கொடுமைக்குப் பெயர் அன்பு?

நடிகர் சசிகுமார் மைத்துனர் அசோக்குமார் தற்கொலைக்கு பின் கந்து வட்டி சினிமா வட்டிக்கடைககாரர்  அன்புச்செழியன் மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.
இதற்கு முன் அன்பு செழியனின் கந்துவட்டி கொடுமை காரணமாக 2003ல், இயக்குனர் மணிரத்தினத்தின் சகோதரர், ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை  செய்து கொண்டார்.

அப்போது ஜி.வி குடும்பத்தினர் இவர் மீது குற்றசாட்டு செய்யாததால் சின்ன பரபரப்புடன் அன்பு செழியன் கொடுமைகள் மறைக்கப்பட்டன.
அதற்கு அதிமுகவில் இவருக்கிருந்த செல்வாக்கும்,பல அமைச்சர்களின் கருப்பு இவரிடம் சுழற்சிக்கு விட்டப்பட்டதுமே கரணம்.
அதன் பிறகு அன்புச்செழியனின் அட்டகாசம் அதிகரித்து விட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதிதான் அன்புச்செழியன் பூர்வீகமாம்  . 
பல ஆண்டுகளுக்கு முன், இவரது குடும்பம், மதுரை, கீரைத்துறைக்கு இடம் பெயர்ந்துள்ளது. 
1990களில் இவரது தந்தை ஒய்வு பெற்றதால் கிடைத்த பணத்தில் தண்டல்  அதாவது சிட்டைக்கு பணம்கொடுக்கும் தொழிலை ஆரம்பித்தார்.
 மதுரையில், தெருத்தெருவதாக சைக்களில் சென்று, தண்டல் வசூலித்து வந்த அன்புக்கு, சினிமா சங்க முக்கிய நிர்வாகி ஒருவரின் நட்பு கிடைத்தது.அவரது உதவியால், சென்னையில் கால்பதித்துள்ளார்.
அப்போதுதான் வளர்ப்புமகன் நட்பு கிடைக்க தோட்டத்தில் தனக்கு கிடைத்த பங்கு பணத்தை அவர் பிற தொழில்கள் செய்யும் எண்ணத்தில் அன்புசெழியனிடம் கொடுக்க எந்த நேரமும் ,எவ்வளவு கேட்டாலும் பணம்கொடுக்கும் உச்சத்தை தொட்டார் அன்பு.
துவக்கத்தில், ஒன்றிரண்டு படங்கள் எடுக்க ஒன்றிரண்டு லட்சங்களை பைனான்ஸ் செய்து வந்த அன்பு பின் நாட்களில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் இவரிடம் மடைமாற்றம் செய்யப்பட  தமிழ் சினிமா துறையையே, தன் ஆளுகையின் கீழ் வரும் வகையில் வளர்ந்தார் .
தற்போது இவரிடம் பணம் வாங்கத திரைப்படத்தயாரிப்பாளரே இல்லை எனலாம்.
படம் தயாரிக்க வருபவர்களை கண்டறிந்து தானாகவே வாழ்த்தி கடனுதவி செய்வது இவரின் தொழில் இந்த அளவு வளர காரணம்.
பணம் கொடுக்கும்போதே திரும்ப கொடுக்கும் தேதியும் முடிவாக கூறி விடுவார்.தாமதமானால் ..அதன் பின் நடப்பவை கடன்பெற்றவரை தற்கொலை வரை  தூண்டிவிடும்.
இவரிடம் கடன் பெற்று தயாரித்த படத்தை இவரிடமே கொடுத்து விட்டு நிறைய தயாரிப்பாளர்கள் முகவரியே இல்லாமல் கூலி வேலைக்கு போவது சர்வசாதாரணம் என்கிறது திரைத்துறை.

அன்புச்செழியனிடம் எவ்வளவு கோடி பணம் கேட்டாலும், அரை மணி நேரத்திற்குள் கொடுத்து விடுவார். அதுதான் பல தயாரிப்பாளர்களை இவர் பிடிக்கு தள்ளிவிட்டுள்ளது.
ஆனால் அந்த தொகையை அவர் வட்டியுடன் வசூலிக்கும் விதம்  'திகில்' நிறைந்தது. 
கொடுத்த கடன் தொகையை விட, மூன்று மடங்கு சொத்துக்குரிய ஆவணங்களை பெற்றுக் கொள்வார்.

வெற்றுக் காசோலை, வெற்று புரோ நோட்டுகளில் கையெழுத்து வாங்குவது பணம் தாமதமானால் அந்த சொத்துக்களை தனக்கே விற்று விட்டதாக ஆவணத்தில்  எழுதி சொத்துக்களை கையகப்படுத்திக்கொள்வது என்ற தடாலடி தாதாத்தனம்  இவரது.

குறித்த நாளுக்குள் வட்டியுடன் பணம் தரவில்லை என்றால் கடன் வாங்கியவரின் மனைவி மற்றும் பெண் குழந்தைகளை, 'துாக்கி' விடுவதாக மிரட்டுவார்.நிறைய நடந்தும் உள்ளது.

ரவுடிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.
நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா, கோச்சடையான் படத்திற்கு அன்பிடம் பணம் வாங்கி பட்ட கஷ்டமும், தாளமுடியா ரஜினி கடனை அடைத்து மகளை மீட்டதும் தமிழ் சினிமா உலகம் கண்ட ஒன்று.

நடிகர் கமல்ஹாசனும்  தன் சொத்துக்களை அன்பிடம் அடமானம் வைத்து தான், விஸ்வரூபம் படத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. 
நடிகை ரம்பா, த்ரீ ரோசஸ் படத்திற்கு அன்பிடம் பணம் வாங்கி, திரும்ப தர முடியாததால், மதுரையில் சிறை வைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்ட தாம் .

இயக்குனர் பாலா இவரின் மதுரைக்கார நண்பராம்.அதனால்தான் நான்கடவுள் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட  அஜித்குமார் பின் நடிக்க நாட்கள் ஒதுக்காததால்  பாலா அன்பிடம் முறையிட  நடிகர் அஜித் குமார் மதுரைக்கு இவரது ஆட்களால் கொண்டுவரப்பட்டு அறையில் அடைக்கப்பட்டு தாக்கப்பட்டாராம்.
ஆனாலும் அப்படத்துக்கேற்ப அஜித்துக்கு முடி நீளமாக வளராததால் அவர் நீக்கப்பட்டு ஆர்யா நடித்தார்.

நடிகை தேவயானி, காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என, பட்டியல் நீள்கிறது. 
அதில், வட மாநிலத்தை சேர்ந்த, நகை கடை நடத்துவோரும் அடக்கம்.
பணம் தராத தயாரிப்பாளர் அல்லது அவரது மனைவி கொண்டுவரப்பட்டு அறையில் நிர்வாணமாக அடைத்து வைத்து மிரட்டுவதுதான் அன்புசெழியனின் அன்பான செயல்களம்.
வெற்றிவிழா பட உரிமையிலும்,நாயகன் ,அக்னி நட்சத்திரம்  தயாரிப்பிலும் தான் எதைத்தொட்டாலும் வெற்றி என்று மகிழ்ந்து இருந்த ஜிவி "தளபதி"படத்துக்கு அதிகமாக பணத்தை வாரி இறைத்து அன்புவின் தயவுக்கு ஆளாக வேண்டிய நிலை .தளபதி வருமானம் குறைவு.அன்பு கடனை அடைக்க இயலவில்லை.அடுத்தடுத்து தயாரித்த படங்களும் பணத்தை அள்ளாததால் ஜிவி நிலை இறங்கியது.தூக்கில் முடிந்தது.
வெற்றி விழா படம் விநியோகத்தில் ,நாயகன் பட வெற்றி நேரத்தில்தான் ஒரு கோடி ரூபாயை வருமானவரிக்காக ஒரே காசோலையில் கொடுத்து திரையுலகிலும் ,டகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார்.


ஜிவி இவரின் மிரட்டலால் காவல்துறைக்கு புகார் கொடுத்ததால் அது தெரிந்து ஊட்டியில் சுற்றுலாவில் இருந்த  அவரது மனைவியை கடத்தி அன்பு பாணியில் மிரட்டியதால்(அதுவரை பதிவே ஆகாத ) புகாரை ஜிவி திரும்பப்பெற்றார்.

அவர் மனைவி திரும்பி வர அவமானம் தாளாமல் ஜிவி தூக்கில் தொங்கினார்.குடும்பத்தினர் மேலிட அறிவுறுத்தலால் அன்பு மீது குற்றம் சாட்டாமல் ஒதுங்கியதாம்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சியாளர் களை எப்படியோ வளைத்து விடுவார். 
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என, அவரது நட்பு வட்டம் விரிவடையும். 
2001ல், மறைந்த முதல்வர், ஜெ.,வின் வளர்ப்பு மகனாகவலம் வந்த,சசிகலாவின் அக்கா மகன், சுதாகரனின் நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார்.அவரின் பணமும் இவரிடம் சுழற்சியில் உள்ளதாம்.

தி.மு.க., ஆட்சியில் அழகிரியின் ஆதரவாளர் என தன்னை காட்டிக் கொண்டார். 

அழகிரியின் மகன், துரை தயாநிதி சினிமா பட தயாரிப்பு நிறுவனம் துவங்கியபோது, அன்பு பக்கபலமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மதுரையில், 2014ல், ஜெ., பிரசாரம் செய்தபோது, தன்னை, அ.தி.மு.க., வை சேர்ந்தவர் போல் அடையாளப் படுத்திக் கொண்டார். 
சொந்தமாக படங்களும் தயாரிக்க துவங்கினார். சில ஆண்டுகளுக்கு முன், மதுரையில் உள்ள, அன்பு வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். 
அசோக்குமாரை தற்கொலைக்கு துாண்டியதாக,அன்பு மீது, வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 
அவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, சினிமா துறையினர், கோரிக்கை விடுத்துள்ளனர். 
அன்பைக் கைது செய்ய, மூன்று தனிப்படைகள் அமைத்து, அவரை தேடி வருகின்றனர்.

 தி.நகர், ராகவையா சாலையில் உள்ள, அன்பின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் தேடினர்; அவர்தலைமறைவாகி உள்ளார். மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் மதுரைக்கும் விரைந்துள்ளனர்.

அசோக்குமார் வீட்டில் சிக்கிய கடிதத்தில், இருப்பது அவரது கையெழுத்து தானா; அவரது மொபைல் போன், லேப் - டாப்பில் ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என, கண்காணிப்பு கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில், அன்பு கைது செய்யப்படுவார் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


மதுரை, துரிசங்குளத்தை சேர்ந்த, தங்கராசு என்பவர், 'யுவஸ்ரீ பிக்சர்ஸ்' என்ற பெயரில், சினிமா பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அவர், சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தையும் தயாரித்தார். அதை தொடர்ந்து, மீசை மாதவன் என்ற படத்தை தயாரிக்க, அன்பிடம், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதற்கு ஈடாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை தங்கராசு கொடுத்துள்ளார்.

வட்டியுடன், கடன் தொகை முழுவதையும் தங்கராசு செலுத்திய பின், கந்து வட்டி கேட்டு, அன்பு மிரட்டி உள்ளார். அவரது சொத்தை, வேறு ஒருவருக்கு விற்றது போல், எழுதி வாங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தங்கராஜ், 2004ல், மதுரை புறநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அப்போது, மதுரை, எஸ்.பி.,யாக இருந்த, அஸ்ரா கார்க், அன்பை கைது செய்து, பாடம் புகட்டினார்.


ஆனால் இப்போது, சில உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆதரவு, அன்புக்கு உள்ளதால், லேசான நடவடிக்கை மட்டுமே இருக்கும் என்றும், போலீஸ் வட்டாரத்திலேயே தகவல் கசிகிறது.

அசோக்குமார் எழுதி வைத்ததாக வெளியான கடிதம், உண்மையிலேயே அவர் எழுதியது தானா' என, அன்புச்செழியனின், 'கோபுரம் பிலிம்ஸ்' நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து, 'கோபுரம் பிலிம்ஸ்' மேலாளர், முரளி வெளியிட்ட அறிக்கை:அசோக்குமார் எழுதி வைத்ததாக வெளியான கடிதம், உண்மையிலேயே அவர் எழுதியது தானா; நாங்கள், அசோக்குமாருக்கு, எந்த பணவரவு செலவும் செய்யவில்லை. 

படம் தயாரிக்க, எங்களிடம், சசிகுமார் தான், பணம் பெற்றுள்ளார். 

எந்த தொடர்பும் இல்லாத அசோக்குமார், எங்களை குறித்து கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது ஆச்சரியம்.சினிமா நடைமுறையில், எந்த முதலீடும் இல்லாமல், சிலர் படம்தயாரிக்க வருகின்றனர். எங்களிடம் பணம் உதவி பெறுகின்றனர். பலரிடம் பணம் வாங்கி விட்டு, படத்தை தயாரிக்காமல், சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். பின்னர், எங்களையும் சிரமப் படுத்து கின்றனர். இப்படி, சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, ஒரு கும்பல் மோசடி செய்கிறது.
நாங்கள், 20 ஆண்டுகளாக, சினிமாவில் தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல், எந்த புகாரும் இல்லை. அசோக்குமார் எழுதியதாக சொல்லப்படும் புகாரில், எள்ளளவும் உண்மை இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வளவு பரபரப்பிலும் காவல்துறை அன்புசெழியன் மீது கந்து வட்டி அல்லது  தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை கூட  பதிவு செய்யவில்லையாம்.
காரணம் ஆளுங்கட்சி தலையீடாம் .காவல்துறை மேலிட்டவாளர்களும் அன்புசெழியன் ஒழுங்கக கப்பம் கட்டுபவர் என்பதால் கடமையை செய்ய முனங்குகிறதாம்.
வாய்மையே வெல்லும் என்ற வார்த்தைகளை இனியும் இந்த அரசு பயன்படுத்த வேண்டுமா என்பதை யோசிக்கலாம்.

======================================================================================
ன்று,
நவம்பர்-23.


  • கவிஞர் சுரதா பிறந்த தினம்(1921)

  • முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது(1936)

  • அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது(2007)

=======================================================================================
தோழர் சுகுமால்சென்.
இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவருமான தோழர் சுகுமால் சென், புதனன்று கொல்கத்தாவில் காலமானார். 
கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த தோழர் சுகுமால்சென் செவ்வாயன்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி புதனன்று காலை மரணமடைந்தார்.
தோழருக்கு வயது 83. 
தோழர் சுகுமால்சென் இளம்வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தவர். 1952ம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். 
பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை கிடைக்கப்பெற்ற அவர் அரசு ஊழியர் இயக்கத்தின் மாபெரும் தலைவராக உயர்ந்தார். 
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் அவர். சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக 1982ம் ஆண்டு முதல் 2008 வரை சுகுமால் சென் செயலாற்றினார்.
அவரது இறுதிமூச்சு வரை அமைப்பின் துணைத் தலைவராக செயலாற்றினார்.இந்திய தொழிற்சங்க இயக்க வரலாற்றில் தோழர் சுகுமால் சென்னுக்கு மிக முக்கிய இடமுண்டு. சிஐடியுவின் துணைத் தலைவராக நீண்டகாலம் செயல்பட்ட அவர், தற்போது வரை சிஐடியு தேசிய செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளராகவும் தொடர்ந்தார்.
சர்வதேச தொழிற்சங்க இயக்க வரலாற்றிலும் தோழர் சுகுமால் சென்னுக்கு தனிப்பட்ட இடம் உண்டு. பொதுச்சேவைகள் தொடர்பான சர்வதேச தொழிற்சங்க இயக்கத்தின்பொதுச் செயலாளராக 1996 முதல் 2009 வரை அவர் செயல்பட்டார். 
பல்வேறு நாடுகளில் செயல்படும் அரசு ஊழியர் இயக்கங்களின் பணிகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
தோழர் சுகுமால் சென், ஓர் உறுதிமிக்க மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ஆவார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக நீண்டகாலம் செயலாற்றிய அவர், கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில்மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
அந்த அடிப்படையில் தனது இறுதிமூச்சுவரை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் அவர் இருந்தார்.தொழிற்சங்க இயக்கத்தில் தத்துவார்த்த ரீதியாகவும், தொழிலாளி வர்க்கத்தை சரியான அரசியல் புரிதலோடு எப்படி அணுகுவது என்பது குறித்தும் உறுதியான சிந்தனைகளும் செயலும் கொண்டவர் அவர்.
 தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்கள் வாயிலாக தொழிற்சங்க இயக்கத்திற்கு உறுதியான தத்துவார்த்த நிலைப்பாட்டை போதித்தவர் அவர்.
ஆளும்வர்க்க கொள்கைகளை அம்பலப்படுத்தி, அவற்றோடு எந்தவிதத்திலும் தொழிலாளி வர்க்கம் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்பதை உறுதியாக வலியுறுத்தியவர். 
“இந்திய தொழிலாளி வர்க்கம்: தோற்றம் மற்றும் இயக்கத்தின் வரலாறு” என்ற அவரது நூல், இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றை விளக்குகிற - இன்றைக்கும் பலராலும் போற்றப்படுகிற நூலாகதிகழ்கிறது. 
இந்த நூல் பல மொழிகளில் அச்சாகியுள்ளது. 
அதுமட்டுமின்றி மே தின வரலாறு, சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாறு உள்ளிட்ட பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.1
982 முதல் 1994 வரை சுகுமால் சென், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு, இந்திய உழைக்கும் வர்க்க மக்களுக்காக ஓய்வின்றி உழைத்தவர்.
தோழர் சுகுமால்சென்னுக்கு வீர வணக்கம்.
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.