புல்லட் ரயில் ஓடும் வண்டவாளம் …?

க.சுவாமிநாதன்===
சிங்கன்கன்” – இதுதான் புல்லட் ரயிலின் பெயர். சபர்மதியிலிருந்து மும்பை வரை 508 கி.மீ. தூரத்திற்கு போடப்படவுள்ள ரயில்பாதை இந்தியா முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்லைன் (அக்டோபர் 13, 2017) இதழில் வி.ஸ்ரீதர் எழுதியுள்ள கட்டுரை பல கேள்விகளுக்கு விடை தருகிறது.
கேள்வி; புல்லட் ரயில் திட்டமே முழுக்க முழுக்க இலவசம் போன்றது என்று பிரதமர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளாரே?
பதில்;புல்லட் ரயில் பாதையைப் போடுவதற்கு 1 கி.மீ. தூரத்திற்கு ரூ.217 கோடிகள் ஆகுமாம். 508 கி.மீ. போடுவதானால் ரூ.1,10,000 கோடியை மொத்தச் செலவுகள் தொட்டுவிடும். இதற்காக ரூ.88,000 கோடிகளை மிகக் குறைவான வட்டியில் அதாவது ஆண்டிற்கு 0.1 சதவீதம் – ஜப்பான் இண்டர்நேசனல் கோவாப்பரேசன் ஏஜென்சி தரப்போகிறதாம். அதுவும் கடன் தவணைக்காலம் 50 ஆண்டுகளுக்கும் அதிகம். “உலகில் எந்த வங்கியையும் விட ஓர் நல்ல நண்பரை ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயிடம் கண்டேன்” என உணர்ச்சி வசப்பட்டுள்ளார் மோடி.
கேள்வி;பரவாயில்லையே! எப்படி இவ்வளவு தர்ம சிந்தனையோடு ஒரு நிதி நிறுவனம் கடன் தருகிறது?
பதில்;இப்படி ஒரு ‘பிரமையை’ உண்டு பண்ணுவதுதான் நோக்கம்.
ஜப்பான் இண்டர்நேசனல் கோவாப்பரேசன் ஏஜென்சி (ஜிக்கா) சந்தை வேட்டையில் உலகம் முழுவதும் ஈடுபடுகிற நிறுவனம் ஆகும். இரண்டு உலகளாவிய ஆலோசனை நிறுவனங்களில் மூத்த நிர்வாகியாக இருந்த ஒருவரின் கருத்துப்படி, உலக வங்கிக்கு கூட “ஜிக்கா” மீது நல்ல கருத்து இல்லை. தற்போது இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு டெண்டர்களெல்லாம் விடப்படவில்லை. “ஜிக்கா” நிறுவனம் தனித்தெரிவாக ஆர்டரைப் பெற்றுள்ளது. ‘டெண்டர் இல்லாத வழி’ என்றாலே மிக மிக அதிகமான செலவு வைப்பது என்று எல்லோருக்கும் தெரியும்.
கேள்வி; ஆனாலும் 0.1 சதவீத வட்டி என்பது ஆச்சரியமாக இருக்கிறதே!                   பதில்; மேலே குறிப்பிட்ட நிபுணரின் வார்த்தைகளில், “ஜப்பான் நிறுவனங்கள் சம்பந்தப்படுகிற தொழில் ஒப்பந்தங்களுக்கே ‘ஜிக்கா’ கடன் தருகிறது. அந்த ஒப்பந்தங்களில் எல்லாம் திரைமறைவுச் செலவுகள் ஒளிந்திருக்கும்’ என்று ரகசியத்தை உடைக்கிறார். ஒரு கணக்கைப் பாருங்கள்! 2014ல் உலக வங்கியின் சீன அலுவலகம் அதிவேக ரயில் பற்றிய அறிக்கையில் ஒரு கி.மீ. ரயில்பாதைக்கு ரூ.110 கோடியிலிருந்து ரூ.136 கோடி வரை ஆகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனவோடு அப்படியே இந்தியாவை ஒப்பிடக்கூடாது என்றாலும் தற்போது இந்தியாவில் புல்லட் ரயிலுக்கு ஆகிற செலவை நியாயப்படுத்த முடியாது.எப்படிப் பார்த்தாலும் கி.மீ.க்கு 217 கோடிகள் என்பது குறைந்தபட்சம் 59 சதவீதம் அதிகம். அதிகபட்சம் 97 சதவீதம் கூடுதல். மொத்தத்தில் ரூ.41,000 கோடிகளிலிருந்து ரூ.54,340 கோடிகள் வரை கூடுதலாக திட்டச் செலவு ஆகிறது என்பதே கணக்கு.
கேள்வி; சீனாவின் 2014 செலவுக் கணக்கை 2017 திட்டச் செலவோடு ஒப்பிட முடியுமா?       பதில்;மூன்றாண்டுகளுக்கு முந்தையச் செலவுதான் அது. ஆனால் சீனாவில் 14 ஆண்டுகால அனுபவத்தில், அதிவேக ரயில்பாதை விரிவாக்கத்தில் இன்னும் செலவுகள் குறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை.
குறைவான வட்டி என்ற மாயைக்குப் பின்னால் அதீதத் திட்டச் செலவினம் என்கிற உண்மை மறைந்திருக்கிறது. ‘ஜிக்காவின்’ ஜிகினா வேலையோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜப்பான் நிறுவனங்கள் பயன் அடைவதால் ‘உள்ளுக்குள் கைமாறுகிற’ உத்திகள் இருக்கிறதோ என்று ஆராய வேண்டியுள்ளது.
கேள்வி; அது சரி! ஆனாலும் வட்டி விகிதம் கால் சதவீதம் கூட இல்லையே!
திட்டச் செலவிலேயே 60 சதவீதம், 90 சதவீதம் என லோடு ஆகிவிட்டால் கடன்வட்டி என்பதெல்லாம் கொசுறுதானே!                                                     பதில்;மேலும் ஜப்பானில் “எதிர்மறை வட்டிவிகிதம்” அமலில் உள்ளது. இதைச் செல்லமாக பிரதமரின் பெயரைச் சேர்த்து “அபினாமிக்ஸ்” என்கிறார்கள். எனவே 0.1சதவீதம் என்பதே ஜப்பான் வங்கிகளுக்கு லாபகரமான பேரம்தான்!
கேள்வி; வட்டி குறைவு… ஆனால் லாபம் உண்டு… என்றால் எப்படிச் சாத்தியம்?
                                                    பதில்;சர்வதேச கடன்களில் வருவாயை வட்டி விகிதங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. இரண்டு நாடுகளின் கரன்சிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை விகிதமே தீர்மானிப்பதாக இருக்கும். உதாரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் கரன்சியான “யென்” மதிப்பு ரூபாய்க்கு எதிராக 60சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தைதான் பரிவர்த்தனை விகிதத்தைத் தீர்மானிக்கிற நிலையில் எதிர்காலத்திலும் “யென்” பிரகாசமாக இருக்குமென்பது மதிப்பீடு… இந்தியப் பணவீக்க நிலைமைகள், ஜப்பானிய பணச்சுருக்க சூழ்நிலையோடு ஒப்பிடப்படும்போது “யென்” மதிப்பு எதிர்காலத்திலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பே உள்ளது. ஆகவே வட்டியைக் காட்டிலும், பரிவர்த்தனை விகிதம் ஜப்பானின் கல்லாவைக் கூடுதலாக நிரப்பிவிடும்.
கேள்வி; “யென்” கரன்சியை பதுக்கிவைத்து இப்பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்கிறார்களே!

JAPAN – MARCH 14: A sign for the Bank of Japan is seen in Tokyo, Japan, Wednesday March 15, 2007. The yen held near a one-week high versus the dollar and advanced against the U.K. pound as investors reduced holdings of higher-yielding assets purchased with money borrowed in Japan. (Photo by Torin Boyd/Bloomberg via Getty Images)
பதில்;இதுவெல்லாம் நடைமுறைச் சாத்தியம் அல்ல. சில ஐடி நிறுவனங்கள் இப்படிச் செய்வது வழக்கம். ஆனால் நீண்ட காலத்திற்கு செய்ய முடியாது. இன்னொன்று, யென் மதிப்பு உலக அளவில் அதிக ஊசலாட்டம் கொண்டது ஆகும். அதைப் பதுக்கி வைப்பதற்கான செலவும் அதிகம். அதிகபட்சம் 6 மாதங்கள் வேண்டுமானால் இது மாதிரிச் செய்யலாம். ஆனால் 50 ஆண்டுத் திட்டத்திற்கு இதுவெல்லாம் சாத்தியமா என்று சத்தமாகச் சிரித்தாராம் ஒரு நிதித்துறை நிபுணர்.
“நானும்… அபியும்” என்று மோடியும் – சின்சோ அபேயும் கை குலுக்குவதற்கும், கட்டிப் பிடிப்பதற்கும் பின்னால் இவ்வளவு திரைமறைவு ரகசியங்கள் உள்ளன. வண்டவாளத்தில் ஓடுமா புல்லட் ரயில்?
=======================================================================================
ன்று,
அக்டொபர்-14.
  • உலக தர நிர்ணய தினம்
  • இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
  • சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
  • விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)
=======================================================================================

                    மோடி ஆறு வயதில் வட நகர் ரெயில்வே ஸ்டேஷனில் டீ விற்றதாகச் சொன்னார்.
மோடி பிறந்தது 1950.வடநகர் ரெயில்வேஸ்டேஷன் திறக்கப்பட்ட ஆண்டு  1973.
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா சரியா வரலையே ? 23 வயதுல வருது.

ராஜஸ்தானில் பாஜக எம்.எல்.ஏ!

தமிழ்நாட்டில் கோடிகளைச் சுருட்டியவர் 

‘கரிமா அக்ரிடெக்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர், இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். 

ஊழலே பிடிக்காதவர்கள் பாஜக வினர் என்ற பிம்பம் ஒட்டு மொத்தமாக சரிந்து விட்டது.
அதன் முன்னாள் தலைவர்கள் பங்கரு லட்சுமணன்,கட்காரி என்று ஆரம்பித்து இன்றைய தலைவர் அமித் ஷா சொத்து 300 மடங்கும்,அவரது மகன் ஜெய் ஷா வணிகம் 16,000 மடங்கும் வளர்ந்து புதிய இந்தியா பிறந்துள்ளது.
இவர்களுடன்தான் லல்லு பிரசாத் மகன் மீதான ஊழல் வழக்கையே பிடிக்காமல் நிதிஷ் குமார் கூட்டணி வைத்துள்ளார்.
கேட்டால் ஜெய் ஷா ஊழல் பற்றியே தினசரி படிக்காததால் தனக்கு தெரியாது என்கிறார் நிதிஷ் . தினசரி,தொலைக்காட்சி பார்க்காத முதல்வர்களின் இவர் இரண்டாமவர்.
முதல்வர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 
ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி லால் குஷ்வாகா என்பவர் இந்தியாவின் பல மாநிலங்களில் நிதி நிறுவனம் மற்றும் பால்பண்ணை சார்ந்த தொழில்களை நடத்திவருகிறார்.
 மேலும், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தோல்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருந்திருக்கிறார். தமிழகத்தில் ‘கரிமா அக்ரிடெக்’ என்ற பெயரில் 2011-ம் ஆண்டு ஜனவரியில் கும்பகோணம், மதுரை, தேனி, விருதுநகர், மதுரை அருகேயுள்ள கருங்காலகுடி ஆகிய ஐந்து இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் அமைக்கப்பட்டன. 
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக பன்வாரி லால் குஷ்வாகா, அவர் மனைவி ஷோபா ராணி, சகோதரர் சிவராம் குஷ்வாகா ஆகியோர் இருந்தனர்.
இந்த நிறுவனத்தின் திட்டம் இதுதான்… மாதம் ரூ.100 வீதம் 36 மாதங்களுக்குச் செலுத்தினால், முடிவில் நிறுவனம் ரூ.5 ஆயிரம் தரும். மாதத் தொகை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டலாம். அதற்கேற்ப பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறியிருந்தார்கள். 

இதனை நம்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை ஃபீல்டு மேனேஜர், அவருக்குக் கீழ் ஏஜென்டுகள்… என நியமித்து, அவர்கள் வசூலித்துத்தரும் தொகையில் 5 முதல் 20 சதவிகிதம் வரை கமிஷனாகக் கொடுத்திருக்கிறார்கள். 5 ஆண்டுகள் கோடிக்கணக்கில் வசூலித்தவர்கள், ஒருநாள் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு ராஜஸ்தான் சென்று விட்டார்கள். 
பணம் கட்டியவர்கள் ஏஜென்டுகளிடம் பணத்தைக் கேட்டு நெருக்க, ஏஜென்டுகள் ஃபீல்டு மேனேஜர்களைக் கேட்க, இவர்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள்.
இந்நிறுவனத்தில் ஏஜென்டாக இருந்த திருமருகலைச் சேர்ந்த முத்துலெட்சுமி, ‘‘கௌரவமான குடும்பத்தில் பிறந்த நான், இந்தியாவின் பல மாநிலங்களில் பெருந்தொழில் செய்யும் கோடீஸ்வர நிறுவனம் என்று சொல்லியதை நம்பி ஏஜென்டாக சேர்ந்தேன். கிராமப்புற ஏழைப் பெண்களிடம் பேசி இந்தத் திட்டத்தில் இணைத்தேன். 
குழந்தைகள் படிப்பு, டிரஸ் போன்றவற்றுக்கு உதவுமே என்று இத்திட்டத்தில் சேர்ந்தார்கள். பெண்களிடம் வசூல் செய்து, நான் கம்பெனியில் பணத்தைக் கட்டி ரசீது வாங்கிக் கொடுப்பேன். ஏழைப் பெண்கள் சேமிப்புக்கு நாமும் ஒரு உதவியாக இருப்போமே என்றுதான் இதனைச் செய்தேன். 
எனக்குக் கணிசமாக கமிஷன் கிடைக்கும். ஆனால், இப்படி ஒரேயடியாக மண்ணை அள்ளிப்போடுவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற ராஜஸ்தான், மதுரை என நானும் சேர்ந்து அலைகிறேன். விருதுநகரில் வழக்குப் போட்டிருக்கிறோம். வழக்கின் முடிவில் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறோம். ஆனால், எங்களிடம் பணம் கட்டியவர்களில் யாராவது தினம்தினம் வந்து அசிங்கமாகத் திட்டுவதைத் தாங்கமுடியவில்லை. 
உறவுகளும் ‘உனக்கு இது தேவையா’ என்று பேசுகிறார்கள். யாரோ ஏமாற்றிச் சென்றதற்காக இடையில் நாங்கள் அகப்பட்டுத் தவிக்கிறோம். சிலசமயம், தற்கொலை எண்ணம்கூட வருகிறது. குழந்தைகளுக்காக நடைபிணமாய் வாழ்கிறேன்’’ என்றார் கண்ணீர் மல்க. இவரைப்போலவே மல்லியத்தைச் சேர்ந்த ஏஜென்ட் சம்சாத் பேகம், 60 பேரிடம் ரூ.10 லட்சம் வரை வசூலித்துத் தந்திருக்கிறார். 

மயிலாடுதுறையைச் சேர்ந்த ஏஜென்ட் மாசேது, 100 பேரிடம் ரூ.20 லட்சம் வசூலித்துக் கட்டியிருக்கிறார்.
இந்த ஏஜென்டுகளுக்குத் தலைமையாக இருந்தவர், கும்பகோணம் ராதாகிருஷ்ணன். இவர் நிறுவனத்தின் ஃபீல்டு மேனேஜர் பொறுப்பில் இருந்தார். 
இவரைச் சந்தித்தோம். ‘‘கும்பகோணம் கிளையில் நான் பணிபுரிந்தேன். மூன்று ஆண்டுகள் வசூல் செய்யும்வரை பிரச்னை இல்லை. திட்டம் முதிர்வுபெற்றவுடன் பணத்தைத் திருப்பித் தர வேண்டுமே! அப்போது கேட்டதற்கு, ‘டெல்லியிலிருந்து பணம் வந்தவுடன் தருகிறேன்’ எனக் காலம் தாழ்த்தினார்கள். 2015-ம் ஆண்டு இறுதியில்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. 
நான் மட்டுமே ரூ.4 கோடி வசூலித்துச் செலுத்தியிருக்கிறேன். 
எங்களை நம்பி பணம் கட்டிய ஆயிரக்கணக்கானவர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி தருகிறார்கள்.
நிறுவனத்தில் பணியாற்றிய 15 பேர் டெல்லிக்குச் சென்றபோது, சேர்மன் பன்வாரி லால் குஷ்வாகா கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருப்பது தெரியவந்தது. அவரின் தம்பி சிவராம் குஷ்வாகாவை ராஜஸ்தானின் தோல்பூரில் உள்ள கரிமா மில்க் பாயின்ட்டில் சந்தித்தோம். 
‘நிச்சயம் பணம் விரைவில் திரும்பக் கொடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார். அதை நம்பி ஊருக்கு வந்துவிட்டோம். ஆனால், சொன்னபடி பணம் வரவில்லை. போன் செய்தாலும் பதில் சொல்வதில்லை. எனவே, மீண்டும் 2016 ஏப்ரலில் தோல்பூர் கரிமா மில்க் பாயின்ட் சென்றபோது, உள்ளேயே விடவில்லை. தோல்பூர் சிறையில் இருந்த பன்வாரி லாலைச் சந்தித்தோம். 
இரண்டு மாதங்களில் பணத்தைத் தருவதாக உறுதியளித்தார். 

அதுவும் நடக்கவில்லை.  மீண்டும் அவரைச் சந்திக்கச் சிறைச்சாலைக்குச் சென்றபோது, பார்க்கவே மறுத்துவிட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தோல்பூர் சிறையிலிருந்து பன்வாரி லால் குஷ்வாகாவைக் கடந்த மார்ச் மாதம் மதுரைக்குக் கூட்டிவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவல் எடுத்து விசாரித்தார்கள். ‘பணத்தைப் பல தொழில்களில் முதலீடு செய்திருக்கிறேன். 
மூன்று மாதங்களுக்குள் அனைத்து முதிர்வுத் தொகையையும் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என ஒப்புதல் அளித்தார். அவர் மனைவி ஷோபா ராணி குஷ்வாகா இப்போது தோல்பூர் தொகுதி பி.ஜே.பி. எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். (ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் சொந்த ஊர் இது!) அவரது அரசியல் பலம், பண பலத்தைக் கொண்டு சில நாள்களிலேயே பன்வாரி லால் குஷ்வாகாவை ஜாமீனில் அழைத்துச் சென்றுவிட்டார். 
ஆனால், இன்றுவரை பணம் வரவில்லை’’ என்றார் வேதனையோடு. இப்புகார் குறித்து விளக்கம் கேட்க ஷோபா ராணி குஷ்வாகாவின் செல்பேசியில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் என்றே பதில் வந்தது.

வழக்கை விசாரித்துவரும் விருதுநகர் பொருளாதாரக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடம் பேசினோம்.

 ‘‘ஐந்து இடங்களில் கரிமா அக்ரிடெக் நிறுவனம் பொது மக்களிடமிருந்து வசூலித்த பணம் சுமார் ரூ.30 கோடிக்குமேல் இருக்கலாம். 

எங்களிடம் ரூ.3 கோடிக்கு மட்டும்தான் புகார்கள் வந்தன. உடனே நடவடிக்கை எடுத்து, தோல்பூர் சிறையிலிருந்து பன்வாரி லால் குஷ்வாகாவைக் கொண்டுவந்து ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து சிறையிலடைத்தோம். 

அவர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றிருக்கிறார். 

அவர் மனைவி மீதும் வழக்கு உள்ளது. 
அவர் இப்போது எம்.எல்.ஏ-வாக இருப்பதால் கைது செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது’’ என்றார்.
எத்தனை மோசடிக்காரர்கள் அம்பலமானாலும், எங்கோ ராஜஸ்தானிலிருந்து வந்த நிறுவனத்தை நம்பியும் பணம் கட்டி ஏமாற இங்கு நூற்றுக்கணக்கானவர்கள் தயாராக இருப்பது வேதனை. 

வாய் கிழிய ஊழலை எதிர்த்து பேசும் தமிழிசை,பொன்னர் போன்ற தமிழக பி.ஜே.பி தலைவர்கள், பி.ஜே.பி குடும்பத்தாரால் ஏமாந்த ஏழைகளின் பணத்தைப் பெற்றுத்தர முயற்சி எடுக்கலாமே!
எங்கே?
எச் .ராசாவே சிட்பண்ட் நடத்தி மஞ்சள் கடுதாசி கொடுத்து மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்தானே.
மு.இராகவன்(விகடன்)
அக்டோபர் 1 ஆம் தேதி குஜராத்தில் எதிர் வரும் தேர்தலையொட்டி அமித்ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது அவர் சற்றும் எதிர் பார்க்காத வகையில் சுதந்திரத்துக்கு முன்பு, பஞ்சாப்பில் பல்லாயிரம் இந்தியர்களை கொன்று குவித்த ஜெனரல் டயருடன் ஒப்பிடப்பட்டு அமித்ஷாவை குஜராத் மக்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் மத்தியில் பாஜக ஆட்சியமைந்த பிறகு மோடி தலைமையிலான அரசு எந்த வித முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தவில்லை என்றும், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளினால் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் பாஜகவின் கோட்டையான குஜராத் பெருமளவில் ஆட்டம் கண்டுள்ளது.
மேலும் அமித்ஷாவின் மகனின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் அளவிட முடியாத அளவில் அதிகரித்துள்ளதும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?