தீ........ர்ப்பு?

1989ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகு, 1990ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 
அப்போது மேட்டூர் அணைக்கு 205 டிஎம்சி திறந்துவிட வேண்டும் என அடுத்த ஆண்டே நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 
தமிழர்களுக்கு எதிரான வன்முறை கும்பல் 

இந்த உத்தரவை அடுத்து கர்நாடகத்தில் பெரும் போராட்டம் வெடிக்க தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
ஆறு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 1998ல் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே இப்பிரச்சனை புகைந்து கொண்டே இருந்தது.
இறுதியில், தமிழகத்திற்கு 192 டி எம் சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பு அளித்தது. 
ஆறு ஆண்டுகள் கழித்து 2013 ஆம் ஆண்டு இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1990 - வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
1991 - மேட்டூர் அணைக்கு 205 டி எம் சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது நடுவர் மன்றம்.
1998 - ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்கு காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பு.
2007 - தமிழகத்திற்கு 192 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு.
2013- மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால், 192 டி எம் சி தண்ணீர் போதாது என்றும், கூடுதலாக 50 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில், தமிழகத்திற்கு 192 டி எம் சி தண்ணீர் தர முடியாது அதனை 132 டி எம் சியாக குறைக்க வேண்டும் என்று கோரி மேல் முறையீடு செய்தது.
தமிழக அரசைப் போல கேரளா மற்றும் புதுச்சேரியும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
இந்த அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. முன்னதாக இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க, இந்த வழக்குகளை விசாரிக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டிஎம்சி தண்ணீரோடு, இந்த 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக வழங்க வேண்டுமெனக் கூறினர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டி.எம்.சி.என்பது அடிக்கடி பேசப்படும் வார்த்தையாக உள்ளதே .அதைப்பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்.?
Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு  டிஎம்சி - 1 பில்லியன் கன அடி ஆகும். 

கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை அடைக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவு. அப்படி பார்த்தால்  ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம். 

டிஎம்சி அளவிடும் முறை :

கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும்.

அந்த  மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட வேண்டும் . 
ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிட்டால் கிடைப்பதே கன அடி.

டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் : 

ஒரு டிஎம்சி லிட்டர் அளவையில் பார்த்தால்  100 கோடி லிட்டர்கள் ஆகும்.


------------------------------------------------------------------------------------------------------------
கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள  10 முக்கிய அம்சங்கள்.
1. இரு மாநிலங்களுக்கு இடையே பாய்ந்தோடும் நதிகள் அனைத்திற்கும் எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது. அவை தேசிய சொத்தாகும்.
2. காவிரி நீரை இரு மாநிலங்களும் தகுந்த முறையில் பிரித்துக்கொள்வதே சரியானதாக இருக்கும்.
3. தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த 192 டிஎம்சி தண்ணீரில் 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்.
4. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டி எம் சி தண்ணீரோடு, 14.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்படும்.
5. இந்த 14.75 டிஎம்சி நீரில் 4.75 டிஎம்சி நீர் பெங்களூர் நகரின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக ஒதுக்கப்படுகிறது.
6. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
7. கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மாற்றமில்லை.
8. காவிரி நீர் தொடர்பாக மைசூர் அரசுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1892லும் 1924லும் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும்.
9. தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுமார் 20 டிஎம்சி நீர் இருப்பதை காவிரி நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.
10. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பற்றி மேல்முறையீடு செய்ய முடியாது.
மேல்முறையீடு செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் எதற்கு ஏற்கனவே வழங்கப்பட்டஒதுக்கீடு செய்த 192 டிஎம்சி தண்ணீரில் 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என்று கூற வேண்டும்.இழப்பை எங்கு போய் கேட்பது.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்பே கூறியும் அமைக்க மறுத்து வரும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன்? 
இரு மாநிலங்களுக்கு இடையே பாய்ந்தோடும் நதிகள் அனைத்திற்கும் எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது. அவை தேசிய சொத்தாகும் என்று விளக்கும் நீதிமன்றம் கர்நாடகாவுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட 270 தி.எம்.சி.தண்ணீர் போதாது என 14.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்க உத்திரவிடுவதும்,தமிழகத்திற்கு உள்ள நீரை குறைப்பதும் ஏன்?
14.75 டி.எம்.சி.பெங்களூரு நகர குடிநீருக்காக நீர் ஒதுக்கியிருப்பதாக கூறுகிறார்கள்.ஆனால் இதுவரை பெங்களூருக்கு நீரை தந்த அலமாட்டி அணை முழுக்க  ஆண்டுக்கு இருமுறை நீர் நிரம்புகிறது.
கர்நாடகாவில் காவேரி போல் பல ஆறுகள்,நீர் ஆதாரங்கள் உள்ளதும்,தமிழ் நாட்டில் காவேரி மட்டுமே உள்ளத்தையும்.மற்ற நீர் ஆதாரங்கள் இல்லாததையும் கவனத்தில் கொள்ளாதது ஏன்?
இப்படி உச்ச்ச நீதிமன்றம் தீர்ப்பு கர்நாடகாவுக்கு ஆதரவாகவே போயுள்ளது.காரணம் அங்கு நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கிரசுக்கும் -பாஜவுக்கும்தான் கடும் மோதல்.
அதை நோக்கியே தீர்ப்பும் நகர்ந்துள்ளது.
கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு 177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.



தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :

தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2,800 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும் 

'தமிழகத்தை பொருத்தவரை இந்த தீர்ப்பு ஒரு பாதகமான தீர்ப்பு. 
நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று முன்பு உத்தரவிடப்பட்ட தீர்ப்பே தமிழகத்துக்கு பாதிப்பு உண்டாக்கிய நிலையில், தற்போதைய தீர்ப்பில் மேலும் 14.75 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மேற்கு நோக்கி ஓடும் நதிகளில் ஏறக்குறைய 2000 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. 

அதில் இருந்து நீர் எடுத்து அம்மாநில குடிநீருக்காக பயன்படுத்தலாம். 
ஆனால், தமிழகத்துக்கு காவிரி நதிநீரைவிட்டால்  வேறு நீர் ஆதாரம் இல்லை என்பது உலகறிந்த செய்தி.இதை நீதிமன்றம் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.அல்லது அதிமுக அரசு இதை நீதிமன்றத்திடம் உரிய முறையில் சொல்லவில்லையா?
மேலும் இன்றைய தீர்ப்பில், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றமே ஒரு காலக்கெடு கூறியிருக்கலாம். தற்போது குடியரசு தலைவரின் கீழ் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு இது தொடர்பான அதிகாரம் உள்ளது.ஆனால் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து மறுத்துதான் வருகிறது.
அதற்கு காரணம் பாஜக ஆடசிக்கு வரும் வாய்ப்பு கர்நாடகத்தில்தான் உள்ளது.தமிழ் நாட்டில் நோட்டவையே எதிர்த்து வெல்ல முடியா நிலை உள்ளது.பின் எப்படி வாரியம் அமைக்கும்?தமிழ் நாட்டுக்கு உரிய பங்களிப்பை பெற்றுத்தர முயற்சிக்கும்.?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?