நினைவு சில்லுகளில் புரட்சி.!
புதிய வகை ராம் நினைவு சில்லுகள் (மெமரி சிப்கள்) அறிமுகமாகி,வரும் ஆண்டுகளில் தனி கணினி (பெர்சனல் கம்ப்யூட்டர்) இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன.
இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.
இது நாம் தனி கணினியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.
புதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும்.
இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும்.
வழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும்.
ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த சக்தியைப் பயன்படுத்துகிறது. magnetic charge மூலம், பிட்கள் ஸ்டோர் செய்யப்படும்.
Resistive RAM (RRAM) இரண்டு லேயர் அடுக்குகளில் தயாரானதாக இருக்கும். இரண்டு அடுக்குகளும், ஒன்றுக்கொன்று வித்தியாசமான செயல்பாட்டினைக் கொண்டிருக்கும்.
இந்தப் புதிய தொழில் நுட்பத்திற்குப் பல சிப் தயாரிப்பாளர்கள் மாறிக் கொண்டுள்ளனர்.
பல நிறுவனங்களும், ஆய்வு மையங்களும் இவற்றை எளிதாகக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
உரிமையைப் பெற இருப்பதாக Crossbar நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், தற்போதைய DRAM சிப்களின் இடத்தில் இவற்றைப் பயன்படுத்த, இன்னும் பல நிலைப் பணி இந்த இரண்டு ராம் மெமரி சிப்கள் வடிவமைப்பில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவை வெற்றிகரமாக முடியும் தருவாயில், கம்ப்யூட்டர் கட்டமைப்பில், அதன் ஸ்டோரேஜ் மற்றும் மெமரியில் பெரிய மாற்றங்கள் வரும். இப்போதைய பெர்சனல் கம்ப்யூட்டர்கள் DRAM சிப்களைப் பயன்படுத்தி புரோகிராம்களை இயக்குகின்றன.
புரோகிராம் இயங்கத்தேவையான டேட்டாவினை ஸ்டோரேஜ் செய்திடவும் பயன்படுத்துகின்றன.
இந்த சிப்களுக்கான எலக்ட்ரிகல் பவர் நிறுத்தப்படுகையில், இவற்றில் உள்ள டேட்டா நமக்குக் கிடைக்காது. ஆனால், புதிய வகை மெமரி சிப்கள் செயல்பாட்டுக்கு வருகையில், நமக்கு டேட்டா திரும்ப கிடைக்கும்.
தற்போது டேப்ளட் பி.சி.க்களில் பயன்படுத்தப்படும் Flash memory தொடர்ந்த மெமரியை வழங்குகின்றது.
மின்சக்தி நீக்கிய பின்னரும், ஸ்டோரேஜ் தக்க வைக்கிறது.
புதியதாக வர இருக்கும் மெமரி சிப்கள், இந்த வகையில் இவற்றையும் மிஞ்சிவிடும் எனத் தெரிகிறது.
RRAM சிப்கள், தற்போது பயன்படுத்தப்படும் மின் சக்தியில் 20 மடங்கு குறைவாகவே பயன்படுத்தும். டேட்டா எழுதும் வேகம் 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
NAND flash memory ஐக் காட்டிலும் ஸ்டோரேஜ் திறன் கூடுதலாக இருக்கும். உறுதியாகத் தொடர்ந்து இயங்கும் மெமரி இனி கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும்.
கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், இப்போது போல பதட்டப் படாமல், மெமரியிலிருந்து மீளலாம்.
கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வீடுகளுக்கான இன்டர்நெட் இணைப்பில், விநாடிக்கு 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தர முடியும் என்று இலக்கு வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது.
இது இன்றைய இணைய வேகத்தினைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகும். பலர் இது அறிவியல் கதைகளில் மட்டுமே இருக்கும் என எண்ணுகின்றனர்.
ஆனால், நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகளுக்கு இந்த வேகம் நத்தை வேகத்திற்கு இணையானதாகும்.
ஏனென்றால், அவர்கள், விநாடிக்கு பத்தாயிரம் கிகா பைட்ஸ் டேட்டா பரிமாற்றத்தைத் தரக்கூடிய ஷேடோ இன் டர்நெட் என்னும் அமைப்பை உருவாக்கி வருகின்றனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் அமைப்பினை, நாசா பயன்படுத்துவதில்லை. ESnet (Energy Science Network) என்னும் ஷேடோ நெட்வொர்க் ஒன்றை இந்த மைய விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட குழாய்கள் கட்டமைப்பில் இந்த டேட்டா பரிமாற்றம் நடைபெறுகிறது.
தற்போது இவற்றின் மூலம் விநாடிக்கு 91 கிகா பிட்ஸ் டேட்டா பரிமாறப்படுகிறது. இதுதான், உலகிலேயே அதி வேக இணைய டேட்டா பரிமாற்றமாகும்.
நாசா இந்த வேக கட்டமைப்பினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரப்போவதில்லை. ESnet நெட்வொர்க்கினை அமெரிக்காவின் Department of Energy துறை இயக்கி வருகிறது.
அவர்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களில், பெரும் அளவில் டேட்டா பரிமாற்றம் செய்திட வேண்டியுள்ளது.
இவற்றை ஹார்ட் டிஸ்க் வழியாக மாற்றிக் கொள்வதில் ஏற்படும் நேர விரயத்தைத் தடுக்க, இந்த அதிவேக நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது.
விஞ்ஞான ஆய்வுகள் நம் பூகோள அமைப்பினால் தாமதப்படக் கூடாது என்ற குறிக்கோளுடன் இந்த அதிவேக கட்டமைப்பு உருவாக்கப் பட்டதாகவும், இதன் வேகத்தினை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த துறை நிர்வாகி கிரிகோரி பெல் தெரிவித்துள்ளனர்.
விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கிடைக்கும்.
========================================================================================
இன்று,
அக்டொபர் -15.
=========================================================================================

- இந்திய இளைஞர் எழுச்சி தினம்
- உலக கிராமப்புற பெண்கள் தினம்
- இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினம்(1931)