நன்கொடை அரசியல்.

“எவ்விதமான பதிவுருக்களும் ஆதாரமு மின்றி அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்களும், அந்நிய நிறுவனங்களும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நன்கொடைகள் கொடுக்கலாம்” என்கிற முறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தையும், 2017ஆம் ஆண்டு நிதிச்சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்களையும் ரத்துசெய்திட வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

அதனை உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வாயம் அனுமதித்து,மத்திய அரசு, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக விளக்கிட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலு வலகத்தில் சனியன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 
அப்போது சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
"நாட்டில் நடைபெறும் ஊழலுக்கான ஊற்றுக்கண்ணே கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடையிலிருந்துதான் துவங்குகிறது. 
வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஏராளமாக நன்கொடை பெறுகின்றன. 

இந்த இரு கட்சி களும் அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவராமல் இருந்துஇருந்தால், இரு கட்சிகளும் வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டு இருக்கும். 
அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் இரு கட்சிகளும் தங்களை பாதுகாத்துக் கொண்டன.

ஆளும் பாஜக அரசு, நிதிச்சட்டம் 2017ன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, வருமான வரிச் சட்டம் 1961, கம்பெனிச் சட்டம் 2013 ஆகியவற்றில் திருத்தம் செய்து, தேர்தல் நிதிப்பத்தி ரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் கடந்த மாதம் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டன.
காங்கிரஸ், பாஜக கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் கொள்கை களை வடிவமைத்துக் கொள்கின்றன. 

எனவே, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடை செய்யப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதிபெறும் அரசியல் கட்சிகள், அவர்களுக்கு ஏற்றாற்போல் நட்புறவோடு இருக்க கொள்கைகளை உருவாக்குகிறார்கள்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஊழலின் ஊற்றுக்கண், நம்முடைய முறையையே அழிக்கிறார்கள். கார்ப்பரேட் நன்கொடையை தடை செய்யாதவரை ஊழல் பிரச்சனையை தீர்க்க முடியாது.
கடந்த 2004ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ், பாஜக-வுக்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமாக நிதி உதவி அளித்துள்ளன.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல். 

இது மத்தியில் ஆளும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. இதுவும் தடுக்கப் பட்டாக வேண்டும் என்றார். 

யெச்சூரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம்:“தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, 2017ஆம் ஆண்டு நிதிச்சட்டத்தின்கீழ் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், வருமான வரிச்சட்டம் மற்றும்கம்பெனிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்துள்ளது.

 மத்திய அரசு இதற்காக ஓர் அறிவிக்கையை வெளியிட்டு, 2.1.2018 முதல் தேர்தல் பத்திரங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படை சாராம்சம் என்ன வெனில், தனிநபர் எவருமோ அல்லது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனமோ இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடைகள் அளிக்கலாம் என்பதேயாகும். 

அவ்வாறு நன்கொடை அளித்துவிட்டு அதனை பொது வெளியில் கூற வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இவ்வாறு ஆட்சிப் பொறுப்பில் உள்ளஅரசியல் கட்சி சகலவிதங்களிலும் பணத்தைத் திரட்டுவதற்கு ஒரு வழியாகவே தேர்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(ய)பிரிவானது, நாட்டில் ஜனநாயக ரீதியாகச் செயல்படும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைத் “தெரிந்து கொள்ளும் உரிமை” அனைவருக்கும் உண்டு. இதனை இப்போது கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் பத்திரம் தொடர்பான விதிகள் மீறியுள்ளன. 
எனவே இது அரசமைப்புச்சட்டம் 14ஆவது பிரிவிற்கு விரோதமானதாகும். 

மேலும் மத்திய அரசு இதனை ஒரு நிதிச் சட்டமுன்வடிவு என்று கூறி மோசடி செய்து, நிறைவேற்றியுள்ளது. 

ஏனெனில் இது அரசமைப்புச்சட்டம் 110ஆவது பிரிவின்கீழ் நிதிச் சட்டமுன்வடிவாகக் கருதிட முடியாது. 
இவ்வாறு சட்டத்தைத் திருத்திக்கொண்டு விட்டு, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் அந்நிய நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடைகளாகப் பெற்றிருக் க்கின்றன. பாஜகவும் காங்கிரசும் பெற்ற நன்கொடை களும், அவற்றை அளித்த அந்நிய நிறுவனங்களும் பட்டியலில் தரப்பட்டுள்ளது.

தான் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டு அனுமதித்துள்ள நீதிமன்றம் மத்தியஅரசுக்கும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறினார். 
=====================================================================================================================================
ராமர் கோவில் கட்டும் அதிகாரி.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என உத்தரபிரதேச ஊர்க்காவல் படை தலைமை இயக்குநர் சூர்ய குமார் சுக்லா உறுதி ஏற்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 28-ஆம் தேதி லக்னோ பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகம் துறையில், ராமர் கோவில் குறித்த நிகழ்ச்சி ஒன்று இந்து அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சூர்ய குமார் சுக்லா இவ்வாறு உறுதிமொழி ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ”அயோத்தியில் ராமர் கோவிலை விரைவில் கட்டுவோம் என இன்றைய தினத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம். ஜெய் ஸ்ரீராம்”, என கூறுகிறார்.
இவர் வரும் ஆகஸ்டு மாதம் ஓய்வு பெற உள்ளார். சூர்ய குமார் அவ்வாறு உறுதி ஏற்றது, காவல் துறை சேவைக்கும் நடுநிலை, நேர்மை ஆகியவற்றிற்கு எதிரானது எனவும், ஐபிஎஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
“இச்சம்பவம் சிக்கலாக்கப்படுகிறது. ஆனால், ராமர் கோவில் குறித்து இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினரிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்வதில் எந்தவித தவறும் உள்ளது என நான் கருதவில்லை. நான் உறுதியேற்றதிலும் எந்த தவறும் இல்லை”, என சூர்யகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
உறுதியேற்றதோடில்லாமல் " ராமர் கோவில் கட்டுவது முக்கியம்" என அவர்  வக்காலத்து வாங்கியும் அறிக்கை  வெளியிட்டுள்ளார் .
இந்நிலையில், சூர்ய குமாரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதன்மை செயலாளர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.  
ஆர்.எஸ்.எஸ் தனது அடியாட்களை உயர் அரசுப் பதவிகளில் உட்காரவைத்து வருவதுதான் இது போன்ற செயல்கள் நடக்க காரணம்.இவர்களிடமிருந்து இந்திய மக்கள் என்ன சமூக நீதியைபெற முடியும்.?

========================================================================================

ன்று,
பிப்ரவரி -05.

  • தென் கரோலினா, அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலமானது(1778)
  • மெக்சிகோ அரசியலமைப்பு தினம்(1917)
  • ரீடர்ஸ் பைஜஸ்ட், மாத இதழின் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது(1922)
  • ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது(1960)
  • ==========================================================================================
11 ரூபாய்"கழிவு பார்சல்' ஒன்னேய்  .
 ஈரோட்டில் உள்ள உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம். 
மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும்போது, கழிவறையை உபயோகிக்க வேண்டும் என எண்ணினால், ஏதேனும் பொது கழிவறை அருகில் உள்ளதா என தேடுவோம். 
அப்படி இல்லையென்றால், அருகிலுள்ள உணவகங்களுக்கு சென்று அங்குள்ள கழிவறையை பலரும் பயன்படுத்துவர். இதற்கு உணவகங்களில் கட்டணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். 
ஆனால், இனிமேல் உணவகங்களுக்கு சென்று கழிவறையை பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் போல.
ஏனென்றால், சமீபத்தில் ஈரோட்டில் உள்ள ’ருக்மணி அம்மாள் ஃபுட்ஸ்’ எனும் உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி, பார்சல் கட்டணம் எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம். 
அந்த கட்டணத்தின் புகைப்படத்தை அவர்  சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
அந்த கட்டணத்தில், கட்டணம் ரூ.10, பார்சல் கட்டணம் 50 பைசா, மாநில ஜிஎஸ்டி 26 பைசா, மத்திய ஜிஎஸ்டி 26 பைசா, என மொத்த கட்டணம் 11 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
கழிவறையை உபயோகித்ததற்காக ஜிஎஸ்டி வரியுடன் பில் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிர்வை தந்துள்ளது.
அவரது கழிவையா பார்சல் செய்து கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?