மழைக்கால விபத்துகளை சமாளிக்க....

மழைநேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்துகள் மட்டுமல்ல... இதுபோன்ற மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. 

இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு அரசால், என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...

 மக்களிடம் எந்த மாதிரியான விழிப்புஉணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... 
திடீரென ஒருவருக்கு ஷாக் அடித்து, விபத்து ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவி அளிக்க வேண்டும்...

 அந்த சந்தர்ப்பத்தில் என்னவெல்லாம் செய்யக் கூடாது?... 
சாலையில், அறுந்து கிடந்த மின்கம்பிகளைக் கண்டால் உடனடியாகப் பக்கத்திலிருக்கும் மின்சார அலுவலகத்தில் போய் புகார் கொடுக்க வேண்டும் . 

புறநகர்ப் பகுதிகளில், தலைக்கு மேல் செல்லும் மின்சார வயர்களில் உரசிச் செல்லும்படியான கொடிகளில் ஈரத்துணிகளைக் காயப்போடக் கூடாது. 
கேபிள் பாக்ஸ், பில்லர் பாக்ஸ்களைப் பெரும்பாலும் உயரமாகவே இருந்தாலும் தண்ணீர் தேங்கியிருக்கும் நேரங்களில் பில்லர் பாக்ஸ்களின் அருகே யாரும் செல்லக் கூடாது. 

அதேபோல் தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு பில்லர் பாக்ஸின் உயரத்துக்கு வந்துவிட்டால், உடனடியாக அருகில் இருக்கும் மின்சார அலுவலத்தில் தெரிவிக்க வேண்டும். 
 பில்லர் பாக்ஸின் உயரத்தை மேலும் உயர்த்திக் கட்டிவிடுவார்கள்.
பழைய வீடுகளில், மழையின்போது சுவரில் ஈரம் பரவியிருக்கும். 

அப்படி ஈரம் பரவியிருக்கும் சுவர்களின் அருகில் இருக்கும் ஸ்விட்ச் பாக்ஸைத் தொடக் கூடாது. ஈரம் காய்ந்த பின்னரே அதைத் தொடவோ பயன்படுத்தவோ வேண்டும். 

ஈரக்கையுடன் ஸ்விட்ச் சை ஆன் -ஆஃப் செய்யக் கூடாது. 

அதேபோல் மாடியிலிருந்து உடைகளோ வேறு ஏதேனும் பொருள்களோ பறந்து கையால் எடுக்க முடியாத இடங்களில் விழுந்துவிட்டால் அதை  மரக்கம்புகளை வைத்தே எடுக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் இரும்புக் கம்பி, மற்றும் மின்சாரம் பாயக்கூடிய பொருட்களைக் கொண்டு எடுக்கக்வே  கூடாது.
மின்சாரம் தொடர்பான எந்தப் புகாராக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மின்சார அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும் .அல்லது  1912 என்கிற புகார் எண்ணுக்கு அழைத்தும் புகார் விபரங்களைத்  தெரிவிக்கலாம்.
மின்சார விபத்துகள் ஏற்பட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும்?

"யாருக்காவது ஷாக் அடித்துவிட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக `சி.பி.ஆர்' (Cardiopulmonary resuscitation) என்று சொல்லப்படும் இதயம் மற்றும் சுவாச இயக்க மீட்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். 

அதாவது விபத்துக்குள்ளானவரை சமதளத்தில் படுக்கவைத்து, ஒரு கைக்குட்டையை அவர் வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊதி, உள்ளும் புறமுமாக இழுக்க வேண்டும். 

அதே நேரத்தில், மார்பின் இடது பக்கம் நன்றாகக் கையை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்..
இதைப் பற்றித் தெரியாதவர்கள், 108 அல்லது 104 ஆகிய இரண்டு எண்களுக்கு அழைத்தால். அவர்கள் முதலுதவிக்கான வழிமுறைகளைச் சொல்வார்கள். 

அதைச் சரியாகப் பின்பற்றினாலே போதும்... பாதிப்பு குறைந்துவிடும்.
மின்சாரத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளான நபராக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது. 

108 ஆம்புலன்ஸை வரச்சொல்லி, அதில் கூட்டிச் செல்லலாம். 
108 ஆம்புலன்ஸில் உதறல்நீக்கி (Defibrillator) கருவி மற்றும் முதலுதவிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன."
ஷாக் அடித்த உடனே என்னெவெல்லாம் செய்யக் கூடாது.?

"மின்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மயக்கநிலையில் இருந்தால் அவர்களுக்கு வாய்வழியே எந்த ஆகாரமும் கொடுக்கக் கூடாது. 
அப்படிக் கொடுத்தால், அது நேரடியாக நுரையீரலுக்குச் சென்றுவிடும். 

சாதாரணமாக இருக்கும்போது, நுரையீரலுக்குத் தண்ணீர் சென்றால் புரையேறி இருமல், தும்மல் மூலமாக நீர் வெளியேறிவிடும்.
ஆனால், மயக்கநிலையில் இருப்பவர்களுக்குப் புரைக்கேறாது. 
அதனால் தண்ணீர் வெளியேறாமல் நுறையீரலுக்குச் சென்றுவிடும். தண்ணீர் அதிகமாகச் சென்றால் நிமோனியா ஏற்படுவதற்குக்கூட வாய்ப்புள்ளது.

 ஆனால், அரை மயக்கமாக (Semi conscious) உமிழ்நீரை உள்ளிறக்கக்கூடிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு மோரில் உப்புப் போட்டுக் குடிக்கக் கொடுக்கலாம். 
பின்னர் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
சிலருக்குப் பாதிப்பு வெளியில் தெரியாது. 
அதனால் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. உள்ளுக்குள் பாதிப்பு இருக்கும். 
எனவே, மருத்துவரை அணுகி சிகிச்சைஎடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
நமக்கு அருகில் யாரையாவது மின்சாரம் தாக்கிக்கொண்டிருந்தால் அவர்களை நாம் கைகளால் தொடக் கூடாது. 

முதலில் மெயின் ஆஃப் செய்துவிட வேண்டும். 

பின்னர், ஷூ, செருப்பு அணிந்து மரத்தால் ஆன கட்டையால் அவர்களின் கையைத் தட்டிவிடலாம்.
இதற்காக அவர் மீது வாரணாசி நீதிமன்றத்தில், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கும் முயற்சி நடைபெறுகிறது. பாஜகவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன், புதிய தலைமுறை தொலைக்காட்சியில், குஷ்புவின் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்ததை நினைவு படுத்துகின்றார். அதாவது கமல் மீதும் பல ஊர்களில் வழக்குத் தொடரும் எண்ணம் உள்ளது என்ற உண்மை வெளிவந்துள்ளது.
வீட்டில் என்றால் மெயின் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது என்று தெரியும். 
சாலைகளில் எங்கே இருக்கிறது என்பது தெரிய வாய்ப்பில்லை. 
எனவே, ஏதாவது மரத்தால் ஆன பொருள்களைக்கொண்டு மீட்கலாம். 

தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும்போது ஒருவர் மின்சாரத்தாக்குதலுக்கு உள்ளானால், அவசரப்பட்டு தண்ணீரில் இறங்கி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது.
தண்ணீர் முழுவதும் மின்சாரம் இருக்கும். 

எனவே, தூரத்தில் இருந்தபடிதான் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்.அவர் செயல்படும் நிலையில் இருந்தால் உதவுவதற்கு மரக்கம்புகளை நீட்டி அவரை அதைப்பற்றி வெளியே வரவைக்க முயற்சிக்கலாம்.
====================================================================================

 தீவிரவாதி கமல்ஹாசன்?

ஆனந்தவிகடன் வார இதழில், கமல்ஹாசன் ஒரு தொடர் எழுதி வருகின்றார். 
அதில் இந்தவாரம், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் விடுத்துள்ள விடை ஒன்றில், “எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. 
அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தாண்டி, கமல், தீவிரவாதிகளின் ஆதரவாளர் ஆகிவிட்டார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். கமலே ஒரு தீவிரவாதி, அவரைக் கைது செய்யுங்கள் என்று சொல்லும் அடுத்த கட்டத்திற்கு பாஜகவினர் சென்றாலும் வியப்படைய ஒன்றுமில்லை.
உண்மையில், கமலின் விடை சரியான அழுத்தம் உடையதாக இல்லை என்றே கூற வேண்டும். ஏதோ இப்போதுதான், இந்துமத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகள் ஆகியுள்ளது போல அவர் சொல்லியிருக்கிறார். 
அதற்கே அவர்கள் தாண்டிக் குதிக்கின்றனர். 
வன்முறையில் மட்டுமே நம்பிக்கை உள்ள மத அடிப்படைவாதக் குழுக்களே அவர்களிடம் மிகுதி. அன்று தொடங்கி இன்று வரையில் வன்முறையில் வளர்ந்தவை தான் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள். 
பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள் இவற்றைத் தாண்டி, பகல்பூர், மாலேகான் குண்டுவெடிப்பு, மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற தவறான தகவலின் அடிப்படையில் ஒரு பெரியவரை அடித்தே கொன்றது என ஆயிரம் எடுத்துக்காட்டுகள் உள்ளன.
நரேந்திர தோபால்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகிய நான்கு எழுத்தாளர்களைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிகள் எவை? 
தமிழ்நாட்டில், மண்டைக்காடு கலவரத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கு இருந்தது என்பதை நீதிபதி வேணுகோபால் குழு வெளிப்படையாகவே சுட்டியிருந்தது.

இவ்வாறு, இந்துமத அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் ஊரறிந்த ஒன்று. இதற்கும், தங்களை இந்துக்கள் என்று கருதிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
 அதே போலத்தான், குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் யாரோ ஒரு சில இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 
ஆனால் அங்கே மட்டும் சற்றும் கூசாமல், ‘இஸ்லாமியத் தீவிரவாதம்‘ என்னும் தொடரைப் பயன்படுத்துகின்றனர்.
சரி, இப்போது கமலை ஏன் மிரட்ட முயல்கின்றனர்? 
இது கமலை மிரட்டுவதன்று. 
கருத்துரிமையை மிரட்டுவது. 
யாரும் எங்களைப் பற்றிப் பேசிவிடக் கூடாது. 
திரைப்படத்தில் கூட, ஜி.எஸ்.டி வரியைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்னும் சர்வாதிகாரப் போக்கே இது.
பா.ஜ.க.வின் இந்தப் போக்கை, அவர்ளுக்கு ஆதரவாக இருந்தவர்களே இன்று புரிந்து எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்பு வரை ஆதரவான கருத்துகளை எழுதிய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, “மோடியின் சர்வாதிகாரப் போக்கை” இப்போது கண்டித்துள்ளார். சென்ற தேர்தலில் அவர்களுக்காக வாக்குகளைக் கேட்ட மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி, தன் செய்கைக்காக மக்களிடம் இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

அடக்கி ஒடுக்கி அனைவரையும் அடிபணிய வைத்துவிடலாம் என்னும் காலம் மலையேறிவிட்டது. அடிக்க அடிக்கப் பந்து எழும் என்பதுதான் அறிவியல். 
அதனை அவர்கள் உணர வேண்டும். 
நமக்குள் இருக்கிற சிற்சில வேறுபாடுகளை மறந்து, பாசிசத்திற்கு எதிராகவும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் நாடு பிழைக்கும் என்பதை ஜனநாயகவாதிகளும் உணர வேண்டும்.
                                                                                                                                                                                                                                                                                                         சுப.வீரபாண்டியன்
                                                                                                                            கருஞ்சட்டைத் தமிழர்      
====================================================================================
ன்று,
நவம்பர்-05.

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்(1870)
  • ஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்(1895)
  • கொலம்பியா ஐநா.,வில் இணைந்தது(1945)
  • இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)
====================================================================================
காஷமீர் படங்கள்.
ஆர் எஸ் எஸ் சின் கோல்மால் வேலைகள்

வெள்ள மீட்பில் ஈடுபட்டதா ஆர்.எஸ்.எஸ்- கொதிக்க வைத்த ஃபோட்டாஷாப் படம் 
==============================


சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவுவதாக வெளியான புகைப்படத்தால் கொந்தளிக்கின்றனர் 

சமூக ஆர்வலர்கள். காஷ்மீர் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை 

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போலியாக பதிவிடுவதாக கொந்தளிக்கின்றனர். வடகிழக்குப் பருவமழையைவிடவும் வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

நேற்று சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய பா.ஜ.க நிர்வாகிகள் தகவல் ஒன்றை வெளியிட்டனர். 

மழை பாதிப்பு மீட்பு பணிகளில் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் ஈடுபடும் படத்தை வெளியிட்டு, சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதிபலன் பாராமல் சேவை செய்யும் ஸ்வயம் சேவகர்கள்! 

ஜெய் ஸ்ரீ ராம்' என பெருமிதப்பட்டுக் கொண்டனர். இந்தத் தகவலை பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் ஷேர் செய்து கொண்டிருந்தனர். 
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், இதுபோன்ற தேவையற்ற செய்திகளைப் பரப்பாமல் இருப்பதே மக்களுக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய சேவையாக இருக்கும். 
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் 

இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிபலன் பாரா சேவை எனப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஆனால், இவர்கள் பதிவிட்டுள்ள படம் காஷ்மீர் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. 

காஷ்மீரை சென்னையாக உருமாற்றியுள்ளனர். காஷ்மீரில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்கள் யாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் அங்குள்ள பண்டிட்கள்.


இதுபோன்ற செய்திகள் மூலம் மக்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவையை வெளிக்காட்ட முயல்கின்றனர். இதனால் அவர்களுக்குக் கெட்ட பெயர்தான் ஏற்படுமே தவிர, மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை உருவாக்காது என்றார் . 
                                                                                                                                    நன்றி:ஒன்  இந்தியா 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?