வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சாதாரண வார்டுக்கு மாற்றமா?


''சமூகத்தை பாதிக்கும் விஷயங்களில் கருத்து சொல்லும் உரிமை வல்லுநர்களுக்கு மட்டும்தான் உண்டு என்று நாம் நினைத்துக்கொள்ளக்கூடாது''  
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இந்தியாவை தொடர்ந்து பதித்து வரும் மோடி-அருணஜெட்லீ வரவு செலவு தாக்கல் பற்றி நாம் எந்த பொருளாதார பள்ளியிலும் படிக்காமல் விமர்சிக்க ஐன்ஸ்டின் வார்த்தைகள்தான் உந்துதல்.
கண்டிப்பாக இரட்டையர் தாக்குதலில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இந்தியன் என்கிற முறையில் அதை விமர்சிக்கும் உரிமை உண்டு.
 மோடி அரசின் பட்ஜெட் தொடர்ந்து இந்திய மக்களுக்கு எதிராகவும் 1% மட்டுமே உள்ள பெருநிறுவனங்கள் ,பெருந்தனவான்கள் ஆதரவாகவும் அமைவது இந்தியர்களே( பாஜகவுக்கு )வாக்களித்து சொந்த காசுகள் வைத்துக்கொண்ட சூனியம்தான்.

ஏற்கனவே 4,00,000ம் கோடிகள் மோடி அரசு அமைக்கப்பட்டதில் இருந்து கர்ப்பரேட்களுக்கு கார்ப்பரேட் வரிசலுகையாக அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது மேலும் 5%வரி விலக்கு.
ஆனால் மாத ஊதியம் பெற்று வாழும் மக்களுக்கு வருமானவரி சலுகை கிடையாதாம்.
ஏற்கனவே விலைவாசி உயர்வு,80 நோக்கிய பெட்ரோல்,இருமடங்கு பேருந்து கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு சலுகை இல்லையாம்.
ஒவ்வொருவரும் தற்போது பணியிடம் சென்று- வர  மாதம் குறைந்தது மூவாயிரம் செலவாகிறது.இரு சக்கர வாகனம் என்றால் பெட்ரோல் விலை,பேருந்தில் சென்றால் இருமடங்கு அதிக கட்டணம்.
பெட்ரோல்-டீசல் கட்டண உயர்வால் மறைமுகமாக உயரும் பொருட்களின் விலைகள் ஆக இந்த பட்ஜெட் மாத சம்பளக்காரர்களுக்கு வேதனைதான் தரும்.
அம்பானி,அதானி வகையறாக்களுக்கு உலக பணக்காரர்கள் பட்டியலில் மேலும் முதலிடம் நகர வழி வகுக்கும்.

2018 பட்ஜெட் ‘ஜூம்லானாமிக்ஸ்’ தவிர வேறொன்றுமில்லை. (ஜூம்லானாமிக்ஸ் என்பது, தேர்தல்கால மோடியின் பசப்பு  வாக்குறுதிகள் ஆகும்) 
ஏனெனில், மக்களுக்கு ஏராளமான சலுகைகளை அளித்திருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், உண்மையில் மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை.பட்ஜெட் என்பது அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். 
ஆனால் இந்தப் பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்திருப்பதையே பார்க்க முடிகிறது. அதன் காரணமாக நாட்டில் வேலையின்மை அதிகரிக்கும், மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
நேரடி வரியைக் குறைத்திருக்கிறார்கள். 
அதன்மூலம் பணக்காரர்களுக்கு சலுகைகள் அளித்திருக்கிறார்கள். அதே சமயத்தில் சாமானிய மக்களையும், நடுத்தர மக்களையும் கசக்கிப் பிழியக்கூடிய விதத்தில் மறைமுக வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
சுகாதார இன்சூரன்ஸ் குறித்து பட்ஜெட் அளந்திருக்கிறது. இது ஒன்றும் புதிது அல்ல. 
ஏற்கனவே இருப்பதுதான். இதுபோன்ற சுகாதார இன்சூரன்ஸ், பயிர் இன்சூரன்ஸ் போன்றவற்றால் நடைமுறையில் அதனை நடத்தி வரும் கார்ப்பரேட் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குத்தான் லாபமேயொழிய, அதனால் பயனாளர்களுக்குப் பெரிதாக ஒன்றும் இருக்கப்போவதில்லை. 

இதை நாம் அனுபவரீதியாகப் பார்த்து வருகிறோம்.பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்திற்குள் ஏழரை ரூபாய் உயர்த்திவிட்டு 2 ரூபாய் குறைத்திருப்பதன்மூலம் உண்மையில் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

உண்மையில் இந்த பட்ஜெட் விவசாயிகளின் நலன்கள்குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை குறுவைப் பருவத்திற்கு மட்டும் அறிவித்திருக்கிறார்கள். அதுவும் சில மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டி இவ்வாறு அறிவித்திருக்கிறார்கள். 

அதன்பின் என்ன ஆகும் என்று தெரியவில்லை.மொத்தத்தில் இந்த பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட், விவசாயிகள்விரோத பட்ஜெட். அதே சமயத்தில் சர்வதேச மூலதனம் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளுக்கு மேலும் சலுகைகள் அளித்துள்ள பட்ஜெட்டாகும்.

வழக்கம் போல அவர்களை ஏமாற்றுவதாகவும், கார்ப்பரேட் முதலாளிகளையும் மகிழ்விப்பதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.மற்றொரு புறம், வருமான வரி துவங்கி,உற்பத்தி, ஏற்றுமதி- இறக்குமதி வரி, விற்பனை வரி, செஸ் வரி அனைத்து வரிகளும்பல மடங்கு பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டி ருப்பது, சாதாரண- நடுத்தர மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளது.

 வரிகள் உயர்வால் விலைவாசி கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ. 5 லட்சம் ஆக்கப்படும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும்இல்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. 

இது நடுத்தர மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. 60 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி கிடையாது; ரூ. 2.50 லட்சம் முதல், ரூ. 5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவிகிதம் வரி, ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவிகிதம் வரி, ரூ. 10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவிகித வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோர் இதுவரை செலுத்தி வந்த செஸ் வரி 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பது, அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
1 சதவிகிதம் உயர்த்தப்பட்ட செஸ் வரியின் மூலம் 11 ஆயிரம் கோடியை, நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களிடமிருந்து பறிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

முதலீட்டு நிதி மீது 10 சதவிகிதம் வரி


முதலீட்டாளர்கள் மீதும் கூடுதல் வரி ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 12 மாதங்களுக்கும் மேற்பட்ட பங்கு பரஸ்பர நிதிகளுக்கு வரி கிடையாது. 
இனிமேல் அதற்கும் வரி விதிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி 2018 ஜனவரி 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்கு வரி கிடையாது. 
ஆனால், இனி ரூ. 1 லட்சத்திற்கு மேலான வருவாய் பெறும் நீண்டகால முதலீட்டு ஆதாயத்திற்கு 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. இது பங்குச் சந்தை சார்ந்த தொழிலில் இருப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், கலால் மற்றும் சுங்க வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்விக்கான செஸ் வரியும் 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல்ஸ் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி டிவி பேனல்கள், உதிரிபாகங்களின் சுங்கவரி இரு மடங்காக பட்ஜெட்டில் உயர்த்தப் பட்டுள்ளது. முன்பு 7.5 சதவிகிதமாக இருந்த சுங்கவரி தற்போது 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக்கான சுங்க வரியும் 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
இத னால், பல்வேறு இறக்குமதி பொருட்களின் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டது. அது நடந்திருக்கிறது. ரூ.50 கோடி வருவாய் ஈட்டும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25 சதவீத வரிச் சலுகை ரூபாய் 250 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கும் அள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.சிறு, குறு தொழில்கள் எதிர்பார்த்த சலுகை களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி-க்கு பிறகு நலிவடைந்திருக்கும் சிறு, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு சாதகமான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முத்ராதிட்டத்தின் கீழ் ரூ. 4.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் கடன் இலக்கு ரூ. 3 லட்சம் கோடி என்பதைத் தாண்டியமற்ற அறிவிப்புகள் இல்லாதது தொழில்முனைவோருக்கு ஏமாற்றத் தை அளித்துள்ளது.

l
 தூய்மை இந்தியா : 2 கோடி புதிய கழிப்பறைகள்
l அனைவருக்கும் வீடு : 51 லட்சம் புதிய வீடுகள்
l கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ. 14 கோடியே 34 லட்சம்.
l 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு இலவசமின் இணைப்பு.
l 8 கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு.
l கல்வித் தரத்தை மேம்படுத்த
13 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி.
l பழங்குடியின பகுதிகளில் நவோதயா பள்ளிகளின் தரத்திற்கு இணையாக மாதிரி பள்ளிகள்.
l பி.டெக் மாணவர்கள் 1000 பேர் பி.எச்டி படிக்க உதவி.
l பழங்குடி குழந்தைகள் கல்விக்கு ‘ஏகலைவா’ திட்டம்.
l பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள்
l பழங்குடியினருக்கான சமூக பொருளாதார பாதுகாப்புக்கு ரூ. 39 ஆயிரத்து 135 கோடியில் திட்டங்கள்.
l தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரூ. 56 ஆயிரத்து 619 கோடியில் 279 திட்டங்கள்
l முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் கோடி கடன்.
l 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
l 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.
l வயதான பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம்.
l வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் பணிக்கு சேர்ந்த 3 ஆண்டுகளில் 8% மட்டும் செலுத்தும் வகையில் சலுகை.
l ஸ்மார்ட் சிட்டி : ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் கோடி நிதி
l குஜராத் மாநிலம் வதோதராவில் ரயில்வே பல்கலைக்கழகம்
l ஜவுளித் துறை மேம்பாட்டுக்கு ரூ. 7 ஆயிரத்து 140 கோடி
l சுற்றுலாத்துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி
l சர்வதேச எல்லைகளில் சாலை வசதி
l அம்ருத் திட்டத்தின் கீழ் நகரங்களுக்கு நீர் விநியோகிக்க ரூ. 77 ஆயிரத்து 640 கோடி
l மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை அடுத்த ஆண்டு கொண்டாட ரூ. 150 கோடி


இரண்டுமடங்கு கூடுதல் சுங்க மற்றும் கலால் வரி உயர்வால் விலை உயரப்போகும் பொருட்கள்
இறக்குமதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள், மொபைல் போன்கள், வெள்ளி, தங்கம், காய்கறிகள், பழரசங்கள், ஆரஞ்சு, கிரான்பெரி, சன்கிளாஸ் (மூக்குக் கண்ணாடி), சோயா புரோட்டீன் தவிர்த்த சமையலுக்கு பயன்படுக்கும் பொருட்கள், 
பெர்பியூம், கழிவறை பொருட்கள், சன்ஸ்கீரன், சன் டேன், மணிகியூர், பெடிகியூர் லொஷன்கள், பற்பசை, பவுடர்கள், முகச்சவரம் செய்ய பயன்படும் பொருட்களுக்கான மூலப்பொருட்கள்,
 டியோடரன்ட்டுகள், 
பஸ், பட்டுத் துணி, காலணிகள், ஸ்மார்ட் வாட்ச், எல்சிடி, எல்இடி, டிவி பேனல்கள், 
நாற்காலி, மேசைகள், மெத்தைகள், விளக்கு, கைக்கடிகாரம், பாக்கெட் கடிகாரம், கடிகாரம், பொம்மைகள்.


 மு.க.ஸ்டாலின் இந்திய வரவு செலவு திட்டம் பற்றி 
'மத அடிப்படைவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, அரசுக்கு நெருக்கமான ஒருசில அமைப்புகள், அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு செயல்படுவது போன்ற காரணங்களால், ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 32-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 42-வது இடத்திற்கு சரிந்துவிட்டது. 
இந்நிலையில், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழகத்திற்குப் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள், ஒக்கி புயல் பேரிடர் நிவாரண நிதி போன்றவை குறித்து நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. 
குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரில் கொடுத்த தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்களில், ஒரு திட்டத்துக்குக்கூட இந்த நிதிநிலை அறிக்கையில், நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி போன்ற சில அறிவிப்புகள் இடம்பெற்றிருப்பது வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் என்றாலும், பா.ஜ.க. அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு என்று அறிவித்திருந்த எய்ம்ஸ் மருத்துமனை இதுவரை வரவில்லை என்பதும், "ஸ்மார்ட் சிட்டிகள்” செயல்வடிவம் பெறவில்லை என்பதும், இந்த அறிவிப்புகளின் மீதான நம்பகத்தன்மையை வெகுவாகக் குறைக்கிறது. 
ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் “ஹெல்த் இன்சூரன்ஸ்” என்ற அறிவிப்பு, ஏழைக் குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றாலும், ஏழை மக்களின் மருத்துவச் சிகிச்சைகளுக்கான இதுபோன்ற மருத்துவக் காப்பீடுகள், கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2009-ம் ஆண்டிலேயே செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன். 
அதேநேரத்தில் இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படும் நிதித் தேவைக்காக, நிதி நெருக்கடி நேரத்தில் மாதாந்திர சம்பளம் வாங்குவோரிடம் பிடித்தம் செய்யப்படும் “செஸ்” போல தற்போது பிடித்தம் செய்வது தவறான அணுகுமுறை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவோம்”, என்று கூறியிருக்கும் மத்திய நிதியமைச்சர், கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் பரிதாபநிலை பற்றிப் பரிவுடன் கவனித்து, அவர்களின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யத் தவறிவிட்டதோடு, விவசாயிகளின் முன்னேற்றத்துக்குத் தீர்வு காணாததும் ஏமாற்றமளிக்கிறது. 
கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கி, மிகப்பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டிய பல கோடிக்கான இலட்சம் ரூபாய் வராகடன் குறித்து, கனத்த மௌனம் காக்கும் மத்திய அரசு, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயப் பெருமக்களை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பது வேதனையளிப்பதோடு, ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் மத்திய அரசின் பாகுபாட்டையும் வெளிக்காட்டுகிறது. 
மாதாந்திரச் சம்பளம் பெறுவோருக்கு 40 ஆயிரம் ரூபாய் “ஸ்டாண்டர்டு டிடெக்சன்” என்று வருமான வரிச்சலுகை அளித்துவிட்டு, இன்னொரு பக்கம் கொடுத்த சலுகையைத் தட்டிப்பறிப்பதுபோல், மாதச் சம்பளம் வாங்குவோரின் பயணப்படி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு ஏற்கெனவே இருந்த வருமான வரி விலக்கைத் திரும்பப் பெற்றுள்ளது நியாயமற்றது. மக்கள் சேவை செய்யத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று அறிவித்துவிட்டு, இன்னொரு புறம் மாதச் சம்பளம் வாங்குவோரிடமிருந்து “சுகாதாரம் மற்றும் கல்வி”, ’செஸ்’ என்று நான்கு சதவிகிதம் வசூல் செய்வது பாரபட்சமானது.
மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செய்யும் மருத்துவச் செலவுகளுக்கு விதிவிலக்கு என்று அறிவித்துவிட்டு, இன்னொரு புறம் அவர்கள் பரஸ்பர நிதிகளில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புப் பயன்களுக்கும் வரி விதித்திருப்பது, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மன உளைச்சலைத் தரும் செயலாகும். 
பட்ஜெட்டுக்கு மக்கள் பரிசு. 5 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி

வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயரும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. வீட்டுக்கடன் வட்டி விலக்கு உயரும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்குத் திட்டம் எதுவுமில்லை. 
எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரையிலான நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இயலாமல், இறுதிவரை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு போராடிக்கொண்டிருக்கிறது என்பதும், நிதிநிலைச் சீர்திருத்தம் எதையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதும் மத்திய நிதியமைச்சரின் உரையில் எதிரொலித்திருக்கிறது. இத்த நிதிநிலை அறிக்கையில், நாட்டுமக்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவும் இல்லை, வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் நிறைவையும் தரவில்லை. 
ஆகவே மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு “அலங்கார அறிவிப்புகளின்” தொகுப்பே தவிர, கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி, இரண்டு கோடிப் பேருக்கு அர்த்தமுள்ள வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்யவோ, இந்தியப் பொருளாதாரத்தை ஏற்றமிகு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கவோ முனைப்புள்ள திட்டங்கள் ஏதும் தென்படவில்லை.
கடந்த 2014 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன, இந்த நான்கு வருடத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் என்ன, நிறைவேற்றியது என்ன என்பதையெல்லாம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஒருமுறை "சுயப்பரிசோதனை” செய்து கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம். அப்படி உண்மையிலேயே சுயப்பரிசோதனை செய்துகொண்டால், வாக்காளர்களுக்கு வெற்று வாக்குறுதிகளையும், வீண் முழக்கங்களையும் கொடுத்துத் தொடர்ந்து திசைதிருப்பி வருவது, அவர்களது மனசாட்சிக்கே தெள்ளென விளங்கும். 
மத்தியரசு கார்பரேட் கம்பெனிகளுக்கு காங்கிரஸ் ஆட்ச்சியில் 40% இருந்ததை 30%க்கு குறைத்து இன்று  25%ஆக்கி விட்டது இந்த கார்ப்பரேட் ஆடசி. வரா கடன்களை தள்ளுபடி செய்யுது.
இதனால்தான் கார்பரேட்கள் வழங்கிய நிதியில் பாஜகவுக்கு 87%போகிறது.
ஆனா நடுத்தர மக்களுக்கு வருமானவரி சலுகை கொடுக்க மட்டும் மனம் இல்லை.
ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் மக்களிடமிருந்து வரியை பிடுங்கி பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு லடசக்கணக்கில் சம்பளம் வாரி வழங்குகிறார்கள்.
       "அவசரப்பிரிவில் இருந்த இந்திய பொருளாதாரம் சாதாரண வார்டுக்கு மாற்றம்" -தமிழிசை 
                                                                                                                                      பட்ஜெட் பற்றி.
                                     மூன்றாண்டுகளாக அவசரப்பிரிவில் வைக்கக் காரணமே  மோடி அரசுதானே.
ஜெயலலிதாவை கூட சாதாரணப்பிரிவுக்கு மாற்றம்.இட்லி தின்றார்.அல்வா தின்றார்,டாட்டா போட்டார்  என்றுதான் அடிமைகள் சொன்னார்கள்.
                                                                                                                                   ஆனால்  முடிவு.?
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-02.


  • முதன்முதல்  மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)
  • மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது(1848)
  • ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1934)
  • ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது(1946)
======================================================================================