பட் "ஜெட்(லி )"யால் பயனடைவது யார்?


மத்திய நிதியமைச்சர், கார்ப்பரேட்டுகளின் வணிகத்தை எளிமைப்படுத்துகிறேன் என்றபெயரில் கார்ப்பரேட்டுகளும், சலுகைசார்முதலாளித்துவமும் நாட்டின் செல்வங்களைச் சூறையாட தமது பட்ஜெட்டில் வசதி செய்து கொடுத்துள்ளார். 
அதேசமயத்தில் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினரை கண்ணைக்கட்டி ஏமாற்றியுள்ளார். விவசாய விளைப் பொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கோரியும்,கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும் நாடு முழுவதும்விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்திவந்தன. 
ஆனால் அவை தொடர்பாக பட்ஜெட்டில் எதுவுமே சொல்லப்படவில்லை. 

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தபடி விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரைபங்கு சேர்த்து கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகளுக்கு உறுதிமொழி அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அதனை நாடு முழுவதும் அமல்படுத்த முன்வரவில்லை. 
மேலும் விவசாய விளைப் பொருள்களுக்கு அளித்துள்ள விலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தவறான தகவல்களைத் தாக்கல் செய்துள்ளார். 
விவசாயப் பொருள்கள் எதற்கும் உற்பத்திச் செலவினத்தில் ஒன்றரை பங்கு உயர்த்தி கட்டுப்படியாகும் விலை நிர்ணயம்செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.மேலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்தும் இந்த அரசு எதுவும் அறிவித்திடாமல் துரோகம் செய்திருக்கிறது. 
வேளாண் கடன் பத்து சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளபோதிலும் இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடுஎதுவும் கிடையாது. 
இவை வங்கிகளில் கடன்கள் வாங்குவதன் மூலமே மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதனால்விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை.
மேலும் விவசாயத்துறையில் விவசாயிகளின் பெயரால்யார் கோடிக்கணக்கான ரூபாய்கள் கடன்கள் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தோமானால், சிறிய மற்றும்நடுத்தர விவசாயிகளுக்கு 41 சதவீதம் கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. 
அதுவும் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய்க்கும் கீழேதான் கடன் தரப்பட்டிருக்கிறது. ஆனால் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டுகளும் அவர்களின் நிறுவனங்களுமே (சுமார் 14 சதவீதம்) கோடிக்கணக்கில் கடன் பெற்றிருப்பதைக் காணமுடியும்.
அடுத்ததாக விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை. 2
016-17இல் 15 சதவீதத்தினருக்கு வேலை கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தவர்களுக்கும் இன்னமும் கூலி கிடைக்கவில்லை. எட்டு மாநில அரசுகளுக்கு சென்றஆண்டுக்கான நிலுவைத்தொகையே மத்திய அரசு 1,555 கோடிரூபாய் அளித்திட வேண்டும். 
இவ்வாறு இத்திட்டத்திற்கு மிகவும் அற்பத்தொகையை மத்தியஅரசு ஒதுக்கிவருவதால் மாநில அரசுகள் பல்வேறுவிதங்களிலும் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. 
இதுகுறித்தெல்லாம் மோடி அரசின் பட்ஜெட் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து சொரணையற்று இருக்கிறது  மத்திய அரசு.
250 கோடிகளுக்கு அதிகமாக விற்பனையாகிற நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு இல்லை என வணிக இதழ்கள் குடம் குடமாய்க் கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் உண்மை என்ன? 1990களுக்கு முன்பு நிறுவன வரி 60 சதவீதம் வரை இருந்தது. 
உலகமய காலத்தின் ஆட்சியாளர்கள் மாற்றி, மாற்றி அதைக் குறைத்து 30 சதவீதத்திற்கு வந்து நிறுத்தியுள்ளார்கள்.தற்போதைய பிஜேபி அரசின் முதல் பட்ஜெட்டிலேயே 3 சதவீதம் குறைக்கப் பட்டது. அது மட்டுமல்ல, அதைப் படிப்படியாக 25 சதவீதத்திற்கு குறைப்போம் என்ற உறுதிமொழியும் தரப்பட்டது. ரூ.50 கோடி விற்பனைக்கு குறைவாக இருக்கிறநிறுவனங்களுக்கு 25 சதவீதம் என்று குறைக்கப்பட்டுவிட்டது.
 இந்தப் பட்ஜெட்டில்(2018) ரூ.250 கோடி விற்பனைத் தொகை என அந்த உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.50 கோடி லாபத்திற்கு குறைவாக ஈட்டுகிற நிறுவனங்கள் 5,06,294 என அரசு புள்ளிவிபரம் கூறுகிறது. ரூ.50 கோடி லாபத்திற்கு அதிகமாக ஈட்டுகிற நிறுவனங்கள் வெறும்2,532 தான். இங்கு நாம் விற்பனைத் தொகைக்குப் பதிலாக இலாபம் என்ற அளவுகோலை எடுத்துக் கொண்டுள் ளோம். 
எனவே பெரும்பாலான சிறு, குறு நிறுவனங்களுக்கு இந்த பட்ஜெட்டில் புதிதாக ஏதுமில்லை. 800 பெரிய நிறுவனங்களுக்கே இந்த 5 சதவீதக் குறைப்பு தரப்பட்டுள்ளது. 
என்ன பொருள்... 2014-15 பட்ஜெட்டில் அறிவித்த இலக்கை நோக்கி நகர்கிறோம் என்கிற சமிக்ஞைதான்; ஆனாலும் தொழிலதிபர்கள் செல்லமாக சிணுங்குகிறார்கள்.அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் 21 சதவீதத்திற்கு (35 சதவீதத்தில் இருந்து) நிறுவன வரியைக் குறைத்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். 
இதில் வேடிக்கை என்னதெரியுமா? 
30 சதவீதம் என்பது நிறுவன வரி விகிதம் என்றாலும் 500 கோடி ரூபாய்க்குமேல் லாபம் ஈட்டுகிற நிறுவனங்களிடம் வசூலாகிற வரிகள் 23.94 சதவீதம்தான் (இந்து நாளிதழ் - பிப்ரவரி 2, 2018) ஏற்கெனவே 25 சதவீதத்திற்கு கீழ்தான் இவர்கள்செலுத்துகிற வரிகள் உள்ளன.
 முன்பெல்லாம் ‘வரிச்சலுகைகளால் இழக்கப்படும்வருமானம்’ என்ற பட்டியல் பட்ஜெட்டில் தரப்படும். 
தற்போது அதன் பெயர் ‘மத்திய வரிமுறைமையிலுள்ள வரிச்சலுகைகள் வருமானத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம்’ என்று மென்மையாக மாற்றப்பட்டுள்ளது. 
அதில் நிறுவன வரிச் சலுகைகளால்ஏற்படும் தாக்கம் (மென்மையாகச் சொன்னால்) ரூ.1,65,000 கோடிகள் ஆகும்.

உலகிலேயே பெரிய திட்டம்.
10 கோடி குடும்பங்களுக்கு உடல்நலக் காப்பீடு என்ற அறிவிப்பை “மோடி கேர்” என்கிறார்கள். அதற்கு பணம் எங்கே?2016ல் இதேபோல ரூ.1 லட்சம் மருத்துவக் காப்பீடு என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு மறந்து போனது. 
இராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனாவிற்கு ரூ.2000 கோடி (2018-19) ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1400 கோடி ஒதுக்கீடாக இருந்தது. 
ரூ.600 கோடி மட்டுமே உயர்வு. சுகாதார அமைச்சகத்திற்கான ஒதுக்கீடும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இவர்கள் அறிவித்திருக்கிற திட்டத்தை அமலாக்க 1,20,000 கோடிகள் தேவைப்படலாம் என சுகாதார பொருளாதார நிபுணர் இந்திராணி முகாபாத்யாயா மதிப்பிட்டுள்ளார். இன்சூரன்ஸ் நிறுவனங்க ளுக்கு குறைந்தபட்சமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.5000லிருந்து அதிகபட்சமாக ரூ.15000 தர வேண்டி வரலாம். இதற்கெல்லாம் எங்கே போவது! 
ஏற்கெனவே பயிர்க்காப்பீட்டில் 2016-17ல் 22009 கோடி ரூபாய்களை வாங்கிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதில் 10000 கோடி ரூபாய் இலாபம் பார்த்துவிட்டார்கள். 
உடல்நலக் காப்பீடு இன்னொரு மடை மாற்றமா? 
கணக்குகளுக்குள் உள்ள கணக்குகளுக்கு விடை வேண்டாமா?
பட்ஜெட்டில் விவசாயிகள் நலன்?
 ரேகா என்ன ஆச்சு?
பட்ஜெட்டில் விவசாயம் பற்றி நிறையப்பேசியுள்ள நிதியமைச்சர், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை பற்றி மூச்சுவிடவில்லை. 
ஆனால் கடந்த ஆண்டு 48,000 கோடிகளாக இருந்த ஒதுக்கீடு ரூ.55000 கோடிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் அருண்ஜெட்லி காலரைத் தூக்கிவிடாத ரகசியம் என்ன?2017 பட்ஜெட்டில் செய்யப்பட்ட ஒதுக்கீடு ரூ.48,000 கோடி. 
அதற்குப் பிறகு அதில் விழுந்த பள்ளம் ரூ.11,646 கோடி. ஆனால் கூடுதலாக ரூ.7000 கோடிகள் மட்டுமே தரப்பட்டது. போன ஆண்டு பள்ளத்தைக் கணக்கிற்கொண்டாலே ரூ.59,646 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால் ரேகா ஒதுக்கீடு விழுந்த பள்ளத்தை விட்டே வராததால் அருண்ஜெட்லி அடக்கி வாசித்துள்ளார்.விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவினத்தைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதற்குப் பணம் எங்கே? 
“சந்தை தலையீடு மற்றும் விலை ஆதரவுத் திட்டத்திற்கு” “ரூ.200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சகத்திற்கான மொத்தஒதுக்கீடே 3300 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது. அப்படியானால் எப்படிச் செய்வார்கள்? 
நிதிஆயோக்” மாநிலங்களோடு கலந்தாலோசித்து செய்யுமாம். விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்; 2006ல் அவர் தலைமையிலான கமிட்டி பரிந்துரைத்த அடக்க விலைக் கணக்கீட்டிற்கான சி2(உ2) என்கிற ஃபார்முலா எடுத்துக் கொள்ளப்படுமா? 
அவருக்கே சந்தேகம் வந்துவிட்டால் சாமானிய விவசாயிகளுக்கு அருண்ஜெட்லி சொல்வது எப்படி புரியும்?
=======================================================================================
ன்று,
பிப்ரவரி-03.
கின்னஸில் இடம்பெற்ற அண்ணா இறுதி ஊர்வலம்.

  • அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம், மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது(1690)



  • அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது(1783)


  • வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1930)



  • அறிஞர் அண்ணா இறந்த தினம்(1969)
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?