தேஜோ மஹால் ?

மதவாதத்தால் மக்களைப் பிளவுபடுத்துவதைத் தனது செயல் திட்டமாகவே கொண்டுள்ள சங் பரிவாரத்தின் உத்திகளில் ஒன்றுதான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்கள் பற்றிய சர்ச்சைகளைக் கிளப்புவது. 
சர்ச்சைகளைத் தொடர்ந்து உணர்ச்சி வசப்பட வைக்கும் பிரச்சாரங்கள், மோதலைத் தூண்டும் பேச்சுகள், வன்முறைகள் என்று வளர்த்துக்கொண்டே போவார்கள். 

ஏற்கெனவே அயோத்தியின் பாபர் மசூதி விவகாரத்தில் இந்த உத்திகளைத்தான் கையாண்டார்கள். 
465 ஆண்டுப் பழமை வாய்ந்தஅந்தக் கட்டடம் 1992இல் தகர்க்கப்பட்டு, நாடு முழுவதும் கிளறிவிடப்பட்ட மதவெறி வன்முறைகளில் இதைத் தெளிவாகக் காணலாம்.


இப்போது, உலக அதிசயங்களில் ஒன்றாக மதிக்கப்படும் தாஜ்மகால் தொடர்பாக இதே உத்தியைத் தொடங்கியிருக்கிறார்கள். 
ஏற்கெனவே, உத்தரப்பிரதேச பாஜக அரசு வெளியிட்ட சுற்றுலா மையங்கள் வரைபடத்திலிருந்து தாஜ்மகால் நீக்கப்பட்டது. ஆனால் மண்குவியல் அயோத்தி பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்று சுற்றுலாத் தளமாகி உள்ளது.

நாடு முழுவதும் எழுந்தகண்டனத்தைத் தொடர்ந்து, ஆக்ரா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி அறிவிக்கப்பட்டது.
ஒருபக்கம் பாஜக தலைவர்கள் தாஜ் மகாலுக்குஎதிரான கருத்துகளைக் கொட்டிக்கொண்டிருக்க, ஆக்ராவுக்குச் சென்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தாஜ்மகாலை எழுப்பியமன்னர் யாரானாலும் அது இந்திய உழைப்பாளிகளின் வியர்வையால் கட்டப்பட்டது என்பதாக வசனம் பேசினார். 

இந்திய உழைப்பாளிகள் என்பதற்கு இவர்களது அகராதியில் இந்து உழைப்பாளிகள் என்றே பொருள் என்பது தெரிந்ததே.
இந்தச் செய்திகள் போய்க்கொண்டிருக்கும்போதே, அடுத்த கட்டமாக தாஜ்மகால் இடம் பற்றிய சர்ச்சை கிளப்பப்படுகிறது. பாஜகஎம்எல்ஏ சங்கீத் சோம், துரோகிகளால் கட்டப்பட்ட தாஜ்மகாலை இந்திய வரலாற்றிலேயே சேர்க்க முடியாது என்றார். 

பாஜக தலைவர்வினய் கட்டியார் தாஜ்மகால் உண்மையில் ஒரு இந்துக்கோவில் என்றும் முன்பு அதன் பெயர் தேஜோ  மஹால் என்றும் அப்படியே பெயர்  மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். 


இப்போது, சில நேரங்களில் பாஜக தலைமைக்கு இடைஞ்சலாகக் கருத்துக்கூறுவது போலக்காட்டிக்கொள்வதில் வல்லவரான சுப்பிரமணிய சாமி, தாஜ்மகாலுக்கான நிலம் வலுக்்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்டது என்றும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறுகிறார்.
இவர் ஏற்கனவே சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்று கதைத்தவர்தான்.

அது எப்படிப்பட்ட ஆவணங்களாக இருக்கும் என்பதை எவரும் சந்தேகம் கொள்ளலாம்.ஆனால் இவர்களது நோக்கம், இதை வைத்துகணிசமான பகுதி மக்களிடையே மதம் சார்ந்தபகை உணர்வை விசிறிவிடுவதே என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. 

மத்திய ஆட்சியின் தோல்விகளால் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும் கோபத்தையும் மக்கள் நிச்சயமாக 2019 மக்களவைத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள். 
அதற்குள் பகைமைத் தீயை மூட்டிவிடுவதே தாங்கள் குளிர்காய்வ
தற்கான வழி என்றகுயுக்தியான வியூகத்தோடுதான் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

 முதலமைச்சர் யோகி,அயோத்தியில் போய் தீபாவளி கொண்டாடுவதும், அது தனது தனிப்பட்ட நம்பிக்கை, அதைஎதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க முடியாது என்றுகூறுவதும் கூட இந்தக் குயுக்தி வியூகத்தோடுதான். 

இந்த வியூகமும் அதன் விஷமத்தனமான உள்நோக்கமும் மக்கள் சக்தியால் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
=========================================================================================
: தமிழகம் முழுவதும் 4.78 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர் லக்கானி கூறியுள்ளார். ஆனால், இடைத்தேர்தல் நடக்க வேண்டிய ஆர்கே நகரில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் அதிமுக சார்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் திமுக புகார் அளித்துள்ளது. அதன் மீது இதுவரை நடவடிக்கை இல்லை.நீக்கப்படவில்லை. 
அங்குள்ள அதிமுகவின்  போலி வாக்காளர்களை உடனே நீக்க வேண்டும்.
ஆர்கே நகரில் நிறுத்திவைக்கப்பட்ட இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதற்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததே காரணம். 

பணப்பட்டுவாடா தொடர்பாக விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 
அதில், முதல்வர் பெயரும் உள்ளது. ஆனால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இடைத்தேர்தல் நடக்கும் என்பது வேதனை அளிக்கிறது. 

எந்த காரணத்திற்காக தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கு ,எப்ஐஆர் கூட போடவில்லை. 

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டு அதன் பின்னர்தான் தேர்தல் நடத்த வேண்டும்.

எதற்காக தேர்தல் நிறுத்தப்பட்டதோ அதன் மீது ஒரு நடவடிக்கையும் இல்லாமல் தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையே காட்டும்.
 கேரளாவில் சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு  சாதியற்றவர் என்ற பெயரில் பட்டியல்தயாரித்து முன்னுரிமை வழங்கப்படும் என்ற இடதுசாரி கேரள முதல்வர் பினராயி விஜயனின் நடவடிக்கை  ஒரு மைல்கல்  சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்டு போன்ற சட்டங்கள்  தமிழகத்தில் இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. சாதியற்றவர் சான்றும் வழங்கப்படுவதில்லை.
======================================================================================
ன்று,
அக்டொபர்-22.
  • அர்ஜெண்டினாவில்  முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
  • மாலித் தீவு , பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960)
  • பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
  • இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)
=======================================================================================


தினம் ஒரு பேச்சு.
வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணைஇணைப்பது தொடர்பாக, அதிகாரப்பூர்வ மாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.இந்நிலையில், தனது இந்த கருத்தை ஒரே நாளில் ரிசர்வ் வங்கி மாற்றிக் கொண்டுள்ளது. 

புதிய விதிமுறைப்படி வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்தான் என்று பல்டி அடித்துள்ளது.மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்களைப்பெற சமையல் எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதே போன்று வங்கிக் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது.இந்த காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘மணிலைஃப்.இன்’ என்ற இணையதளமானது, ‘வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமா?’ என்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குறித்து கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில்,இதுவரை வங்கிகளுக்கு அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று கூறியது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பதற்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள், ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மட்டுமே கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தனது பதிலில் சுட்டிக்காட்டி இருந்தது. 
இதுதொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.

ரிசர்வ் வங்கி உத்தரவிடாதபோது, எதன் அடிப்படையில் வங்கி நிர்வாகங்கள், ஆதார்எண்ணைக் கேட்டு மக்களை அலைக் கழித்தன என்று கேள்விகளும் எழுப்பப்பட்டுவந்தன. 
ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த பதிலை, ரிசர்வ் வங்கி ஒரே நாளில் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் திருத்தப்பட்ட விதி முறைகளின் படி வங்கிக்கணக்கை ஆதார்உடன் இணைப்பது கட்டாயமே என ரிசர்வ்வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது.
“சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் படி, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாய மாகும். சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புசட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள்,2017 ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.அந்த விதிமுறைகள் அப்படியே அமலில்உள்ளன. 
எனவே, வங்கிக் கணக்குடன்ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப் பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.மத்திய அரசு 50 திட்டங்களுக்கான சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறியது.

ஆனால் உச்சநீதிமன்றம் 6 திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் எண்ணை காட்டாயமாக்க லாம் என்று அண்மையில் தெரிவித்து இருந்தது.

எனினும் ஆதார் சர்ச்சைகள் ஓய்ந்தபாடாக இல்லை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?