மதிப்பிழந்தது பணம் அல்ல.

எந்த திட்டமானாலும் அதை முறைப்படி ஆழமாக சாதக ,பாதகங்களைஉணர்ந்து நடைமுறைப்படுத்தினால் அதன் பலனை பெற முடியும்.

ஆனால் மோடி தன்னை சாகச வீரராகக் காட்டிக்கொள்ளமற்றவர்களுடன்  ஆலோசனைகள் கொள்ளாமல் மேலோட்டமாக எதிர்வினைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பில்லாமல் திட்டங்களை அதிரடியாக கொண்டுவருவதுதான் தற்போது திட்டங்களுக்கு எதிரான பலனே கிடைக்கிறது.

பணமதிப்பிழப்பு பலன் தருவதாக இருந்தாலும் மோடி அதை செயல்படுத்திய விதம் நாட்டையே குழியில் தள்ளிவிட்டது.

ஜி.எஸ்.டி,  வரியை இரவோடிரவாக எந்த தெளிவுமில்லாமல் அவசரமாக நிறைவேற்ற அப்படி என்ன அவசரம் வந்தது மோடிக்கு.

தலைநகரை டெல்லியில் இருந்து மாற்றம் செய்வது நல்ல திட்டம்தான் ஆனால் அதை துக்ளக் செயல்படுத்திய விதம் ,பணம் தயாரிக்கும் செலவை கட்டுப்படுத்த துக்ளக் பயன்படுத்திய தோலில் பணத்தை  வெளியிட ,அவரை விட மக்கள் ஆளாளுக்கு தோலில் பணத்தை சிறப்பாக குடிசைத்தொழில் போல் தயாரித்து நாட்டையே குழப்பத்தில் ஆழ்த்தியதுதான் அவரை கோமாளிராஜாவாக்கியது.


மக்கள் எல்லாம் பணத்தை மாற்ற ஒருநாளைக்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்கு காத்துக்கிடக்க ,சேகர் ரெட்டிக்கு   33கோடிகளுக்கு 2000 தாள்கள் கிடைத்தது எப்படி?


சட்டவிரோத பணப் பதுக்கல் வழக்கிலிருந்து, பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியை தப்பவிடும் வேலைகளில் மோடி அரசு இறங்கி விட்டதாக தெரிகிறது.
ரூ. 33 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள், சேகர் ரெட்டிக்கு எந்த வழியில் போனது என்பதற்கான கணக்கு வழக்கு ரிசர்வ் வங்கியிடமே இல்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
‘மணல் மாபியா’ என்று அழைக்கப்படும் சேகர் ரெட்டி, தமிழக அரசின் பிரதான காண்ட்ராக்டராகவும் இருந்தவர். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு மிக நெருக்கமானவர்.கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பை அறிவித்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

அப்போது, நாடு முழுவதும் புதிய ‘2000’ ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஆங்காங்கே சிபிஐ மூலம் சோதனைகளும் நடத்தப்பட்டன.

சென்னையில் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் ரூ. 33 கோடியே 60 லட்சம் மதிப்பிலான ‘2000’ ரூபாய் நோட்டுகளும், பெருமளவு தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சேகர் ரெட்டியை கைது செய்தனர். 

எனினும் இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் அவர்களால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத காரணத்தால், சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.

இதனிடையே, சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட ‘2000’ ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களைக் குறிப்பிட்டு, அந்த எண் கொண்ட ரூபாய் நோட்டுக்கள் எந்த வங்கி அல்லது குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவை என்ற விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது. 

ஆனால், சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் எந்த பணக் கிடங்கு வழியாக சென்றன என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இல்லை என்றும் பணத்தை அனுப்பும் போது வரிசை எண்களை தாங்கள் குறித்து வைக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.


வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் கொண்ட பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று டிசம்பர் 2-வது வாரம்தான் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து நிலைமை இயல்பு நிலைக்கு வந்த பின்னரே, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை குறித்து வைத்து அனுப்பும் பணிகளைச் செய்ய முடிந்ததாகவும் கூறியுள்ளது.

சிபிஐ குறிப்பிட்டுள்ள ‘2000’ ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் தொடர்பான விவரங்கள் எதுவுமே தங்களிடம் இல்லை என்றும் கைவிரித்துள்ளது.


புதிய ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு மிக்க அரசு அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் உள்ளிட்ட தகவல்களுடன்தான் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. 
அங்கிருந்து ரிசர்வ் வங்கியின் பணக் கிடங்குக்கு அனுப்பப்பட்டு, பின் வங்கிகளுக்கு அவை விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வங்கிகளுக்கு விநியோகம் செய்வதற்காக பல்வேறு பணக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்று ரிசர்வ் வங்கி மிகச்சாதாரணமாக தெரிவித்துள்ளது.

மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அச்சகங்களை ஆராய்ந்ததில், அரசுப் பணக் கிடங்குகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்த்தது வரையிலான விவரங்கள் மட்டுமே உள்ளன. 

இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் சிபிஐ அடுத்தகட்டமாக மேல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சேகர் ரெட்டி மீதான வழக்கே கூட கைவிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆக பணமதிப்பிழம்பின் மூலம் மதிப்பிழந்தது மோடி அரசின் நாணயம்தான்.
============================================================================================================
======================

ன்று,
அக்டொபர் -26.

  • நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
  • ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)
  • அமெரிக்கா  தேசப்பற்று சட்டத்தை நிறைவேற்றியது(2001)
======================================================================================

சமையல் எரிவாயு உருளைப்  பற்றி என்னவெல்லாம் தெரியும்?
ஒவ்வொரு வீட்டிற்கும் சமையல் எரிவாயு உருளை  மிகஅத்தியாவசிய தேவையாகமாறிவிட்டது. 
மறுபுறம் அதனால்  நடக்கும் விபத்துக்களும் தொடர் கதையாகி விட்டது. 
இந்த விபத்துகள் பெரும் பாலும் கசிவு, வெடித்துச் சிதறியதாக கசியவிடப்படுகிறது. 
காவல்துறையும் பெரும்பாலும் உண்மையை வெளிக் கொண்டு வருவதில்லை. பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விபத்துகள் குறைந்த பாடில்லை. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்மைக் காலமாக சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் 100 விபத்துக்களில் 110 பேர்பலியாகியுள்ளனர்.
இதில் கொடுங்கை யூர் விபத்துகளும் அடங்கும். 
இதே நிலைதொடர்ந்தால் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துவிடும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தில் கடந்த 2014-15ஆம் ஆண்டுகளில் 2,400 விபத்துகள் எரிவாயுசிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டுள்ள தாகவும் அதில் 35க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பயனில் இருக்கும் எரிவாயு சிலிண்டர் தீர்ந்ததும் வேறு ஒரு சிலிண்டருக்கு பதிவு செய்கிறோம். 
அதுவும் தீர்ந்தால் மற்றொன்றை பதிவு செய் கிறோம். ஆனால், அந்த எரிவாயு சிலிண்டர் மீது எழுதப்பட்டுள்ள எண்கள் பற்றி பெரிதாக நாம் கண்டு கொள்வதில்லை. இப்படி நாம் அலட்சியப்படுத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடுகிறோம்.

நாம் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் மீது எழுதியிருக்கும் எண்ணைஎப்போதாவது கவனித்து இருக்கிறோமா? 
எரிவாயு சிலிண்டர் ஏன்கசிகிறது என்று தெரிந்து வைத்திருக் கிறோமா? இவை குறித்து சந்தேகம்இருந்தாலும் பெரிதாக கண்டுக்கொள்வ தில்லை.சிலிண்டர் எரிவாயு பயன்படுத்தும் இல்லங்களில் ஒவ்வொருவரும் அவ சியம் தெரிந்துகொள்ள வேண்டியதும் விழிப்புணர்வுடன் இருப்பதும் மிகமிக அவசியம் என்பதை மறுப்பதற் கில்லை. 
அப்படி தெரிந்து கொள்ள வேண்டியது என்னதான் என்பதை சற்றுபார்ப்போம்:-சமையல் எரிவாயு டியூபை ஆண்டு க்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். 
ரப்பர் டியூபுக்கு பதிலாக கடினமான ஆரஞ்சு நிற டியூப் பயன்படுத்து வது சிறந்தது. தினமும் இரவில் உறங்கப்போகும்முன் ரெகுலேட்டரை ஆப்செய்யவேண்டும். 
சிலிண்டர் வாங்கும் போது ‘வாஷர்’ இருக்கிறதா என சோதனை செய்தாலே 99 விழுக்காடு விபத்துக்களை தடுக்க முடியும். 
ஆனால், வீட்டு சமையல் அறையில்பயன்படுத்தப்படும், எரிவாயு சிலிண்டர் பல நேரங்களில் எமனாகமாறி விடுகின்றன.
அவ்வப்போதுஉயிர்களை பலிவாங்கிவிடுகின்றன. வீடுகளில் வெடித்துச் சிதறுவது சிலிண்டர் மட்டுமல்ல, விலை மதிப்பில்லா மனித உடல்களும்தான். இதில் 82 சதவிகிதம் பெண்கள் என்பதை பல ஆய்வு முடிவுகள் வெளிக்கொண்டுவந்துள்ளன.
 இதில் பெரும் பாலும் விபத்தாக இருந்தால் அவை வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட கொலை, தற்கொலைகள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எரிவாயு சிலிண்டரில் கேஸ் திரவவடிவில் மிகவும் கெட்டியான உலோகத் தால் உள்ளடங்கி இருக்கும். இதனால், இது வெடிப்பதற்கான வாய்ப்புகள்இல்லவே இல்லை. 
ஆனால், விளை யாட்டின்போதோ, ரெகுலெட்டரை பொருத்தும்போதோ, அப்படி, இப்படி திருப்பும் போதோ, சிலிண்டர் கேஸ் கசிவதற்கு வாய்ப்புகள் உள்ளது.புதிதாக தயாரிக்கப்பட்ட சிலிண்டர் என்றால் பத்து வருடத்திற்கு ஒரு முறையும் பழைய சிலிண்டர் என்றால் ஏழுஆண்டுகளுக்கு ஒரு முறையும் சர்வீஸ்செய்ய வேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். 
இதை சரியாக குறிப் பிட்ட காலத்திற்குள் சர்வீஸ் செய்த பின்னர் மறுபடியும் எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதை ஒரு கோடு வடிவத்தில் எழுதியிருப்பார்கள். 
அப்படி நமது வீடுகளுக்கு வரும் சிலிண்டரின் கைப்பிடி உள் பக்கத்தில் ஏ,பி,சி,டி என்று ஆங்கிலத்தில் எழுதி அத்துடன் இரண்டு இலக்கு எண் எழுதப்பட்டிருக்கும். 
அந்த இரண்டு இலக்கு எண் என்பது வருடத்தை குறிக்கும்.உதாரணத்திற்கு, ஏ-20 என எழுதியிருந்தால் அந்த சிலிண்டர் 2020ஆம்ஆண்டின் துவக்கத்தில் முதல் காலாண்டில் காலாவதியாகி விட்டது என்று அர்த்தம்.
அந்த சிலிண்டரை அந்த வருடத்தில் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும். 
பி-19 என்றால் 2019ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதமாகும். சி-18 என்றால் 2018ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு ஜூலை முதல் செப்டம்பருக்குள் புதுப் பிக்க வேண்டும்.
டி-17 என்றால் 2017 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் ஏ-15,பி-17,சி-16 என்றிருந்தால் அந்த சிலிண்டர்உபயோகத்திற்கான தகுதியை இழந்து விட்டது. 
அதை மீண்டும் சர்வீஸ் செய்யாமல், வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்வதால் வெடிப்பதற் கான அபாயம் உள்ளது.எனவே, காலாவதியான எரிவாயுசிலிண்டர்களை கொண்டு வந்தால் அதை அந்த முகவருக்கே திருப்பி அனுப்பி சர்வீஸ் செய்யச் சொல்ல வேண்டும். 
சமீப காலமாக வெடிப்பதற்கு முக்கியக் காரணம் காலாவதியான எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதே என்றும் தகவல்கள் கூறு கின்றன. எனவே, ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருப்பதே முதன்மையான பாதுகாப்பு. “வரும் முன் காப்பது சாலச்சிறந்தது” என்பது எரிவாயு விபத்துகளுக்கும் பொருந்தும்.
                                                                                                                                                                                                    ஸ்ரீராமுலு
நன்றி:தீக்கதிர்.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?