பாஜக முதலிடம்

பாலியல் வல்லுறவு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைக் கொண்ட சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில், பாஜக-வினர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 

இரண்டாவது இடம் சிவசேனாவுக்கு கிடைத்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலின்போது, சம்பந்தப்பட்ட சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பின ர்களே அளித்த உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏடிஆர்) என்ற அமைப்பு இந்த உண்மை களை அம்பலப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதுமுள்ள 4 ஆயிரத்து 120 சட்டமன்ற உறுப்பினர்களில் 4 ஆயிரத்து 78 உறுப்பினர்களின் தேர்தல் ஆணைய உறுதிமொழிப் பத்திரங்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேரில், 774 பேரின் உறுதிமொழிப் பத்திரங்களையும் ஜனநாயக சீர் திருத்த சங்கம் அண்மையில் ஆய்வுக்கு உட்படுத்தியது.

அப்போது, 33 சதவிகித சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1,581 பேர்) கிரிமினல் வழக்குகளை கொண்டிருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது. எனினும் ஏடிஆர் அமைப்பானது, இந்த கிரிமினல் வழக்கு உள்ளவர்களில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் கொண்டவர்களை- பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வாரியாக- தனியாக வகைப்படுத்தியது.இதில், பெண்களுக்கு எதிரான குற்றங் களை இழைத்ததாக, நாடு முழுவதும் 48 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 51 மீது கிரி மினல் வழக்குகள் இருப்பதும், இவர்களில் 14 பேர் பாஜகவினர் என்பது தெரியவந்தது.

பெண்களை தாக்குதல், கடத்துதல், கடத்தித் திருமணம் செய்ய முயலுதல், பாலியல் வல்லுறவு,
பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய உறவினர்களை துன்புறுத்துதல், பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை வாங்குதல் உள்ளிட்ட குற்றங்க ளை இவர்கள் செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வெளிப்பட்டது.

இரண்டாவது இடத்தை சிவசேனாவும் (7 உறுப்பினர்கள்), திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது இடத்தையும் (6 உறுப்பினர்கள்) பிடித்துள்ளன.

மாநிலங்கள் வாரியாக பார்க்கையில், மகாராஷ்டிர மாநிலத்தில்தான், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்த எம்.பி. - எம்எல்ஏ-க்கள் அதிகம் இருக்கின்றனர். 

இங்கு 12 பேர் மீது வழக்குகள் உள்ளன. 
அடுத்த இடத்தை மேற்கு வங்கம் பெற்றுள்ளது. இங்கு 11 பேர் மீதும், ஒடிசாவில் 6 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு கள் உள்ளன.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பணமதிப்பு நீக்க நடவடிக்கை செய்த மோடி அரசு ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, வெட்கக்கேடானது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரிசர்வ் வங்கிக்குக் கிடைத்த லாபம் 16,000 கோடி ரூபாய். 
ஆனால், புதிய ரூபாய் நோ ட்டுகளை அச்சிடுவதற்காகச் செலவிடப்பட்ட தொகை மட்டும். 21,000 கோடி ரூபாய். 
அதை இந்தியா முழுக்க விநியோகிக்க,A T M களில் வைக்க சீரமைக்க 2000கோடிகள்.ஆக 23000 கோடிகள் செலவு.
99 சதவிகித கறுப்புப்பணம்,ஹவாலா ரூபாய் நோட்டுகள் சட்
டரீதியாகவே மாற்றப்பட்டுவிட்டன.
இதுதான் மோடி,ஜெட்லீ தங்கள் சாதனை என்று பீத்திக்கொள்வதன் பின்னணி உண்மை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கலைவாணர் 

1956 ஆம் ஆண்டு. கலைவாணர் கையில் மொத்தம் ஏழு படங்கள் இருந்தன. அந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்தது “ராஜா ராணி”. அதன் கதை, வசனம் கலைஞர் மு. கருணாநிதி. இயக்கம் ஏ.பீம்சிங். 

சிவாஜி கணேசன் - பத்மினி நடித்த இந்தப் படத்தில் கலைவாணரும் மதுரமும் கணவன் - மனைவியாக நடித்தனர். சமரசம் என்பது கணவனின் பெயர். சாந்தம் என்பது மனைவியின் பெயர். 

டி.ஆர். பாப்பாவின் இசையில் இந்தப் படத்தில் அமைந்ததுதான் “சிரிப்பு... இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பது நமது பொறுப்பு...” என்று தொடங்கும் பாடல். கலைவாணரின் ஆஸ்தான பாடலாசிரியராக உடுமலை நாராயணகவி இருந்தபோதிலும் நகைச்சுவைக்குப் புது அர்த்தம் சொன்ன கலைவாணரின் கொள்கை வரிகளைச் சுமந்துவந்த பாடலை - சிரிப்புக்குப் புது இலக்கணம் சொன்ன இந்தப் பாடலை எழுதியவர் மருதகாசி.


‘மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு’ என்றும், ‘துன்ப வாழ்வினில் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு’ என்றும், ‘சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமான கை இருப்பு... வேறு ஜீவராசிகள் செய்யமுடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு’ என்றும் சிரிப்பின் பெருமைகளைச் சிரிக்கத்தெரிந்த மனிதனுக்கே உணர்த்தியது இந்தப் பாடல். 

1956 ஜூன் 2 குடும்ப விளக்கு, அக்டோபர் 29 ரங்கோன் ராதா ஆகிய படங்கள் வெளியாகின. 
இதே மாதத்தில்தான் இந்திய பேசும் படத்தின் 25 ஆம் ஆண்டுவிழா - வெள்ளிவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. கலைவாணரும் பங்கேற்றுப் பேசினார். 

1956 நவம்பர் முதல் நாள் கேரளத்தின் திருவிதாங்கூர்சமஸ்தானத்தின் ஆளுமைக்குக் கீழிருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை முதலான 2000 சதுரமைல் பரப்பளவுள்ள தமிழ் நிலம் தாய்த் தமிழகத்தோடு இணைந்தது.அதனை அரசு விழாவாகக் கொண்டாடினர். இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பங்கேற்க, இணைப்பைவிரும்பிக் குரல்கொடுத்த கலைவாணர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கூடத் தரப்படவில்லை. 

இணைப்புப்போராட்டத்திற்காகப் பெரும் நிதியுதவி செய்த கலைவாணருக்கு மரியாதை தராததைக் கண்டித்து வாலி பர் சங்கத்தினர் தங்கள் முயற்சியில் ஒரு பெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் பங்கேற்ற கலைவாணர் உற்சாகமின்றி வெறும் ஐந்து நிமிடத்தில் தனது உரையை முடித்துக்கொண்டார்.

கடுமையான கடன் சுமை, வறுமை வாட்டிய நிலையில் உடற்சோர்வுட னிருந்த கலைவாணர் ஒருநாள் தனது காதல் மனைவியிடம் இப்படிக் கூறினார்: “நான் ஐம்பது வயதில் இறந்துவிட ஆசைப்படு கிறேன் மதுரம். அதற்குமேல் உயிருடன் இருந்தால் என் சிரிப்புச் சேவையில் கிழடுதட்டிவிடும்.” மதுரத்துக்குஅதிர்ச்சியாக இருந்தது. 


இதுவே அவரது கடைசி ஆசையாக இருக்கப்போகிறது என்று அப்போது மதுரத்துக்குத் தெரியவில்லை. 1957 ஆகஸ்ட் 15, இந்தியசுதந்திர நாளைத் தென்னிந்தியப் பத்திரிகையாளர் சங்கம் கொண்டாடியது. அதில் தெலுங்கு நடிகர் என்.டி. ராமாராவ் பங்கேற்ற கதம்ப நிகழ்ச்சி ஒன்றைக் கலைவாணர் இயக்கினார். மதுரத்துடன் இணைந்து ஒரு சிறிய நாடகத்தையும் நடத்தினார்.

தேச விடுதலை நாளில் பங்கேற்றதே கலைவாணரின் வாழ்வின் கடைசி நிகழ்ச்சி என்றானது.அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 16 ஆம் நாள் கடுமையான மஞ்சள் காமாலை மற்றும் குலை வீக்கநோயின் காரணமாக கலைவாணர் சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். 
ஒவ்வொரு நாளும் கலைவாணரின் உடல்நிலை குறித்த செய்திகளும், கூடவே வதந்தி களும் பரவின. ஒருநாள் கலைவாணரைப் பற்றிய தவறான வதந்தியால் மருத்துவமனையின் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

வெளியூர்களுக்கும் அவ்வதந்தி பரவி கடைகள் அடைக்கப்பட்டன. 
மறுநாள் பொழுது விடிந்தது. 
கலைவாணர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைக்கண்ட நண்பர்கள் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்.அழுகைச் சத்தம்கேட்ட கலைவாணர் விழித்துக் கொண்டார். 
அவர்களிடம் கேட்டார்:“ஏன் அழுகிறீர்கள்?”

அவர்களில் ஒருவர் பதில் சொன்னார்: “பாவிப் பசங்க உங்களைப் பற்றி தப்பா செய்தியைப் பரப்பிட்டானுக...”“அதை உண்மைனு நம்பி கடையெல்லாம் அடைச்சுட்டான்” - என்றார் இன்னொருவர்.
உடல்நலம் குன்றிய நிலையிலும் கலைவாணர் முகத்தில் நமட்டுச் சிரிப்பு அரும்பியது. 
சிரித்துக் கொண்டே அவர்களிடம் கேட்டார்: “என்ன செய்தி பரப்பினாங்க... நான் செத்துப் போய்ட்டேன் என்றுதானே?” என்று இயல்பாகக் கேட்டார் .
தனக்கேயுரிய நகைச்சுவை பொங்க.நண்பர்கள் கதறி அழுதேவிட்டார்கள். அவர்களின் அழுகையைப் பொருட்படுத்தாமல் கலைவாணர் தொடர்ந்தார்:“இப்போதாவது புரிஞ்சுக்கிட்டீங்களா கலை வாணர் என்றால் யாரென்று? 
கடைகளை அடைக்க மாட்டார்களா என்ன? 
அப்படித்தான் அடைப்பார்கள். கலைவாணர்னா லேசா? 
வேணா பாருங்க, நான் நிஜமாவே செத்தப்புறம் இதைவிடப் பெரியளவில் நடக்கும்!

”1936 ல் தொடங்கிய அவரது திரைக்கலைப் பயணம்1957 ல் ஒரு முடிவுக்கு வந்தது.
ஐம்பது வயதில் இறந்துவிட விரும்பியவர்தான் அவர். 

ஆனால் 49 வயது முடியுமுன்னமே அதாவது இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர்,
1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் காலை 11 மணி 10 நிமிடத்துடன் தமிழ்கூறு நல்லுலகத்தைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த தனது அரும்பணியை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார் அந்த மகா கலைஞர். 

ஆனால், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், முற்போக்குக் கருத்துக்களையும் தனது தனித்துவ நகைச்சுவைக் கலையின் மூலம் விதைத்துச் சென்ற அவரது தடம் தமிழுலகத்தின் சிந்தையில் என்றும் நீடுவாழும் என்பதில் ஐயமில்லை.
=====================================================================================

ன்று,
செப்டம்பர்-01.
  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1914)
  • அமெரிக்க விமானப்படை பயிற்சி தளம் அமைக்கப்பட்டது(1982)
  • உஸ்பகிஸ்தான் விடுதலை தினம்(1991)
======================================================================================
சுனில் அரோரா,
லைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நசீம் ஜைதி சென்ற  ஜூலை மாதம் ஓய்வு பெற்று விட்டார். 
சுனில் அரோரா

அதனால்  தற்காலிகமாகத் தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ஏ.கே.ஜோதி  நியமிக்கப்பட்டார். 
தற்போது முன்னாள் தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் சுனில் அரோரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் .
 பிரசார் பாரதியின் ஆலோசகராகவும்  இருந்திருக்கிறார் சுனில் அரோரா.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?