"ஊழல்,ஊழல்,ஊழல் "

தமிழக சட்டப் பேரவையில் முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தைதிறந்து வைத்ததன் மூலம் மிக மோசமானமுன்னுதாரணம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 
பல்வேறு சர்ச்சைகள் எழுந்தநிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், அவசர அவசரமாக ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ள விதம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஒருவரது உருவப்படம் திறக்கப்படுவது என்பது அசாதாரணமான ஒன்று அல்ல. அனைத்து உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றி கலந்து கொண்டு படத்துக்கு மரியாதை செலுத்துவது வழமை.
ஆனால் ஜெயலலிதா படம் பலத்த எதிர்ப்புக்கிடையில் வேண்டா வெறுப்பான உணர்வில் திறக்கப்படுகிறது.அதற்கு என்ன அவசரம்.குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று பதவி பறிக்கப்பட்ட ஒருவர் படத்த்தை மக்களாட்சி மகத்துவத்தை உணர்த்தும் இடத்தில் திறப்பது எவ்வளவு அசிங்கமான செயல்.

ஆனால் உச்சநீதிமன்றத்தால் முதல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை திறப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது. வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். 
பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகுமாரசாமி இந்த நால்வரையும் வழக்கிலிருந்து விடுவித்தார். இது பலத்த சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 
இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பானநால்வருக்கும் நான்காண்டு கால சிறைத்தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம்என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஜெயலலிதா உயிரோடு இல்லை என்ற காரணத்தினால் மட்டுமே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 
இந்த வழக்கில் அவர்தான் முதல் குற்றவாளி என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.ஏ2 குற்றவாளி சசிகலா, ஏ3 குற்றவாளி இளவரசி, ஏ4 குற்றவாளி சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஜெயலலிதாவின் படத்திறப்பை தவிர்ப்பதே பொருத்தமாக இருந்திருக்கும். சட்டப்பேரவை என்பது உயரிய மக்கள் மன்றம் ஆகும். 
வரலாற்றுப் புகழ்மிக்க பல்வேறு தீர்மானங்கள், சட்ட முன்வரைவுகள் இப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
பகிரங்கமாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரது படத்தை அவசர அவசரமாக திறந்து வைத்ததுஏன்? என்கிற கேள்வி எழுவது இயல்பானதே. 
இத்தகைய அவசரத்தை மக்களை பாதிக்கும்எந்தவொரு பிரச்சனையிலும் அதிமுக அரசுகாட்டியதே இல்லை. 
அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளன. 
அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அவமரியாதை செய்யும் நிகழ்வாகவே இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், துணை முதல்வர் போன்றவர்கள் ஜெயலலிதாவை வானளாவ புகழ்ந்துள்ளனர். 
அதிமுக கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்தை திறந்துவைத்து அவர்கள் பேசியிருந்தால் யாரும் ஆட்சேபிக்க போவதில்லை. 
சட்டமன்றம் ஒன்றும்அதிமுக பொதுக்குழு கூடும் இடமல்ல. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை திறக்கக்கூடாது என சட்டம் உள்ளதா என குதர்க்கம் பேசுகின்றனர் அதிமுகவினர். குற்றவாளிகள் படம் இடம்பெற வேண்டிய இடம் காவல் நிலையங்கள்,மற்றும் பேருந்து-ரெயில் நிலையங்கள்தாம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் குற்றவாளிகள் படத்தை திறப்பது குட்கா,தேர்தல் பணம் கொடுத்தல்,மற்றும் அரசின் பல்வேறுதுறைகளில் ஊழல் செய்துவரும் அதிமுக அமைசசர்களைப் பொறுத்தவரை சரியானது போல் தெரியவரலாம்.
ஆனால் அடுத்த தமிழகம் மட்டுமல்ல,இந்தியா முழுக்கவே தமிழ் நாடு சட்டமன்றத்தை இழிவாக பார்க்கும் நிலைதான் வந்துள்ளது.
அதிமுக தலைமை செயலகத்தில் திறக்கலாம் .ஒவ்வொரு தலைமை செயலக அரையிலும் ஊஹசல் குற்றவாளி ஜெயலலிதா படம் இருப்பதே கேவலமாக உள்ள நிலையில் ஊழலுக்கெதிராக சட்டம் ஏற்றும் தகுதியான இடத்தில் ஊழல் குற்றவாளி படம் திறப்பு.
இந்திய பிரதமரும் தற்போது அதிமுகவை வழி நடத்துபவருமான மோடியே இப்படம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டார் எதிர் கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஒருவருமே கலந்து கொள்ளா நிலையில் அவசரமாக அவைத்தலைவர் திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது.
இதில் முதல்வர் "ஜெயலலிதா திட்டப்படியே செயல்படும்  அரசு "என்று புளகாங்கிதமடைந்துள்ளார்.
 ஜெயலலிதா என்று செயல்படும் முதல்வராக இருந்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஒன்றே அவரின் செயல் வேகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுமே?
ஆனால் ஒன்று மட்டும் உறுதி அடுத்து வரும் ஆட்சியாளர்கள்,மக்கள் பிரதிநிதிகள் எடப்பாடி கொள்ளைக்குழு தலைவி படத்தை தீர்மான நிறைவேற்றி குப்பைக்கூடைக்கு அனுப்பும்.
அந்த மரியாதையை நடக்க வைப்பதுதான் எட்டப்பாடியின் நோக்கமாகக் கூட இருக்கலாம்.
திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தின் கீழ் உள்ள "அன்பு,அமைதி,வளர்சி" என்ற வார்த்தைகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் அடுத்த சட்டமன்ற கூட்டத்த தொடரின் விவாதப் பொருளாக இருக்க வேண்டும்.
 "ஊழல்,ஊழல்,ஊழல் " இதுதான் பொருத்தம்.
====================================================================================
ன்று,
பிப்ரவரி-14.
  • ஐ.பி.எம்., நிறுவனம் அமைக்கப்பட்டது(1924)
  • ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது(1946)
  • 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது(1961)
  • ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது(1966)
======================================================================================
"வாட்ஸ்அப்" 
புதிய அறிமுகங்கள்.

உங்ககிட்ட ஸ்மார்ட்போன் இருக்கா? 
அப்போ வாட்ஸ்அப் நெம்பர் சொல்லுங்க என்று சொல்லும் அளவுக்கு அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் இடம் பிடித்துவிட்டது வாட்ஸ்அப். 
இதற்குப் போட்டியாக டெலிகிராம், கூகுள் டியோ, ஹைக் என எண்ணற்ற சமூகவலைத்தள செயலிகள் இருந்தாலும், எவையும் தொட்டுவிடமுடியாத உயரத்தில் வாட்ஸ்அப் வளர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் அது முதலிடத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணம் தேவைக்கேற்ப புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பதுதான். 
அப்படி தற்போது வந்துள்ள வசதிகள் புதிய ரகமானவை.

வழக்கமான வாட்ஸ்அப் செயலியின் கிளை போல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதிக்கு தனியாக‘வாட்ஸ்அப் பிஸினஸ்’ என்றசெயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கை யாளர்களை எளிதாக தொடர்புகொண்டு, வர்த்தகம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.உலக அளவில் பல நாடுகளிலும் இந்த ஆப் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 
எனவே, இந்தியா மட்டுமல்லாமல் பிற நாட்டு வாடிக்கையாளர்களுடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.உற்பத்தியாளரோ விற்பனை யாளரோ நேரடியாக வாடிக்கை யாளருக்கு பொருட்கள் குறித்த விவரங்கள், விலை, சிறப்பு அம்சங்கள், காணொலிகள், படங்கள், புதிய அறிமுகங்கள் பற்றியும் தகவல் அனுப்ப முடியும்.வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தல், புதிய தள்ளுபடிகள், வாழ்த்துக்களை பரிமாறுதல் என பல விதத்திலும் வர்த்தகத்தை மேம்படுத்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.புதிய செயலியில் பாதுகாப்பிற்கு சில வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 
நீங்கள் சில எண்களை பாதுகாப்பு கருதி வேண்டாம் என்று எண்ணினால் அவற்றை தடுத்து கட்டுப்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்தி வரும் மக்கள் அதை அப்படியே பயன்படுத்த விரும்பினால் அப்டேட் மட்டும் செய்து கொள்ளலாம். 

தனியாக வேறு எண்ணில் பதிய விரும்பினால் இந்த புதிய செயலியை பதிவிறக்கம் செய்து வர்த்தகத்திற்கான எண்ணை பதிவு செய்து OTP பெற்று பயன்படுத்தலாம்.

பீம், பேடிஎம் போன்ற ஆப்களில் உள்ள UPI கேட்வே மூலம் பணம் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. வங்கி கணக்கு எண் விபரங்களைக் கொடுக்காமல் மொபைல் எண்ணை மட்டும் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய உதவும் இந்த வசதி, மற்ற ஆப்களைக் காட்டிலும் வாட்ஸ்அப்பில் எளிதாக அமையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்களும் வர்த்தக நோக்கர்களும் கருதுகின்றனர். இந்த வசதியை ICICI வங்கியுடன் இணைந்து வழங்குகிறது. 
வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்ய புதிய வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் வசதியை பணம் அனுப்புவோர் மற்றும் பெறுபவர் இருவரும் பெற்றிருக்க வேண்டும். அத்து டன் வாட்ஸ்அப் மொபைல் நம்பர்வங்கிக் கணக்குடன் இணைக்கப் பட்டு இருப்பதும் அவசியம்ஆகும். 70க்கும் மேற்பட்டஇந்திய வங்கிகள் UPI வசதியில் இணைக்கப்பட்டிருப்பதால் வாட்ஸ்அப் தரும் வசதி பயனுள்ளதாக இருக்கும்.இந்த வசதி தற்போதுதான் பயனருக்கு படிப்படியாக வழங்கப் பட்டு வருகிறது.
 செட்டிங்ஸ் பக்கத்தில் PAYMENTS என்ற வசதி சேர்க்கப்பட்டிருந்தால் இதனை செயல்படுத்தலாம். உங்களுக்கு பேமெண்ட்ஸ்வசதி காட்டப்படவில்லை யென்றால் அடுத்த அப்டேட்டிற் காக காத்திருக்கவும். அப்டேட் கிடைத்தவர்கள் பேமெண்ட்ஸ் என்பதைத் திறந்து, விபரங்களை அளித்தால் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைந்துள்ள மொபைல் எண்ணிற்கு OTPஅனுப்பப்படும். 
பயனர் உறுதி செய்யப்பட்டவுடன் உங்கள் வங்கிக் கணக்கிற்கான UPI பின் எண்ணை உள்ளிட்டு பேமெண்ட்ஸ் வசதியை செயல்படுத்தலாம்.

வீடியோ கால் வசதியில் புதிய அறிமுகமாக குரூப் சேட் அறிமுகமாகிறது. குரூப்பில் உள்ள அனைவருடனும் ஒரே நேரத்தில் வீடியோ காலிங் முறையில் உரையாட இந்த வசதி உதவும். இது தற்போது சோதனை அடிப்படையில் உள்ளது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

வாட்ஸ்அப் செயலி வழியாக யூடியூப் காணொலிகளை பகிரும் வசதி ஐபோனிற்கு வந்துவிட்டது. விரைவில் ஆண்ட்ராய்ட் போனிற்கும் இந்த அப்டேட் கிடைக்கும் எனத் தெரிகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காது வேணுமா காது?
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத காதுகளில் உள்ள செல்கள் மூலம் புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். சில குழந்தைகளுக்கு மைரோடியா என்ற நோய் தாக்கியதால் பிறக்கும் போதே ஒரு காது வளர்ச்சியடையாமல் உள்ளது.
இந்நிலையில், மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு புதிய காதுகளை பொருத்தி விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர். ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

இந்த நோயால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கை காதுகள் பொருத்தப்பட்டது. ஆனால் பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.
இதைத்தொடர்ந்து இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு புதிய காதுகள் பொருத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய