சாதிக்காய்,உலர் திராட்சை.


இயற்கை வைத்தியத்தில் சாதிக்காய்க்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களில் சாதிக்காய் அதிகம் விளைகிறது.

மலைச்சரிவுகளில் சாதிக்காய் மரங்கள் வளர்கின்றன. இந்த மரங்களில் மொத்தம் 80 வகைகள் இருக்கின்றன.
இதில் ஒரு வகை மரம் சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது.
பூக்கள் சிறியதாக இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கும் நல்ல மணம் வீசும். ஆண்டுதோறும் பூத்துக்காய்க்கக் கூடியது சாதிக்காய் மரம்.

பேரிக்காய் அளவிற்கு இதன் பழம் இருக்கும். பழம் நன்றாக முற்றியபிறகு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

பழத்தின் வெளிப்புறத் தொலை உடைத்தால் உள்ளே செந்நிறத்தில் சதைப்பகுதி தெரியும். இந்த சதைப்பகுதிக்கு 'சாதிப்பத்திரி' என்று பெயர்.

கொட்டையையும், அதனுள் இருக்கும் பருப்பையும் தான் சாதிக்காய் என்கிறார்கள். சாதிக்காய் மட்டுமின்றி மரத்தில் உள்ள இலைகளையும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

சூயிங்கம், மசாலாப் பொருட்கள், பற்பசை, உடலில் பூசக்கூடிய எண்ணைகள் தயாரிப்பில் சாதிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சாதிக்காய் குழந்தைகளுக்கு பயன்படும் தலைசிறந்த மருத்துவப் பொருளாகத் திகழ்கிறது.

அஜீரணக்கோளாறு, வயிற்று வலி போன்றவற்றை நீக்குகிறது.

இரத்தைத்தை சுத்தப்படுத்துவதில் சாதிக்காய்க்கு பெரும் பங்கு இருக்கிறது.

சாதிபத்திரி எனப்படும் சதைப்பகுதியை காய வைத்துப் பின்னர் பொடி செய்து உணவுப் பொருட்களுக்கு வாசனையூட்டப் பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலும் இவை பாக்குகளுடன் கலந்து தாம்பூல பொட்டலங்களாக தயாரிக்கிறார்கள்.

சாதிக்காய் சிறந்த நாட்டு மருந்து ஆகும்.
=========================================================================================
உலர் திராட்சை பழத்தின் மகிமைகள்

* உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது.

இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள்.

* எலும்புகளோடு, பற்களும் உறுதியாக அமையும்.


ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.

* வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும்.

எலும்புகள் உறுதியாக இருக்கும்,
பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது.

இதயம் பலத்துடனிருக்கும்.
இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

* குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும்.
வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.

* தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது.
பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்.
                     பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு,உழவர் தினம்,திருவள்ளுவர்                                                                               தினம் வாழ்த்துகள்.
=======================================================================================
ன்று,
ஜனவரி-14.


  • ஸ்பெயின் க்யூபாவை இணைத்துக் கொண்டது(1539)

  • திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது(1974)

  • உலகின் முதலாவது 24 மணி நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு துவக்கப்பட்டது(1996)
========================================================================================
நூற்றாண்டு காணும் உண்மைப்  புரட்சியாளர்.
தான் எந்த நிமிடமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற சூழலில் தான் அந்த மாணவர் பி.ஏ. ஆனர்ஸ் இறுதித் தேர்வுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்தார். 
ஆங்கிலேய அரசின் காவல்துறை அந்த மாணவனுடைய அரசியல் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்தது. மாணவன் தேர்வு எழுதிட அரங்கத்திற்குள் சென்றுவிட்டார். 
அவர் மீது பரிவோடு இருந்த பேராசிரியர் “உன்னைக் கைது செய்ய காவல்துறை காத்துக் கொண்டிருக்கிறது” என்ற தகவலைக் கூறினார். 
விடுதிக்குச் சென்று துணிமணிகளைக் கூட எடுக்காமல், பல்கலைக்கழகத்தை விட்டு தப்பித்து விடுவது என்றுமுடிவெடுத்து படகின் மூலம் கொள்ளிடத்தை கடந்து அங்கிருந்து திருச்சி பொன்மலையில் செயல்பட்ட தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்க அலுவலகத்திற்கு சென்றார்.
அத்துடன் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு அன்றிலிருந்து தனது முழுநேர கட்சிப்பணியை துவங்கினார். 

அவர்தான் தோழர் கே. முத்தையா! 

கைது, சிறை அனைத்தையும் எதிர்கொண்டு கட்சியின் மாவட்டச் செயலாளராக, பத்திரிகையாளராக, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக, எழுத்தாளர் சங்கத்தின்தலைவராக பன்முகப் பணிகளைச் செய்து தனது இறுதிமூச்சுவரை ஒரு மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்தார் தோழர் கே.எம்.தமிழகத்தின் முதல் தலைமுறை கம்யூனிஸ்ட் தலைவர்களான பி. ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் போன்ற தோழர்களோடு கட்சிப்பணியாற்றியவர் தோழர் கே.எம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, திருச்சிக்கு வந்த அவரிடம் சென்னைக்கு வரவேண்டும் என்ற தோழர் சுந்தரய்யாவின் அழைப்புக்கடிதத்தை தோழர் கிருஷ்ணப்பிள்ளை கொடுத்தார். 
இரண்டுமாத காலம் பரிசோதித்த பிறகு, சுந்தரய்யா அவரைசென்னையில் தென்மாநில கட்சி மையத்திலிருந்து வேலை செய்யப் பணித்தார். 
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு துவங்கப்பட்ட போது தோழர்கே.எம் 1942-1946 வரைசென்னை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.

1946ஆம் ஆண்டு மகத்தான கடற்படை வீரர்களின் எழுச்சி ஏற்பட்ட போது சென்னையில் நடைபெற்ற பேரணிக்கு தோழர்கள் ஜீவா, கே.முத்தையா, வி.பி.சிந்தன்,ஏ.எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் தலைமை தாங்கினர்.1947ஆம் ஆண்டு துவக்கத்தில் தோழர் கே. முத்தையாஉள்ளிட்ட கட்சித் தலைவர்கள் 120 பேர் பாதுகாப்புகைதிகளாக கைது செய்யப்பட்டனர். 
நாடு விடுதலையாகும் நேரத்தில்தான் இவர்கள் சிறையிலிருந்து விடுதலையானார்கள். திருச்சியில் ரயில்வே தொழிலாளியான நடேசன் அவர்களின் நான்கு மகள்கள் ராஜம், யமுனா, ஞானம், அம்பாள்ஆகிய நால்வரும் பி.புருசோத்தமன், கே.முத்தையா, டி.மாதவன், பி.ராமமூர்த்தி ஆகிய நான்கு வேறுபட்ட சாதிகளைச் சார்ந்த கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள். விடுதலையான தோழர் கே. முத்தையா ஜனசக்தி இதழில் முழுநேர ஊழியரானார். 

1948 ஆம் ஆண்டு கட்சிதடை செய்யப்பட்ட போது மீண்டும் தோழர் கே. முத்தையா இதர தலைவர்களோடு கைது செய்யப்பட்டார். 
1951 ஆம் ஆண்டு தான் விடுதலை செய்யப்பட்டார். கைதான தலைவர்களை விடுதலை செய்யக்கோரி தோழர் கே.எம்.இன் துணைவியார் யமுனா உள்ளிட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி ஒரு மாத காலம் சிறைப்படுத்தப்பட்டனர்.

1962 ஆம் ஆண்டு இந்திய - சீன எல்லையுத்தம் மூண்டபோது மீண்டும் ஏனைய தலைவர்களோடு முத்தையாவும் கைது செய்யப்பட்டு 1963ஆம் ஆண்டு விடுதலையானார். 
1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு 1964 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் தோழர் கே.எம். உள்ளிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களை கைது செய்தது.
 16 மாதங்களுக்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு தான் விடுதலை செய்யப்பட்டனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் அறிவிக்கப்பட்ட நிலையில் தீக்கதிரை நடத்தும் பொறுப்பை தோழர் கே.எம்ஏற்றார். 
துவக்கத்தில் சென்னையிலும், 1969ஆம் ஆண்டிலிருந்து மதுரையில் இருந்தும் தீக்கதிர் வெளியானது. மதுரையை தலைமையகமாகக் கொண்ட தீக்கதிர் இதழின் ஆசிரியராக பல ஆண்டு காலம் அங்கேயே தங்கியிருந்து தோழர் கே.எம். பணியாற்றினார். 
இன்று நான்குபதிப்புகளாக தீக்கதிர் வெளியாவதற்கு அடித்தளமிட்டவர் தோழர் கே.எம்.தீக்கதிர் இதழில் பணியாற்றத் துவங்கிய பிறகு தனது இலக்கிய ஆராய்ச்சிப் பணியை மீண்டும் தொடங்கினார். பல நூல்கள் எழுதினார். 

‘தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்கசமுதாயம்’, ‘சிலப்பதிகாரம் உண்மையும் - புரட்டும்’மற்றும் ‘உலைக்களம்’, ‘விளைநிலம்’ ஆகிய நாவல்கள் உள்ளிட்டு பல நூல்களையும், பிரசுரங்களையும் தோழர்முத்தையா எழுதினார். ‘செவ்வானம்’, ‘புதிய தலைமுறை’, ‘ஏரோட்டி மகன்’ என்ற மூன்று நாடகங்களையும் தோழர்கே.முத்தையா உருவாக்கினார். 

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் நாடகக்குழு இந்த நாடகங்களை அரங்கேற்றியது. 
1971 ஆம் ஆண்டிலிருந்து செம்மலர் ஆசிரியராக பொறுப்பேற்றார். 
இப்பின்னணியில் தான் “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” என்ற எழுத்தாளர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பினுடைய பொதுச்செயலாளராக, தலைவராக பல ஆண்டு காலம் தோழர் கே. முத்தையா செயல்பட்டார். 
1966 ஆம் ஆண்டு துவங்கி 1990 வரையில் தோழர் கே.எம். தீக்கதிர் ஏட்டின் ஆசிரியராக பணியாற்றினார். 
பள்ளி படிப்பு அல்லது கல்லூரி படிப்பை மட்டும் முடித்து போதிய அனுபவம் இல்லாத இளைஞர்களை தீக்கதிரில் இணைத்து பயிற்சியளித்து, பத்திரிகையாளர்களாக, எழுத்தாளர்களாக தோழர் கே.எம். உருவாக்கினார். 
தோழர் கே.எம். தீக்கதிரில் பணியாற்றுகிற போது தான்பல இளந்தோழர்கள் தீக்கதிரில் சேர்ந்து எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக உருவானார்கள்.

தோழர்கள் அருணன், மதுக்கூர் ராமலிங்கம், தி. வரதராசன், கார்ட்டூனிஸ்ட் வீரா, அ. குமரேசன், ப. முருகன் உள்ளிட்டு பலதோழர்கள் அரசியலாக வளர்ந்ததற்கு தோழர் முத்தையாவிற்கு முக்கியப் பங்குண்டு. 
“ஒருநாள் மதுக்கூர் ராமலிங்கத்தைப் பார்த்து “பொதுக்கூட்டத்தில் பேசத் தெரியுமா” எனக் கேட்டார். 
ஓரிரு முறை பேசியுள்ளதாகவும் இலக்கியக் கூட்டத்தில் பேசஆர்வம் உள்ளது என்றும் ராமலிங்கம் கூறினார். ஆர்வம்இருந்தால் பேச்சாளர் ஆகலாம். 

அது பிரச்சனை அல்லஎன்று கூறிய முத்தையா ஒரு மாவட்ட மாநாட்டிற்கு அமைப்பாளர்கள் தன்னை அழைத்த போது ராமலிங்கத்தின் பெயரையும் போடும்படிக் கூறியதோடு அந்தமாநாட்டின் மேடையிலும் ராமலிங்கத்தை அறிமுகப்படுத்திப் பேச வைத்தார். 

இன்று முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், பிரபல பட்டிமன்றப் பேச்சாளராகவும் அறியப்படும் மதுக்கூர் ராமலிங்கத்தை இவ்வாறுதான் முத்தையா தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.” (கே. முத்தையா - எழுத்துலகில் அரை நூற்றாண்டு - என். ராமகிருஷ்ணன்)முத்தையா - யமுனா தம்பதியினருக்கு மல்லிகா, வனிதா மற்றும் இளங்கோ ஆகிய மூன்று பிள்ளைகள். 

அவருடைய மகள்கள் இருவரும் இசைப் பயிற்சி பெற்று “விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே” என்ற பாடலைஇனிய குரலில் பாடுவார்கள். சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றிய கே.எம்.இன் மனைவி யமுனா அவர்களுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டதால் தோழர்கே.எம். முழுநேரமாக கட்சிப்பணியாற்ற முடிந்தது. மல்லிகாவினுடைய கணவர் தோழர் ரவீந்திரன் கட்சி உறுப்பினர். தோழர் கே.எம்.மின் குடும்பம் கட்சிக் குடும்பம். 

தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணிக்கு அருகில் உள்ள பொன்னவன் காணிக்காடு என்ற கிராமத்தில் 1918ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில்பிறந்தவர் தோழர் கே.எம். கடவுள் பக்தரான அவரது தந்தை, தந்தை பெரியாருடைய பற்றாளரும் ஆவார். பெரியார் கூட்டத்திற்கு தன்னுடைய தந்தையோடு சென்றகே.எம்.க்கு சமூகப் பார்வை கிடைத்தது. 

சோவியத் யூனியன்சென்று வந்த பிறகு பெரியார் எழுதிய கட்டுரையைப் படித்ததோழர் கே.எம்.க்கு சோசலிசத்தைப் பற்றிய ஆர்வம் உருவானது. 
பள்ளிப் படிப்பு முடித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த போது அங்கு கேரளத்தைச் சேர்ந்தசுப்பிரமணிய சர்மா என்ற மாணவர் துவக்கிய “தோழர்கள் மன்றத்தில்” சேர்ந்தார். தோழர்கள் ஆர். உமாநாத், பாலதண்டாயுதம், எஸ். ராமகிருஷ்ணன், திரவியம்(பிற்காலத்தில் தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்) ஆகியோரோடு கட்சியில் சேர்ந்தார்.

அண்ணாமலைப் பல்கலை.யில் கட்சிக் கிளையின் செயலாளராக செயல்பட்டவர் தோழர் கே.முத்தையா. தோழர்கள் இ.எம்.எஸ் நம்பூதிரிபாத், ஏ.கே. கோபாலன், கிருஷ்ணப் பிள்ளை போன்றோர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்தியுள்ளனர். 

இளம் மாணவரான தோழர் ஆர்.உமாநாத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக்கியவரும் தோழர் முத்தையாதான்.மாணவர் பருவத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துதனது இறுதி மூச்சுவரை பல பொறுப்புகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய தோழர் கே.எம். அவர்களின் நூற்றாண்டு விழா இன்று துவங்கி, ஓராண்டு தொடர உள்ளது.அவரது வாழ்க்கையைப் படிப்போம், 
அவரது பங்களிப்பை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துச்செல்வோம்.
 நன்றி:தீக்கதிர்,                                                                                                                 ஜி.ராமகிருஷ்ணன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?