பொய்யர்,வஞ்சகர்,அற்பமானவர்.

 2ஜி வழக்கு குறித்து 'தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' (The 2G Saga Unfolds) என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். 
அதையொட்டி பத்திரிகையாளர்களுடன் அவர் நடத்திய உரையாடலில்
ஆ .ராசா கூறியவை உங்களுக்காக:-
"புலனாய்வு செய்த நிறுவனம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் ஊடகங்களில்கூட எனது தரப்பு நியாயங்களை முன்வைக்கும் இயற்கை நீதி எனக்கு மறுக்கப்பட்டது."
"எனக்கு வழங்கப்படவேண்டிய இயற்கை நீதி வழங்கப்படாததால், நான் ஒரு கொடூர அரசியல்வாதி என்பதை சித்தரிக்கப்பட்டதை மறுக்கவே ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று சிறையில் இருக்கும்போது தீர்மானித்தேன்."
"அதற்காக ஆவணங்கள் சேகரித்தேன். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு கூடுதலாக சில ஆவணங்களையும் சேகரித்து சென்ற ஆண்டே அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தேன்."

"தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்பு பதிப்பகத்தாரை அழைத்து தீர்ப்பு என்னவாக இருந்தாலும், என் தரப்பு நியாங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினேன்."
"இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு நல்லாட்சி நடத்திக்கொண்டிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்தவேண்டும் என்று ஒரு சதி நடந்திருக்க வேண்டும் அந்த சதிக்கு முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய் அவரது அறிக்கை மூலமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்."
"அதனால்தான், அவரது துறையினரே ஒப்புக்கொள்ளாதபோது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய தொகையை உருவாக்கி, நாட்டை ஏமாற்றி, மிகப்பெரிய உக்கிரத்தை உருவாக்கி அதன்மூலம் அந்த அரசை வீழ்த்தி இருக்கிறார்."
"அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அலைவரிசை ஏலம் விடுவதோ நுழைவுக் கட்டணத்தை மாற்றுவதோ கொள்கை முடிவு, எனினும் அது நடைமுறைப்படுத்தப்பட்டதில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். அவருடன் இருந்த கேபினட் அமைச்சர்களோ, சி.பி.ஐ அதிகாரிகளோ அவருக்கு சரியான தகவலைத் தந்திருக்க வேண்டும். ஆனால், அது தரப்படவில்லை. எனவே தவறாக வழிநடத்தப்பட்டு, தவறு நடந்திருப்பதாக அவர் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் அவர் அமைதி காத்தார் என்று நான் கருதுகிறேன்."
"வினோத் ராய் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படியென்றால், அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவும் தவறா என்ற கேள்விக்கு, "அதை அப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். உச்ச நீதிமன்றமே இறுதியானது. ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளில் தவறு இருக்கலாம்."
மீண்டும் ரத்து செய்யப்பட்ட உரிமங்களை பெற நீதிமன்றத்தை நாடுவது குறித்து அந்த நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும். நியாயமாக அவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்கப்பட வேண்டும்."

"அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உண்மையை வெளியில் கொண்டுவரவில்லையா என்ற கேள்விக்கு, நிதி அமைச்சரின் ஆலோசனைகளை கேட்காமல் தாம் மீறி செயல்பட்டதாக கூறப்பட்டதற்கு, நிதி அமைச்சரிடம் சென்று வாக்குமூலம் வாங்குங்கள் என்று நான் சி.பி.ஐ இடம் கோரினேன். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. சிதம்பரமும் அது குறித்து வாய் திறக்கவில்லை. அதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் காட்டிய மௌனமே அவர்கள் அரசை காலி செய்தது. "
"ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 'செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அஸோஸியேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டு, தொழிலில் அவர்களின் ஏகபோகத்தை நிறுவ பல சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டனர்."
"நான் புதிய உரிமங்கள் கொடுக்கக்கூடாது என்று அந்த நிறுவனங்கள் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். அங்கு அவர்கள் போட்டியை விரும்பாமல் செயல்படுவதாக அபராதம் விதிக்கப்பட்டது. அங்கெல்லாம், தோற்றுப் போனபின்புதான் அவர்கள் பிரதமர் அலுவலகம் சென்று ஒரு கையெழுத்து இடப்படாத கடிதத்தை கொடுத்தனர்."
"உச்ச நீதிமன்றத்தில் கூறிய அதே வாதங்களையே அந்த கடிதத்திலும் முன்வைத்தனர். அதை நம்பி அப்போதைய பிரதமர் எனக்கு கடிதமெழுதினார். அதற்கு நான் அளித்த பதில் உண்மையென்று இந்த தீர்ப்பு மூலம் உறுதியாகியுள்ளது."

"ஆனால், ஒரு கையெழுதுகூட இல்லாத கடிதத்தை நம்பி "தகுந்த நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்கும் முன் என்னிடம் பேசவும்" என்று பிரதமரை எழுத வைத்த வித்தை எது என்று எனக்குத் தெரியவில்லை."
வினோத் ராய் அளித்த அறிக்கையால்தான் அவர் கைது செய்யப்பட்டார் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளீர்களா என்ற கேள்விக்கு, "இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் அவர் தேசத்தை ஏமாற்றியதற்காக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் சட்டப் பதவி வகித்தவர் என்பதால் தடை வரும். அவருக்கு சில விலக்குகள் உள்ளன."

"அரசியல் சட்டம், "மன்னன் தவறிழைக்க மாட்டான் என்கிறது. ஆனால், மன்னன் தவறிழைத்தால் என்ன செய்வது என்று அரசியலமைப்பு கூறவில்லை. எனவே இது குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும், அப்படி அமைக்கப்பட்டால் அது நாட்டுக்கு நல்லது என்று திமுக தலைமையிடம் விளக்கியபின், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளேன்," என்று ராசா கூறினார்.
"திமுக தலைவர் மற்றும் செயல் தலைவருடன் கலந்தாலோசித்து வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்வேன்."
"காங்கிரஸ் - திமுக அரசியல் உறவுகளுக்கும் இந்த புத்தகத்துக்கும் தொடர்பில்லை. பொது நலன் கருதி 1%க்கும் குறைவான தகவல்களை வெளியிடவில்லை. "
"எந்த தொலைக்காட்சிக்கும் தங்கள் விரும்புவதை செய்தி வெளியிட உரிமை உண்டு. நான் கோபித்துக்கொள்வதென்றால் எல்லா ஊடகங்களையும் நான் கோபித்துக்கொள்ள வேண்டும். ஊடகங்களுக்கும் வேறு வழியில்லை. அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஒருவர் (வினோத் ராய்) பொய் சொல்வாரென்று யாரும் நினைக்கவில்லை."
"அவர் ஒரு பொய்யர், வஞ்சகர், தன் சுயநலம் அல்லது வேறு காரணங்களுக்காக ஆவணங்களை திருத்தி வாசிக்கக்கூடிய அற்பத்தனம் உடையவர் என்பதை இந்த புத்தகத்தில் நிரூபித்துள்ளேன்."
அரசுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை தாங்களே நிர்ணயம் செய்துகொண்டு அபரிமிதமான லாபம் ஈட்டுகின்றனர். 

அதனால், புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான நுழைவுக்கட்டணத்தை அதிகரிக்காமல், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கான அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று நான், நிதியமைச்சர், பிரதமர் ஆகியோர் முடிவு செய்தோம்."

"அதற்காக தொலைத்தொடர்பு ஆணையத்தைக் கூட்ட முடிவு செய்தோம். 
ஆனால், புதிய அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் இருந்த அலுவல்கள் காரணமாக, அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு முன்பே அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற வேண்டுமென்றே கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவை இரண்டுக்கும் தொடர்பில்லை. 

ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடைபெறுவது புதிய நிறுவனங்களுக்காக, பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படுவது ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்காக என்று தொலைத்தொடர்புத் துறை செயலர் இரண்டு முறை எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்."
இந்த விளக்கம் அளித்தபின்பும், நுழைவுக்கட்டணம் இருந்தால் இந்த உரிமங்களை வழங்க தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புக்கொள்ளாது என்பதால் வேண்டுமென்றே திட்டமிட்டு திருட்டு தனமாக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறுவது பெரிய அயோக்கியத்தனம், பொய். கீழமை நீதிமன்றத்தில் அந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டபோது நீதிபதியும், வழக்கறிஞர்களும் சிரித்தனர்."
"ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பு வருவதற்கு முன்பே சில நிறுவனங்கள் வரைவோலை எடுத்தது குறித்த அருண் ஜேட்லி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராசா, செப்டம்பர் 25 (2008க்கு) முன் விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்று முடிவு செய்தது செய்திகளில் வெளியானது. தங்கள் விண்ணப்பங்கள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் எழுத்துபூர்வமாகவே தெரிவித்தனர். 
அதனால், அந்த கால வரையறைக்குள் விண்ணப்பித்த நிறுவனங்கள் முன்கூட்டியே நிதி திரட்டி வரைவோலை எடுத்துள்ளனர்,"தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்திருந்தது. அதைப் புரிந்துகொள்ளாமல் பேசுகின்றனர், "
 என்று ராசா கூறியுள்ளார்.
==========================================================================================
                                                           1864 இந்திய வரைபடம்.( A.J. Johnson)
வலி போயே போச்சு!
தினமும் பல்வேறு வலிகளை உடலில் வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியாதவர்கள் அதிகம் பேர்கள் உள்ளனர்.
மூட்டுவலி,தலைவலி,கைகால் வலி,வயிற்றுவலி என நிறையவலிகள் உள்ளன.
பல வலி நிறைந்த பிரச்சனைகளைப் போக்கும் வழியாக ஒரு  தைலம் கிடைத்தால் நன்றாக இருக்கும்,என ஏங்குவோருக்கு இதோ ஒரு தைலம்.
 இந்த தைலத்தை மிக எளிதாக நீங்களே தயாரித்துக்கொள்ளலாம்.
இதற்காக காய்ச்சல்,வயித்தல்,ஊறவைத்தால்,பஸ்பமாக்கல் ,காய் வலிக்க இடித்து துகளாக்கள் என நீங்கள் துன்பப்படவேண்டாம்.
மிக எளிய முறைதான்.மூன்று நிமிடத்தில் இந்த சகல வலிகளுக்குமான தைலம் நீங்களே தயாரித்து விடலாம்.

சித்த மருத்துவம்  மூலம்  தைலம் செய்யும் முறை.

தேவையானவை

1.புதினா உப்பு

2.ஓம உப்பு

3.கட்டி கற்பூரம்

 இவை மூன்றும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
 இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 10 கிராம் அல்லது 20கி வாங்கிக் கொள்ளலாம். 
அது அவரவர் தேவைக்கேற்ப வாங்கலாம்.

இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும். இப்பொழுது தைலம் தயார்.

இது மிகவும் வீரியமான தைலம். உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.


இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.

பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.

 இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து வீரியத்தை குறைத்து உபயோகிக்கவும் செய்யலாம் அப்படி பயன்படுத்த எரிச்ச்சல் குறைந்து  வேலை செய்யும்..

.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.

சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.
=========================================================================================
ன்று,
ஜனவரி-21.


  •  விளாதிமிர் லெனின்  மரணம் (1924)
  • அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.( 1925 )
  •  உலகின் முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலஸ்வெள்ளோட்டம்(1954) 
  • திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன(1972)  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது(2009)
  • பழம்பெரும் நடிகர் சொக்கலிங்க பாகவதர் மரணம்(2002 )  
  • சுயமுன்னேற்ற எழுத்தாளர் எம். எஸ். உதயமூர்த்தி மரணம் (2013)   

=============================================================================
முகநூல்  

க.ம. மணிவண்ணன்


நித்தியானந்த மட சீடர்களுக்கு மணிவண்ணன் எழுதுவது,

வைரமுத்து அவர்களுக்கு எதிராக நீங்கள் பேசிய காணொளி கண்டேன், அதைப் பார்த்த பிறகு உங்கள் அறியாமையின் மீதும் அறீவீனத்தின் மீதும் பரிதாபமும் உங்கள் மதங்களின் மீது கோபமும் தான் வருகிறது.

உங்கள் பேச்சில் தான் எவ்வளவு கருணை, ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு பெருக்கடுத்து ஓடுகிறது.
வைரமுத்து அவர்களின் ஆண்டாள் பற்றிய கட்டுரையை நானும் படித்தேன். அதில் அவர் ஆண்டாளைப் பற்றி பெருமையாகவே எழுதியுள்ளார். அதில் ஆண்டாளைப் பற்றிய ஒரு ஆய்வாளாரின் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவ்வளவே.
அந்தக் கருத்து தவறு எனில் நீங்கள் சரியான கருத்தை நிறுவ வேண்டும். அந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர் கருத்தோடுதான் நீங்கள் மோத வேண்டும் அதை விடுத்து அவரை எவ்வளவு தரக் குறைவாக பேசி இருக்கிறீர்கள், உங்கள் பேச்சில் எவ்வளவு வன்மம் எவ்வளவு ஆபாசம், ஒரு தனி மனிதனின் உறவுகளை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். இதுதான் அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் மதங்கள் சொல்லித் தந்ததா.
நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம், உங்கள் மதங்கள் எதைப் பேசுகிறதோ எதை எழுதுகிறதோ எதைச் செய்கிறதோ அதையே தான் நீங்களும் செய்துள்ளீர்கள்.
அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் உங்கள் எல்லா மதங்களும் தங்களுக்கு எதிராக விமர்சனம் வரும்போதும் கருத்துக்கள் வரும்போதும் கருத்துக்களோடு மோதாமல் கருத்துச் சொன்னவர்களோடுதான் மோதி இருக்கின்றன, மிரட்டி இருக்கின்றன, அடி பணியாத போது எங்கே நாம் தோற்று விடுமோவோ எனப் பயந்து கொலை செய்திருக்கின்றன. இதுதான் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது.
ஏனென்றால் உங்கள் மதங்கள் வெற்று நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உணர்சிகளால் கட்டப்பட்டவை. அவைகளால் விவாதிக்கவோ தங்களது கருத்துக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளவோ தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவோ முடியாது.
உலகம் தட்டை எனச் சொன்ன உங்கள் மதங்கள் உருண்டை எனச் சொன்ன கலிலியோவின் அறிவியலைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியது. அறிவியலாளர் புருனோவை ரோம் நகர வீதியில் வைத்து உயிரோடு கொளுத்தியது.
வங்காள தேசத்தில் முற்போக்கு எழுத்தாளர்களைக் கொன்றதும் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் தலைகளுக்கு விலை வைத்ததும் உங்கள் மதங்கள் தானே. சமணர்களையும் பௌத்தர்களையும் கழுவேற்றிக் கொன்றதும், எழுத்தாளர்கள் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்றதும் உங்கள் மதங்கள் தானே.
ஆனால் நாத்திகம் என்பது அப்படி ஆனது அல்ல, அது மனித நேயத்துடனான அறிவியல் சிந்தனை. அதனால் தான் அது தன்னுடைய கருத்து தவறு என்றால் திருத்திக்கொள்ளவும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது. மதங்கள்தான் மனிதனைக் கொன்று இருக்கின்றன, ஆனால் நாத்திகம் எந்த மனிதனையும் கொன்றதாக வரலாற்றின் எந்தப் பக்கங்களிலும் பதிவே இல்லை.
சாக்ரடீஸ் முதல் புத்தன் வரை, காரல் மார்க்ஸ் முதல் பெரியார் வரை, இங்கர்சால் முதல் பெட்ரன்ட் ரஸ்ஸல் வரை, அனைவரின் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் கடவுள் மறுப்பை விஞ்சிய மனித நேயமே இருக்கிறது. நாத்திகர்களே ஆகச் சிறந்த சமூகப் போராளிகளாகவும் இருந்து வருகிறார்கள். உங்கள் மதங்கள் கடவுளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது நாத்திகம் தான் மனிதர்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறது.
உங்களை எல்லாம் நான் நாத்திகர்களாக மாறச் சொல்லவில்லை. ஏனென்றால் நாத்திகனாக மாறுவதும் வாழுவதும் எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். எனவே குறைந்த பட்சம் மதங்களை விடுத்து மனிதர்களாக மாறுங்கள்.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்
                                                                                                                விகடன் விருதுடன்.

அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் மத்திய பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி நாடாளுமன்றத்தில் தொடங்கியது
 பட்ஜெட் என்றாலே ஏழைகளுக்கு அல்வா கொடுப்பதுதான் என்பதை இப்படி பட்டவர்த்தனமாக காண்பிக்க வேண்டுமா என்ன?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?