கூலிப்படை அரசியலன்றோ நடக்குது...

பாரதிய ஜனதா கட்சியின் தலை வர் அமித்ஷா தற்போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்.
அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி என்ற குறிக்கோளுக்கு பார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரளா,திரிபுரா மாநிலங்கள் தடைக்கற்களாக உள்ளன.
திரிபுராவில் பழங்குடியினக்குழு ஒன்றை விலைக்கு வாங்கி திரிபுராவில் கலவர விதையை,மதவெறியை உருவாக்க ஆரம்பித்தாகி விட்டது.
அதற்காக  இளம் பத்திரிகையாளரை முதல் பலியாக்கியாகி விட்டாயிற்று.


கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களையும், புகார்களையும் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் வன்முறையை தூண்டிவிடுகிற ஆபத்தான பயணத்தை மேற்கொண்டி ருக்கிறார்.

கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூரிலிருந்து பாரதிய ஜனதாகட்சியின் பாதயாத்திரையை அமித்ஷா துவக்கிவைத்திருக்கிறார்.
இந்த பிரச்சாரத்தின் துவக்க நிகழ்வில் பேசிய அவர், “சிவப்புபயங்கரவாதம்” என்று கூறி திட்டமிட்ட அவ தூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாஜக - ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் படுகொலைக்கு முதலமைச்சர் பினராயி விஜயனேகாரணம் என்று முற்றிலும் அவதூறான முறையில் அவர் பேசியிருக்கிறார்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பின் வன்முறை வெறியாட்டம் என்பது தற்போது மட்டுமல்ல; இதற்கு முன்பு 1990களில் ஈ.கே.நாயனார் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தின் போதும், அதற்கு பின்னர் பத்தாண்டுக் காலம் கழித்து வி.எஸ். அச்சுதானந்தனின் ஆட்சி நடந்த காலத்திலும் ஆர்எஸ்எஸ் வன்முறையை ஏவியிருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக ஆர்எஸ்எஸ் நடத்திவரும் கொடூரமான வன்முறைக்கு 45 ஆண்டுகால வரலாறு இருக்கிறது.

குறிப்பாக, கண்ணூரில் ஆழமாக வேரூன்றி இருக்கும் தொழிலாளி வர்க்க இயக்கம் மேலும் மேலும் சக்திவாய்ந்த முறையில் எழும்போதெல்லாம் அதற்கு எதிராக வலதுசாரி பிற்போக்கு - பாசிச சக்திகள் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகின்றன.
கேரளத்தில் வேரூன்றி இருக்கும் மகத்தானதொழிலாளி வர்க்க இயக்கத்தை சிவப்பு பயங்கரவாதம் என்று தவறான முறையில் சித்தரித்து அதன்மூலம் காவி அரசியலைக் கொண்டுவந்து அழித்தொழித்துவிட முடியும் என்று அமித்ஷா நினைக்கிறார்; 

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்றமமதை மிகுந்த அராஜகம் நிறைந்த சிந்தனை அது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் அரசியல் ரீதியாக பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் எந்தவிதத்திலும் எதிர்கொள்ள முடியாது என்ற இயலாமையின் வெளிப்பாடாகவே அமித்ஷாவின் பேச்சுக்கள் அமைந்துள்ளன.
பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசு, கடந்த 17 மாதகாலமாக கேரளத்தில் ஆற்றிவரும் மகத்தானமக்கள் பணிகள், பாரதிய ஜனதா கட்சியின்பிற்போக்கான பொருளாதாரக் கொள்கை களுக்கும், பிரிவினைவாத மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கும் எதிரான மிகச்சிறந்த மாற்றாகத் திகழ்ந்து வருகின்றன. 

கேரளத்தின் எந்தமுனையிலிருந்து எந்த முனை வரையிலும் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளின்பொய்ப்பிரச்சாரம் எடுத்துச் செல்லப்பட்டா லும் அவர்களது எந்தவொரு யாத்திரையும் கேரள மக்கள் இடதுசாரிகள் மீதும், மதச்சார்பற்ற அரசியல் மீதும் வைத்திருக்கிற நம்பிக்கையை லேசாகக் கூட அசைத்துவிட முடியாது.

கேரளத்தில் மதவெறி நிகழ்ச்சி நிரல்களை அமலாக்குவதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் தாமரையை மலரச் செய்துவிட முடியும் என்று அமித்ஷா நம்புகிறார். 
இந்தநோக்கத்திற்காக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவர் இறக்குமதி செய்திருக்கிறார். ஒரு வெறிபிடித்த மதவாத பிற்போக்குவாதியான ஆதித்யநாத்தும் கேரளத்தில் பாஜக யாத்திரையில் பங்கேற்றிருக்கிறார்.

 ஆனால் இடதுசாரிகளாலும் முற்போக்கு சக்திகளாலும் தலைமை தாங்கப்படும் கேரளத்து மக்கள் கேரள சமூகத்தில் இத்தகைய மதவாதம்வேர் பிடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தப்படு வதை உறுதிசெய்வார்கள். 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருமுதலமைச்சரைப் பார்த்து, கொலை களுக்கெல்லாம் இவர்தான் காரணம் என்று அமித்ஷா கூறுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.


குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, போலி என்கவுண்ட்டர்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஒரு நபர். குஜ ராத்தில் இவர்களது ஆட்சி நடந்தபோது சட்டவிரோதமான முறையில் காவல்துறை யால் கைது செய்யப்பட்டு, காவல்துறையின் பிடியில் இருந்தபோதே சொராபுதீன் என்பவரும் அவரது மனைவி கவுசர் பீவியும்கொடூரமான முறையில் போலி என்கவுண்ட்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தால் அமித்ஷா விடுவிக்கப்பட்டிருக்கலாம்; 

ஆனாலும் கூட அவரது ஆட்சிக்காலத்தின் போது நடந்த பல்வேறு போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் தொடர்புடைய - முற்றிலும் குற்றப்பின்னணி கொண்ட ஒரு நபரே அமித்ஷா.
உள்துறை அமைச்சராக அவர் பதவி வகித்த காலம் முழுவதும் “என்கவுண்ட்டர் அரசியல்” ஸ்பெஷலிஸ்டாகவே தன்னை தகுதிப்படுத்திக் கொண்டவர். 

இப்படிப்பட்ட குற்றப்பின்னணி கொண்ட அமித்ஷா அக்டோபர் 16ஆம்தேதி வரை ஒவ்வொரு நாளும் தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏ.கே.கோபாலன் பவன் முன்பு போராட்டத் தில் ஈடுபடுமாறு அவரது கட்சி ஊழியர் களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

அனைத்து மாநில தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜக இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபடுமாறும் கூக்குரல் இட்டுள்ளார். 

இந்த நாட்டின் ஆளுங் கட்சி, ஒரு தேசிய அரசியல் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக தினந்தோறும் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கிறது என்று சொன்னால், இந்திய அரசியலில் அமித்ஷா ஒரு கூலிப்படை அரசியலை அறிமுகப்படுத்து கிறார் என்றே பொருள் கொள்ள முடியும்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இதுபோன்ற பகைமையை விதைக்கும், வெறுப்பை விதைக்கும் சூழ்ச்சிகளில் ஒரு போதும் இறங்காது. 

கேரளத்திலும், திரிபுராவிலும் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங் களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்துத்துவா மதவெறி சக்திகளை முறி யடிக்கும் போராட்டத்தில் முன்னணியில் நிற்கின்றன. 
பீப்பிள்ஸ் டெமாக்ரசி(அக்.7, 2017)
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
=================================================================================================================================
ன்று,
அக்டொபர் -06.
  • ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
  • முதல் பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)
  • பிஜி குடியரசானது(1987)
=========================================================================================
அநாகரிக வலைத்தளம் தொடர்வதா?

உலகமய - தாராளமய - தனியார்மய நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ள பின்னணியில் மத்திய-மாநில ஆட்சியாளர்களின் கொள்கைகள் மக்களின் சமூகப் பொருளாதார நிலைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

 அத்துடன் பண்பாட்டுத் தளத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அமைப்பாக உள்ள இயக்கங்கள் மக்களைத் திரட்டிப் போராடுகின்றன.

தனிமனிதர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் களமாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. ஆனால் அவ்வாறு அரசின் கொள்கைகளையும், ஆதிக்கவாதிகளின் செயல்களையும் விமர்சிக்கிறவர்கள் அதேசமூக வலைத்தளங்களில் இழிவுபடுத்தப்படுகிறார்கள். அதிலும் பெண்களாக இருந்துவிட்டால் பாலியல் வக்கிரத்தில் ஊறிய வார்த்தைகளால் துன்புறுத்துவது அதிகரித்துள்ளது.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும்அமைப்புகளின் தலைவர்களும் பொதுத்தளத்தில் இயங்கும் பெண் பத்திரிகையாளர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்டோரும் இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகிறார்கள். 

நாடுமுழுவதும் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 10 பேருக்கு 8 பேர் இத்தகைய வார்த்தை வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. 

பெண்களில் 41 விழுக்காட்டினர் பாலியல் வக்கிரச்சொற்களால் தாக்கப்படுகிறார்கள்.
வலைத்தளப் பாதுகாப்பு தீர்வுகளுக்கான நிறுவனம் ஒன்றுசமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 

படித்தவர்கள் அதிகமாக உள்ள நகரங்களில் இத்தகைய தாக்குதல்களும் அதிகமாக உள்ளன. கொச்சைப்படுத்துவது, பீதியை கிளப்புவது,பாலியல் ரீதியில் கேலி பேசுவது, சமூக வலைத்தளங்களில் நேரடியாக அச்சுறுத்துவது, குழுவாகச் சேர்ந்து மோசமான கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவது போன்றவை அதிகரித்துள்ளன.

 கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் பண்பு குறைந்து மிரட்டுகிற போக்குஅதிகரித்திருப்பதையே இந்த விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வலைத்தள வன்முறையாளர்களின் நோக்கமே மதவெறி, சாதிவெறி,பொருளாதார மோசடிக்கொள்கைகளை எதிர்ப்போரை, குறிப்பாகப் பெண்களைப் பொது அக்கறைகளிலிருந்து வெளியேற்றுவதுதான்.

பாதிக்கப்படும் பெண்ணோ, ஆணோ காவல்துறையில் புகார் பதிவு செய்வதற்கே போராட வேண்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களின் இணைப்பு மையங்கள் வெளிநாடுகளில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று தட்டிக்கழிக்கிறார்கள். 

உரிய ஆதாரங்களோடு சென்றாலும் கண்டுகொள்வதில்லை. 

அமைப்புரீதியாக அணிதிரள்வோர் பெரும் போராட்டம்நடத்தும்போதும், நீதிமன்றத்தலையீடுகள்காரணமாகவும் விதிவிலக்காக சில புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால்பெரும்பாலான புகார்கள் மீது நூலாம்படைபடர அனுமதிக்கப்படுகிறது. அரசு, காவல்துறைஅணுகுமுறையில் நிச்சயம் மாற்றம் தேவை. 

இத்தகைய குற்றங்களை பாலியல் அத்துமீறலாகவும் மனித உரிமை மீறலாகவும் கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும். 
இவ்வழக்குகளைக் கையாள உரிய புரிதலை காவல்துறையில் ஏற்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?