"தீ "யே நீ எரிக்க வேண்டியது யாரை?

நாடாளுமன்றத் தேர்தல்.வாக்கு பெற தாஜ்மகால் ஆயுதம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நாட்டை வகுப்புவாத ரீதியில் பிளவுபடுத்துவதற்கு தாஜ்மஹாலை ஆயுதமாக்க சங்பரிவார் தீர்மானித்துவிட்டதாக கேரள நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் குற்றம்சாட்டியுள்ளார். 
“பாபர் மசூதி தகர்ப்புக்கு முன்பு அது குறித்த விவாதத்தை கிளப்பினார்கள். அதுபோன்ற ஒரு உரிமைவாதத்தை தாஜ்மஹால் மீது சங்பரிவார் முன்வைப்பதாக” தனது முகநூல் பக்கத்தில் டாக்டர் தாமஸ் ஐசக் கடும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். 
முகநூல் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:தாஜ்மஹாலை ஆயுதமாக்கி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்த சங்பரிவார் முடிவு செய்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 
பாபர் மசூதியை தகர்த்தது அவர்களது தீர்மானகரமான முடிவாகும். 
தேச, சர்வதேச அளவில் பல்வேறு பிரிவு மக்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் தாஜ்மஹாலை யோகி ஆதித்யநாத் மற்றும் வினய் கத்யார் போன்ற இரண்டாம் நிலையில் உள்ள பாஜக தலைவர்கள் குறிவைத்துள்ளதும், மத்திய அரசு இதில் மௌனம் காப்பதும் அவர்களது திட்டமிட்ட முடிவாகும்.
பாபர் மசூதியை இடிக்கும் முன்பு துவக்கத்தில் அதை ஒரு சர்ச்சைக்குரிய இடமாக சித்தரிப்பதையே சங்பரிவார் செய்தது. 

அதன் மீது உரிமையுள்ளதாக முதலில் கூறினார்கள். 
அதுபோன்ற உரிமையை தாஜ்மஹால் மீது கோரவும் சங்பரிவார் முயற்சிக்கின்றது.
‘தேஜா மகாலயா’ என்கிற சிவன் கோவிலே தாஜ்மஹால் எனவும், அதற்குள் இந்துக்கள் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் 2015 மார்ச்சில் ஒரு வழக்கை 6 நபர்கள் கூட்டாக தொடுத்தனர். 
ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில்அவர்கள் தாக்கல் செய்த மனுவில் 12ஆம் நூற்றாண்டில் ராஜா பரமார்த்தி தேவ், தேஜா மகாலயா கோவிலை கட்டினார் எனவும், அதன்பிறகு ஜெய்ப்பூர் மன்னர் மான்சிங்கும்,17 ஆம் நூற்றாண்டில் ராஜா ஜெய்சிங்கும் அந்த கோவிலை பராமரித்து வந்ததாகவும், அதன் பிறகே ஷாஜகான் சக்கரவர்த்தி கோவிலைகைப்பற்றினார் எனவும் தெரிவித்துள்ளனர். 
வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் அளித்தது. 
அதில் மனிதர்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் என்கிற நினைவிடம் எப்போதுமே கோவிலாக இருந்ததில்லை எனவும், உண்மையில் அது ஒரு முஸ்லீம் சமாதி எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் சங்பரிவாரின் வரலாறு தெரிந்தவர் களுக்கு இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்துடன் முடிந்துவிடாது என்பது உறுதியாக தெரியும்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், “தாஜ்மஹால் போல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைகவரும் இந்தியாவின் அடையாளங்கள் உண்மையான இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை” என்று குறிப்பிட்டார். இப்படிஅவர் சொன்னதற்குப் பிறகு, சுற்றுலா வரைபடத்திலிருந்து தாஜ்மஹால் காணாமல் போனது.
பட்டியல் நீள்கிறது...
இந்த வாதம் இன்று நேற்று தொடங்கியதல்ல; புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்கிற சுயம்சேவக் வரலாற்று ஆசிரியர் 1964இல் உருவாக்கிய இன்ஸ்டிட்யூட் ஆப் ரீரைட்டிங் ஹிஸ்டரி என்கிற நிறுவனம் அவரது “சம் பிளண்டர்ஸ் ஆப் இந்தியன் ஹிஸ்டாரிக்கல்ரிசர்ச்” என்கிற நூலை வெளியிட்டுள்ளது. 
அதில் ஆர்எஸ்எஸின் நிகழ்ச்சி நிரல் வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விஷ்ணு ஸ்தம்பம் என்கிற வான்நோக்கு மையமே குதுப்மினார் எனவும், பதேபூர் சிக்ரி போன்றவை அந்தந்த காலங்களில் இந்துஅரசர்களின் அரண்மனைகளாக இருந்தன என்பதும் நாகேஷ் ஓக்கின் கூற்றாகும். 
அவர் அதோடு நிறுத்தவில்லை மெக்காவில் உள்ள காபாவில் (சமாதி) விக்கிரமாதித்திய மன்னன் காலத்து சாசனங்கள்உள்ளதாக கூறி அரபு நாடுகள் வரை சங்பரிவாரின் நிகழ்ச்சிநிரலை விரிவுபடுத்துவதாக உள்ளது. 
அவற்றைப் படிக்க (http://www.hinduism.co.za/kaaba.htm) என்கிற இணையதளத்தை அணுகலாம்.
பாபர் மசூதியை தகர்த்துவிட்டு தொடங்கிய நவீன இந்துத்துவத்தின் பயணம் அடுத்த கட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 
உலகமெங்கும் உள்ள கவிஞர்களையும், கலைஞர்களையும், சுற்றுலா விரும்பிகளையும் அழகை ஆராதிப்பவர்களையும் நூற்றாண்டுகளாக கவர்ந்து கொண்டிருக்கும் தாஜ்மஹாலை தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு இரையாக்குவது மிகப்பெரிய துயரம்.
யுனெஸ்கோவால் புராதனச் சின்னம் என பெயர் பெற்ற 35 இடங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் முதலிடத்தில் தாஜ்மஹால் உள்ளது.
 இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம் இது.
ஆண்டுக்கு 80 லட்சம் பேர் தாஜ்மஹாலை கண்டுகளிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2020இல் ஒரு கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 ஜுலை மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் அளித்த பதிலில் தாஜ்மஹாலிலிருந்து கிடைக்கும் வருவாய் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. 
மூன்றாண்டுகளில் மராமத்து பணிகள் போன்றவற்றுக்காக ரூ.11 கோடி செலவு செய்த அதே நேரத்தில் நுழைவுக்கட்டணம் போன்றவற்றின் மூலமாக ரூ.75 கோடி வருவாய் என அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
செய்தித் தொகுப்பு: சி.முருகேசன்
"தீ "யே நீ எரிக்க வேண்டியது யாரை?
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக பலமுறை மனு கொடுத்தும் நியாயம் கிடைக்காததால் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த பயங்கரம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசி தர்மத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2). திங்களன்று காலை, இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்.

பொதுமக்களிடம் மனுக்கள்வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டி ருந்தார். மனுக்கள் கொடுக்க வந்தஏராளமானோரும் அங்கு நின்ற னர். 
திடீரென இசக்கிமுத்து பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும்2 குழந்தைகள் உடலிலும் ஊற்றி னார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இசக்கி முத்துவை தடுக்க ஓடி வந்தனர். 



ஆனால் அதற்குள் இசக்கி முத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்துக் கொண்டு அனைவரது உடலிலும் தீவைத்தார். 4 பேர் மீதும் தீப்பற்றிஎரிந்தது. அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களின் அரு கில் யாரும் செல்ல முடியவில்லை. 
அங்கு நின்ற போலீசார் மண்ணை அள்ளி எரிந்து தீயை அணைக்க முற்பட்டனர். 
சிறிது நேரத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவிமற்றும் 2 குழந்தைகள் சுருண்டு கீழே விழுந்தனர்.உடல் முழுவதும் கருகி, உயிருக்குப் போராடியநிலையில் கிடந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். 
கடுமையான தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். 
சிகிச்சை பலனளிக்காமல் சுப்புலெட்சுமி, மகள்கள் மதி சாருண்யா, அக்சயா பரணிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து உயிருக்குப் போராடி வருகிறார்.

கந்துவட்டிக் கொடுமை

இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கந்துவட்டி கொடுமை காரணமாக அவர்கள் தீக்குளித்தது தெரியவந்தது. 
இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமி, காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். 
அதற்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளார். இதுவரை கடன் வாங்கிய பெண்ணிடம் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் கொடுத்துள்ளார். 
ஆனால் அந்த பெண் வட்டி மட்டும் தான் கொடுத்துள்ளதாகவும், அசல் பணத்தை கட்டவில்லை எனவும் கூறி பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து இசக்கிமுத்து அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதன் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை,

6 முறையும் அலட்சியம் செய்த ஆட்சியர்

மேலும் இது தொடர்பாக இசக்கிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை மனு கொடுத்துள்ளார். ஆனால் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதனால் மனம் உடைந்த இசக்கிமுத்து திங்களன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வளாகத்திலேயே தீக்குளித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி,தமிழக மக்களை உலுக்கியுள்ளது.



‘‘ரூ. 1லட்சத்து 45 ஆயிரம் கடனுக்கு வட்டியோடு ரூ.2லட்சத்து 34 ஆயிரம் 8 மாதத்தில் செலுத்தியும், கடன்கொடுத்த முத்துலட்சுமி தொடர்ந்து மிரட்டியதை, இசக்கிமுத்து குடும்பம் ஆறு முறை புகார் அளித்தும் அச்சன்புதூர் காவல்நிலையமும் ஆட்சியரகமும் அலட்சியப்படுத்தியதன் விளைவே இந்தக் கொடூர மரணங்கள். 
காவல்துறை கந்துவட்டிக் கும்பல்களுடன் நெருக்கமாக இருக்கிறது. 
கடந்த ஆகஸ்ட்டில் நெல்லை டவுனில் கந்துவட்டிக் கொடுமைக்கு கோமதி என்ற பெண் பலியானார். 2 ஆண்டுக்கு முன்பு பாளையங்கோட்டையில் ஒரு குடும்பமே தற்கொலை செய்தது.

எங்கே போனது கந்து வட்டித் தடுப்புட்டம்?









































































==========================================================================================
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு"
( குறள் எண் : 21 )
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்
ன்று ,
அக்டொபர் -24.
  • ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது(1917)
  • பிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)
  • ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)
  • ஐக்கிய நாடுகள் தினம்(1945)
  • ஜாம்பியா விடுதலை தினம்(1964)
=========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?