சனி, 14 அக்டோபர், 2017

புஸ் வானம் விடுவது உங்கள் கபாலி.

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது.
ரஜினிக்கு பிறகு பீலா உயர்வு நடிகர் அஜித்.

ரஜினியைப் போலவே அஜித்துக்கும் ஊடகங்கள் காசை வாங்கிக்கொண்டு அடிக்கும் ஜால்ரா ரசிகர்களுக்கு மயக்கத்தை தான் தருகிறது.
அதனால்தான் விவேகம் தோல்வியை தாங்க முடியாமல் அதை விமரிசிப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுமளவு வெறியில் இருக்கிறார்கள்.
கமல்ஹாசன்,விஜய் ரசிகர்களைப்போல் தைரியமாக தோல்வியை ஒப்புக்கொள்ளும் பக்குவம் இன்னமும் அவர்களுக்கு வரவில்லை.
காரணம் மக்கள் நலனுக்காக ஒரு ஆணியைக்கூட புடுங்காத ரஜினியையும்,அஜித்தையும் எதை வைத்து சிறந்த மனிதர்,மனிதாபிமானமிக்கவர் என்ற புரளியை இந்த ஊடகங்கள் வெளியிடுகின்றன.
ரஜினி,அஜித் ரசிகர்கள் கொஞ்சம் இதுவரை மக்களுக்கு தங்கள் நடிகர் செய்த பணிகளை பட்டியலிட்டால் போதும்.
ஒரு விரல் கூட  தேவை படாது.
ஆனால் அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள்.பிரியாணி செய்து கொடுத்திருக்கிறார்கள்.அவை எல்லாமும் தங்கள் புகழைப்பாடுபவர்களுக்கு ,பத்திரிகையாளர்களுக்கு.
மற்றபடி கமல்ஹாசன் போல் ,விஜய் போல் தங்கள் பிறந்த நாட்களில் நற்பணியை நலிந்த மக்களுக்கு தங்கள் பணத்தில் செய்திருக்கிறார்களா என்றால்.
இல்லை.
ஆனால் ரஜினி,அஜித் ரசிகர்கள் தங்கள் காசைப்போட்டு செய்திருக்கிறார்கள்.அதை மார்க்க இயலாது.
ஆனால் நடிகர்கள்.?
இந்த காணொளியை வெளியிட்டது.ரசிகர்களைப் புண் படுத்த அல்ல.பண்படுத்த.
நடிகர்களின் புகழை ஊடகங்கள் விளம்பரத்தை வாங்கிக்கொண்டு எப்படி எல்லாம் ஊதி பெருசாக்குகிறது.
பத்திரிகையாளர்கள் கவரை வாங்கிக்கொண்டு எப்படி தங்கள் செஞ்சோற்றுக் கடனை "மனிதர்,புனிதர்,வள்ளல் என்று தீர்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளத்தான்.
அவர்களைப்பொறுத்தவரை உங்கள் நடிகர்கள் வாரி வழங்கும் வள்ளல்கள்தான்.
ஆனால் அந்த நடிகர்கள் சும்மா கொடுக்கவில்லை.அதன் மூலம் தங்கள் சந்தை மதிப்பை உயர்த்துகிறார்.படம் பப்படமானாலும் அவர்கள் மீசையில் மண் ஒட்டியதாக ஊடகங்கள் எழுதாது.அதை நம்பி ரசிகர்களும் விசில் அடித்து அடுத்தப்படத்துக்கு ஆயிரங்களை தங்கள் உழைத்த காசை கொட்டி பார்த்து அழுவார்கள்.
  பாபா படத்துக்குப்பின்  ரஜினிக்கு லாபம் தந்த படம் என்றால் சிவாஜி,எந்திரன்  மட்டும்தான்.