தொழில் வளர்சி இல்லையா?
ஊழலை ஒழிப்பதற்கே இரவு பகலாக பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனும் தொழிலதிபருமான ஜெய் அமித் ஷா ஒரு மிகப்பெரிய ஊழலில் நீந்திக்கொண்டிருக்கக் கூடும் என்ற, தொழில்துறையினரையும் அசர வைக்கிற செய்தி இப்போது வெளி வந்திருக்கிறது.
இணையதள ஏடாகிய ‘தி ஒயர்’ ஞாயிறன்று (அக்.8) வெளியிட்டுள்ள அந்தச் செய்தி எந்த அளவுக்கு அதிகார பலம் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜக தலைவராக அமித் ஷா பதவியேற்ற பிறகு, இந்த மூன்று ஆண்டுகளில் அவரது மகன் ஜெய் அமித் ஷாவின் நிறுவன வணிக விற்று வரவு 16,000 மடங்கு எகிறியிருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தச் செய்தியை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்ற ஜெய் அமித்ஷாவின் வழக்குரைஞரின் மிரட்டலை மீறி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியின் சுருக்கம் :
"ஜெய் அமித் ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் பெயர் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிட்டெட். நிறுவனங்கள் பதிவாளர் அலுவலக (ஆர்ஓசி) ஆவணங்களின்படி, 2012-2013 நிதியாண்டில் அந்த நிறுவனம் ரூ.6,230 இழப்பைச் சந்தித்தது.
அதற்கடுத்த நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பு ரூ.1,724.
2014-15 நிதியாண்டில் அந்த நிறுவனம் ஈட்டிய வணிக வருவாய் வெறும் 50,000 ரூபாய்.
அதில் லாபம் வெறும் 18,728 ரூபாய்.
அதற்குப் பிறகு, 2015-16 நிதியாண்டில், அதன் வணிக வருவாய் 80கோடியே 50 லட்சம் ரூபாய்!
ரிலையன்ஸ் நிறுவன உயர் நிலை நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினர் பரிமள் நத்வானியின் சம்பந்தியுமான ராஜேஷ் காண்ட்வலா நடத்துகிற நிதி நிறுவனம், உறுதிப்பத்திரம் இல்லாமல் அளித்த ரூ.15.80 கோடி திடீர்க்கடன் உட்பட, பல நிறுவனங்கள் “நிதியுதவி” செய்துள்ளன.
அவ்வாறு தாராளமாகக் கடன் வழங்கிய ஒரு நிறுவனம், இந்திய புதுப்பிக்கத்தக்க விசை மேம்பாட்டு நிறுவனம்.
ஆம், இது ஒரு பொதுத்துறை நிறுவனம்.
இந்த நிறுவனம் ஜெய்க்குக் கடன் வழங்கியபோது, அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர் இன்றைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.
வேறு சில நிறுவனங்கள் நிதி அளித்தது உள்பட, இத்தகைய பல திடுக்கிடும் தகவல்களை ‘தி ஒயர்’ ஏடு வெளியிட்டிருக்கிறது.
இதில் ஒரு ‘கிளைமாக்ஸ்’ திருப்பம் என்னவென்றால், சென்ற ஆண்டு, டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை நிறுத்திக்கொண்டதாக அறிவித்தது!
தொடர்ந்து ஏற்பட்ட இழப்புகளைக் காரணமாகக் கூறியிருக்கிறது அந்த நிறுவனம்.
அரசியலில் புயலைக் கிளப்பக்கூடிய இந்தத் தகவல்கள் பற்றி, ‘தி ஒயர்’ சார்பில் ஜெய் அமித் ஷாவைத் தொடர்பு கொண்டபோது, தாம் பயணத்தில் இருப்பதாகக் கூறி பதிலளிக்க அவர் மறுத்துவிட்டாராம்.
ஆனால், அவரது வழக்குரைஞர் தொடர்பு கொண்டு சில ஆவணங்களை அனுப்பியதோடு, தனது கட்சிக்காரர் மேல் அவதூறு செய்யக்கூடிய செய்தியை வெளியிட்டால் கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்தாராம்.
ஒரே ஆண்டில் 50000 இருந்து 80 கோடிகள் வருமானம் உயர்ந்தால் அது இந்திய பொருளாதாரம் உயர்ந்து வல்லரசாகிறது என்றுதான் நாம் பெருமையடைய வேண்டும்.
இல்லாவிடில் நிச்சயம் தேசத்துரோகிதான்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
எல்லைகளற்ற புரட்சியாளன் சே குவரா
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சே குவேரா, பியூனஸ்அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுதும் பயணம் செய்தார்.
இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பல விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார்.
பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார்.
எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. அர்ஜெண்டினாவுக்குத் திரும்பிய சே குவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா, பெரு, ஈக்குவடார், பனாமா, கோஸ்டாரிக்கா, நிகரகுவா, ஹோண்டூராஸ், எல்சல்வடார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சே குவேரா குவாதமாலாவுக்குச் சென்றார்.
அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.
உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் சே குவேரா, குவாதமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாதமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் நட்பு கிடைத்தது.
இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார்.
அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களின் தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது.
“சே” என்பதுநண்பர் அல்லது தோழர் என்னும் பொருள்கொண்ட அர்ஜெண்டினச் சொல்லாகும்.சில காலத்துக்குப் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959-இல் கியூபாவின் ஆட்சிஅதிகாரத்தினைக் கைப்பற்றியது.
அதன்பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின்தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றி னார். அக்காலகட்டத்தில் கொரில்லாப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ஆம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார்.
பின்னர், காங்கோ-கின்ஸாசா (தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப்போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பி னை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து புறப்பட்டார்.
சே 1966ஆம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டுஉருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்கசிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார்.
சிம்மசொப்பனமாக விளங்கிய சேபொலிவிய இராணுவத்தால் வல்லெ கிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ சால்மோன் என்பவரின் தலைமையில் 1967 அக்டோபர் 9இல் கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப் பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.
கைதி யாக நின்ற நேரத்தில் கூட இப்படி சொல்லித்தான் மரணத்தை வரவேற்றார்.
“நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னைச் சுடு”
- பெரணமல்லூர் சேகரன்
அக்டொபர்-09.
- உலக அஞ்சல் தினம்
- டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)
- தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)
- உகாண்டா விடுதலை தினம்(1962)
- இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)
கௌரி லங்கேஷ் கொலையாளிகள்
மூத்த பத்திரிகையாளரும் சங்பரிவார் அமைப்புகளை விமர்சித்து வந்தவருமான கௌரி லங்கேஷ் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பாலும், பிரதமர் மோடி மற்றும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கராலும் வளர்க்கப்பட்ட சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சனாதன் சன்ஸ்தாவுக்கு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசும், பிரதமர் மோடியும் சலுகைகள் செய்து பெரும் பின்புலமாகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
2012 இல் நடந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மனோகர் பாரிக்கர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சனாதன் சன்ஸ்தாவும், ஜனஜாக்ருதி சமிதி ஆகிய அமைப்புகள் தீவிர இந்துத்துவ முழக்கங்களுடன் தங்களது செயல்பாடுகளை துரிதப்படுத்தின.
அதன் ஒரு பகுதியாக இந்து நாடு அமைப்பதற்காக என்று கூறி ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்த துவங்கின.
2013 ஜூலை அகில பாரதிய இந்து அகிம்சன் என்கிற பெயரில் சனாதன் சன்ஸ்தா நடத்திய மாநாட்டுக்கு குஜராத்தில் முதல்வராக இருந்த போது மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
கடுமையான வகுப்புவாத, பிரிவினையை நோக்கமாக கொண்டு அந்த மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
மாட்டிறைச்சி உண்பவர்களை பொது இடத்தில் தாக்கி கொல்ல வேண்டும் என்று அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர். சனாதன் சன்ஸ்தாவின் பிரச்சாரங்கள், நடவடிக்கைகள் குறித்து தேசிய ஊடகங்களில் வெளிவந்த போதிலும், அவற்றை தடுப்பதற்கு பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக சனாதன் சன்ஸ்தா நடத்தி வரும் சனாதன் பிரபாத்திற்கு விளம்பரம் செய்ய மக்கள் பணத்தை மனோகர் பாரிக்கர் அரசு வாரி வழங்கியுள்ளது. சன்ஸ்தாவின் நடவடிக்கைகளுக்கு அதன் மூலம் தனது ஆதரவை கோவா அரசு வெளிப்படுத்தியது.
பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் சனாதன் சன்ஸ்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை சன்ஸ்தாவின் இணைய தளப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.
பூரி சங்கராச்சாரியார், யோகா வியாபாரி ராம்தேவ் உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்களும் சனாதன் சன்ஸ்தாவின் ஆஸ்தான ஆதரவாளர்களாக உள்ளனர்.