வரும் முன் காப்போம் !
புகையிலைப் பொருட்கள் உட்கொள்ளும் பழக்கத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஓரளவு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
பாரிஸில் உள்ள சோர்போன் பாரிஸ் சைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் நடுத்தர வயதில் உள்ள பெண்களின் உணவுமுறை ஐந்து ஆண்டு காலம் கண்காணிக்கப்பட்டது.

ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.
கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் உள்ளிட்டவற்றை அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்ற வகையில் சேர்த்து ஆய்வு செய்துள்ளனர்.
கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் உள்ளிட்டவற்றை அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்ற வகையில் சேர்த்து ஆய்வு செய்துள்ளனர்.
- தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் மற்றும் பன்கள்
- மொருகலான நொறுக்குத் தீனிகள்
- இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள்
- சோடா மற்றும் குளிர்பானங்கள்
- இறைச்சி உருண்டைகள்
- இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகள்
- குளிர் பதன வசதியில் சேமிக்கப்பட்ட இறைச்சி
- சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பில் செய்யப்பட்ட உணவுகள்
இந்த ஆய்வு எச்சரிக்கை செய்தாலும் ஆரோக்கியமான உணவு முறையே புற்றுநோய் அபாயத்தைத் தவிர்ப்பதற்கான வழி என்றும் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், அவர்கள் உண்ணும் உணவுகளின் விகிதத்தில் 10% அதிகரித்தது என்றும் கண்டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 12% அதிகரித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
- சராசரியாக 18% மக்கள் உட்கொண்ட உணவுகள் அதிக அளவு பதப்படுத்தப்பட்டிருந்தன.
- சராசரியாக, ஆண்டொன்றுக்கு 10,000 பேரில் 79 பேருக்கு புற்றுநோய் வந்தது.
- உட்கொள்ளும் உணவுகளில் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை 10% அதிகரித்தால் ஆண்டுக்கு 10,000 மக்கள் தொகையில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில் ஒன்பது கூடியது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாகா அதிகரித்து வரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்புகளின் அதிகரிக்கும் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், இன்னும் பெரிய அளவில் ஆய்வு செய்யப்பட்டு இந்த முடிவுகளை முற்றிலும் சரியானது என உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
"பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் பருமன் புற்றுநோயை உண்டாக்கும்.ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதற்கான எச்சரிக்கை மணியாகவே இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.
அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை என்பதற்கான தெளிவான வரையறையை இதுவரை ஆய்வாளர்கள் முடிவு செய்யவில்லை .
நொறுக்கு தீனி சாப்பிடுவது மட்டுமே புற்றுநோய் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது.
பல முக்கிய காரணங்களில் ஒன்று நொறுக்கு தீனி. அதிக அளவில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ள பிஸ்கட், சிப்ஸ், பொறிக்கப்பட்ட கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள் மற்றும் செயற்கை வண்ணங்களை கொண்ட ரசாயன பழச்சாறுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு வரும் குழந்தைகள், ஆரோக்கியம் இல்லாமல், இளவயதில் புற்றுநோய் நோயாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பல கடைகளில் தந்தூரி சிக்கன் என்ற பெயரில் கோழி இறைச்சி மீது பல விதமான ரசாயனங்களை தடவி, எண்ணெய்யில் பொறித்து விற்கிறார்கள்.
குழந்தைகளுக்கு தேவையற்ற அளவில், பக்கெட் சிக்கன், சிக்கன் 65, சில்லி சிக்கன் என பல பெயர்களில், இந்த கோழி இறைச்சி விற்கப்படுகிறது.
முதலில் கோழி பிராய்லர்களில் வளர்க்கப்படும் முறையே ரசாயன மருந்துகள்,ஊசிகள் மூலம்தான்.சாதாரண பிராய்லர் கோழி இறைச்சியே மனிதர்களுக்கு கெடுதல்தான்.
இது போன்ற முறையில் சமைக்கப்படும் உணவுகளும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதும் முற்றிலும் ஆபத்தானது என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன.

தேவைக்கு மீறிய அளவில், பொறித்த துரித உணவுகள், பெரிய சூப்பர்மார்கெட்களில் கழிவு விலையில்(discount) விற்கப்படும் பிஸ்கட், கேக் போன்றவை, இலவச பொருட்களுடன் விற்கப்படும் தீனிகள் , திரைப்பட நடிகர்கள் , விளையாட்டு பிரபலங்கள் கோடிகளில் காசு வாங்கிக்கொண்டு கூலிக்கு விளம்பரம் செய்யும் ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்களை விளம்பரக்கவர்சியில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதைபெற்றோர்கள் தவிர்க்கவேண்டும்.
பெற்றோர்களின் உண்ணும் பழக்கம் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிறுவயதில் இருந்து குழந்தைகளிடம் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கும், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுக்கும் இருக்கும் வித்தியாசத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். இது போன்ற கவர்ச்சி சிப்பி உணவுகள் உடல் நலத்துக்கு கேடு என்பதை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டிய பொறுப்பு அல்லது கடமை பெற்றோர்களுக்கு உள்ளது..

இன்று,
பிப்ரவரி-20.
- சமூகநீதி தினம்
- தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம்(1876)
- ஹவாய் தீவில் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது(1901)
- அருணாசலப் பிரதேசம், அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமானது(1987)
- பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்.(2011)
மலேசியா வாசுதேவன்
மலேசியாவில், சத்து நாயர் -- அம்பாள் தம்பதிக்கு மகனாக, 1944 ஜூன், 15ல் வாசுதேவன் பிறந்தார்.
மலேசிய தமிழர் இசைக் குழுவில் பாடகராக இருந்தார்.
பின்னர் சென்னை வந்த இவர் திரைப்பட ங்களில் நடிக்க ,பாட வாய்ப்புகளை தேடினார்.
ரத்த பேய் என்ற படத்தில், நடிகனாக அறிமுகமானார்.
ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் என்ற படம் மூலம் பாடகரானார். பாரதிராஜா இயக்கத்தில், 16 வயதினிலே படத்தில் சப்பாணி கமல்ஹாசனுக்கு பின்னணி பாடிய 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' பாடல் மூலம் மிகப்பிரபலாமானார்.
வாசுதேவன் மலேசியா வாசுதேவன் என்ற பெயரில் தமிழகம் முழுக்க பிரபலமானார்.
கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படத்தில் இவர் பாடிய "கட்ட வண்டி,கட்ட வண்டி "பாடல் ஒலிக்காத இடமே அன்றைய தமிழகத்தில் கிடையாது.அவ்வளவு பிரபலம் அப்பாடல்.
இதுவரை 8,000 பாடல்களை பாடியுள்ளார்.ஒரு கைதியின் டைரி உட்பட 85 படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
ஆனந்த் என்பவர் இயக்கிய"மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்திற்கு மலேசியா வாசுதேவன் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
சாமந்தி பூ, பாக்கு வெத்தலை உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.
2011, பிப்ரவரி 20 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
- =========================================================================================
முதலாளித்துவ அரசுகளின் நிதி ஒதுக்கீட்டை அந்தக்காலத்திலேயே கிணடலடித்துள்ளனர்.
நிலைமை முன்பை விட இன்னும் மோசம்தான்.