எல்லாப்புகழும் அமெரிக்காவுக்கே
அனிதா போன்ற ஏழ்மை நிலை மாணவர்கள் டாக்டருக்குத்தான் படிக்கணுமா?
இது போல வேறு துறைகளில் இருக்க கூடாதா?
எல்லோரும் டாக்டருக்கு படித்தால் இது போன்ற வேலைக்கு யார் கிடைப்பார்கள்?
இதுதான் பாஜக,சொம்பு தூக்கி கிருஷ்ணசாமி களின் கேள்வி.
இதற்கு சரியான பதிலை தமிழகம் வழங்க வேண்டும்.!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லாப்புகழும் அமெரிக்காவுக்கேகிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் அதிபராக, கிம் ஜாங் யுன், 2011ல் பொறுப் பேற்றார். அது முதல், அணு குண்டு சோதனை கள்,அணு ஆயுத சோதனைகளில்,வட கொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு, ஐ.நா., அமைப்பும், பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன; பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது.
இருப்பினும் அணு ஆயுத சோதனைகளில் வட கொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கடந்த மாதம் நடத்தியது. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானை குறி வைத்து இந்த ஆயுத சோதனையில் வட கொரியா ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆறாவது முறையாக, அணுகுண்டு சோதனையில், வடகொரியா நேற்று ஈடுபட்டது. 'இந்த சோதனையில், 50 முதல், 60 கிலோ டன் எடை உடைய அணு குண்டு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்' என, தென் கொரியா கூறியுள்ளது.கடந்தாண்டு, செப்.,ல் நடத்திய 5-வது சோதனையை விட, 6 மடங்கு வீரியத்துடன் இந்த அணுகுண்டின் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.'ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்தினோம். இதை எவராலும் கண்டுபிடிக்க முடியாது' என, வட கொரியா கூறி உள்ளது. அரசு தொலைக்காட்சியில் இது அறிவிக்கப்பட்டது.
வட கொரியா நேற்று நடத்திய அணுகுண்டு சோதனை விளைவாக, அப்பகுதியில், செயற்கை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில், 5.7 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானதாக, தென் கொரியா கூறியுள்ளது.
முன்னதாக, அமெரிக்க நிலவியல் ஆய்வு துறை, 6.3 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.
மேலும், இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வும்கூறியுள்ளது.ஏற்கனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டது. தற்போது அணு குண்டு சோதனையும் வெற்றிகரமாக அமைந்துள்ள தால், அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில், வட கொரியா வலிமை பெற்று உள்ளது. இது அமெரிக்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அணுகுண்டு சோதனை குறித்து, அமெரிக்கா உடனடியாக எந்தக் கருத்தையும் கூறவில்லை. அதே நேரத்தில், அண்டை நாடான தென் கொரியா, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி யுள்ளது. மற்றொரு அண்டை நாடான ஜப்பானும் கருத்து ஏதும் கூறவில்லை.இதற்கிடையே, ஜப்பான் பிரதமர் சின்ஷூ அபேயுடன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
அணு ஆயுதச் சோதனை நடத்தி வட கொரியா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், நெருங்கிய நட்பு நாடான, தென் கொரியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக, மற்றொரு தகவல் வெளி யாகி யுள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான பணிகளை துவங்கும்படி, நேற்று முன்தினம், டிரம்ப் உத்தரவிட்டதாக, 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டு உள்ளது.
வடகொரியாவால் பதற்றம் தொடரும் சூழ்நிலையில், தென் கொரியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாம் என, உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஒப்பந்தம் ரத்து குறித்து, அறிவிப்பு வெளியிடாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - தென் கொரியா இடையே, 2012ல் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால், அமெரிக்காவில் தென் கொரியாவின் வர்த்தகம் அதிகரித்ததாகவும், உள்ளூர் தொழிலாளர்கள் வேலை இழந்ததா கவும் கூறப்பட்டது. இதை மனதில் வைத்து, 'அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் எந்த திட்டத்தையும் ரத்து செய்வோம்' என, தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா இடையோன, 'நாப்டா' எனப்படும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிசீலிப்பதாக, அதிபர் டிரம்ப் அறிவித்தார். தற்போது, தென் கொரியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
ஆனால், வட கொரியாவை கட்டுப்படுத்தும் வகையில், தென் கொரியாவுடன் கை கோர்த்து செயல்பட வேண்டிய கட்டாயம் அமெரிக்கா வுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந் நாட்டுனான உறவு பாதிக்கும் வகையில் வர்த் தக ஒப்பந்த ரத்து முடிவில், டிரம்ப் உறுதியாக இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
வட கொரியா நடத்திய அணுகுண்டு சோதனை களில், கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் இல்லை என, அதன் அண்டை நாடான, ரஷ்யா கூறியுள்ளது. வட கொரியா நடத்திய அணு குண்டு சோதனை யால் ஏற்பட்ட நிலநடுக்கத் தின் தாக்கம், 130 கி.மீ., தொலைவில் உள்ள, வட கொரியா - ரஷ்யா எல்லையில் உள்ள சில நகரங்களில் உணரப்பட்டது. அதே நேரத்தில், 'கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் இல்லை' என, ரஷ்யா கூறியுள்ளது.
வட கொரியாவை இதற்காக ஒட்டு மொத்தமாக குற்றம் சுமத்தும் உலக நாடுகள் அமெரிக்காவை கண்டு கொள்ளாதது ஏன்?
தென்கொரியாவில் தனது படைகளை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் நாடு என்ற ஒரே காரணத்துக்காக ௫௦ ஆண்டுகளுக்கு மேலாக வட கொரியாவை சீண்டிக்கொண்டும்,ஆக்கிரமிக்க முயரசித்துக்கொண்டும் அமெரிக்கா செய்த கொடுமை களுக்கு பதில் தர மட்டுமல்ல தன நாட்டி பாதுகாக்கவும் வட கொரியா பாடுபடுகிறது.
இதுஅவர் பொருளாதார தடை ,பெட்ரோல் வாங்க தடை என பலவற்றை அமெரிக்கா கூறியபடி உலக நாடுகள் ஆடிய ஆட்டத்துக்கான பதில்.
இதுவரை அமெரிக்கா வைத்தவிர வேறு நாடுகளை தாக்குவதாக வட கோரிய அதிபர் சொல்லவில்லை என்பதில் இருந்தே அமெரிக்காவின் சகுனித்தன அரசியலை நம் புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவை தென் கொரியாவில் இருந்து போர்க்கப்பல்கள்,படைகளை திரும்பப்பெற்றாலும்,வட கொரியாவை தாக்கி பேசுவதை நிறுத்தி, பொருளாதாரத் தடைகளை நடப்பு கொண்டாலும் மட்டுமே இந்த பதற்றம் முடிவுக்கு வரும்.
ஒருவனை ஓயாமல் சீண்டிக்கொண்டே இருந்தால் அதிலிருந்து தன்னை அவன் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது செய்துதானே ஆவான்.
வட கொரியாவை சீண்டுவது தப்பில்லை.ஆனால் அவர்கள் தற்பாதுகாப்பு ஏற்பாடுகள் தவறு என்றால் அது எந்த ஊர் நியாயம்.கண்டிப்பாக உலக தாதா அமெரிக்காவுக்கான நியாயம் மட்டுமே.
இந்த போர் பதட்டம் கொண்டுவந்த எல்லாப்புகழும் அமெரிக்காவுக்கே.
=======================================================================================
செப்டம்பர்-04.
- லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது(1781)
- ஜார்ஜ் ஈஸ்ட்மேன் தான் கண்டுபிடித்த கோடாக் கேமிராவிற்கு காப்புரிமம் பெற்றார்.(1888)
- அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1978)
- ========================================================================================
ஊடகங்களின் பார்ப்பனப் பிடி அனிதா (தற் )கொலை தலைப்பில் இருந்தே புரிகிறதா?தினத் தொந்தியும் தற்போது பூணுல் பாண்டே பிடியில்தான்.
காவி இப்போது பணத்திலும்.