உங்கள் அலைபேசி தொலைந்து விட்டதா?

ஆண்ட்ராய்ட் போன்களை பாதுகாக்க பல வழிகளை நாம் கையாண்டாலும், நம்முடைய கவனக் குறைவால் எங்கேனும் மறந்து விட்டுவிடுவதோ, திருட்டுப்போவதையோ முற்றிலும் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை. 
போன்தானே வேறு வாங்கிக் கொள்ளலாம் என்று பட்ஜெட் கணக்கிற்குள் மனம் எண்ணமுடியாத வகையில், குடும்ப உறுப்பினராக, நம் உடலின் மற்றொரு அங்கமாகவே பலருக்கும் ஸ்மார்ட்போன்கள் இன்று மாறிவிட்டன. 
போன் காணாமல் போகும்போது தொடர்பு எண்கள், குறுஞ்செய்திகள், நிகழ்ச்சி நினைவூட்டல் குறிப்புகள், போட்டோக்கள் எனப் பலவும் சேர்ந்தே நம்மைவிட்டுப் போகின்றன. 
ஃபோனை இழப்பதைவிட விலை மதிக்கமுடியாத இந்த டேட்டாவின் இழப்புதான் மிகப்பெரிய அளவில் நம்மை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

எக்காரணம் கொண்டும் ஃபோனில் மட்டுமே தகவல்களை நீண்ட நாட்களுக்கு வைத்துப் பாதுகாப்பது சாத்தியமற்றது. போன் காணாமல் போகாவிட்டாலும், கீழே விழுவது, பழுது ஏற்படுதல் போன்ற சமயங்களிலும் டேட்டா இழப்பிற்கான வாய்ப்புகள் உண்டு. 
போனை வர்த்தகத்திற்கும், தனிப்பட்ட வேலைகளுக்கும் முழுமையாக பயன்படுத்துபவர்கள் போனை ஆன்லைன் டிரைவ்களான கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ், மின்னஞ்சல் கணக்குகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே பேக்கப் ஆகும்படி செட் செய்து கொள்ளவும்.
 அல்லது சொந்தக் கணினிகள், ஹார்ட்டிஸ்க், பென்டிரைவ், போனில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் மெமரிகார்டுகள் என ஏதாவது ஒன்றில் அடிக்கடி பேக்கப் செய்துகொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

போன் காணாமல் போய்விட்டது என்று தெரிந்தால், நாம் உடனடியாக செய்யவேண்டியது அதில் உள்ள கூகுள் கணக்கு மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
கூகுள் கணக்கிலிருந்து வெளியேற லேப்டாப் அல்லது மேசைக் கணினி மூலமாக உங்கள் கூகுள் கணக்கில் நுழையவும். மின்னஞ்சல் பட்டியலுக்குக் கீழாக கடைசியில் வலதுபுறத்தில் காட்டப்படும்  கிளிக் செய்யவும். 
உங்கள் கூகுள் கணக்கு கடைசியாக பயன்படுத்தப்பட்ட விபரங்கள், பயன்படுத்திய கணினிகள், போன்கள் குறித்த விபரங்கள், அவற்றின் ஐபி முகவரி உள்ளிட்ட விபரங்கள் பட்டியலிடப்படும். அதன் மூலம் வேறு நபர்கள் உங்கள் கணக்கை பயன்படுத்தினார்களா என்பதை அறிந்து கொள்ளலாம். 
இந்தப் பட்டியலுக்கு மேற்புறம் உள்ள  பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் கூகுள் கணக்கைப் பயன்படுத்திவரும் அனைத்து தொழில்நுட்ப சாதனங்களிலும் ளுபைn டிரவ செய்யப்படும்.
 இதன் பிறகு கூகுள் செட்டிங்ஸ் சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிவிடவும்.
ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற
கணினியில் ஃபேஸ்புக் கணக்கைத் திறந்து கொண்டு செட்டிங்ஸ் பகுதியில் நுழையவும். அதில் Securtiy and Login என்பதைக் கிளிக் செய்யவும். 
அதில் Where you’re logged in என்பதில் ஃபேஸ்புக் கணக்கு பயன்பாட்டில் உள்ள சாதனங்களின் விபரங்கள் காட்டப்படும். 
அதில் காணாமல் போன போனிற்கு நேராக காட்டப்படும் மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைக் கிளிக் செய்தால் அதில் Logout காட்டப்படும். 
அதனைக் கிளிக் செய்து வெளியேறவும். 
அத்துடன் இடது புற மெனுப்பகுதியில் உள்ள Mobile என்ற மெனுவைக் கிளிக் செய்தால் அதில் பதிவு செய்யப்பட்ட போன் எண் காட்டப்படும்.
 அதற்குக் கீழாக Lost your Phone? என்பதைக் கிளிக் செய்தால் தோன்றும் சிறு மெனுவில் Log Out on Phone என்ற பட்டனைக் கிளிக் செய்து வெளியேறவும். உடனடியாக கணக்கின் பாஸ்வேர்டையும் மாற்றிவிடவும்.

வாட்ஸ்அப் கணக்கைப் பொறுத்தவரை போன் எண் மூலமாக லாக்இன் செய்யப்படுவதால், ஒரே சமயத்தில் ஒரு சாதனத்திலிருந்து மட்டுமே அணுகமுடியும். 
போன் காணாமல் போனவுடன் உங்கள் சிம் கார்டை டிஆக்டிவேட் செய்துவிட்டு புதிய சிம் வாங்கி, வேறு போனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தத் தொடங்கிவிடுங்கள். 
இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் வாட்ஸ்அப் கணக்கு செயல்பாட்டை தற்காலிகமாக முடக்கி வைக்கலாம்.
இதனை செயல்படுத்த உங்கள் மின்னஞ்சல் கணக்கிலிருந்து சப்ஜெக்ட் பகுதியில் Lost/Stolen: Please deactivate my account என்று டைப் செய்து அதனைத் தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணை உலகளாவிய முறையில் அதாவது இந்திய நாட்டின் மொபைல் எண் குறியீட்டுடன் இணைத்து உதாரணமாக +91XXXXXXXXXX என்ற வடிவில் டைப் செய்து support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 
இந்த முறையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதிகபட்சம் 30 நாட்களுக்கு உங்கள் வாட்ஸ் அப் செயல்பாட்டை முடக்கிவைத்திருக்கும். 
அக்கால கட்டத்தில் வரும் தகவல்கள் வாட்ஸ்அப் சர்வரில் பதிந்து வைக்கப்படும். 30 நாட்களுக்குள்ளாக அக்கவுண்ட்டை நாம் மீட்டெடுத்துக் கொள்ளவேண்டும். 
தவறினால் 30 நாட்களுக்குப் பிறகு அக்கவுண்ட் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.























=======================================================================================
ன்று,
செப்டம்பர்-06.
  • கிழக்கு ருமேனியா, பல்கேரியாவுடன் இணைந்தது(1885)
  • சுவிட்சர்லாந்து விடுதலை தினம்(1968)
  • ========================================================================================
மதத்தைப் பற்றி காரல் மார்க்ஸ்
மதத்தை மனிதன் படைக்கிறான். மனிதனை மதம் படைப்பதில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால் தன்னைத் தானே இன்னும் அறிந்து கொள்ளாதவன் அல்லது தன்னைத் தானே மறுபடியும் தொலைத்துவிட்டவனின் தன்னறிவும் தன்னுணர்வும்தான் மதமாகும்.
தேச சுதந்திரம், ஜனநாயகம், உலக சமாதானம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மதத் தலைவர்களுடன் மார்க்சிய -லெனினியவாதிகள் கரம் கோர்க்கும் பொழுது அவர்கள் மதத்தைப் பற்றிய மார்க்சிய- லெனினியத்தின் கோட்பாட்டை அலட்சியப்படுத்தி விடுவதாக மார்க்சியவாதி அல்லாத பகுத்தறிவாதிகள் விமர்சிக்கிறார்கள். 
மறுபக்கம் மதம் மக்களின் அபினி என்னும் மார்க்சிய மதிப்பீட்டை வறட்டுபிடிவாதத்துடன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறி மார்க்சியவாதிகளை நோக்கி அர்ப்பணிப்புமிக்க மதத் தலைவர்கள் தங்கள் துப்பாக்கியை திருப்புகிறார்கள். ஆனால் இருதரப்பினரும் மார்க்ஸ் அதனை எந்த பொருளில் சொன்னார் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
உண்மையின் தத்துவம் என்னும் ஹெகலின் விமர்சனத்திற்கு “ஒருபங்களிப்பு” என்னும் நூலில் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார். சொர்க்கத்தின் மாயாவாத எதார்த்தத்தில் ஒரு மகா புருஷனை தேடிய ஒரு மனிதன் அங்கே தன் பிரதிபிம்பத்தை தவிர வேறொன்றையும் காணாதபொழுது தான் தேடும் மனிதரல்லாத ஒன்றுக்கு மாறாக அங்கு தன் பிம்பத்தையே மேற்கொண்டும் காண விரும்பமாட்டான். அவன் தன் சொந்த உண்மை எதார்த்தத்தைத்தான் நாடியாக வேண்டும்.மதத்தை மனிதன் படைக்கிறான். மனிதனை மதம் படைப்பதில்லை. 

வேறு வார்த்தைகளில் கூறினால் தன்னைத் தானே இன்னும் அறிந்து கொள்ளாதவன் அல்லது தன்னைத் தானே மறுபடியும் தொலைத்துவிட்டவனின் தன்னறிவும் தன்னுணர்வும்தான் மதமாகும்.
மதம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. 
ஆனால் நிரந்தர நிவாரணம் அளிப்பதில்லை. நிரந்தர நிவாரணம் வேண்டுமானால் மனிதன் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டு வர்க்க ஒடுக்க முறைக்கு எதிராக போராடவேண்டும்; அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்க வேண்டும். இந்தப் பின்னணியில் பார்த்தால்தான் மதத்திற்கு ஒரு நல்ல தோற்றம் கிடைக்கும்;
 அது தற்காலிக நிவாரணம். 
ஆனால் அது போதுமானதல்ல, உண்மையான தீர்வென்பது வர்க்கப் போராட்டம் தான் என்பதை காணமுடியும். அத்தகைய கருப்பொருளைக் கொண்டது தான் மதத்தைப் பற்றிய மார்க்சியக் கோட்பாடு என்று மார்க்ஸ் விளக்குகிறார்.
இப்பொழுது நாம் பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய விஷயமொன்றுக்குள் போவோம். அவர் துவக்க கால கிறிஸ்துவ வரலாற்றைப் பற்றிய நூல் ஒன்றில் உலகின் இரண்டு பிரதான மதங்களான கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் ஆகியவைகளின் வளர்ச்சியை ஆராய்கிறார். 
கிறிஸ்துவ மதத்தின் துவக்க கால வரலாறு இன்றைய நவீன உழைக்கும் வர்க்க இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களின் அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. உழைக்கும் வர்க்க இயக்கத்தை போலவே கிறிஸ்துவம் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாகவே இருந்தது. 
அது முதலில் அடிமைகளின் அடிமைதளையிலிருந்து விடுதலை பெற்றவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட ஏழைகளின் ரோமானிய அரசால் அடக்கப்பட்ட அல்லது துரத்தியடிக்கப்பட்டவர்களின் மதமாக விளங்கியது.
கிறிஸ்துவம் மற்றும் உழைப்பாளிகளின் சோஷலிசம் ஆகிய இரண்டுமே அடிமைத் தளையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பெறப்போகும் விமோசனத்தைப் பற்றி போதனைகள் செய்கின்றன. இது பற்றி ஏங்கல்ஸ் மேலும் கூறும்போது, கிறிஸ்துவ மதம் வாழ்க்கைக்கு அப்பால் மரணத்திற்கு பிறகு கிடைக்கும் விமோசனத்தை சொர்க்கத்தில் காண்கிறது. 
ஆனால் சோஷலிசம் ஒரு சமூக மாற்றத்தின் மூலமாக இந்த உலகிலேயே அந்த சொர்க்கத்தை அடைய விரும்புகின்றது.
 மொத்தத்தில் அவர்கள் இருவருமே துன்புறுத்தப்படுகிறார்கள்; கொடுமைக்குள்ளாகிறார்கள் என்பதுடன் அவர்களை பின்பற்றுபவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவர்கள் மனித குல விரோதிகளாகவும் சோஷலிசத்திற்காக நிற்பவர்கள் அரசாங்கத்தின், மதத்தின், குடும்பத்தின், சமூக அமைப்பின் எதிரிகளாகவும் ஆக்கப்பட்டு அதற்கென்ற தனிப்பட்ட சட்டங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பிறகும் அதனால் தூண்டப்பட்டும் கூட அவர்கள் வெற்றிகரமாக ஒன்றிணைகிறார்கள்; தடுக்கப்பட முடியாதவர்களாக முன்னேறுகிறார்கள். ஏங்கல்ஸ் ஒரு அடிக்குறிப்பில் மேலும் கூறும்போது, இஸ்லாமிய உலகின் மத எழுச்சியில் இதற்கு எதிர்மாறான ஒரு வினோதம் இருக்கிறது. 
குறிப்பாக ஆப்பிரிக்காவில் இஸ்லாம் மதம் கிழக்கத்திய நாட்டவருக்கு அதுவும் அராபியர்களுக்கு தக்கவாறு தகவமைந்த ஒரு மதமாகும்; அதாவது வர்த்தகத்திலும் தொழில்களிலும் ஈடுபடும் நகர மக்கள் ஒருபக்கம்; மறுபக்கம் நாடோடி பெதோயின் கூட்டங்கள் கொண்ட ஒரு சமூக அமைப்பு, இவர்களுக்குள் மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கான கரு பொதிந்திருந்தது. 
இது ஒரு தொடர் நிகழ்வாகவே நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் மதத்திற்கெதிரான போராட்டமும் வர்க்கப் போராட்டமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த ஒன்று என்பதை லெனின் தனது “நாட்டுப்புற ஏழை மக்களுக்கு” என்கிற துண்டுப்பிரசுரத்தில் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.
தான் விரும்பும் எந்த மதத்தையும் முழுமையான தங்குதடையற்ற முறையில் பின்பற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை வேண்டும் என்று சமூக ஜனநாயகவாதிகள் மேலும் கோருகின்றனர்; ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யாவும் துருக்கியும் மட்டும்தான் பழமைவாத மத நம்பிக்கைக்கு மாறாக வேறு மத நம்பிக்கை கொண்டவருக்கு அதாவது பழமைவாத நம்பிக்கையிலிருந்து வெளியே போனவர்களுக்கு எதிராக அவமானகரமான சட்டங்களை நிறைவேற்றின.
நம் கட்சித் திட்டத்தில் நாம் நாத்திகர்கள் என்று ஏன் அறிவிக்கவில்லை? 
என்கிற கேள்விக்கும் லெனின் பதிலலித்தார். 
நமது கட்சி திட்டம் அறிவியல்ரீதியான பொருள்முதல் வாத உலக கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஆகையால் மத மூடுபனியின் உண்மையான, வரலாற்று ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான வேர்களைப் பற்றிய விளக்கத்தை கொண்டிருக்கிறது. இருப்பினும் எந்தச் சூழ்நிலையிலும் மதப் பிரச்சனையை ஒரு மானசீக கருத்தியல் வடிவிலோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தில் இருக்கும் சீர்திருத்த ஜனநாயகவாதிகள் அடிக்கடி செய்வதுபோல வர்க்கப்போராட்டத்துடன் தொடர்பற்ற முறையிலான தவறினையோ செய்துவிடக் கூடாது. 
முடிவில்லா ஒடுக்குமுறைக்களுக்கு உள்ளாக்கப்படும் உழைக்கும் மக்கள் திரள் கொண்ட ஒரு சமூகத்தில் நிகழும் மத மூடப் பழக்கவழக்கங்கள் வெறும் பிரச்சரத்தினால் மட்டுமே மறைந்துவிடும் என்று எண்ணுவது சரியல்ல. 
இப்படி மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் மதத்தைப் பற்றியும் வர்க்கப் போராட்டத்துடன் அதற்குள்ள தொடர்புகளைப் பற்றியும் விவரிக்கின்றனர்.
ஐ.வி.நாகராஜன்,














                                                                                                     நன்றி:தீக்கதிர்.

பாஜக வின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த பெங்களூரை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்  கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.



பெங்களூருவின் ராஜேஸ்வரி நகரில் இருக்கும் தனது வீட்டிற்கு காரில் வந்த இவரை, மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 
நேற்று  மாலை 6.30 மணிக்கு காரில் இருந்து இறங்கி வீட்டுக்கதவை  திறக்கும் போது கௌரி லங்கேஷை மர்மநபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். 
கௌரி லங்கேஷின் நெஞ்சில் துப்பாகி குண்டுகள் துளைத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பாஜகவின் இந்து மதவெறி  அரசியலை தொடர்ந்து விமர்த்து வருபவர். 
பாஜகவினரை கடுமையாக விமர்சித்ததற்காக கடந்த ஆண்டு அவதூறு வழக்கில் தண்டனை பெற்றவர். இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு இந்திய குடிமகளாக பாஜகவின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 
இந்து அமைப்பில் உள்ள சாதிய அமைப்பை நான் தொடர்ந்து

 எதிர்ப்பேன். நம் அரசியல் அமைப்பு சட்டம் எனக்கு மதசார்ப்பின்மையைத்தான் கற்றுக்கொடுத்தது. எனவே மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுப்பது என்னுடைய அடிப்படை உரிமையாகும்” என தெரிவித்திருந்தார்.
மதவாத அரசியலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த வந்த கல்புர்கியும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் தான் சுட்டுக்கொல்லப்பட்டார். 
இந்நிலையில், கௌரி லங்கேஷின் இந்த படுகொலை இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தொடர்ந்து எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்படுவார்கள் 


என்பதைத்தான் இத்தொடர் கொலைகள் காண்பிக்கிறது.
இது பாஜக இந்துத்தவ எதிர்ப்பாளர்களுக்கு விடப்பட்ட பயங்கர எச்சரிக்கை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?