வெள்ளி, 14 ஜூலை, 2017

களத்தை காணாமலேயே

’ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தங்கள் அரசாங்கத்தின்  மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்’   என்பதாக ’Government at a Glance 2017’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வு முடிவைஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்த தலைப்பில் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development )என்னும் தனியார் நிறுவனம்ஆய்வை  மேற்கொண்டது. 

இந்தியாவில்தான் 73 சதவிகித ம்  பேர்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக இது கூறுகிறது.
62 சதவிகிதத்துடன் கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது. 

30% பெற்று அமெரிக்கா பத்தாவது இடத்தில் உள்ளது. 

13% பெற்று க்ரீஸ் கடைசி இடத்தில் உள்ளது. கிரீஸ் மக்கள் அவர்கள் அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஆனால் உண்மை நிலை என்ன ?

இந்திய மக்களின் மனநிலையை புரியாத வெளி நாட்டு நிறுவனம் இது.
பத்திரிகைகள் செய்தியை வைத்தே அந்நாட்டின் தலை எழுத்தை தங்கள் அலுவலக மேசையிலேயே கணக்கிடுவார்கள் இவர்கள்.

இந்திய ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன அதாவது இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் கையில்.மேலும் பாஜக தனது ஆதரவாளர்களை ஒவ்வொரு ஊடகத்தின் ஆசிரியர் குழுவில் அழுத்தி வைத்துள்ளது என்பதை என்டிடிவி பகிரங்கப்படுத்தியுள்ளது.

குஜராத்தில் மோடி கைதான் இருப்பதாக ஊடகங்கள் அலறுகின்றன.அங்கு நடக்கும் மோடி அரசின் ஜிஎஸ்டி. போராட்டத்தை இந்திய ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை.செய்தியே வெளியிடவில்லை.
பல லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதை சமூக தளங்கள் மூலம்தான் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதே மோடி குஜராத் முதல்வராக இருக்கையில் ஜி.எஸ்.டி.க்கு எதிராக அதை தனது மாநிலத்தில் கொண்டுவர மாட்டேன் ,அது வணிகர்களுக்கு எதிரானது என்று சொல்லியதை  இன்று ஊடகங்கள் நினைவுபடுத்தவே  இல்லை.

இந்த 73 %ஆதரவை பெற்றவர் உடனே தேர்தல் நடத்தி அதை நிறுவிப்பாரா? ஆரம்பம் முதலே ஊடகங்களால் புகழ் பரப்பு காற்று  அடைக்கப்பட்ட பலூன்தான் இன்றைய விஸ்வரூப மோடி.


மோடியின் அரசு வந்த பின்னர் வேலைவாய்ப்பு ,ஜிடிபி எல்லாவற்றிலும் இந்திய மிகவும் பின்தங்கி விட்டது .இதை அரசு வெளியிட்ட விபரமங்களே உண்மை என்கின்றன.


மாட்டிறைச்சி,பணமதிப்பிழப்பு,இந்தி திணிப்பு ,ஜிஎஸ்டி ,கர்ப்பரேட்களுக்கு வரி பல்லாயிரங்கோடிகளில் தள்ளுபடி,விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளில் தோல்வி என மோடி அரசு தள்ளாடுகிறது. 

இதில் மதவெறியுடன் வட மாநிலங்களில் கையில் அரிவாளுடன் திரியும் பசு காவலர்கள் என்ற குண்டர்கள் மக்களிடம் இந்த அரசுக்கு எதிரான எண்ணத்தை அதிகப்படுத்திய நிலையில்.இந்த ஆய்வுக்காரர்கள் எங்கே ஆய்வை  நடத்தினார்கள் எத்தனை ஆயிரம் பொதுவான  மக்களை சந்தித்தார்கள் என்ற கேள்விதான் எழுகிறது.

வெறும் இந்திய மோடி அரசு ஆதரவு செய்திகளை அவர்கள் நாட்டில் அவர்கள் அலுவலகத்தில் அவர்கள் மேசையில் அவர்களாக கலந்து அவர்களாக முடிவெடுப்பது எந்தவகை நியாயமான ஆய்வாக இருக்கும்.?

டைம் இதழில் மஹிந்த ராஜ பக்சே இலங்கை பிரதமராக இருக்கையில் அந்த 100 பேர்கள் பட்டியலில் முதலிடம் பெற பல லட்சங்களில் அரசுப்பணத்தை செலவிட்டு ஆயிரக்கணக்கான  பொய் முகவரிகளில் வாக்களித்து உங்கள் நினைவில் இருக்கலாம்.

களத்தை காணாமலேயே  களநிலவரத்தை   முடிவு செய்வது சரியா?


====================================================================================

ன்று,
ஜூலை-14.


  • ஈராக் குடியரசு தினம்
  • ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிக் கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தடை (1933)
  • நாசாவின் சேர்வெயர் 4 எனும் ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது(1967)
  • பிரெஞ்சுப் புரட்சியின் 200வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது(1989)
  • எம்.பி.,3 பெயரிடப்பட்டது(1995)


====================================================================================