தலைகீழாக மாறிய பொருளாதாரம்

நரேந்திர மோடி அரசு தலைமையிலான அரசு செயல்பாடுகளினால் இந்த மூன்றாண்டுகளில் இந்திய பொருளாதாரமே தலைகீழ்.

ஜிடிபி யால் வளர்ச்சி மிகக்குறைந்ததால் ஐ.நா .சபை வளர்முக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி விட்டது.இதனால் வெளிநாடுகள் முதலீடு குறையும்.வறுமை நாட்டில் யார் முதலீடு செய்வார்கள்.?

எனினும், வீழ்ச்சியடைந்து வரும் ஏற்றுமதியும், அதிகரித்து வரும் இறக்குமதியுமே கடந்த மூன்றாண்டுகளாக இந்திய விவசாயத்துறை வர்த்தகத்தின் நிலைமையாக இருந்து வருகிறது. 2013-14 மற்றும் 2016-17 ஆண்டுகளுக்கிடையே, இந்தியாவின் விவசாயப் பொருட்களின் இறக்குமதி 15.5 பில்லியன் டாலர்களிலிருந்து 25.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ள்ளது. 

எனினும், ஏற்றுமதி 43.2 பில்லியன் டாலர்களிலிருந்து 33.8 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தில் இறக்குமதியைவிடக் கூடுதலாக ஏற்றுமதி செய்திடும் நாடாகவே நமது இந்தியா எப்போதும் இருந்துவந்துள்ளது. 


எனினும், தற்போது ஏற்பட்டுள்ள மேற்கூறப்பட்ட மாற்றத்தின் காரணமாக, இக்காலகட்டத்தில் இவ்வர்த்தகத்தின்உபரி 27.7 பில்லியன் டாலர்களிலிருந்து வெறும்8.2 பில்லியன்டாலர்களாகக் குறைந்துள்ளது.

ஏற்றுமதியில் வீழ்ச்சி மற்றும் இறக்குமதியின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட மேற்கூறப்பட்ட வீழ்ச்சியான 19.5 பில்லியன் டாலர்என்பது பிரதானமாக சர்வதேச விலைகளின் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. 

ஐ.நா. அமைப்பின் உணவுமற்றும் விவசாய அமைப்புகளின் உணவுப் பொருட்களின் குறியீட்டு எண் (Food Price index-FPI அடிப்படை ஆண்டு 2002-04 = 100)2003இல் சராசரியாக 97.7 எனஇருந்தது 2011இல் 229.9 என உயர்ந்தது.இக்குறியீட்டு எண் பின்னர் வீழ்ச்சியடைந்தது என்றபோதும், அடுத்து வந்த மூன்றாண்டுகளிலும் கூட 200 புள்ளிகள் என்ற அளவைத் தாண்டியே இருந்தது. 2012இல் 213.3, 2013இல் 209.8, 2014இல் 201.8 என இருந்தது.

அதிகரித்த உலகளாவிய விலைகள், இந்தியாவின் விவசாயப் பொருட்களின் போட்டித்தன்மை அதிகரிக்க உதவியது. 2003-04இல் 7.5 பில்லியன் டாலர்களுக்கும் சற்று கூடுதலாக இருந்த ஏற்றுமதி, 2013-14இல் 43.2 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது.

இந்தியா பாரம்பரியமாக ஏற்றுமதி செய்திடும் விளை பொருட்களான காபி, தேயிலை, முந்திரி, புகையிலை, நறுமணப் பொருட்கள், கடல்சார் பொருட்கள் போன்றவற்றினால் இந்த அதிகரிப்புகுறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்படவில்லை.

 இவற்றின் ஏற்றுமதி அளவு அதிகரித்தது என்றாலும், இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக இருந்தவை இந்நூற்றாண்டின் துவக்கத்திற்கு முன்னர் பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டுவதாக இருந்த பொருட்களோ அல்லது பெரும்மதிப்புடைய பொருட்களோ அல்ல. 


இந்தியா பாரம்பரியமாக ஏற்றுமதிசெய்திடாத ஐந்து பொருட்களே ஏற்றுமதியின் மதிப்பு அதிகரிக்கக் காரணமாக இருந்தன. 

மாட்டிறைச்சி, கொத்து பீன்ஸ் விதையின் பசை (guar-gum), பருத்தி, பாசுமதி அரிசி மற்றும் மக்காச் சோளம் ஆகியனவே அந்த ஐந்து பொருட்களாகும்.மாட்டிறைச்சியை ஏற்றுமதி எதுவும்செய்யாது இருந்த இந்தியா இவ்வணிகத்தில் முதலிடத்தில் இருந்த பிரேசில் நாட்டிடமிருந்து வணிகத்தைக் கைப்பற்றி இன்று முதலிடத்தில் இருக்கிறது என்பது அனைவரும் நன்கறிந்த விஷயமாகும். 
பத்தாண்டுகாலத்தில் மாட்டிறைச்சி வர்த்தகம் 341 மில்லியன் டாலர் என்பதிலிருந்து 14 மடங்கு அதிகரித்து 4.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது.

சர்வதேச அளவில்அதிகரித்து வரும்விலையும், வளர்ச்சி குன்றிய மற்றும் நடுத்தரவருவாய் ஈட்டி வளர்ந்து வரும் தென்கிழக்காசிய, மேற்காசிய மற்றும் வடஆப்பிரிக்கநாடுகளுக்கு ஓரளவிற்கு குறைந்தவிலையில் மாட்டிறைச்சியை தயார் செய்து அனுப்பிடும் அளவிற்குத் திறன் வாய்ந்த நவீன ஒருங்கிணைந்த இறைச்சி வெட்டும் கூடங்களுமே இதற்குக் காரணமாகும்.

கொத்து பீன்ஸ் விதையிலிருந்து தயாரிக்கப்படும் பசையின் ஏற்றுமதி அதிகரிப்பிற்கான காரணம் சுவாரசியமானதாகும். 2003-04ஆம் ஆண்டில் வெறும் 110.5 மில்லியன் டாலர்களாக இருந்த இதன் ஏற்றுமதி வணிகம், 2012-13இல் 3.9 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதனைக் கண்டுஅதிர்ச்சியடைந்து விடாதீர்கள். 

இதற்குஅடிப்படைக் காரணியாக இருப்பது அமெரிக்காவில் ஷேல் கேஸ் எடுப்பதின் வளர்ச்சியே ஆகும்.
பூமிக்கு அடியில் உள்ள கடினப்பாறை வகைப் படுகைகளில் உயர் அழுத்தத்தில் திரவத்தைச் செலுத்தி அப்பாறைகளில் பிளவுகளை ஏற்படுத்தி அவற்றின் ஊடே உள்ள வாயுவை அல்லது எண்ணெய்யை வெளியேறச் செய்வார்கள். 

இவ்வாறு செய்யும்போதுசெலுத்திடும் திரவத்தை கெட்டிப்படுத்திட ராஜஸ்தானில் பெரும்பாலும் விளைவிக்கப்படும் கொத்து பீன்ஸ்சின் விதையிலிருந்து எடுக்கப்படும் பசை பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்க பூமிக்குள் துளையிடும் சேவையை அளித்திடும் நிறுவனங்களான ஹாலிபர்டன், ஸ்கலம்பர்கர் மற்றும் பேக்கர்ஹ்யூக்ஸ் போன்றவை இப்பசையை எப்போது பெருமளவில் இருப்பு வைக்கத் துவங்கினவோ அப்போது இவற்றின் விலையும், இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரித்தது.

தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைத் தாண்டி உலகில் அதிக அளவில்அரிசியை ஏற்றுமதி செய்திடும் நாடாகஇந்தியாகடந்த பத்தாண்டு காலத்தின்போதுஉருவெடுத்தது. பருத்தி ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்த நாடாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அவ்வாறே மக்காச் சோள ஏற்றுமதியிலும் வளர்ச்சியை எட்டியது.

2000-01இல் 5.97 மில்லியன் டாலர் மதிப்பிற்கு 32500 டன்கள் உணவு தானியங்களையே இந்தியா ஏற்றுமதி செய்தது. ஆனால், 2012-13இல் இது 4.79 மில்லியன் டன்களாக அதிகரித்து 1.31 பில்லியன் டாலர்கள் என்ற அளவைஎட்டியது. 

காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களின் வாயிலாக இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்திடும் பன்னாட்டு வர்த்தகர்களுக்கு தானியங்கள்பீகாரின் கோசி-சீமாஞ்சல் பகுதி மற்றும் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து பெருமளவில் கிடைக்கின்றன. 
பருத்தியில் பி.டி. மரபணுமாற்றம், மக்காச் சோளத்தில் அதிக மகசூலைக் கொடுக்கும் ஒற்றை ஒட்டுகலப்பினச் செடி மற்றும் பாசுமதி வகை அரிசியில் ப்ளாக்பஸ்டர் புசா-1121 போன்ற உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தின் வாயிலாக இம்மூன்று பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கச் செய்யப்பட்டன.

ஆனால், இவையெல்லாம் இன்று வரலாறாகி விட்டன. பத்தாண்டு காலத்திற்கு சர்வதேச அளவில் இப்பொருட்களுக்கு இருந்த கிராக்கி முடிவுக்கு வந்ததில் இந்தியாவின் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 2016-17இல் கொத்து பீன்ஸ் விதை பசையின் ஏற்றுமதி வெறும் 467 மில்லியன் டாலர்களாகவே மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 

2011-12இல் 4.3 பில்லியன் டாலர்களாக இருந்தபருத்தி ஏற்றுமதி 62 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் சோளத்தின் வருடாந்திர அளவும் கிட்டத்தட்ட 150 மில்லியன்டாலர் குறைந்துள்ளது. 

சர்வதேச விலைகளைஇவ்வீழ்ச்சிக்கு பிரதான காரணியாகக் குறிப்பிடலாம். சோளமும், சோயாபீன்சும் 2012ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் முறையே மரக்கால் ஒன்றுக்கு 3.67 டாலர் மற்றும் 9.13 டாலர் என சிகாகோ வர்த்தக வாரிய முன்பேரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதும் இவை மரக்கால் ஒன்றுக்கு 3.67 டாலர் மற்றும் 9.13 டாலராகவே வர்த்தகம் செய்யப்படுகின்றன. 


இத்தகைய போக்கு ஏற்றுமதியில் மட்டும் காணப்படவில்லை.

வீழ்ச்சியடைந்து வரும்சர்வதேச விலைகளின் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மலிவு விலைக்குகிடைக்கின்றன. இதனால் இறக்குமதி அதிகரித்துள்ளது. உதாரணமாக, கோதுமை வர்த்தகத்தில் இதனை நாம் காண முடியும்.2012-13இல் 1.93 பில்லியன் டாலர் அளவிற்கும்,2013-14இல் 1.57 பில்லியன் டாலர் அளவிற்கும் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா, தற்போது முடிவடைந்த நிதியாண்டில் 1.27 பில்லியன் டாலர் அளவிற்கு கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. 

சோயா பீன்ஸ் இறக்குமதி கோதுமையை விடகவனத்தை ஈர்க்கின்ற ஒன்றாக உள்ளது. 2012-13இல் 14,155,97 கோடி ரூபாய் மதிப்புள்ள சோயாபீன்ஸ் உணவுப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. அதே நேரத்தில்ரூ.7,611.05 கோடி ரூபாய்க்கு சோயா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. 
ஆனால் 2015-16ன்போது, சோயா உணவுப் பொருட்களின் ஏற்றுமதி ரூ. 1,511.69 கோடியாக வீழ்ச்சியடைந்த போதும், இறக்குமதி செய்யப்படும் சோயா எண்ணெயின் அளவு ரூ. 19,419.01 கோடியாக அதிகரித்தது.

இவ்வாறாக, விவசாயப் பொருட்களை ரூ.6,544.92 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, ரூ.17,907.32 கோடி அளவிற்கு இவற்றை இறக்குமதி செய்யும் நாடாக மாறியிருக்கிறது. சர்வதேசச் சந்தையில் விவசாய விளை பொருட்களின் விலை ஏற்றத்தினால் இந்திய விவசாயிகள் பயனடைந்தனர் என்பதில்ஐயம் எதுவுமில்லை. 

2003-04இல் 1.90 லட்சம் எண்ணிக்கையில் இருந்த டிராக்டர் விற்பனை, 2013-14இல் 6.34 லட்சம் டிராக்டர்களாக உயர்ந்தது இதற்கு சான்றாகும். 

ஆனால், திடீர் விலையேற்றத்தால் ஏற்பட்ட சிதறல் காரணமாக, 2015-16இல் டிராக்டர் விற்பனை 4.94 லட்சமாக வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டில் இது கிட்டத்தட்ட 5.83 லட்சம் டிராக்டர்கள் என்ற அளவில் இருந்தன. 
சர்வதேச அளவில் இப்பொருட்களின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாமல், விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவதும், மேக் இன் இந்தியா திட்டமும் (கூடுதல் ஏற்றுமதி, குறைவான இறக்குமதி) எட்ட இயலாத இலக்குகளாவே இருந்திடும்.
                                                                                                                                                    -எம்.கிரிஜா
========================================================================================
ன்று,
ஜூன்-27.

  • உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)
  • உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)
  • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)
  • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
========================================================================================







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?