குழப்புகிறாரா? குழம்புகிறாரா?
திரை நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதை காட்சி ஊடகங்கள் கொண்டாடி தீர்த்தன.
ஏதோ பெரிய பிரளயமே ஏற்பட்டுவிட்டதுபோல ஆடித்தீர்த்தன ஊடகங்கள். வழக்கம் போலகருத்து விவாதங்களும் களைகட்டின.
அச்சு ஊடகங்களும் வஞ்சகமில்லாமல் இந்த செய்தியைமுக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.
தனது ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் அரசியல் பிரவேசம் குறித்து பேசுவதும், அதன் பிறகு படப்பிடிப்பில் ஈடுபடுவதையும் ரஜினி ஒரு விளம்பர உத்தியாக பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது தொடர்ச்சியாக விவாதிக்கப்படும் ஒரு பொருளாகவே இருந்து வருகிறது.
இந்த விவாதச்சுவடு ஆறிவிடாமல் இருக்க அவரும் அவ்வப்போது குழப்பமான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்.
அவர் சொல்லும் குழப்பங்களுக்கு பொழிப்புரை எழுதுவதற்கென்றே சிலர் இருப்பார்கள். இப்போதும் அதுதான் நடக்கிறது.
சாதி,மதச்சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியலை கொண்டு வரப்போவதாக ரஜினி கூற இதுதான் காந்தியப் பாதை என்று புல்லரித்துப்போகிறார் தமிழருவி மணியன்.
மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் போதகர் குருமூர்த்தி ரஜினியின் அரசியல் வருகை 60 ஆண்டு கால உறைந்துபோன திராவிட இயக்கஅரசியலுக்கு முடிவு கட்டும் என்றும் மோடியை நெருங்கி வந்துவிட்டார் ரஜினி என்றும் ஆருடம்கூறுகிறார்.
தமிழிசையோ பாஜகவுடன் ரஜினி கூட்டணி வைப்பார் என்று தனது ஆசையை வெளியிட்டிருக்கிறார்.
ஒரு பிரபலமான நடிகர் என்கிற முறையில் ரஜினியின் அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும் அவரிடம் எது குறித்தும் தெளிவான பார்வை இல்லை என்பதே அவருடைய பேச்சில்வெளிப்பட்டுள்ளது. சிஸ்டம் சரியில்லை, ஜனநாயகம் கெட்டுவிட்டது என்று கூறுகிறார்.
ஆனால்எதுகுறித்தும் தன்னுடைய அடிப்பொடிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவேண்டாம். போராட வேண்டாம் அதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறதுஎன்கிறார்.
போராடாமல் எந்த சிஸ்டத்தை இவர் சரிசெய்யப்போகிறார் என்று தெரியவில்லை.
இந்தியாவும், தமிழகமும் சந்திக்கிற பிரச்சனைகள் குறித்து ரஜினி எதுவும் கூறவில்லை. போர்வருகிறபோது பார்த்துக் கொள்ளலாம் என்றுமீண்டும் கூறுகிறார்.
இவரின் திரையுலக போட்டியாளர் கமல்ஹாசன் அரசியலில் முன்பே தனது கருத்துக்களை அவ்வப்போது தைரியமாக வெளிட்டு வந்தார்.முன்னாள் பிரதமர் நரசிம்மராவுடன் நேரடியாகவே மோதியுள்ளார்.
ஆனால் ரஜினியோ அவ்வப்போது அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களுடன் நெருங்கி பழகுவதும்,புகழ்வதுமாகத்தான் இருந்துள்ளார்.
ஆண்டவனால் கூட ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்றவர்.அடுத்து ஜெயலலிதா முதல்வரானதும் தைரிய லட்சுமி,வீர லட்சுமி என்று பாசுரம் பாடினார் .
கமலஹாசன் அடித்தட்டு மக்கள்,நடுத்தரமக்கள்,விவசாயிகள் பிரசனைகளை கையிலெடுத்து தைரியமாக கருத்துக்களை முன்வைத்து ஆட்ச்சியாளர்களை பல கேள்விகளை கேட்கிறார்.
ரஜினி இதுவரை மக்கள் நலன் தொடர்பாக ஆட்சியாளர்களை ஏதாவது கேட்டுள்ளாரா?
40கோடிகளுக்கு மேல் கல்ஹாசன் தனது ரசிகர் நற்பணிமன்றங்களுடன் இணைந்து சமூக நலப்பணிகளை செய்துள்ளார்.
ரஜினி தனது காசில் செய்த மக்கள் பணி ஒன்றையும் குறை முடியாது என்பதுதான் உண்மை.ஆங்காங்கே அவரது ரசிகர்கள் தங்கள் கைக்காசில் செய்த பணிகள் மட்டுமே உண்டு.
நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். இவர் எதுகுறித்தும் பேசமாட்டாராம். ஆனால் தமிழக மக்கள் எப்போது வாய்திறப்பார் என்று ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம்.
அவர் தனது கொள்கைகளை தெளிவுப்படுத்தும் போதே அவரது பாதை எது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் புகைப்படம் எடுக்கும் ஆர்வக்கோளாரில் வந்தவர்களைப் பார்த்து இவருக்கும் ஆர்வக்கோளாறு வந்து விட்டது என்று சிலர்கூறுவதை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. எம்ஜிஆர் காங்கிரசில் பிறகு திமுகவில்இருந்து அதன்பின்னர்தான் அதிமுகவை துவக்கிஆட்சியையும் பிடித்தார்.
அரசியலில் அவருக்கு நீடித்த தொடர்பு இருந்தது.
எல்லோரும் எம்ஜிஆர்ஆகிவிட முடியாது ,அரசியலில் குதித்து தனிக்கட்சி துவக்கி காணாமல் போனவர்களும் உண்டு.அப்படி ஆனவர்தான் சிவாஜி கணேசன்.
அதேபோல் திரையில் மின்னி அரசியலில் ஒளி காணாமல் போனவர்கள் பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,என்று ஒரு பட்டியலே உண்டு.
ஆனாலும் ரஜினி கைக்காசை செலவிடா எச்சரிக்கையாளர் .சட்டமன்றத்தேர்தலுக்கு முன்னரே வரும் மக்கலவைத்தேர்தலை ஒதுக்கி விட்டார்.அதற்குள் அவரின் படங்கள் காலா,2.0 வந்து விடும்.அதன் பின் ஏதாவது வட்டம் கைவசம் இருந்தால் மட்டுமே அடுத்த அரசியல் குரல் அவரிடமிருந்து வரும்.
அதுவரை ஊடகங்கள் ஓய்வெடுப்பதே நல்லது.
அப்படி எடுக்காமல் காலா,2.0 வரும் வரை இந்த பரபரப்பை வைத்து படங்களை சந்தைப்படுத்தும் பணி அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.அதுவரை ஓய்வில்லாமல் செய்திகளும்,விவாதங்களும் தொடரலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லாமே சுட்டதுதான்?
நான் அரசியலுக்கு வருவது உறுதி - #கமல்ஹாசன்
நானும் அரசியலுக்கு வருவது உறுதி - #ரஜினிகாந்த்
மக்களின் குறைகளை தீர்க்க விரைவில் App - #கமல்ஹாசன்
மக்களை இணைக்க App - #ரஜினிகாந்த்
ஜனவரி இறுதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் - #கமல்ஹாசன்
அடுத்து அதானடா அதே தான்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குழம்புகிறாரா?
“நான் அரசியலுக்கு வருவது உறுதி.சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி’’ என்று ரஜினி அறிவித்த மறு நொடியே மாநில மற்றும் தேசிய அளவிலான ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு நொடிக்கு நொடி முறிப்புச் செய்திகளை வெளியிட்டன.
ரஜினி நடித்து விரைவில் வெளிவருவிருக்கிற காலா, எந்திரன் - பகுதி 2 ஆகிய திரைப்படங்களுக்கு இதனால் நல்ல விளம்பரமும் கிடைத்து விட்டது. ரஜினியின் அறிவிப்பு குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் வரவேற்றும் வாழ்த்தியும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது ஜனநாயக அரசியலின்வெளிப்பாடு.
அதேநேரத்தில் ரஜினிகாந்த் அறிவிப்பு தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு அவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும், கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்று சொல்லட்டும். அதன் பின்னர் கருத்து தெரிவிக்கிறோம்’’ என்றுஅனைத்து அரசியல் கட்சித்தலைவர் களும் சொல்லிவிட்டனர்.
எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்து அரசியலில் கொடிகட்டிப்பறந்தபோது திரைப்படத் துறையினர் பலர் அதிமுகவில் இணைந்தனர்.
அப்போது ரஜினிகாந்த் பத்துப் படங்களை கூடத் தாண்டவில்லை என்றாலும் “அபூர்வ ராகங்கள்,’’ “மூன்று முடிச்சு’’ போன்ற இரண்டு படங்கள் மூலமாக தமிழகத்தில் நன்கு அறிமுகமாகி இருந்தார்.
‘திரைப்படத்துறையை சேர்ந்த பலர் அதிமுகவில் சேருகிறார்களே நீங்களும்ஏன் சேரக்கூடாது’’ என்று அப்போது பத்திரிகையாளர்கள் ரஜினியிடம் கேட்டபோது “அரசியல் எல்லாம் எனக்கு வேண்டாம்பா’’ என்று கூறினார்.
இருப்பினும் பல வெற்றிப் படங்களுக்கு பிறகு தமிழக திரைப்படத்துறையில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என இரு துருவங் களைப் போன்று கமல், ரஜினி என்ற நிலை உருவானது. இருப்பினும் ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படம், தியானம், ஆன்மீகம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தினார். இடைப்பட்ட காலங்களில் தமிழகத்தில் எத்தனையே அரசியல் நிகழ்வுகள் நடந்தன.
சமூகத்தில் நாமும் ஒரு அங்கம்தான் என்று திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் குரல் கொடுத்தபோதும் ரஜினிகாந்த் அமைதியாக காத்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஜெயலலிதாவின் செல்வாக்கு வளர்ந்தது.
1991 மே மாதம் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார்.
1991 முதல் 1996 வரை ஒரு மன்னராட்சி போல் தமிழகம் இருந்தது. ஜெயலலிதாவை எதிர்த்து பேசுவோரும் எழுதுவோரும் தண்டிக்கப்பட்டனர்.
தராசு போன்ற பல பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு எல்டிடிஇ-யிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவரது வீடு அவர் செல்லும்பாதை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. அண்ணாசாலையில் பல இடங்களில் லெவல்கிராசிங்குகளில் உள்ள கேட்டுகள் போன்று அமைக்கப்பட்டன. இந்தகெடுபிடிகள் போயஸ் கார்டன் வரை நீடித்தது. ஜெயலலிதாவின் அண்டை வீட்டுக்காரர் ரஜினிகாந்த். இந்த கெடுபிடிகளில் சிக்கியவர் களில் அவரும் ஒருவர். இதனால் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு ஆட்சி முடியும் போது அதாவது 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக முதல்முறையாக குரல் கொடுத்தார்.
ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியால் தமிழக மக்கள் பெரும் கொடுமைக்கு ஆளாகியிருந்தநேரத்தில் ரஜினியின் வாய்ஸ் திமுகவுக்கும் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமாகா-வுக்கும் பெரிதும் உதவியதோடு அந்த தேர்தலில் அந்தக் கூட்டணி பெரும் வெற்றிபெறவும் உதவியது. மக்களின் கோப அலையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படகு சுக்கு நூறாக உடைந்தது. ஜெயலலிதாவும் தப்பவில்லை.
ஆன்மிக அரசியல் ? |
அவரும் தோற்றுப்போனார். இதன் பின்னர்தான் ரஜினிகாந்த் செல்வாக்கு பேசுபொருளானது. ஆனால் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை.
இரண்டாண்டுகள் கழித்து 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மக்களவைத்தேர்தலில் ரஜினிகாந்த் வாய்ஸ் எடுபடவில்லை. அவர் ஆதரித்த போதும் திமுக - தமாகா கூட்டணி படுதோல்வியடைந்தது. அந்தப் பின்னடைவுக்கு பின்னர் அரசியல் குறித்து மீண்டும் மவுன சாமியாராக மாறிய ரஜினி காந்த், அவ்வப்போது இமயமலைக்கு சென்று வந்தார்.
அவர் சாமியாராகப் போகிறார், அரசியலுக்கு வரமாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. இருப்பினும் அவர் நடித்து வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்திலும் குறிப்பிட்ட சில வசனங்கள் இடம் பெற்றன. அது அப்போதைய ஆட்சியாளர்களை மறைமுகமாகத் தாக்குவதைப் போலவும், இவர் அரசியலுக்கு வருவதை முன்னறிவிப்பது போலவும் இருந்ததால் படம்வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது.
தமிழகத்திற்கு வேறு எந்தவகையிலும் அந்த வசனங்கள் உதவவில்லை என்பது வேறு விசயம். ஊடகங்களை எப்போதாவது அவர் சந்திக்கும்போது எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று கேள்விக்கு “அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றில்லை. முதலமைச்சர் ஆகாமலேயே சேவை செய்யலாம்’’ என்பதே தனது பதிலாகச் சொல்லி வந்தார்.
1998 மக்களவைத் தேர்தலுக்கு பிறகுவந்த அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த்எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோபொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை.
இருப்பினும் 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தாம் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார்.
ஆனாலும் அவரது வாய்ஸ் எடுபடவில்லை. மக்களின் மனநிலையை ஒட்டி இருந்தபோதுதான் அவரது வாய்ஸ் எடுபடும் என்பதற்கு இது ஒரு சாட்சியம்.
இப்போது போன்றே 2008ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். 2010ல் எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். ஆனால் ஏதும் அறிவிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு லிங்கா பட இசை வெளியீட்டின்போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறி மீண்டும் சஸ்பென்ஸ் வைத்தார்.தற்போது 3 ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லியிருக்கிறார்.
இப்போதும் அவர் சட்டப் பேரவைத்தேர்தலின் போதுதான் கட்சி தொடங்குவேன் என்ற சொல்லியிருப்பதன் மூலம் தனது முடிவை தள்ளிப்போட்டிருக்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்துவிட்டேன் என்று இப்போது சொல்லியிருந்தால், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டி யிருக்கும்.
இன்னும் 16 மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்கவேண்டும். எனவே தான் தனது ரசிகர்களையும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்தும் மீளவேண்டும் என்பதற்காக 2021 தேர்தலை கைகாட்டுகிறார். இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டிருக்கும் பாஜக, வருமான வரி ரெய்டு என்ற பயத்தைக் காட்டி அதிமுக ஆதரவுடன் தமிழகத்தில் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிடமுடியாதா, 2019ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் அதிமுகவை மிரட்டி சீட்டுகளை கைப்பற்ற முடியாதா என்று முதலில் கணக்கு போட்டது.
ஆனால் அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் உள்ள வெறுப்பை பார்த்து இனி இந்த கட்சி தேறாது என்ற நிலைக்கு வந்திருக்கலாம்.எனவே ரஜினியை பின்னால் இருந்து இயக்கிப்பார்க்கலாம் என்று திட்டம் திட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் பலமாக எழுந்துள் ளது. காரணம் தற்போதைக்கு ஆன்மீக அரசியலுக்கு பாஜக-தான் ரஜினிக்கு தோதான தோஸ்தாக இருக்கக்கூடும்.
ஆனால் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளும் மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எனவே பாஜகவுடன் கூட்டு என்று அறிவித்தால் போணியாக மாட்டோம் என்பதை உணர்ந்துள்ள ரஜினி, குருமூர்த்தி போன்ற அரசியல் தரகர்களின் வழிகாட்டுதலில் முதலில் தனிக்கட்சி, பின்னர் பாஜக ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். “சாதி, மதவாத கட்சிகளுடன் சேர மாட்டேன்” என்று அவர் இப்போது அறிவித்திருப்பதன் உட்பொருள் பற்றி பல கோணங்களில் விளக்கமளிக்கப்படுகிறது.
ரஜினியின் நண்பர் சிரஞ்ஜிவி ஆந்திராவில் தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்து தனிக்கட்சி தொடங்கினார்.
2009 சட்டப்பேரவைத்தேர்தலில் மொத்தமுள்ள 295 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்றார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 2011ல் காங்கிரஸ் கட்சியில் தனது பிரஜா ராஜ்யம் கட்சியை கரைத்து இன்று வெறும் ஒரு நடிகராக மட்டும் அவர் இருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிரஞ்ஜிவி தீவிரப்பிரச்சாரம் செய்தபோதும் அக்கட்சி படுதோல்வியடைந்தது.
பெரும்பாலான வேட்பாளர்கள் காப்புத் தொகையையே இழந்தனர்.
சிரஞ்ஜிவிக்கு ஏற்பட்ட கதி ரஜினிக்கும் ஏற்படுமா என்பதற்காக 4 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எடுக்கப்போகும் (?) நிலைப்பாட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
நன்றி:தீக்கதிர், --அ.விஜயகுமார்
=======================================================================================
ஜனவரி-02.
- கல்கத்தா நகரம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது(1757)
- ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன(1793)
- ரயில் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன(1893)
- முதலாவது செயற்கை கோளான லூனா 1, விண்ணுக்கு ஏவப்பட்டது(1959)
நெறியாளர் : கமல் ஜெயிப்பாரா ரஜினி ஜெயிப்பாரா?
ரஜினி ஆதரவு பிரவீன்காந்த் : ரஜினி
கமல் ஆதரவு ராசிஅழகப்பன் : மக்கள் முடிவு செய்வாங்க
யார் சொல்வது சரியானது.