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததே, அப்போதைய ஆட்சியாளர்கள் தான்.
ஜெயலலிதா இறக்கும் போது தமிழக முதல்வராக இருந்துள்ளார்.எனவே அவர் மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை, அரசுக்கும் அவருடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உள்ளது.
குழப்பத்தில் உள்ள தமிழகத்திற்கு, உடனே தேர்தல் நடத்த வேண்டும்.
இந்த ஆட்சி நான்கு ஆண்டுகள் தொடர வேண்டும் என, யாரும் சொல்ல வேண்டியதில்லை. அப்படி சொல்வது, கட்டாயத் திருமணம் போன்றது. யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
என்னை அரசியல் கட்சிக்குள் இழுக்க, நீண்ட நாட்களாக முயற்சி நடந்து வருகிறது. நான், இந்நாட்டின் குடிமகன்; அரசியல் பேச தகுதியானவன். தவறுகள் அதிகமாகும்போது, மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் மாற வேண்டும்.
திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாகக் கூற முடியாது.
தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை, திராவிடமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். தேசியக் கட்சிகள், தமிழகத்திற்குள் நுழைந்தால், திராவிடத்தை நிச்சயம் ஏற்க வேண்டியது இருக்கும்.
ஓ.பி.எஸ்., - ஈ.பி.எஸ்., என, யாருடனும் எனக்கு பழக்கம் இல்லை. யாருக்கு ஆதரவாகவும் நான் பேசவில்லை.
சினிமாவை எப்படி, அனைவரும் விமர்சிக்கின்றனரோ, அதேபோல், நானும் அரசியலை விமர்சிக்கிறேன்.இன்று கடசிகளைப்பார்ப்பதை விட சாதியை பார்த்தும் அரசியல் நடக்கிறது. நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் சா தி இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும்."
என கமல்ஹாசன் கூறியுள்ளா ர்.
இன்று,
மார்ச்-14.
- இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)
- மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்(1883)
- வண்ண பிலிம் கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறந்த தினம்(1932)
- ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் ஒருவர் முதன் முதலாக பயணித்தார்(1995)
கார்ல் மார்க்ஸ் (1818-83)
ஒரு ஜெர்மானிய தத்துவ நிபுணராக உருவாக்கி தனது "மூலதனம்"நூல் மூலமாக உலகையே புரட்டி போட்டார்.
அவரது கொள்கை தத்துவங்கள் மூலம் உருவான பொதுவுடமை இடது சாரி கட்சிகள் காலம்கடந்தும் தனது பங்களிப்பை உலக அரசியலிலும் ஏழ்மை,விளிம்பு நிலை மக்களுக்கும் செய்துவருகிறது.
சரிவை நோக்கி போய் கொண்டிருக்கும் முதலாளித்துவத்துக்கு சரியான மாற்றாக கம்யுனிசமே உள்ளது.அப்பெருமை காரல் மார்க்ஸையே சாரும்.
அவரின் சிந்தனைகள், தத்துவம், பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு, இலக்கியம் என பலதுறைகளில் இருந்தன. இன்றும் இவரின் சிந்தனைகள் இத்துறைகளில் மட்டுமல்லாது மற்ற துறைகளில் உள்ளவர்களும் ஊன்றி படித்து தெரிந்துகொள்ள முயல்வது இவர் சிந்தனையின் சிறப்பு. படித்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்திலாவது மார்க்ஸின் சிந்தனையைத் தொடாமல் இருந்திருக்க முடியாது.
வரலாற்று மாற்றம் என்பதே சமுதாய குழுக்களிடையே உள்ள மோதல்களில் தான் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கியவர். வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தின் ஒரு குழுவினர் உற்பத்தி சாதனைகளை சொந்தம் கொண்டாடுவதால் அக்குழுவினர் சமுதாயம் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார்.
மற்றொரு குழுவினர் தங்கள் நலனுக்காக ஆதிக்கக் குழுவினரோடு மோதலைக் கடைப்பிடிப்பதால், பழைய ஆதிக்க குழுவிற்குப்பதில் புதிய ஆதிக்க குழுக்கள் உருவாகும்.
நில பிரபுத்துவ முறையில், நிலத்தை கையகப்படுத்திய நிலப்பிரபுக்கள் ஆதிக்க சக்தியாகவும், அதன் வழியில், முதலாளித்துவ முறையில் தொழில் முதலீடுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த முதலாளிகள் ஆதிக்க சக்தியாகவும் இருந்தனர்.
முதலாளித்துவ முறையில், உழைப்பாளர்களுக்கு குறைந்த கூலியைக்கொடுத்து, சுரண்டலைக் கையாண்டு அதிக லாபம் பார்க்கக் கூடிய வழிமுறையை முதலாளிகள் கடைபிடித்ததாக கார்ல் மார்க்ஸ் குற்றம் சாட்டினார்.
இந்த சுரண்டல் முறை தொடரும் போது சொத்துகள்கொண்ட முதலாளிகளுக்கும், சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்து, பின்னர் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் தொழிலார்களுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்படக்கூடிய சமுதாய மாற்றம் நிகழும் என்று மார்க்ஸ் வாதிட்டார்.
சோஷலிச சமுதாயத்தில் எல்லா உற்பத்தி சாதனங்களும் அரசுக்கு சொந்தமானதாகவும், பின்னர் எல்லா சொத்துகளும் மக்களால் கூட்டாக சொந்தம் கொண்டாடக்கூடிய நிலையான கம்யூனிச சமுதாயம் உருவாகும் என்று மார்க்ஸ் கூறினார்.
சோஷலிச சமுதாயத்தில் அரசு முதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் தடுக்கும். கம்யூனிச சமுதாயத்தில் எல்லாருக்கும் தேவையான அளவில் பொருட்களும், பணிகளும் வழங்கப்படும். இதில் அரசு என்ற அமைப்பு மறைந்து போகும்.
எங்கெல்லாம் ஏற்றதாழ்வுகள் நிலவுகிறதோ அங்கெல்லாம் மார்க்ஸ் இருப்பது உறுதி. எனவே மார்க்ஸ் என்றும் நம்முடைய சிந்தனைகளை வடிவமைப்பதில் மிக முக்கிய சக்தியாகவே இருப்பார்.