ஞாயிறு, 1 அக்டோபர், 2017

ஆறு கார்கள் அதிகாரி,

தமிழ் நாட்டு ஆட்சி நடக்கும் லட்சணத்தைக் கண்டு  இன்னும் கொஞ்சம் நேர்மையை மனதில் வைத்திருக்கும் இ.ஆ.ப.அலுவலர்கள் பலர் இடத்தைக் காலி செய்து மத்திய அரசுப்பணிக்கு ஓட்டம் பிடிக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட, 22 பேர் உட்பட, 34 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, இன்னும் உரிய பணியிடங்களை தமிழக அரசு ஒதுக்காத காரணத்தால் அவர்களாலும்  மத்திய அரசுப் பணிக்கு விரும்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகி விட்டுள்ளது.

தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகளில், கலெக்டர் மற்றும் கமிஷனர் போன்ற பணிகளில், மிகச் சிறப்பாகப் பணி ஆற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரும், தற்போது டில்லியில் பணியாற்றுகின்றனர்.
தற்போதைய நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த, 10 சதவீத, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர். 
மேலும், பலர் விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்துள்ளனர்.இதனால் அந்த எண்ணிக்கை 26%ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு அதிமுக ஆட்சி தான் காரணம் சில ஆண்டுகளாக, தமிழக அரசில் நிலவும் அரசியல் மற்றும் நிர்வாககுழப்பங்களே காரணம். 

இந்த நிர்வாகம் செயல்படா நிலை சென்ற 2011ஆட்சியை பிடித்த ஜெயலலிதாவின் ஆட்சியிலே ஆரம்பம்.செம்பரம்பாக்கமே அதற்கு ஆதாரம்.முதல்வர் கோட்டைக்கு வருவதும்,கோப்பு பார்ப்பதுமே அதிமுகவினர் விழாவாகக் கொண்டாடுமளவு ஆகி விட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு குன்கா தீர்ப்புக்கு பின்  துருப்பிடித்தேவிட்டது நிர்வாக எந்திரம்.
2016இல் மீண்டும் பல்வேறு குளறுபடிகள் செய்து ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் அவரால் கோட்டைக்கே வரமுடியாத அளவு உடலும்,மனதும் சீர்கெட்டு விட்டது.அதற்கு அவரை சார்ந்தவர்களே காரணம்.
ஜெயலலிதா தனக்கு பின்னர் ஒரு தலைவரை உருவாக்கத்தையும்,அடையாளம் காட்டாததும் அதிமுகவுக்கு மிகப்பெரிய பலகீனம்.
 ஜெ., மறைவுக்குப் பின்  நிர்வாகம் என்றாலே என்னவென்று கேட்கும்,தங்கள் கொள்ளையடித்தப்பணத்தை காக்க அலையும்,கட்சியிலும் ,பதவியிலும் பொறுப்பை பிடிக்க அக்கட்சியினர் அடைத்துக்கொண்ட சண்டையில் ஆட்சியே அச்சு முறிந்து குடை சாய்ந்த வாந்தியாகி விட்டது. முற்றிலும் செயலிழந்து போய் விட்டதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வெளிப்படையாகவே குமுறுகின்றனர். 

அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ,கமிசன் பிரித்து தரும் அதிகாரிகள் போன்றவர்களுக்கு மட்டுமே  முக்கியப் பணியிடங்கள் ஒதுக்கப்படுவதாக வும், நேர்மையான, திறமையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.


இதை நிரூபிக்கும் வகையிலேயே, நேரடி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 15 பேருக்கும், கடந்த மாதத்தில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்ட, 22 பேருக்கும் மொத்தம் 37 பேர்களுக்கு இன்னும் உரிய பணி இடங்களை ஒதுக்காமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. 

பொறுத்துப் பார்த்த நேரடி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர், அயல் பணிக்குச் சென்று விட்டனர். மேலும் பலர், அதற்காக 
முயன்று வருகின்றனர்.
மீதமுள்ள, 12 பேருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன், கலெக்டர் பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களுக்கு கலெக்டர் பணியிடத்தை ஒதுக்கினால் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றுள்ள, 22 பேருக்கு, வேறு சில பணியிடங்களை ஒதுக்க முடியும்.

ஆனால், புதுக்கோட்டை, திருவள்ளூர், தர்மபுரி, கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களின் கலெக்டர்கள், மூன்றுமுதல் ஏழு ஆண்டுகளைக் கடந்தும், இதே பணியில் தொடர்கின்றனர். 

அதேநேரத்தில், தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளில், ஒரே, ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொறுப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக, ஜி.எஸ்.டி., கமிஷனராக பணியாற்றும் சந்திரமவுலி, வணிகவரி மற்றும் பதிவுத் துறைக்கான செயலராகவும், ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். வேளாண் துறை ஆணையர் ககன்தீப்சிங் பேடி, அத்துறையின் செயலர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கிறார்.


இவ்வாறு ஆணையராக இருப்பவரே, செயலர் பொறுப்பையும் வகிப்பது, ஒரு வழக்கில் வக்கீலே நீதிபதியாக இருப்பது போன்றது என, பிற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இவர்களைத் தவிர்த்து, குமரகுருபரன், ஸ்வர்ணா, மைதிலி ராஜேந்திரன் என பல, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பணிகளைக் கவனித்து வருகின்றனர். 

இதனால், அதிகாரம் ஓரிடத்தில் குவிகிறது; பல முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பு உருவாகிறது. 


கலெக்டராக பல ஆண்டுகளாகப் பணியாற்றும் பலருக்கு பதவி உயர்வு கொடுத்து, தற்போது கலெக்டர் பணியிடத்திற்கு காத்திருக்கும், 34 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில், சிலருக்கு அந்த வாய்ப்பைத் தரலாம். 

கலெக்டர் பணியில் இருப்போருக்கும்  பதவி உயர்வு அளிக்கலாம்.இதனால் ஒரு சங்கிலித் தொடர் நடவடிக்கை ஆகும் .இதனால்  துறைச் செயலர் பொறுப்பில் இருந்து, துணை கலெக்டர் பணியிடம் வரையிலான பலருக்கும் பதவி உயர்வு மற்றும் பணியிடம் வழங்குவதில் எந்தத் தடங்கலும் இருக்காது. 

ஒரே அதிகாரியிடம், கூடுதலாக வேறு பொறுப்பை ஒப்படைக்க வேண்டியஅவசியமும் இருக்காது. ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து கிடைத்த பின்னும், மாவட்ட வருவாய்அலுவலர் அந்தஸ்திலுள்ள பணியில், 22 பேர் தொடரவும் தேவையில்லை.

'முதல்வர் பழனிசாமி, தினமும் பல நுாறு கோப்புகளைக் கையாள்கிறார்; எதையும் தேக்கத்தில் வைக்க விடுவதில்லை' என, அமைச்சர்கள் பலரும் மேடையில் முழங்குகின்றனர். 

அது உண்மையானால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் உரிய பணி இடங்களை ஒதுக்கி, நிர்வாகத்தை முடுக்கி விட வேண்டியது அவசியம். அமைச்சர்களின் சுயநலத்துக்காக, அதிகாரிகளை நியமித்தால், அது ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் நிர்வாகத்தையே சீர்குலைத்து விடும்.முன்பெல்லாம், 40 நாட்களுக்கும் அதிகமாக கூடுதல் பொறுப்பை ஒருவர் வகித்தால் மட்டுமே, அந்த கூடுதல் பொறுப்புக்குரிய, 'அலவன்ஸ்' மற்றும் இதர வசதிகள் தரப்படும்.

 ஆனால், இப்போது ஐந்து நாட்கள், கூடுதல் பொறுப்பு வகித்தாலே, 'அலவன்ஸ்' வாங்கி, மற்ற வசதிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இது போன்று பல்வேறு பொறுப்புகளை கையில் வைத்துள்ள ஒரு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மட்டும், அரசு கார்கள் ஆறு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் தரப்படுகிறது.அவையனைத்தும் அவர் பொறுப்பு வகிக்கும் துறைகளில் இருந்து வழங்கப்பட்ட வாகனங்கள்.அவரோ இந்த ஆறு கார்களுக்கான அரசு ஓட்டுனர்கள்,டபேதார்கள் அனைவரையும் தன சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்.அந்த ஆறு கார்களுக்கான பெட்ரோல் சலுகை,பயணப்படி ஆகிய எல்லாவற்றையும் மிச்சமில்லாமல் பெற்று வளமோடு வாழ்கிறார்.

தலைமைச் செயலர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டம் ஒன்றில் பேசிய மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், 'ஒரே அதிகாரியிடம், 2 மற்றும் 3பணியிடங்களை கூடுதலாகத் தருவது, மிகவும் தவறானது. இது பல்வேறு முறைகேடுகளுக்கும் வழி வகுக்கும்' என நேரடியாகவே முறையிட்டுள்ளார். 

ஆனால் அதை தலைமைச்செயலாளர் மேலிடம் கொண்டு சென்றாரா என்று தெரியவில்லை.
அப்படி பகிரங்கமாக அரசு நிர்வாகத்தை குறை கூறியும் எதுவுமே நடக்கவில்லை.
அரசு என்று ஒன்று நடந்தால்தானே அதற்கு நடவடிக்கை எடுக்கும்.பலன் கிடைக்கும்.
======================================================================================
ன்று,
அக்டோபர்-01.
  • உலக முதியோர் தினம்
  • உலக சைவ உணவாளர்கள் தினம்
  • இந்திய அஞ்சல் துறை உருவாக்கப்பட்டது(1854)
=======================================================================================
தய அறுவை சிகிக்சை . தப்பிக்க வழி.
உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. 
அதிரடியாக செயல்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்தால் இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிகிறது. முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய் இப்போது வயது வித்தியாசமின்றி இளைஞர்களையும் பலி வாங்குகிறது. 
இதய ரத்தக்குழாய் அடைப்பை எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும். அதற்கு இதோ சில டிப்ஸ்...  எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள். 
இந்த பொருள் அனைத்துக்குமே ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு உள்ளது. உணவில் இவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் அடைப்பு விலகிவிடும்.  ஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். 
இதில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்க்கு ‘’ரஸவஷா ஸ்ரோதஸ்’’ என்று பெயர். இந்த ரத்த குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படும்.


புளிப்பு சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச்சுவை உடைய உணவுகள். 

இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக்குழாய்களை சீராக இயங்க வைக்கும். ‘’புளிப்புக்காடி’’ என்னும் வினிகர் எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. கட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும். 
இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச்சுவை கொண்டது. பூண்டு சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்’’ என்று பெயர். பூண்டு, கொழுப்பை குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். 
இஞ்சி, கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை குறைக்கும் தன்மை இஞ்சிக்கும் உண்டு.

இவற்றை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்த கொழுப்பு குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த உணவுப்பொருள் உதவுகிறது. 

இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்க முடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
========================================================================================