சிரிப்பு போலீஸ் போல

53 நாட்கள் சிறையில் பிணையில் வெளியே வரமாட்டேன் என  உறுமிக்கொண்டிருந்த கலிங்கப்பட்டி புலி கடைசியில்  என்னை வெளியே விடுங்கள் என கால் கடுதாசி  கொடுத்து வெளியே வந்துள்ளது.

  இத்தனை நாள் காட்டிய விறைப்பு என்னவாயிற்று என்றும்,கலிங்கப்பட்டி புலி கடைசியில் கொட்டை எடுத்த கடைப் புளி  ஆக மாறியது சிலருக்கு வியப்பைத்தரலாம்.

ஆனால் முதலில் பேசியதை மறுப்பது ,தான் சொல்லியதை மறந்துபோய் தான்  என்பதெல்லாம் வைகோ என்ற வாய்க்கோ வுக்கு புதிதல்ல என்பதை அவரை முதலில்  இருந்து   கவனிப்பவர்கள் கண்டு கொண்டிருப்பார்கள்.


வீராப்பு காலாவதியாகிட காரணம் ?

அவருக்கு தமிழக அரசியலில் களமாட நிகழ்வுகள் அதிகமாகி விட்டது.

 அதில் ஒன்று  நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் போர் பிரகடனம் செய்திருப்பதாக இருக்கலாம்.
அரசியியலில் ஒருவர் வரவும், அழிவும் தன் ஆலோசனை,ஆதரவு இல்லாமல் இருப்பதை சாணக்கியன் வைகோ விரும்புவது கிடையாது.

ஆனால் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் வைகோவின் திமுக அழித்தொழிப்பு திட்டத்தில் ஒன்றும் முன்னேற்றமே இல்லை.

மேலும் அவருக்கு பெரிய அளவுக்கு ,தொகைக்கு ஒப்பந்தமும் யாராலும் தரப்படவில்லை.
ஜெயலலிதாவுக்குப்பின்னர் 1500கோடிகள் கொடுக்கும் வசதி படைத்தவர்கள் தற்போது பெங்களூரிலும்,திகரிலும் இருக்கிறார்கள்.

வெளியே இருந்தால் காசில்லாமல் ஏதோ ஒரு வேகத்தில் அழித்தொழிப்பு  செய்து விடக்கூடாது என்றே புழலுக்கு தங்க சென்றார் .

இப்போது ரஜினி ,சீமான் போன்றோர்  பரபர அரசியல் தன்னை மீறி செய்து தன்னை மீறிவிடக்   கூடாது என்பதற்காகவே வேங்கை வெளியே வருகிறது.

மலேசிய திருமணம் ஒரு சப்பைக்காரணம் மட்டுமே.

இனி வைகோவின் குரல் ரஜினியை பச்சத்   தமிழனாக இனம் காட்டும்.நோட்ச்சிக்குப்பம் ராமோஜி கெய்க்வாட் க்கும் வையாபுரி நாயக்கருக்கு இருந்த தொடர்புக்கும், அவர்கள் முன்னோர்கள்  தொல்காப்பியரிடம் தமிழ் இலக்கண மாணாக்கர்களாக பயின்றதற்கும் தன்னிடம் ஆதாரங்களும்,புகைப்படங்களும் இருப்பதாக கூட வைகோ பேசுவார்.

அகத்திய முனி அப்போதே வைகோவின் முப்பாட்டனின்,முப்பாட்டனிடம் கருணாநிதி,ஸ்டாலின் துரோகங்களை குறித்து பேசியதற்கு காணொலி ஆதாரம்  வைத்திருப்பதாக கூட முழங்குவார் .

ஆக இனி தமிழக அரசியல் களத்தில் வைகோ,ரஜினி களமாடலில் மக்களுக்கு பொழுது போக்குக்கு குறைவிருக்காது.

இனி ரஜினி படங்களை ஓடவைக்க ரஜினி  கொடுக்க வேண்டாம்.

ரஜினி எப்படித்தான்  கொடுத்தாலும்  படங்கள் முன்னைப்போல் லாபம் தருவதில்லை ,தங்களுக்கு தெரிந்த யுக்திகளை  படுத்தி கபாலி வரை மூசசு வாங்க படத்தை ஓட்டிப்பார்த்தாலும் நட்டமே மிஞ்சுகிறது .

அதனால் ரஜினிக்கு வேறு தொழில் மாறுவது காலத்தின்  கட்டாயம்.எனவேதான் இதுவரை குழப்பியடித்த அரசியல் தலைவர் பச்சத்   தமிழன்  வேடத்தை அண்ணாசி ரஜினி  போட்டுவருகிறார்.
வேடம்  பொருத்தும் வேலையில் ஜால்ரா ஊடகங்கள் ஈடுப்பட்டாலும் .

காதலை சொல்லாமலே படம்  முழுக்க வந்து கடைசியில் காதலை சொல்லும் போது  அக்காதலி கிட்டாமலே போகும் முரளி நிலைதான் நடிகர் ரஜினிகாந்துக்கும்.
காரணம் அவரின் உச்ச்ச கட்ட வேளை  கடந்து  போய் விட்டது.

இப்போது  ரஜினியின் அரசியல் வரவு ..அவரின் சினிமாவில் எல்லாம் முடிந்தபின் வரவும் "அரெஸ்ட் ஹிம்"சொல்லும் சிரிப்பு போலீஸ் போலத்தான்.
===============================================================================================
ன்று,
மே-24.
  • முதலாவது மின் தந்திச் செய்தி  வாஷிங்டனில் இருந்து மேரிலாந்திற்கு அனுப்பப்பட்டது(1844)
  • உடுமலை நாராயணகவி இறப்பு (1981)

  • நியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறப்பு (1883)
  • எரித்திரியா விடுதலை தினம்(1993)
  • விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது(2006)

உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981

உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். 
விடுதலைப் போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர். முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். 
இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். 
நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். 
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.

ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். 

நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர். 
================================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?