புதன், 24 ஜனவரி, 2018

ஏன் விசாரணையை எதிர்க்க வேண்டும்?”

அமித் ஷாவுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பானவழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளது. 
உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் பணியும் அருண் மிஸ்ரா அமர்விடமிருந்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் அமர்வுக்குமாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திங்கட்கிழமையன்று நீதிபதிலோயா மர்ம மரண வழக்கை விசாரித்தது. 
மகாராஷ்ட்டிர அரசு சார்பில் ஹரீஷ் சால்வே,முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆகியோர் ஆஜராகினர். 
நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதும் தரப்பிலிருந்து- மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். 
அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுடன், மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், பாஜக தலைவர் அமித் ஷாவைக் காப்பாற்றவே அனைத்து விஷயங்களும் நடந்துள்ளன என்றும் உறுதிமிக்க குற்றச்சாட்டுக்களை வைத்தார். 
இதனால் நீதிபதி லோயா மரண வழக்கு விசாரணை அனல் பறந்தது.
“சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷா-வுக்காக ஆஜரானவர் ஹரீஷ் சால்வே; அப்படியிருக்கையில், அவரே, இந்த வழக்கில் மகராஷ்ட்டிர அரசு வழக்கறிஞராகவும் ஆஜராவது எப்படி?” என்ற துஷ்யந்த் தவே-யின் கேள்வியால், அரசின் தரப்பினர் ஆடிப் போய் விட்டனர்.
மகாராஷ்டிர அரசு சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜராவதற்கு தவே எதிர்ப்பு தெரிவித்துடன், “நீதிபதி லோயா பிரேத பரிசோதனையின் போது அவரது குடும்பத்தினர் யாரும் அழைக்கப்படவில்லை” என்பதையும்; “இது தொடர்பாக உரிய முறையில் விசாரிக்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் எழுப்பினார்.
அப்போது குறிக்கிட்ட ஹரீஷ் சால்வே, “நீதிபதி லோயாவின் மரணத்தை சிலர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்;
ஏற்கெனவே நிறைய அவப்பெயரை உருவாக்கி விட்டார்கள்” என்று கூற, தவே ஆவேசமாகி விட்டார். “ஹரீஷ் சால்வே-யால்தான் நீதித்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது” என்று அதிரடியிலும் இறங்கினார். 
இப்படியா, நெறியற்று பேசுவது? என்று ஹரீஷ் சால்வே கேட்க, பதிலுக்கு “தார்மீக நெறிகள் பற்றி எனக்கு நீங்கள் பாடம் எடுக்கதேவையில்லை” மீண்டும் சூடாகக் கூறினார்.
நீதிபதிகள் குறுக்கிட்டு, “இன்றைய நிலவரப்படி நீதிபதி லோயா மரணம் இயற்கையானது; 

எனவே, இப்போதைக்கு யாரும், யாருடைய பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வைக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டதற்குப் பின்னரே, தவே தனது ஆவேசத்தைக் குறைத்துக் கொண்டார்.

இதனிடையே, மகாராஷ்ட்டிர அரசு சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல்ரோத்கி, “மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின்சார்பாக ஆஜராகி இருக்கும் துஷ்யந்த் தவே வாதாட அனுமதிக்கக் கூடாது” என்றதுடன், “லோயா வழக்கில் எதற்காக, மும்பைவழக்கறிஞர்கள் சங்கத்தின் கருத்தை கேட்க வேண்டும்?” என்றார்.

அதற்கு பதிலளித்த துஷ்யந்த் தவே, நீதிபதிலோயா மரணத்தை, அவரது உறவினர்கள் விசாரணை நடத்த கோருகின்றனர்; லோயாவின் மகனும் முதலில் விசாரணை நடத்தக் கோரிவிட்டு, பின்னர் ஏதோவொரு நெருக்கடியால் அமைதியாகிவிட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், “நீதிபதி லோயா மாரடைப்பால்தான் மரணமடைந்தார் எனில், ஏன் நீதி விசாரணையை எதிர்க்க வேண்டும்?” என்ற பதில் கேள்வியையும் எழுப்பி, ஹரீஷ் சால்வே,முகுல் ரோத்கி ஆகியோரை வாயடைக்க வைத்தார்.
ஒருகட்டத்தில், நீதிபதி லோயா மரணம்குறித்து ஊடகங்கள் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று ஹரீஷ் சால்வே கூறியபோது, “சசிதரூர், சிதம்பரம் விவகாரங்களை ஊடகங்கள் நிறையவே விவாதித்துவிட்டன; இந்த தேசம் விவாதங்களை நடத்துவதை யாரும் தடுக்க முடியாது” என்றும் தவே, பாஜக-வின் மிரட்டல் அரசியலையும் ஜாடையாக சாடினார்.

நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கின் ஆரம்பமே, பாஜக தலைவர் அமித்ஷா-வுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து விட்டது.

இந்நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 2-ஆம் தேதிக்குஒத்திவைத்துள்ள நீதிபதிகள், அதற்குள் லோதா மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மனுதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். 

முன்னதாக நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மும்பை மற்றும் நாக்பூர் நீதிமன்றங்களில் நடந்து வந்த வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில், சோராபுதீன் ஷேக், அவரதுமனைவி கௌசர் பீவி, 2006-இல் துளசிராம்பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில், அன்றைய குஜராத் உள்துறை அமைச்சரும்- தற்போதைய பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம் சாட்டப்பட்டிருந்தார். 
இவர்மீதான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க இருந்தநிலையில், 48 வயதான நீதிபதி பி.எச். லோயாதிடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் என கூறப்பட்டது .
அவர் மனைவி வரும் முன்னரே உடல் பரிசோதனை முடிந்து தகனம்ஸ் செய்யுமாறு அவர் மனைவியிடம் வற்புறுத்தி உடல் வழங்கப்படடது .
 லோயாவுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதியநீதிபதி பதினைந்தே நாட்களில், அமித்ஷாவை விடுதலை செய்தார். 
இந்த நிகழ்வுகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, லோயா மரணம் குறித்துவிசாரிக்க வேண்டும் என்று தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 
ஆனால், இதை விசாரிக்கக் கூடாது என்று அமித்ஷா மற்றும் பாஜக தரப்பினர் எதிர்த்து வருகின்றனர்.
முழு விபரங்களுக்கு கீழே சுட்டவும்.
1,நீதிபதி லோயா மரணம் ? 
2,கொலையா?

======================================================================================
இதுதான் வளர்சி ?
உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்கள் அடைந்த நன்மைகள் தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்பார்ம் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 
அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.இதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 82 சதவிகிதம், வெறும் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் போய்ச் சேர்ந்திருப் பதும், குறிப்பாக இந்தியாவில் உருவான மொத்த சொத்துக்களில் 73 சதவிகிதத்தை, ஒரு சதவிகித கோடீஸ்வரர்களே பங்கு போட்டுக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதாவது இந்தியாவில் 1 சதவிகித பணக்காரர்கள் பங்குபோட்டுக் கொண்ட சொத்து மதிப்பு 20 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்ஆகும். 
இது, மத்திய அரசின் 2017-18 பட்ஜெட்டிற்கு நிகரான தொகை என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.இதே காலகட்டத்தில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 58 சதவிகிதமாக அதிகரித்துள்ளதையும் ‘ஆக்ஸ்பார்ம்’ நிறுவனத்தின் ஆய்வு அம்பலப்படுத்தி உள்ளது.
67 கோடி ஏழை இந்தியர்களின் வருமானம் கடந்த ஆண்டில் வெறும் ஒரு சதவிதம் மட்டுமேஅதிகரித்துள்ளது. உலக அளவில் இது மிகவும் மோசமான பொருளாதார நிலையாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் 370 கோடி ஏழைகளின் வருவாயில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்று ஆய்வு கூறுகிறது.டாவோ­சில், உலகப் பொருளாதார மாமன்றத்தின் மாநாடு துவங்­கு­வதையொட்டி, இந்த பட்­டி­யல் வெளியிடப்பட்டுள்ளது.மக்­களின் வாழ்க்கை தரம், ஸ்தி­ர­மான வாழ்க்கைச் சூழல், கடன் சுமையை அதி­க­ரிக்­கா­மல், வருங்­கால தலை­மு­றை­யி­னரை பாது­காத்­தல் ஆகிய அம்­சங்­களின் அடிப்­ப­டை­யில், ஒரு நாட்­டின், ‘அனை­வ­ருக்­கு­மான வளர்ச்சிக் குறி­யீடு’ தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. 
இதன்­படி, பொரு­ளா­தா­ரத்­தில் வளர்ச்சி கண்டு வரும், 79 நாடு­கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.
இதில் இந்தியாவின் அண்டை நாடுகளான, நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றையும் விட இந்தியா மோசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 
வளரும் நாடுகள் பட்டியலில் நேபாளம் 22-ஆவதுஇடத்தையும், வங்கதேசம் 34-ஆவது இடத்தை யும், இலங்கை 40-ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 47-ஆவது இடத்தையும் பிடித்திருக் கின்றன. இந்தியாவோ 62-ஆவது இடத்திற்கு சென்றிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் போட்டி நாடாக கருதப்படும் சீனா 40 இடங்கள் முன்னிலை பெற்று, 26 இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாயைத் திறந்தாலே வளர்ச்சி வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்ளும் மோடி வகையறா, இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
=======================================================================================
ன்று,
ஜனவரி-24.
 கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.(1857)இது தெற்காசியாவிலேயே  முதல் பல்கலைக்கழகம்.
  • பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
  • ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
  • முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
=======================================================================================
ஏன் தனித்து விடப்பட்டார் பிரவீண் தொகாடியா?
என்கவுண்டருக்காக அழைத்து செல்லப் படும் ஒருவர், பலியிடுவதற்காக அழைத்து செல்லப்படும் ஆட்டிற்கு இணையானவர்.
பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு என்னவெல்லாம் செய்யும்? முதலில் திமிறும், பிறகு தன்னால் இயன்ற அளவுக்கு கத்தும்... பின் தன் தலையை கவிழ்த்து, புற்களை மேயத் தொடங்கும். சிறிது நேரத்திற்குப் பிறகே கட்டப்பட்டிற்கும் கயிறை அறுக்க முயற்சிக்கும்.என்ன சப்தமிட்டாலும், இறுதியில் கழுத்தில் கத்தி வைப்பது என்பதில் எந்த மாற்றமும் இல்லை, சிறிது நேரத்தில் சப்தநாடியும் அடங்கி உடல் குளிர்ந்துவிடும்.
நீதிமன்றங்களில், காவல் துறை விசாரணை அறிக்கைகளில், என்கவுண்டர்கள் குறித்து பல வாக்குமூலங்கள் பதியப்பட்டு இருக்கின்றன. எப்படி காவல் துறை போலி மோதல் சாவுகளை மேற்கொள்கிறது என்று அதுவிவரிக்கிறது. 
ஆனால், உண்மை என்ன என்பது போலி மோதல் சாவில் இறந்த அந்த மனிதருக்கு மட்டும்தான் தெரியும்.

திரைப்படங்களில் போலி மோதல் சாவுகள் குறித்த காட்சிகள் இவ்வாறாக இருக்கின்றன:ஆள் அரவமற்ற ஓர் இடத்தில், நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் அமர்ந்திருக்கும் கைதியை வெளியே வருமாறு போலீஸ் சொல்லும். உன்னை விடுவிக்க முடிவு செய்துவிட்டோம், தப்பித்து ஓடு என்று காவலர்கள் சொல்வார்கள்.தன்னை கொல்லப்போகிறார்கள் என்று கைதிக்கு தெரியும். 
விரைவில் இறக்கப்போகிறோம் என்பதை நன்கு அறிந்திருந்தாலும், ஒரு ஆட்டுக்குட்டியைப் போல தப்பித்து ஓட முயற்சிப்பார். எல்லாம் சில விநாடிகள்தான், துப்பாக்கியிலிருந்து புறப்படும் குண்டுகள், அந்த கைதியின் உடலை ஊடுருவிக் கொல்லும்.அடுத்தநாள் வரும் செய்திதாள்களில், அந்தச் செய்தி இவ்வாறாக இடம்பெற்றிருக்கும்: போலீசுடன் ஏற்பட்ட மோதலில், ஒரு ரவுடி/கொள்ளைக்காரன்/ நக்சலைட்/ தீவிரவாதி கொல்லப்பட்டார். 

சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜகான், மாவோயிஸ்ட் தலைவர் அசாத், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஊடகவிய லாளர் ஹெம் பண்டே, சிமி இயக்கத்தைச் சேர்ந்த எட்டு பேர் - இவர்கள் போலி மோதல் சாவுகளிலோ அல்லது போலீசுடன் ஏற்பட்ட உண்மையான மோதலிலோ கொல்லப்பட்டவர்கள்.

விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் ‘அகில உலக தலைவர்’ பிரவீண் தொகாடியா, தொலைக்காட்சிகளில் கதறுவது போல, அவரது பெயரும் இந்த போலி மோதல் சாவுகள் பெயர் பட்டியலில் சேருகிறதா?கடந்த திங்கட்கிழமை அவர் காவல் நிலையத்திற்கு சென்றிருந்தால், அவர் அகமதாபாத்திற்கு வெளியே ஆள் அரவமற்ற ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பாரா?
பத்து வருடங்கள் பழமையான ஒரு வழக்கில் ராஜஸ்தான் மாநில போலீசார் தொகாடியாவை கைது செய்ய கடந்த வாரம் வந்தனர்.
 “எனக்கு போலீசாரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றுவிட்டேன். அதன்பின் நினைவு வந்தபோது, அடுத்த நாள் காலை அகமதாபாத் மருத்துவமனை ஒன்றில் இருந்தேன்”. என்கிறார் தொகாடியா.

இந்துத்துவா மதவெறிக்கு கச்சைக்கட்டிக் கொண்டு ஆதரவு கொடுத்தவரும், தைரியத்தின் குறியீடாக பார்க்கப்பட்டவருமான தொகாடியா நேற்றுவரை இஸ்லாமியர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தவர்.
இந்த தேசத்தில் தீவிரவாதம் பரவுவதற்கு காரணம் மகாத்மா காந்தி என்று சொன்னவர், இன்றோ மருத்துவமனையில் இருந்துகொண்டு, கண்களில் ததும்பிய கண்ணீருடன் தொண்டை அடைக்க, என்னை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று புலம்புகிறார். மிரண்டு போன ஒரு ஆட்டுக்குட்டியைப்போல அச்சத்துடன் காணப்படுகிறார்.
இதில் நகைமுரண் என்னவென்றால், இப்போது இருக்கும் குஜராத் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருப்பது பா.ஜ.க தான். அதுமட்டுமல்ல, இவருடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஒன்றாக பயிற்சி பெற்றவர்கள்தான் இன்று அரசின் முக்கிய பதவிகளிலும் பா.ஜ.க கட்சியிலும் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.
அதுமட்டுமா... தொகாடியா தலைமைப் பொறுப்பில் இருக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் இருந்து பயிற்சி பெற்ற லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் தேசம் முழுவதும் விரவியிருக்கிறார்கள். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பிலும், `சுய பாதுகாப்பு’ என்ற பெயரில் பலருக்கு வாள் வீச்சு பயிற்சியும், துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில், நகரங்களில் வாழும் இந்துக்களின் பாதுகாப்புக்கு நாங்கள்தான் பொறுப்பு என்கிறார்கள் பஜ்ரங் தளத்தை சேர்ந்த இளைஞர்கள். அவர்கள் யார் மீது வேண்டுமானாலும், `லவ் ஜிகாத்` என்ற முத்திரை யைக் குத்தி, தாக்குவார்கள். 
தங்கள் விருப்பப்படி எந்த வண்டியை வேண்டுமானாலும் சோதனை போடுவார்கள். யாத்திரை செல்லும் இஸ்லாமிய இளைஞர்களை தடுப்பார்கள், அவர்களை சீண்டுவார்கள், தேசத் துரோகி என்றும்கூட சொல்வார்கள்.
ஆனால், இவர்களில் எத்தனை பேர் தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள்? இந்து மதத்தை, தர்மத்தை காக்க தயாராக இருக்கிறார்கள்? 
தங்களுக்கு வழிகாட்டும் அமைப்பின் தலைவருக்கு பிரச்சனை என்றவுடன் கையில் திரிசூலத்துடன், நெற்றியில் திலகமிட்டு அவருக்கு ஆதரவாக எத்தனை பேர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்?
பிரவீண் தொகாடியாவின் கண்ணீரைப் பார்த்தும் யாருக்கும் ஏன் ரத்தம் கொதித் தெழவில்லை? ‘இந்துத் தலைவரான அவரை கொல்ல சதி நடப்பது பற்றி ஏன் எந்தவொரு தொண்டரும் குரல் எழுப்பவில்லை? 
ஏனென்றால், பிரவீண் தொகாடியாவின் `அரசியல் என்கவுண்ட்டர்` எப்போதோ அரங்கேறிவிட்டது.

பாகிஸ்தான், முஸ்லீம்கள், மகாத்மா காந்தி, காங்கிரஸ், ஒவைசி, கிறிஸ்துவர்கள் இவர்களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்ப மட்டுமே தொகாடியா தேவை. இந்து மற்றும் முஸ்லிம்களை பிரிப்பது, வாக்குவங்கியாக செயல்படுவதோடு தொகாடியாவின் வேலை முடிந்துவிட்டது.
உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பயன்பட்டது போன்றதே இதுவும். 
அரசியல் சதுரங்க விளையாட்டில் அவர் வலுவாக இருந்ததால், முதலமைச்சர் பதவியில் வலுவாக காலூன்றினார். 
முதல்வராக பொறுப்பேற்ற உடன் கலவரத்தை தூண்டியதாக அவர் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன.ஆனால், தொகாடியா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் அதிகாரம் செய்ய நினைத்தார். சட்டப்பேரவையை அல்லது நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தும் `மந்திரக்கோல்` குருசபையிடம் இருக்கவேண்டும் என்று நினைத்தார். 
அதையே வெளிப்படுத்தினார். அதனால்தான் அதிகாரம் செய்ய விரும்பிய அவரை அதிகாரத்தில் இருப்பவர்கள் தனித்து விட்டுவிட்டார்கள்.
இப்போது ஆளில்லா வனாந்திரத்தில் தனித்து விடப்பட்டு இருக்கிறார் தொகாடியா.
ஜெய்-ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு வரும் பஜ்ரங் தள் அமைப்பின் தொண்டர்கள் யாரேனும்தொகாடியாவை பாதுகாக்க முழக்கமிட்டு வருவதை பார்க்கமுடியுமா என்பது கேள்விக்குறியே!
ராஜேஷ் ஜோஷி, (ரேடியோ எடிட்டர், பிபிசி இந்தி) எழுதிய செய்தியின் அம்சங்களுடன்தொகுப்பு: பேரா.தா.சந்திரகுரு