வியாழன், 25 ஜனவரி, 2018

சில இயற்கை மருந்துகள்.

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், புளிஏப்பம், வயிற்று உப்புசம், பொருமல், வயிற்று எரிச்சல், பசியின்மை ஆகியவற்றை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். 
இப்பிரச்னைகளுக்கு சுக்கு, மிளகு, ஏலம், சீரகம் போன்றவை மருந்தாகிறது.  

நேரம் தவறி சாப்பிடுவது, எண்ணெய் பலகாரங்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடுவதாலும், முறையற்ற உணவுப்பழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் புளிஏப்பம், வயிறு பொருமல், செரியாமை போன்றவை ஏற்படுகிறது.

சுக்கு, மிளகு போன்றவற்றை கொண்டு புளிஏப்பத்துக்கான மருந்து தயாரிக்கலாம். செய்முறை: சுக்கு, மிளகு, திப்லி, ஏலம், சீரகம் ஆகியவற்றை பொடி செய்து கொள்ளவும். 

இந்த பொடியை அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

உணவு சாப்பிட்ட அரை மணிநேரத்துக்கு பின்னர் குடித்துத்துவர புளிஏப்பம் இல்லாமல் போகும். செரிமானம் சீர்படும். வயிறு பொருமல், உப்புசம் ஆகியவை சரியாகும்.

நெல்லிக்காய், இஞ்சியை பயன்படுத்தி புளிஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். செய்முறை: நெல்லிக்காயை பசையாக அரைத்து, அதிலிருந்து சாறு எடுக்கவும். 


இதனுடன் இஞ்சி சாறு, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து பாகுபதத்தில் எடுக்கவும். இதை ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும். 
இந்த பாகு ஒரு பங்குக்கும், 3 பங்கு நீரும் சேர்த்து குடித்துவர செரியாமை, புளிஏப்பம், வயிற்று உப்புசம் ஆகியவை குணமாகும். பசி தூண்டப்படும்.

புளிஏப்பம், உப்புசம் போன்றவற்றால் சாப்பிட்ட உணவு வீணாகி, போதிய சத்து கிடைக்காமல் உடல் சோர்வு அடையும். உடல் நலமுடன் இருக்க வயிறு முறையாக இயங்குவது அவசியம். 

சோற்றுகற்றாழையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 

நல்லெண்ணெய், சோற்றுக்கற்றாழை, வெள்ளை வெங்காயம், சீரகம்.ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
 ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன் வெள்ளை வெங்காயத்தின் பசை, சோற்றுக்கற்றாழையின் தோலை சீவி எடுக்கப்பட்ட பசை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். 

உணவுப்பாதையில் ஏற்படும் உபாதைகளான அல்சர், வாயு தொல்லை போன்றவை சரியாகும். செரிமானம் தூண்டப்படும். வயிற்று உப்புசம், புளிஏப்பம் சரியாகும். 


இதனால் உடல் நலம் பெறும். நாம் தேவையற்ற உணவை சாப்பிட கூடாது. நன்றாக பசித்த பின்னர் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் செரிமான பிரச்னை ஏற்படும். எனவே, சீரான உணவு எடுத்துகொள்வது மிகவும் அவசியம்.  கொசுக்களை விரட்டும்  மருத்துவம் குறித்து பார்க்கலாம். 
தொற்றுநோய் கிருமிகளை பரப்புவதில் கொசு முக்கிய பங்கு வகிக்கிறது. 

இது, யானைக்கால் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகிறது. நொச்சி இலை அல்லது வேப்பிலை அல்லது மலைவேம்புவை காயவைத்து நெருப்பில் இட்டு புகை போடுவதன் மூலம் கொசுக்கள் விலகிப்போகும்.

வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பழம் சிறந்த மருந்தாகும்.

இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவை மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.


விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். 

பயத்தம்பருப்பு சேர்ப்பது சருமத்தை சுத்தப்படுத்தும். 

விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.

வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு. காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக்காய், வெந்தயம் – தலா கால் கிலோ. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். 


செம்பருத்தி இலை, விளாம்பழ இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.


 விளாமரப்பட்டை, அரிசி திப்லி, தேன். விளாமரத்தின் பட்டை 5 கிராம் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 5 அரிசி திப்லி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி, சிறிது தேன் சேர்த்து தினமும் 100 மில்லி வரை காலை, மாலை குடித்துவர காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகிறது.  விளாம் மரத்தின் இலையை பயன்படுத்தி வாயு பிரச்னை, வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். 
தேவையான பொருட்கள்: விளாமர இலைகள், பனங்கற்கண்டு, பால்.

விளாம் மரத்தின் இலைகள் ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதில் சுக்குப்பொடி சேர்க்கலாம். இந்த தேனீரை குடித்துவர வாயு பிரச்னை குணமாகும். விளாமரம் வீட்டில் வளர்க்க கூடியது. 

இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன் தருகிறது. உடல் எரிச்சலை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும. வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அல்சரை சரிசெய்கிறது. விளாம் பழத்தை பயன்படுத்தி பசியின்மை, சுவையின்மை, நீர்வேட்கைக்கான மருந்து தயாரிக்கலாம்.

நன்றாக பழுத்த விளாம் பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதையை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். 

இதனுடன் சுக்குப்பொடி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர வயிறு உப்புசம், பசியின்மை, சுவையின்மை, ஈரல் பாதிப்பு, இதய கோளாறுகள் குணமாகிறது. 
பித்த சமனியாக விளங்கி செரிமான கோளாறுகளை சரிசெய்யும். பசியை தூண்டக்கூடிய மருந்தாக விளங்குகிறது.

விளாம் மரத்தின் இலையை நன்றாக அரைத்து பூசுவதால் அம்மை, அக்கி கொப்புளங்கள், வியர்குரு விலகி தோல் ஆரோக்கியம் பெறும். வீட்டிலிருக்கும் மஞ்சளை பயன்படுத்தி மூக்கடைப்பு, நீர்வடிதல், தும்மல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். 


மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர்வதால் மூக்கடைப்பு சரியாகிறது. நுரையீரல் ஆரோக்கியம் அடைகிறது. 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தள்ளாத வயதிலும் தான் ஏற்காத கடவுள் வாழ்த்துப் பாடல் தானிருக்கும் மேடையில் பாடப்பட்டால் எழுந்து நின்ற பெரியார் பெரியவரா? தமிழ்நாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடித்து மதம் நடத்தி வயிறு வளர்த்து திரிந்து கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்காத சங்கராச்சாரி பெரியவரா?
 விழா மேடையில் அமர்ந்து தியானம் செய்வது ஏன்?அந்த தியானம் தேசியக் கீதம் இசைக்கையில் மட்டும் கலைகிறது எப்படி?இது போன்ற விழாக்களுக்கு இது போன்ற கடவுள் பிரதிநிதிகளை,சமஸ்ஜ்கிருத வெறியர்களை அழைப்பது தவறு.ஆளுநரே எழுந்து நிற்கையில் இந்த ஆண்டிக்கு என்ன தலைக்கனம்.
சங்கர மடம் விஜயேந்திரன் சாமியார் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாததை பற்றி ஏச்சு.ராஜா,தமிழிசை,பொன்னார் களிடம் கருத்து கேட்டபோது.
======================================================================================
ன்று ,
ஜனவரி-24.
  • இந்திய தேசிய வாக்காளர் தினம்
  • மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1755)
  • நாடுகளின் அணி உருவாக்கப்பட்டது(1919)
  • இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1971)
=======================================================================================