புதன், 25 அக்டோபர், 2017

நவம்பர் 8 நினைவுதினம்.?


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவ., 8ல் வெளியிட்டார். 
இதற்குஅனைத்து எதிர்க்கட்சிகளும்  எதிர்ப்பு தெரிவித்தன.
 அவர்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளா பிரதமர் மோடி "இத்திட்டம் தோல்வி என்றால் என்னை பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்"என்று பொது மக்களுக்கு உத்திரவாதமும் கொடுத்தார்.
ஆனால் எந்த பணமதிப்பிழப்பு மோடியால் "கறுப்புப்பணம் அழியும்,வேலைவாய்ப்பு உயரும்,பொருளாதார வளற்சி அதிகரித்து புதிய இந்தியா பிறக்கும் "என்று கூறினாரோ அந்த பணமதிப்பிழப்பு இந்தியாவையே புரட்டிப்போட்டது.
மக்கள் கையில் பணமிருந்தும் அன்றாட அத்தியாவசிய செலவுக்கு ஏங்கி,புலம்பித்திருந்தனர்.ஏ.டி.எம்,களில் இந்தியாவே நின்றது.

அதில் வரிசையில் நின்றவர்கள்,தம் மக்கள் திருமணத்திற்கு வங்கியில் பணம் சேர்த்து வைத்தும் 2000க்கு மேல் எடுக்க இயலா பெற்றவர்கள் என 260க்கும் மேற்பட்டவர்கள் இறந்து பணமதிப்பிழம்பின் கோரத்தை அதிகரித்தனர்.
பணம் எடுக்க வந்த மக்கள் மட்டுமல்ல வங்கிகளில் இரவும்,பகலும் பணியாற்றிய வங்கி ஊழியர்கள் 35க்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்தனர். 
வங்கிகளுக்கு வந்ததாகக் கூறப்படும் கறுப்புப்பணம் மிக சொற்பம்.16000கோடிகள் மட்டுமே.மோடியும்,ஜெட்லீயும் வருவதாகக் கூறியவை 16லட்சம் கோடிகள்.
புதியப்பணத்தால் அச்சிட்டவகையில் ரிசர்வ் வங்கிக்கு செலவு 24000 கோடிகள்.
ஆக வருமானத்தை விட அரசுக்கு செலவு அதிகமாக தந்ததுதான் மோடியின் அவசர அதிரடியில் கிடைத்த பலன்.
முறையில்லா திட்டமிடல்,அவசரப்படல் ,பொருளாதாரம் பற்றிய அறிவின்மை ஆகியவைதான் இத்திட்டம் பட்டு தோல்வியை தந்ததின் காரணம்.இவை எதிர்க்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை.பாஜக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா உட்பட பாஜகவில் உள்ள சற்று இந்திய பொருளாதரப்போக்கை அறிந்த வர்கள் சொல்கிறவை.

பணமதிப்பிழம்பின் எதிர் வினைகள் இன்றுவரை உள்ளது.கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள் தங்கள் பழைய பணத்தை புதியபணமாக பாஜகவிற்கு நெருக்கமானவர்கள் மூலம் மாற்றி  விட்டனர். 
கிடைத்த 16000கோடிகளும் இப்படி பட்டவர்கள் காட்டிய சொற்பப்பணத்துக்கான வரிப்பணம்தான்.

உலக அளவில் வளர்முக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டதும்,பட்டினியால் வாடுவோர் பட்டியலில் ஆசிய கண்டத்தில் 55 வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு வந்ததும் ,வேலையிழந்தவர்கள்,வேலைதேடுபவர்கள் எண்ணிக்கை பல லட்சங்கள் உயர்ந்தது, நாட்டின் மொத்த உள்னாட்டு உற்பத்தி பன்மடங்கு குறைந்ததும்,பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது,ஏற்றுமதி குறைவு,இறக்குமதி உயர்வு,போன்றவைதான் மோடியின் கனவான புதிய இந்தியக்கண்ட பலன்.
இந்த பாதிப்பில் இந்தியா தள்ளாடுகையில் "குப்புற வீழ்த்திய குதிரை குழியும் பறித்த கதையாக"
சரக்கு சேவை கட்டண வரியையும் (G S T )சரியான கணக்கீடு இல்லாமல் இரவோடிரவாக அறிவித்து மேலும் இந்திய பொருளாதாரத்தை குழப்பி குழியில் தள்ளிவிட்டார் மோடி.
அன்றாட மக்கள் உணவான இட்லிக்கு 5% வரி.மதுபானங்களுக்கு வரி இல்லை என்பதுதான் மோடி ,ஜெட்லீ மக்கள் மீது தாக்கியுள்ள வரித்தாக்குதல்.

இத்தனை சீரழிவுக்கும் காரணமான  செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி நவம்பர் 8டன்  ஓராண்டு நிறைவடைகிறது. 
அதைக் கொண்டாட பாஜக முன்வராததால் அந்நாளை இந்திய பொருளாதாரத்துக்கு  கறுப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

கம்யூனிஸ்ட் கட்சிகள்,காங்கிரஸ்,  தி.மு.க.,திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட, 18 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக குலாம் நபி ஆசாத் தலைமையில் ஏழு பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 
"இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய மோசடியாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு உள்ளது. அரசின் ஒரு திட்டத்தால், மக்கள் உயிரிழந்த சம்பவம், இந்த திட்டத்தால் 
ஏற்பட்டது. சரியாக திட்டமிடாமல், அவசரமாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தால், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 
ஆனால், எங்களை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் என, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு குற்றஞ்சாட்டியது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், பிரச்னைகளை உணர்த்தும் வகையில், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஓராண்டை நிறைவு செய்யும், நவம்பர்  8ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட  உள்ளது ."
என அக்குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும், அந்தந்த மாநிலங்களில், எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்களில்நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதனால் அனைத்துக் கட்சிகளும் தேசவிரோதிகளாக அறிவிக்க இந்திய பிரதமர் மோடி,அமித் ஷா ஆகியோர்  ஆலோசித்து வருகிறார்கள் .
=======================================================================================
ன்று,
அக்டொபர் -25.
  • தகவல் அறியும் உரிமை சட்ட தினம்
  • நாஜி ஹிட்லர் ,பாசிஸ்ட்  முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)
  • கசக்கிஸ்தான் குடியரசு தினம்(1990)
  • விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது(2001)
  • இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
=======================================================================================
பிரபல மலையாள இயக்குனர் ஐ.வி.சசி காலமானார்.
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் பல வெற்றிப்படங்களை தந்துள்ளார் சசி.
வெள்ளிவிழாக் கண்ட கமல்ஹாசன்நடித்த "குரு 'இவரது இயக்கம்தான்.கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான சசி கமலை வைத்து பல மலையாள வெற்றிப்படங்களைத் தந்துள்ளார்.நடிகை சீமா இவரது மனைவி.

                                          யோசிக்கலாம்.