நீட் ஊழல் தெரியுமா?
நீட் தேர்வை அந்நிய நாடுகள்வற்புறுத்தல் காரணமாகவே அரசு வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றன.என்று பரவலாக கூறப்படுகையில் நீட் தேர்வின் மூலம் நடக்கின்ற ஊழல் பகிரடிக்கிறது.
அக்டொபர் -07.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை வைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஊழலில் ஈடுபடுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்ற சிலர் தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் கைகோர்த்து, கடைசி நிமிடம் வரை மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் மாணவர்கள் சேராமல் தடுத்து நிறுத்துவதற்கு உதவி செய்வதன் மூலமாக, அந்தக் கல்வி நிறுவனங்கள் அவ்வாறிருக்கும் இடங்களை மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு விற்பதற்குத் துணை போவதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அதுவரை நடத்தப்பட்டு வந்த பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு முரணாக 2016 ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய தேர்வான நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
மத்தியப்பிரதேசத்தில் 2004 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மருத்துவக் கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் தரகர்கள், அதிகாரிகள், மாணவர்கள் ஆகியோருக்கிடையே நடைபெற்ற வியாபம் ஊழல் என்று அறியப்படும் ஊழல் கண்டறியப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் நடைபெறும் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
பீகார், கர்நாடகம், புதுச்சேரி என்று இந்தமூன்று மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளே இத்தகைய ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, இதற்கெ ன்று இருக்கும் தரகர்கள் கூறுகின்றனர்.நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முதற்கட்ட கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விட்டு, கடைசி நிமிடத்தில் அந்தக் கல்லூரிகளில் இருந்து அண்மையில் விலகி அந்த இடத்தை முடக்கி வைக்கின்றனர்.
அவ்வாறான இடங்களை அந்தக் கல்லூரிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு மதிப்பெண் குறைவாக வாங்கியவர்களை வைத்து நிரப்பி இருக்கின்றன.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றமாணவர் ஒருவர் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சேருகிறார். உதாரணத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் என்று வைத்துக் கொள்வோம்.
பின்னர் அந்த மாணவர் பீகாருக்குச் சென்று அங்கே நடைபெறும் முதல் அல்லது இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் கலந்து கொண்டு அங்கேயும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்.
இதுகுறித்து தரகர் ஒருவர் கூறும்போது, தாங்கள் அவ்வாறான மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் இடையே தரகர்களாக இருப்பதாகவும், கல்லூரிகளைப் பொறுத்து அதற்காக அந்த மாணவருக்கு ஐந்து முதல் இருபது லட்சம் வரையிலும் பணம் தரப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆரம்பகட்டக் கலந்தாய்விற்குப் பிறகு, கல்லூரிகளில் தகுதி அடிப்படையில் சேரக் கூடிய மாணவர்களின் பட்டியலை ஒரு இடத்திற்கு பத்து மாணவர்கள் என்றவிகிதத்தில் கல்லூரிகளுக்குத் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்சநீதி மன்ற உத்தரவு அனுமதிக்கிறது.
அதாவது காலியாக உள்ள இடங்களை விட பத்து மடங்கு அதிக அளவில் விண்ணப்பித்த மாணவர்கள் இந்தப் பட்டியலில் இருப்பார்கள். உயர்தகுதி பெற்று சேர்க்கை அனுமதி கிடைத்த மாணவர்கள் கடைசி நேரத்தில் தங்களுக்கு இடம் வேண்டாமென்று சொல்லும் போது அங்கே காலியிடங்கள் உருவாகின்றன.
இத்தகைய காலியிடங்களை தங்களுடைய விருப்பம் போல கல்லூரிகள் நிரப்பிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
கலந்தாய்வை நடத்துகின்ற அதிகாரிகள் கொடுத்த பட்டியலில் இல்லாத மாணவர்களுக்குக்கூட இந்தக் கல்லூரிகள் இவ்வாறு சேர்க்கை அனுமதியினை அளித்திருக்கின்றன.பீகார் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரான பிரபாத் குமார் இவ்வாறு நடந்திருப்பதை ஒப்புக் கொள்கிறார்.
“கல்லூரிகளில் சேர்வதற்கான பணத்தை வரைவோலை மூலமாக கல்லூரிகளில் செலுத்துமாறு மாணவர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இதன் மூலமாகவே மாணவர்கள் கல்லூரிகளோடு கைகோர்த்து இடங்களை முடக்கி வைக்கத் துணை போகிறார்கள்” என்று கூறிய அவர், அடுத்த ஆண்டு இவ்வாறு நடக்காமல் இருப்பத ற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சேர்க்கப்படுகின்ற மாணவர்களின் அசல்சான்றிதழ்களை தேர்வு ஆணையம் தன்னிடமே வைத்துக் கொள்ளாததால், இவ்வாறு இடங்கள் முடக்கி வைக்கப்பட்டு காலியிடங்கள் உருவாவதாகக் கூறுகின்ற கர்நாடக மாநில மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சச்சிதானந்த், சான்றிதழ்களை எங்களிடமே வைத்துக் கொண்டால் அது மாணவர்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தும் என்று தாங்கள் நினைத்ததாக தெரிவிக்கிறார்.
கர்நாடகாவில் வேறுவிதமாக நிலைமை இருப்பதாக அந்தத் தரகர் கூறுகிறார். முதலாமாண்டு கல்விக் கட்டணமாக 6.32 லட்சம் ரூபாயை கர்நாடக தேர்வு ஆணையத்திடம் முதலிலேயே செலுத்தி விட வேண்டும். சேர்ந்த பிறகு மாணவர் தனக்கு இடம் வேண்டாம் என்று கூறினால், அந்தத் தொகை திரும்பத் தரப்பட மாட்டாது. அவர் அதை இழக்க வேண்டும்.
எனவே தனியார் கல்லூரிகள் அந்தக் கட்டணத் தொகையுடன் அந்த இடத்தை முடக்கி வைத்ததற்கு அளிக்கப்படும் தொகையையும் சேர்த்து மாணவர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று அவர் கூறுகிறார்.
புதுச்சேரியைப் பொறுத்த மட்டில் கலந்தாய்வினை நடத்துவதற்கான அதிகாரம்பெற்ற சென்டாக் எனப்படும் மையப்படுத்தப் பட்ட மாணவர் சேர்க்கைக் குழு தனது ஆய்வின்போது, காலி இடங்கள் 96 மட்டுமே இருக்கும்போது, கல்லூரிகள் 150க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருப்பதைக் கண்டறிந்தது.
ஏராளமான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து விட்டு அந்த இடங்களை முடக்கி வைத்து வெளியேறி விட்டதையே இதுகாட்டுவதாக சென்டாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்டாக் அளித்த பட்டியலில் இருந்த960 மாணவர்களில் ஒருவருக்கு கூட கல்லூ ரிகள் இடம் கொடுக்கவில்லை.
இதுகுறித்து சென்டாக்கின் ஒருங்கிணைப்பாளரான ருத்ரா கௌடிடம் கேட்டபோது, மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களை கல்லூரிகளிடம் இருந்துபெற்று ஆய்வு செய்து வருகிறோம் என்றுதெரிவித்தார்.
பஞ்சாப், ராஜஸ்தான்போன்ற மாநிலங்கள் இவ்வாறு இடங்களை முடக்கு வதற்கான சாத்தியம் இல்லை என்று தெரி வித்துள்ளன.
=====================================================================================
இன்று,அக்டொபர் -07.
ஜேம்ஸ் குக் |
- ஜேம்ஸ் குக் நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
- ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)
- ஜெர்மன் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
- இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)
* இங்கிலாந்தின் யார்க்ஷயரில் பிறந்தவர் (1728). தந்தை ஒரு ஏழை விவசாயி. அய்டான் நகரில் பள்ளிக் கல்விப் பயின்றார்.
17 வயதில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்த்தார். சிறுவனுக்கு இதில் விருப்பமில்லாமல் அருகில் இருந்த கடலையே ஏக்கத்துடன் பார்த்ததைக் கண்டு மனமிரங்கிய முதலாளி, அவனை விட்பை துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.
கடல், கப்பல்களால் ஈர்க்கப்பட்டான்..
* மிகவும் அறிவுக்கூர்மை மிக்க இவர், தானாகவே நூல்களைக் கற்றும் அடிப்படைக் கணித அறிவு, திசையமைப்பு, அறிவியல் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார். கப்பலில் பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
* கப்பல், கடல், காற்று மாறுபாடுகள் குறித்த பல விஷயங்களைப் படித்தும், பிறரிடம் கேட்டும் விரிவாக அறிந்து அவற்றில் வல்லவரானார்.
1755-ல் ராயல் நேவியில் ஒரு சாதாரண மாலுமியாகச் சேர்ந்தார். அடுத்த ஆண்டே போர்க்கப்பலுக்குத் தலைமை தாங்கிப் போரில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.
* போரில் சமயோசிதமாகச் செயல்பட்டுப் பல உயிர்களைக் காத்ததால் மிகவும் பிரபலமடைந்தார். பிறகு கடற்கரையை சர்வே செய்து, வரைபடம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டார்.
1766-ல் ராயல் சொசைட்டி, பசிபிக் பெருங்கடலில் பயணம் மேற்கொள்ள எண்டேவர் என்ற கப்பலைத் தேர்ந்தெடுத்து, குக்கின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி வைத்தது.
* பயணம் 1768-ல் தொடங்கியது. பசுபிக் பெருங்கடலில் உள்ள டெஹீட்டி தீவைச் சென்றடைந்தார். அங்கு வீனஸ் கிரகம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
1771-ல் வெற்றிகரமாக அந்தப் பயணம் முடிவடைந்து நாடு திரும்பிய இவர் கமாண்டராகப் பதவி உயர்வு பெற்றார். மீண்டும் அடுத்த ஆண்டே ஆஸ்திரேலியாவைக் கண்டறிவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
* ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைக் கண்டறிந்து, அதற்கு ‘நியூ சவுத் வேல்ஸ்’ எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானது என்றார்.
பசிஃபிக் பயணத்தில், அதற்கு முந்தைய பயணங்களைப் போல ஸ்கர்வி நோய் தாக்கி மாலுமிகள் யாரும் இறக்கவில்லை என்பதைக் கண்டார். இந்தப் பயணத்தின்போது, வைட்டமின் சி கொண்ட சிட்ரஸ் செறிந்த பழங்களைச் சாப்பிட்டதால் அவர்களை இந்த நோய் தாக்கவில்லை என்பதையும் ஆராய்ச்சியில் கண்டார்.
* இவரது யோசனைப்படி கப்பல் ஊழியர்களுக்கு எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறு, முட்டைகோஸ் ஆகிய உணவு வழங்கப்பட்டதால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தனர்.
* எவ்வளவு தடைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் பயணங்கள் மேற்கொண்டார். இங்கிலாந்தின் எதிரிகள்கூட இவரை, ‘மனித குல நண்பர்’ என்றே கருதினர்.
இரண்டு முறை கடலில் உலகை வலம் வந்துள்ளார்.
* வட அமெரிக்காவின் பல தீவுகளைக் கண்டறிந்தார்.
தான் கண் டறிந்த இடங்களைக் குறித்து நிறைய புத்தகங்களையும் எழுதினார். புதிய ராணுவத் தளங்களை அமைக்க நல்ல இடங்களையும், பசிபிக், அட்லாண்டிக் இடையே புதிய வழித்தடங்களையும் கண்டறிந்தார்.
* வேறு எந்த கடற்பயணிகளையும்விட மிக அதிகமான இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டவரும் அவற்றை வரைபடமாக வரைந்து சாதனை படைத்தவருமான ஜேம்ஸ் குக் தனது 53 வது வயதில் 1779 பிப்ரவரி மாதத்தில் ஹவாய் தீவுவாசிகளுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார்.
=======================================================================================