அநீதி அரங்கேறுகிறது
நீட் தேர்வு குறித்து தமிழக சட்டப் பேரவையில் விவாதம் நடைபெற்றுள்ளது. இந்தாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு உண்டா இல்லையா என்ற கேள்விக்கு அரசுத்தரப்பிலிருந்து தெளிவான பதில் அளிக்கப்பட வில்லை.
இது ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவில் மண் அள்ளிப் போடுவதாக உள்ளது. திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு மத்திய மோடி அரசு அனுப்பவே இல்லை என்று தகவல் வருகிறதே இது குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூன்-17.
எதற்காக இப்போது அம்மா பெட்ரோல் வாங்குகள்?விலை குறைவாக கொடுக்கவும் இல்லை.யார் நன்மைக்காக?முதலில் குடும்ப அட்டைக்கு அரிசி ,பருப்புகளை கொடுக்க வழி செய்யுங்கள்.
இது ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவில் மண் அள்ளிப் போடுவதாக உள்ளது. திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு மத்திய மோடி அரசு அனுப்பவே இல்லை என்று தகவல் வருகிறதே இது குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு முறை சந்தித்ததாகவும், மனிதவள மேம்பாட்டுத்துறை, மத்திய சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் ஒப்புதலைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் மத்திய உள்துறை, சட்டத்துறை ஆகிய துறைகள் குடியரசுத்தலைவருக்கு மசோதாக்களை அனுப்பவில்லை என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்குடியரசுத்தலைவர் அலுவலகத்திடம் தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, அனுப்பப்பட்ட மசோதாக்களின் கதி என்னஎன்று கேட்டபொழுதே இந்த பதில்தான் கூறப்பட்டது. இதே தகவலைக்கூற அமைச்சர்தேவையில்லை.
மோடி அரசிடமிருந்து இந்த மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற திராணியற்ற அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது என்பதுதான் உண்மை.
இந்த விவாதத்தின் போது திமுகவை குறைகூறுவதால் மட்டும் அதிமுக தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றிவிட்டதாக கருத முடியாது. தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு நீட் தேர்வு என்பதே முற்றிலும்மோசடியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்படவில்லை. மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்திபேசும் மாணவர்கள்தான் அதிகமான அளவில் நீட் தேர்வு எழுதியுள்ளதால் உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு தொடர்பானவழக்குகளை விசாரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது விசித்திரமாக உள்ளது.
நியாயமான அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை விதித்த தடையைஉச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்ட நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியாகவுள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு இருக்குமா, இருக்காதா என்ற குழப்பத்தில் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை. இந்த நிலையில் ஒரு மிகப்பெரிய வஞ்சகம் தமிழகத்திற்குஇழைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆளும் கட்சியோபல கோஷ்டிகளாக பிரிந்து எப்போது சேரலாம், எப்போது பிரியலாம் என பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வெட்கக்கேடு.
==========================================================================================
இன்று,ஜூன்-17.
- இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)
- சுதந்திரதேவி சிலை நியூயார்க் துறைமுகத்தில் வைக்கப்பட்டது (1885)
- ஆஷ்சை சுட்டுக்கொன்று வாஞ்சிநாதனும் இறந்த தினம்(1911)
- ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)