அரசியல் தலைவருக்கு அழகல்ல.

கமல்ஹாசன் மீண்டும் தவறு செய்துள்ளார்.பாஜக அரசின் பட்ஜெட் விவசாயிகள் பக்கம் பார்வையை திருப்பியுள்ளதாக கூறி மகிழ்ந்துள்ளனர்.
பட்ஜெட் பற்றி பொருளாதார நிபுணர்களிடம் பேசி கருத்து தெரிவிப்பதாக கூறிய அவர் இந்த விவசாயிகள் நலன் பட்ஜெட் என்று ஜெட்லீயை பாராட்டியதை தவிர்த்திருக்கலாம்.

தீர ஆராயாமல் பணமதிப்பிழப்பு பாராட்டைப்போலவே இப்போதும் பேசியது கமல்ஹாசனின் கொள்கை,அரசியல் ஆகியவை குழப்பமானது என்ற எண்ணத்தையே தருகிறது.
பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டபின்னர் அவர் அருகில் உள்ள விவசாய பிரதிநிதிகள் கருதுக்குப்பின் கருத்து தெரிவித்திருக்கலாம்.
விமானம் பிடிக்கும் அவசரத்தில் இதை சொல்லவேண்டிய அவசியமே எழவில்லை.
காரணம் ஜெட்லீ -மோடி பட்ஜெட் மக்கள்,தொழிலாளர்கள்,விவசாயிகள் என யாருக்குமே பயன்படா வழக்கமான கார்ப்பரேட் பட்ஜெட் தான் .87% நிதி தந்தவர்கள் மேலும் பணம் சம்பாதித்து நிதியை அதிகரிக்க உதவும் பட்ஜெட்.

'தற்போதைய பட்ஜெட்டினால் விவசாயிகளின் வாழ்க்கையில் ஏதோ பொற்காலம் பிறக்கப்போவதாகப் கமல்ஹாசன் உடன்பட பலரும் புகழ்கிறார்கள்.  
மோசடியான புள்ளிவிவரங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் வாரி இறைத்துள்ளார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. 
விவசாயக் கடன்களுக்கு 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

ஆனால், இந்த பட்ஜெட்டில் இதற்காக ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை. 

வங்கிகள் வழக்கமாக வழங்கும் கடன்களைத்தான் அலங்கார வார்த்தையில் அறிவித்துள்ளார். இதுவும்கூட விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்காது. 

பழைய கடன்களை அடைத்தால்தான் விவசாயிகள் புதிய கடன்கள் பெறமுடியும்.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நினைத்திருந்தால், விவசாயக் கடன் தள்ளுபடி அறிவித்திருக்க வேண்டும். 
விளைபொருள்களுக்கு உற்பத்திச்செலவில் 1.5 மடங்கு ஆதார விலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும்கூட ஓர் ஏமாற்று அறிவிப்பு. 

இனி வரப்போகும் ஒரு கரிப் பருவத்துக்கு [குறுவை} மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். இந்த ஆண்டு நெல், கோதுமைக்கான ஆதார விலை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 
பெரும்பான்மையாக உள்ள நெல், கோதுமை விவசாயிகளுக்கு இந்த ஒரு பருவத்துக்குக்கூட 1.5 மடங்கு விலை கிடைக்காது.

உற்பத்திச்செலவில் 50 சதவிகிதம் லாபமாக வழங்க வேண்டும் என மத்திய அரசு நினைத்திருந்தால், தேசிய உழவர் ஆணையத்தின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும் என அருண்ஜெட்லி நேர்மையாகத் தெளிவாக அறிவித்திருக்க வேண்டும். 


2019-ம் ஆண்டுத் தேர்தலில், விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளை அள்ளுவதற்காகவே கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் மோடி அரசின் உண்மை முகம் தெரிந்திருந்தும் அரசைப் புகழ்கிறார்கள்.பணமதிப்பிழப்பில் பெற்ற அனுபவத்தையும்,பிறகு கேட்ட மன்னிப்பையும்  மறந்து புகழ்கிறார்கள் .

மறந்தும் கூட மக்களுக்கு நன்மை செய்யா அரசு மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் அரசு.
கமல்ஹாசன் மோடி அரசை புகழ்வதில் எப்போதுமே ஆர்வாகத்தான் இருக்கிறார்.அவரின் கருப்பு சட்டைக்கும்,சிகப்பு சிந்தனைக்கும் மாறாகவே நடந்து கொள்கிறார்.

அவர் படிக்க வேண்டிய அரசியல் படம் இன்னும் நிறைய இருக்கிறது. அல்லது அவரின் அரசியலே ஜெயலலிதா போன்ற திராவிடம் போர்வையில் இயங்கும் ஆன்மிக அரசியல்தானா?என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.
சிறந்த முற்போக்காளர் என்ற கமல்ஹாசன் எந்த கருத்தையும் அரசியலுக்கு நுழைந்த பின் சிந்திக்காமல் தெரிவிக்க கூடாது.எந்த கருத்தும் உடனே ஆழ்ந்த சிந்தனையுடன் தெரிவிப்பதில் அவருக்கு பிடித்த தலைவர் கலைஞரை அவர் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கருத்தையும் சொல்லிவிட்டு (பணமதிப்பிழப்பு போல் )பின் அதற்கு மன்னிப்பு கேட்பது ஒரு பொறுப்புமிக்க நல்ல அரசியல் தலைவருக்கு அழகல்ல.
========================================================================================
எடப்பாடியும் -"திரிபுரா"வும்.
வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில், மார்க்.கம்யூ., ஆட்சி நடக்கிறது. 
தொடர்ந்து, 20 ஆண்டுகளாக, திரிபுராவின் முதல்வராக, இவர் பதவி வகிக்கிறார்.
திரிபுராவில், 18ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச், 3ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தன்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், முதல்வர் மாணிக் சர்க்கார், தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அதில், அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்கள் தமிழக அமைசச்சர் பெருமக்களை கடும் அதிர்சியில் தள்ளி உள்ளது.
மாணிக் சர்க்கார்


மாணிக் சர்க்கார் தன் வங்கிக் கணக்கில், 2,410 ரூபாயும், 
கையிருப்பு தொகையாக, 1,520 ரூபாயும் வைத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 

2013 சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விபரத்தில், வங்கிக் கணக்கில், 9,720 ரூபாய்வைத்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசு ஊழியர் முதல்வராக ஆட்சியில் இருந்த போதும், ஐந்து ஆண்டுகளில், அவரது வங்கி சேமிப்பு, 7,310 ரூபாய் குறைந்துள்ளது. 

மேலும், அவருக்கு சொந்தமாக வாகனம்எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
மாணிக் சர்க்காரின் மனைவி, பாஞ்லி பட்டாசார்ஜி, மத்திய அரசு ஊழிய ராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

அவரிடம், 20 ஆயிரத்து, 140 ரூபாய் கையிருப்பாகவும், 12 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பாக இருப்பதாகவும், 20 கிராம் தங்க நகைகள் வைத்து உள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாணிக் சர்க்கார் மார்க்சிஸ்ட் காட்ச்சியின் முழுநேர ஊழியர் அதனால் 20 ஆண்டுகளாக முதல்வர் ஊதியத்தை அப்படியே மார்க்சிஸ்ட் கட்சி மாநிலத்தலைமைக்குழுவிடம் கொடுத்துவிடுவார்.அவர்கள் மாத குடும்ப செலவுக்கு என ஒரு தொகையை மட்டும் கொடுத்துவிடுவார்கள். மீதி கட்சி நிதி.
தற்போதுதான் 10,000/-அளவுக்கு ஊதியம் உயர்ந்துள்ளது.

தமிழ் நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் ஊதியமே 1,05,000/-முதல்வர் எட்டப்பாடிக்கு?
(சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதி ஒரு கோடியில் 10/- தரகுப் பணம்.தனி வருமானம். )

இவருக்கு முன்னர் முதல்வராக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் நிருபன் சக்ரவர்த்தி.திருமணமாகாதவர். கட்சி அலுவலகத்திலேயே  தங்கியிருந்தார்.
அவர் முதல்வர் பதவியை விட்டு விலகி செல்கையில் முதல்வர் குடியிருப்பில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு தங்க எடுத்து சென்ற பொருள் ஒரே ,ஒரு டிரங் பெட்டியில் மூன்று உடைகள்.மற்றும்  புத்தகங்கள்  மட்டும்தான்.
========================================================================================
ன்று,
பிப்ரவரி-06.
மோதிலால் நேரு

  சிங்கப்பூர் அமைப்பு தினம் (1819)


  • இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேரு இறந்த தினம்(1931)

  • கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் ஏவுகணையான டைட்டன் புளோரிடாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1959)


=========================================================================================
ஆன்டிபயாடிக்.
நம் நாட்டில் கிடைக்கும், 'ஆன்டிபயாடிக்' எனப்படும், கிருமி எதிர்ப்பு மாத்திரைகளில், 64 சதவீதம் போலி, உரிய அனுமதி,முறையின்றி விற்கப்படுவதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.


சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியின்றி மருந்துகள் விற்பது சட்டவிரோதம் என்று அரசு சொல்லிவருகிறது .
ஆனால்  இந்தியா முழுக்க போலி மாத்திரைகள் பல்லாயிரம் கோடிகள் அளவில் விற்பனையாகி வருகிறது.
அதுவும் பகிரங்கமாக அரசு உரிமம் பெற்ற மருந்து கடைகளிலேயே.
அதை மருத்துவர்களும் வெளிப்படையாக தங்கள் மருந்து சீட்டுகளில் பரிந்துரைப்பதும் நடக்கிறது.அது அந்த மருந்து  உரிமம் இல்லாதது தெரியாமலோ,அல்லது அம்மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தரும் கவர்ச்சிகரமான பரிசுகளுக்கவோ என்பது தெரியவில்லை.

 லண்டன் குயீன் மேரி பல்கலையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்திய சந்தையில் விற்கப்பட்ட மருந்து பொருட்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் வெளியான முடிவுகள்  தந்த விபரம்தான் இந்தியாவின் மருதத்துவ உலகம் சீரழிவையும், போலி மருந்துகளை மத்திய சுகாதாரத் துறை,அமைச்சர், 
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் கண்டு கொள்ளாததும் ,அதன் மூலம் பயனடைகிறதா என்ற கேள்வியையும் தந்துள்ளது.


இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மருந்துப் பொருட்களுக்கும், சி.டி.எஸ்.சி.ஓ.,வின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் மருந்துகளை விற்றால், அது சட்டவிரோதமாக கருதப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில்  விற்கப்பட்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகள், எப்.டி.சி., எனப்படும், நிலையான மருந்து பொருட்களின் கூட்டு கலவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 
மொத்தம், 118 வகை மருந்துகளை ஆய்வு செய்ததில், அவற்றில், 64 சதவீதம், .டி.எஸ்.சி.ஓ.,வின் அனுமதியை பெறவில்லை என்பது தெரியவந்தது.

இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தொடர்ந்து, கட்டுப்பாடின்றி, அனுமதி பெறாத, ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தயாரித்து வருகின்றன. 
இதனால், இந்தியாவில், நுண்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி அபாயகரமான நிலையைஎட்டியுள்ளது.இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஆய்வை புறந்தள்ளி 
உலக சுகாதார அமைப்பு  'தற்போது, இந்தியாவில் விற்கப்படும் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகள், நுண்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு பிரச்னையை எதிர்கொள்ளும் வல்லமை படைத்தவையாக இல்லை.
இதனால், நவீன மருந்துகள் தயாரிப்பு வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆன்டிபயாடிக் மாத்திரைகளுக்கு கட்டுப்படாத, காசநோய் கிருமிகளால், ஆண்டுக்கு, 2.5 லட்சம் பேர்உயிரிழக்கின்றனர் .எனவே இன்னும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கப்படவேண்டும்" எனவும்   மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 அது நுண்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு பிரச்னை, உலக சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தி உள்ளன.

இந்த உலக சுகாதார அமைப்புக்கு நிதி உதவி செய்வதும் ,இந்த அமைப்பை உண்டாக்கியதும் பன்னாட்டு,பகாசுர மருந்து தயாரிப்பு நிறுவங்கள்தாம்.


பின் அது எப்படி மக்கள் உடல் நிலையை பாதிக்கும் ஆன்டிபயாட்டிக்கு எதிராக கூவும்?

அமெரிக்காவில் உருவாகி அங்கு மறைந்து சிறிது காலத்துக்குப்பின் ஆப்ரிக்காவில் துவங்கி உலகம் முழுக்க மூன்றாம் உலக,வளரும் நாடுகளில் மட்டும் வேகமாக எய்ட்ஸ் பரவியது எப்படி என்பதை யோசியுங்கள்,புரிந்து  கொள்ளுங்கள்.
=========================================================================================
வாழை இலை எடுத்துட்டு வா சேகர்..

  வாழை இலையில்தான் பெரியவா சவ்ஜாலம் (மலம்) கழிப்பார்.-செய்தி.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?