தேய்ப்பு எந்திரத்தால் 3800 கோடி இழந்த இந்தியா

இந்திய  மாநில வங்கி (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான்.) வெளியிட்டுள்ள ஒரு தகவல் அறிக்கை  மோடி அரசின் பொருளாதார சீர்கேடு நடவடிக்கைகளின்  விளைவுகளை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

 பாஜக அரசின் பொருளாதாரக்கொள்கைகள் மோசமாக உள்ளது என்று அதேகட்சியை சேர்ந்தவரும்,வாஜ்பேய் அரசில் நிதியமைச்சருமான  யஷ்வந்த் சின்கா  கூறியபோது அவருக்கு தங்களின் பொருளாதார கொள்கை சரியானதுதான் என்று கூறு வதற்கு  வகையில்லாமல் தனிப்பட்ட முறைகள் 80 வயது கிழம் வேலைதேடுகிறது என்று நக்கலடித்தார் இன்றைய நிதியமைச்சர் அருணஜெட்லீ .
ஜெட்லீ சப்பைக்கட்டு சரியல்ல என்று விளக்கமாக காட்டுகிறது இந்திய ஸ்டேட் வங்கி அறிக்கை.
டிஜிட்டல் இந்தியா மட்டுமல்ல டிஜிட்டல் பணமாற்றமே மோசமான நிலை தான்.
 2016 நவம்பர் 8-ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 


இந்த துக்ளக் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த மக்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். 

போராட்டங்களில் இறங்கினர்.அப்போது, கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்ததாக மோடி கூறினார். 
இது தேசபக்த நடவடிக்கை என்றும் அவராகவே கூறிக் கொண்டார்.

ஆனால், 11 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர் சொன்ன எதுவும் நடக்கா மல், பணமதிப்பிழப்பு ஒரு தோல்விகரமான நடவடிக்கை என்று தற்போது நிரூபணமாகி விட்டது.

99 சதவிகிதத்திற்கும் அதிகமான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக் கணக்கில்வந்துவிட்டதால், கறுப்புப் பணம் மீட்பு என்பதுவெற்றுக் கூச்சலாகி விட்டது.
1 சதவிகிதப்பணம்; அதாவது 16 ஆயிரம் கோடி ரூபாய்மட்டுமே வங்கிக்கு வரவில்லை. 

இந்த16 ஆயிரம் கோடியை கைப்பற்றுவதற்காகத் தான், புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்ட வகையில் மட்டும் ரூ. 21 ஆயிரம் கோடியை மோடி செலவிட்டாரா; 
200 அப்பாவிகளின் உயிரைப் பறித்தாரா? என்று பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஊழலும் ஒழிக்கப்படவில்லை. 
சட்டவிரோத நடவடிக்கைகளும் தடுக்கப்படவில்லை.
மாறாக, பணமதிப்பிழப்பு காரணமாக கடந்த 11 மாதத்தில் நாட்டின் சிறு, குறு உற்பத்தி தொழில்கள், விவசாய சாகுபடிப் பணிகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 
டிஜிட்டல் இந்தியாவா?


கோடிக்கணக்கானோர் வேலையிழந்து விட்டனர். அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த வகையில் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்போதும் இல்லாத அளவிற்கு வெறும் 3.7 சதவிகிதம் என்று வீழ்ந்திருப்பது, அதற்கு சாட்சி.

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே 99 சதவிகித உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களும் வங்கிக் கணக்குக்கு வந்து விட்ட நிலையில், கறுப்புப் பணம் எங்கே? 
என்று நாட்டு மக்கள் கேள்விகளை எழுப்பினர். 

அப்போது, கறுப்புப் பணத்தை மீட்பதற்காகமட்டும் பணமதிப்பிழப்பை அறிவிக்கவில்லை; 
டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனையை இல்லாமல் செய்யவுமே பண மதிப்பிழப்பை அறிவித்ததாக பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் சமாளித்தனர். 


டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக, ‘பீம் ஆப்’ என்ற செல்போன் செயலியையும் அறிமுகப் படுத்தினர்.
ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனையும் உயரவில்லை என்பதை,  இந்திய ஸ்டேட் வங்கியின் தனது ஆய்வறிக்கையின் மூலம் தற்போது அம்பலப்படுத்தி இருக்கிறது.ஸ்வைப்பிங் இயந்திரங்களை வாங்கு வதற்கான செலவைக் கூட, பண மதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை நடவடிக்கை ஈடுகட்டவில்லை என்று இந்திய  ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. 

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம்பொருட்களை வாங்குவதற்கான பாய்ண்ட் ஆப் செல் எனப்படும் ‘ஸ்வைப் பிங்’ இந்திரங்களை வாங்கும்படி வர்த்தகர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். 

இதனால் சிறிய கடைகள் முதல் பெரிய விற்பனை நிலையங்கள் வரை ஸ்வைப் மெஷின் வாங்கப்பட்டன.
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன்பு, நாட்டில் 15 லட்சம் ஸ்வைப் இயந்திரங்கள் இருந்தன. 
ஆனால், கடந்த ஜூலை மாதத்திற்குள் அதன் எண்ணிக்கை 28 லட்சமாக உயர்ந்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் இயந்திரங்கள் விற்பனையாகின.

இதனால் கடந்த அக்டோபரில் ரூ. 51 ஆயிரத்து 900 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனையும் கடந்த ஜூலையில் ரூ. 68 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்தது.

ஆனால், தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை குறைந்து விட்டதாகவும், ஸ்வைப்பிங் இயந்திரங்களுக்கான செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திய  ஸ்டேட் வங்கி புலம்பித் தவித்துள்ளது.“

தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் குறைய தொடங்கி யுள்ளன.
எதிர்பார்த்த அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை உயரவில்லை.
 இதனால் ஸ்வைப் எந்திரம் வழங்கிய செலவை ஈடுகட்டமுடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.
ஸ்வைப் இந்திரங்கள் மூலம் வங்கி களுக்கு இடையிலான பரிமாற்றத்தில் ஆண்டுக்குரூ. 4 ஆயிரத்து 700 கோடி இழப்பு ஏற்படு கிறது; 

ஒரே வங்கிக்குள் ஏற்படும் பண பரிமாற்றத்தில் கிடைக்கும் லாபம் என்று பார்த்தால்ரூ. 900 கோடியாகத்தான் இருக்கிறது. 
எனவே ஒட்டு மொத்தமாக கணக்கிட்டு பார்க்கையில் ரூ. 3 ஆயிரத்து 800 கோடி வரை இழப்புஏற்படும் நிலை உள்ளது” என இந்திய  ஸ்டேட் வங்கி தனது ஆய்வறிக்கை யில் தெரிவித்துள்ளது.

முதல்வர் சாமி யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக அரசு, மாநில சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. 
அதில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹாலை நீக்கியுள்ளது. 
உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் காசி நகரம் முதல் இடத்திலும், அயோத்தி ராம ஜென்ம பூமி இரண்டாவது இடத்திலும், கிருஷ்ணர் பிறந்த இடம் என்று கூறப்படும் மதுரா மூன்றாவது இடத்திலுமாக வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், மொகலாயர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும், ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளது.

முழுவதும் வெள்ளைச் சலவைக்கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி கட்டப்படாததால் அது பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனஉத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது. 
இந்தியக் கலாச்சாரம் என்பதே பன்முகக் கலாச்சாரம் தான்; இந்தியக் கலாச்சாரம் என்று தனியாக ஒன்றும் இல்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. 
அப்படியிருக்க, தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்திற்குள் வராது என்று மாநில பாஜக அரசு கூறுவது மோசடி.இது முழுக்க மதவெறி  அடிப்படையிலானதுதான்.
=====================================================================================
ன்று,
அக்டொபர் -03.
  • உலக வசிப்பிட தினம்
  • செர்பியா,குரொவேசியா,சிலவேனியா இணைந்து யூகோஸ்லாவியா என பெயரிடப்பட்டது(1929)
  • ஈராக் விடுதலை தினம்(1932)
  • கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாங்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?