ஹிட்லர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

தூய்மை குப்பைகள்.

மத்திய அரசு கடந்த 2014ஆம்ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ஸ்வச் பாரத்என்ற தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தது. 

இதற்காக பலபிரபலமான சினிமாநடிகர்களை தூய்மை இந்தியா தூதர்களாக அறிவித்தது. இத்திட்டத்திற்கு பெட்ரோல், டீசல்மீது 50 பைசா கூடுதல் வரியும், வாட் வரியின்மீது அரைசதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது. மோடி அரசு இத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே இதுவரை ரூ. 200கோடி செலவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 62 மில்லியன் டன் குப்பைகள் சேர்வதாகவும், அதில் 5.6 மில்லியன் டன் குப்பைகள் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் என்றும், 0.17 மில்லியன் டன் குப்பைகள் மருத்துவமனை கழிவுகள் என்றும், 7.90 மில்லியன் டன் எலெக்ட்ரானிக்ஸ் குப்பைகள் என்றும் இவை முழுவதுமாக அப்புறப்படுத்தி மறு சூழற்சி செய்யப்படாததால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது எனவும்,எனவேதான் தூய்மை இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க வேண்டுமென மத்திய அரசு முடிவு செய்தது. அரசின்நோக்கம் சிறப்பானதாக இருப்பினும்இத்திட்டத்தை அமலாக்கும் நடைமுறை தோல்வி அடைந்துள்ளது. 

இதற்காக மத்திய,மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியும் திரட்டப்படும் நிதியும், முறையாக செலவிடப்படாமல் தூய்மை இந்தியா திட்டம் குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு செலவிடப்பட்டது என்ற விவரங்களை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்காததுடன், வேறு திட்டமில்லா செலவுகளுக்கு திருப்பிவிட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகத்தில் அமலாக்குவதற்காக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையின் கீழ் மூன்று அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 


தூய்மை இந்தியா திட்டத்தை தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் இணைத்தும், அதன்படி, மகாத்மா காந்தி ஊரகவேலைவாய்ப்பு திட்டத்துடன் இணைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊராட்சிகளில் 150 குடும்பங்களுக்கு ஒரு தூய்மை காவலரும், 4 தூய்மை காவலருக்கு ஒரு பணித்தள பொறுப்பாளரும் நியமிக்கப்படுவார்கள்.

இப்பணியாளர்களுக்கு தொப்பி, மேல்சட்டை, கையுறை ஆகியவை வழங்கப்பட வேண்டும்.  
தலா ரூ.20 ஆயிரம் செலவில் 17,638 மூன்று சக்கர வண்டிகள் வாங்க ரூ.44.10 கோடி ஒதுக்கீடு. ஊராட்சிக்கு ஒரு மக்காத குப்பை நறுக்கு இயந்திரம் வாங்க ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ரூ.155.90 கோடி ஒதுக்கீடு.
ஒரு ஊராட்சிக்கு எதிர்பாராத செலவினத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஒதுக்கீடு.
2015-2016 ம் ஆண்டில் 2000 ஊராட்சிகளில் தலா ஒரு ஊராட்சிக்கு ரூ.5.50 லட்சம் வீதம் ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் பணிபுரியும் தூய்மை காவலர், பணித்தள பொறுப்பாளர்களுக்கு 100 நாள் வேலைக்குரிய சம்பளம் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழும், 200நாட்களுக்கான ஊதியம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊழியர்கள் குப்பைகளை வீடுகளில்சென்று சேகரிக்கும் போதே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து பெற வேண்டும்.
ஊராட்சிகளில் உரக்கிடங்குகள் வெட்டப்பட்டு மக்கும் குப்பைகள் அதில் சேகரிக்கப்பட்டு மண் புழு உரம், இயற்கை உரம் தயாரிக்க வேண்டும்.

மக்காத குப்பைகளை தனியாக பிரித்து நறுக்கு இயந்திரங்கள் மூலமாக நறுக்கி பைகளில் சேகரித்து எடை போட்டு மறு விற்பனை செய்திட வேண்டும்.
மருத்துவமனை கழிவுகள், எலெக்ட்ரானிக் கழிவுகளை தனியே பிரித்து எரித்து விட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக2000 ஊராட்சிகளும், பின்னர் 7000 ஊராட்சிகளும் அதற்கு அடுத்த கட்டமாக தமிழகத்தில்உள்ள 12,524 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டது.
ஊழல் மோசடி

ஒரு ஊராட்சிக்கு ரூ.5.50 லட்சம் வீதம்இதுவரை 6,888 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிதியில் பெரும் மோசடியும் ஊழலும் நடைபெற்றுள்ளது.
மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி வழங்கியுள்ளது என்றும், தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்றும் தெளிவாக எந்தவிவரங்களும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக மகாத்மா காந்தி ஊரகவேலைத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்காமல் அந்தநிதியை மடைமாற்றம் செய்து, தூய்மை காவலர்களுக்கு 100 நாள் வேலை வழங்கி இந்நிதியைபயன்படுத்தி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை முடிந்தவுடன் பெரும்பாலான ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த அரசாணையில் வருடத்தில் 300 நாட்கள் வேலைவழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டும், 100 நாட்களில் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அநீதியாகும்.

சுயஉதவிக்குழுக்கள் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலமாகதூய்மைப்பணி செய்ய வேண்டுமென்றும் வழிகாட்டப்பட்டுள்ளது. 
100 நாள் முடிந்தவுடன்ஏற்கெனவே வேலை செய்த குழு உறுப்பினர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு புதிய குழு உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாத நடவடிக்கை ஆகும்.
அரசாணைப்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் மட்டுமே தூய்மைகாவலர், பணித்தள பொறுப்பாளர்களுக்கு 300 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
ஊராட்சியின் தூய்மைப்பணியில் 90 சதவீதற்கும் மேல் பெண்கள் உள்ளனர். குறிப்பாக கிராமங்களில் உள்ள படித்த, நடுத்தர குடும்ப பெண்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

பணத்தைச் சூறையாடும் ஆளுங்கட்சியினர், அதிகாரிகள்
அரசு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாத நிலையில் அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் இப்பணத்தை ஊழல்செய்து வருகின்றனர். குறிப்பாக கையுறை, காலுறை வழங்கப்படவில்லை. குப்பை வண்டிகள் வாங்கப்படாமல் குப்பைகளை அள்ளி தலையில் சுமந்து சென்று கொட்டும் நிலை உள்ளது. எதிர்பாராத செலவினங்களுக்கு என ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் சேர்ந்து முறைகேடு செய்துள்ளனர். 

பெரும்பாலான ஊராட்சிகளில் உரக் குழிகள் வெட்டப்பட்டு மக்கும் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படவில்லை.
மக்கா குப்பைகளை மறு சுழற்சிசெய்திட நறுக்கு இயந்திரங்கள், உபகரணங்கள்பெரும்பாலான ஊராட்சிகளில் வாங்கப்படவில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட 155 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாதவரத்தில் தூய்மை காவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் இப்பணியை எவ்வாறு செய்ய வேண்டுமென 15 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் முறையாக சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டு இக்குழுக்களின் பேரில்வங்கிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. 

மேலும்பெரும்பாலான இம்மாவட்ட ஊராட்சிகளில் குப்பை நறுக்கும் இயந்திரம், 3 சக்கர வாகனம், உரக்குழிகள் என இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள பல அம்சங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தினசரி சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகள் விற்பனை செய்வதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
பணித்தள பொறுப்பாளர்களாக 10ஆம்வகுப்பு,12ஆம் வகுப்பு, பட்டதாரிகள் உள்ளிட்டோர் இப்பணியில் உள்ளனர். நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், திருக்குவளை ஊராட்சி பணித்தள பொறுப்பாளர் அன்பழகன் என்பவர் எம்.ஏ.பி.எட் பட்டதாரி ஆவார்.
இத்திட்டம் நகரை ஒட்டிய ஊராட்சிகளிலும், பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், விமான நிலையம், நகரமயமாகி வரும் ஊராட்சிகளில் குப்பை கூளங்களை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு அரசின் மோசமான நடவடிக்கையின் காரணமாக முறையாக நடைபெறாமலும், இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்காமலும் சீரழிக்கப்பட்டுள்ளது.

தூய்மை காவலர் கோரிக்கைகள்
தூய்மை காவலர், பணித்தள பொறுப்பாளர்களுக்கு அரசாணைப்படி வருடம் முழுவதும் வேலை வழங்க வேண்டும். அரசாணைக்கு மாறாக 100 நாட்களில் வேலைநீக்கம் செய்யக்கூடாது.
தூய்மைகாவலர், பணித்தள பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி. பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும்.
அரசாணையில் உள்ளபடி நறுக்கு இயந்திரம், உரக்கிடங்கு, 3 சக்கர வாகனம் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வழங்கிட வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட நிதியை முறைகேடாக தூய்மை திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடாது. இந்நிதியை விவசாய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பிற்காக பயன்படுத்த வேண்டும்.
தமிழகஅரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஒதுக்கிய நிதி இதற்காக செலவிடப்பட்டதற்கான நிதி விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். 
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில்ஒதுக்கப்பட்ட முழுமையான நிதியை இத்திட்டத்திற்கே பயன்படுத்த வேண்டும். 
                                                                                                                                                                                             -கே.ஆர்.கணேசன்
கட்டுரையாளர்: மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)
ஹிட்லர் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்?!
1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் ஒரு காதலி இருந்தாள்.
2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார்.

3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார்.
5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன.
6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்.
7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்.
8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி படையில் சேர்ந்தார்... தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை பறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்.
9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்...

10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை... ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றார்..
11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் ஹிட்லரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது...
12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி மிகுதியால் அழுதார்...
13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்...
14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பினார்...
15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர்...
16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்...
17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்...
18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்...
19. "நண்பர்களே, தோழர்களே'' என்ற வார்த்தையை தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்...
20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம் விரும்பினார்...
குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஹிட்லர் பற்றிய வரலாற்றுப் பதிவு மட்டுமே. வேறு யாராவது உங்கள் நினைவுக்கு வந்தால் வரலாறு பொறுப்பு அல்ல....!!
==========================================================================================================================================

ன்று,
ஜூலை-08.



  • வாஸ்கோ ட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவக்கினார்(1497)

  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)

  • ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)

=========================================================================================
ஒரு கணவன் மனைவி செருப்பு கடைக்கு சென்றார்கள்....
கணவன் எல்லா செருப்பையும் பார்த்து விட்டு ஒரு 900 மதிப்புள்ள அழகிய செருப்பை தேர்ந்தெடுத்தான்....அதுவரை அமைதியாகவே அந்த மனைவி இருந்தாள்...
அந்த தேர்ந்தெடுத்த ரூபாய்.900 மதிப்புள்ள செருப்ப்பினை பில் போட போகும் சமயம் பார்த்து, அந்த கணவன் தனக்கு இடது கால் செருப்பு மட்டும் போதும் அதற்கு ரூபாய்450 தருவதாகவும்... அதற்கு மட்டும் பில் போட வேண்டும் என்று கூறினான்...

அதற்கு அதிர்ந்த கடைக்காரர்... ஏன் என்று கேட்டார்.... 500ரூபாய் க்கு மேல் உள்ள செருப்புக்கு GST ரொம்ப அதிகம் என்றான்...
அதுசரி அப்ப வலது பக்க செருப்பை என்ன செய்வது என்று கேட்டான் கடைக்காரன்....
அதற்கு அமைதியாக இருந்த மனைவி அதை நான் வாங்கி கொள்கின்றேன்... இந்த ருபாய்.450 தனியாக எனக்கு பில் போடு என்றாள்....
*கடைக்காரன் ரொம்பவே குழம்பி விட்டான்*
*அதற்கு அந்த கணவன் & மனைவி நன்கு ஒரு விளக்கம் கொடுத்தனர்*
*கடைக்காரன் ரூபாய்900 பில் போட்டால் gst போட்டால் Rs.162 வரி கட்ட வேண்டும்.*
*Rs.450 + Rs.450 இரண்டு பில்லாக போட்டால் Rs.45 (Rs.22.50 + Rs.22.50) மட்டுமே வரியாக போட முடியும்*
எப்படி?
நீ    ஜி.எஸ்.டி ...னு பயங்காட்டினா பயந்துடுவோமா?




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?