அனிதாவின் கனவு'''''

மத்திய மோடி அரசும்,மாநில கேடி அரசும் சேர்ந்து ஒரு தமிழ் மாணவியை கொலை செய்துள்ளனர்.
அனிதாவின் தற்கொலையை அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த படுகொலையில்  எடப்பாடி,விஜய பாஸ்கர் ,ராதாகிருஷ்ணன்(இ.ஆ.ப.)ஆகியோர் பங்கு மிக அதிகம்.

மோடி அரசும்,அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றமும் தமிழ் நாட்டில் உள்ள சமூகநீதியில் கைவைக்கவே நீட் திணிப்பில் மும்மரமாக இருக்கையில் தமிழ்  நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் குதிரை பேர அரசு சரியான முடிவை தமிழக மக்களுக்கு,மாணவர்களுக்கு கூறாமல் நீட் தேர்வில் விலக்கு பெற்று தரப்போவதாகவும்,அதற்கு மோடி ஒத்துக்கொண்டதாகவும் கதை அடித்து ,அவர்கள் தங்கள் ஊழல் அரசை காத்துக்கொள்ள குதிரை பேரத்துக்கு டெல்லி போகையில் அது நீட் தேர்வை பற்றித்தான் என்றும்,விலக்கு ஆணை தயாராகி விட்டதாகவும் தமிழக மாணவர்களை ஏமாற்றி குழப்பத்தை உண்டாக்கி அவர்களை நீட் தேர்வுக்கு முழு மனதாக படிக்க விடாமல் தடுத்தட்டுவிட்டனர்.

இவர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் ஒத்து ஊதி மிகப்பெரிய சோக நாடகத்தை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் நடத்தி விட்டனர்.
இதை அவர்கள் எதிர் கட்சிகளின் வாயை அடைக்க செய்தாலும் உண்மை நிலவரத்தை மறைத்தது தான் இன்று அனிதா கொலைக்கு காரணமாக  முடிந்துள்ளது.

ஆனால் தமிழக  அரசு நீதிமன்ற அறிவிப்பு வந்தவுடனே தரப்பட்டியலை ஜரிகைதாள் ஜோடிப்புடன் வெளியிட்டது அதன் நாடகத்தை வெளிக்காட்டி விட்டது.
முதலில்  இரண்டு முக்கிய கேள்விகள்தான் இந்த நீட் தேர்வில்.

1,கல்வியும்,சுகாதாரமும்  மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள போது மத்திய அரசு இப்படி கடின முடிவை எடுக்க தமிழக அரசு எப்படி அனுமதித்தது.?

2,பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கையில் மத்திய அரசு படத்திட்டப்படி மட்டுமே வேள்வித்தாள்  தயாரிப்பது எந்த வையில் நியாயம்?

இதற்கெல்லாம் ஒரே பதில் ஆண்மையற்ற மாநில குதிரை பேர ஊழல் அரசுதான்.

 நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புக்கு மொத்தமாக ஐந்து லட்சம் கட்டணமாம்.இதனால் மருத்துவம் படிக்க எண்ணும் நடுத்தர,ஏழை மாணவர்களுக்கு அது காணல் நீர்.
இதற்குக்கூட கிருஷ்ணசாமி போன்ற பாஜக எடுபிடி "வேறு பாடத்திட்டமே இல்லையா?"எனலாம்.
அனிதா மருத்துவம் படிக்க திட்டமிட்டேதான் முயற்சி செய்து 12 ம் வகுப்பில் 1176 மதிப்பெண்களை எட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு விருப்பம்,கனவு இருக்கும் அதை சிதைக்கும் உரிமை பாஜக,எடப்பாடி,கிருஷ்ணசாமிகளுக்கு கிடையாது.


இதுவரை தமிழ் நாட்டில் இருந்த சமூகநீதி,இட ஒத்துக்கிட்டால்தான் கிருஷ்ணசாமியும் அவரின் மக்களும் மருத்துவம் எளிதில் பொருளாத பின் புலம் இல்லாமல் படித்தார்கள்.
தமிழ் நாட்டை நோக்கி இந்தியா,உலகம் முழுக்க இருந்து மருத்துவத்திற்காக பலர் வருகிறார்கள்.இந்தியாவிலேயே மருத்துவக்கல்லுரிகள் அதிகம் உள்ளது தமிழ்  நாட்டில்தான்.

அந்த பெருமையை கூலித் தொழிலாளி பிள்ளைகளும் மருத்துவர்களாக மாறியதும் அதனால்தான்.
இதை ஒழிக்க பாஜக புதிய ஊதுகுழல் கிருஷ்ணசாமி ஒத்து ஊதுவது அவர் யாருக்காக பாடுபடுவதாக கூறுகிறாரே அந்த கடைநிலை மக்களுக்கு செய்யும் மனமறிந்த துரோகம்.

தாங்கள் கொள்ளையடித்த,ஊழல் பணத்தை காக்க அதிமுகவினர் பாஜக அடிமைகளாக மாறி தமிழ் நாட்டுக்கு துரோகம் இழைக்கிறார்கள்.கிருஷ்ணசாமியோ மோடியின் "புதிய இந்தியா"வைக்காண  தனது "புதிய தமிழகத்"தையே சோரம் செய்கிறார்.அதற்கான விலை அவருக்கு மோடி மூலம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அவர் சார்ந்த மக்களால் விரைவில் கிடைக்கும்.

 மோடி பாஜக அரசு தமிழ் நாட்டில் கவ்டில்யர் ஆணைக்கேற்ப வர்ணாசிரமத்தை கொணர சமூக நீதியின் மூலம் கிடைத்த பலன்கள்,இட ஒதுக்கீடு எல்லாவற்றையும்  ஒழிக்கும் தூய்மை இந்தியாவை சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டது.
இதற்கு முதல் பலி "மாநில அதிகாரங்க"ளில் இருந்து கல்வி.

மாநில சுயாட்சி தேவை தற்போது அதிகம் தேவை.
இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்களே அதற்கு எதிராக பேச வைப்பது பாஜகவின் முதல் கட்ட திட்டம்.அதற்கு சில சாமிகள் விலை போனாலும் அனிதாவின் படுகொலை பாஜக,எடப்பாடி அரசுகளின் முகத்திரையை விளக்கி காட்டியுள்ளது.

இங்குதான் தமிழர்கள் அனைவரும் கலைஞரின் ஆட்சியின்  தேவையை  உணரவேண்டும்.அவரால் கிடைத்ததுதான் சிறப்பான கல்வி,கூலிகளும் ,கடைநிலையர்களும் இட ஒதுக்கீடு மூலம் உயர் நிலைக்கு சென்றது.

கலைஞர்  ஆணைகளால் உயர்ந்தவர்கள் அதை மறக்கலாம்,மறுக்கலாம்.ஆனால் உண்மை அதுதான்.
அதை பாஜக தமிழர்களுக்கு உணர வைக்கும் பணியை செய்கிறது.

இதற்காக மாணவர்கள்,இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராடவேண்டும்.
ஜல்லிக்கட்டை விட இதுதான் வாழ்க்கையை பாதிக்கும் செயல்.

அனிதாவின் கனவு பலருக்கும் இருக்கலாம்.அதை நிறைவேற்ற நீட்க்கு எதிரான போர் அவசியம்,அவசரம்.

இன்று மருத்துவக்கல்விக்கு நீட் ,நாளை அது பொறியியல் ,வணிகம் என்று ஒவ்வொரு படிப்புக்கும் புற்று நோயாக பரவும்.
காரணம் தமிழ்  நாட்டில் தான்  சரியான கட்டமைப்புடன் மருத்துவக்கல்லூரிகள்,பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
காவிகள் ஆளும் மாநிலங்களில் கோசாலைகளும்,கொலைகார சாமியார்களின் ஆசிரமங்களும்தான் உள்ளன.
திலீப் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் புகார் கொடுத்த நடிகையின்  பெயர் சொன்னதுக்கே"மகளிர்  துள்ளிக்குதித்த மகளிர் ஆணையம் அனிதாவின் இறப்புக்கு தனது விசாரணையை துவங்குமா?கண்டனம் தெரிவிக்குமா?

========================================================================================

ன்று,
செப்டம்பர்-02.


  •  கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகம் (1752)
  • அமெரிக்க குண்டு வீச்சின் போது வியட்நாம்.

  • வியட்நாம் குடியரசு தினம்(1945)

  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)

  • அமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)
========================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?