வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

தமிழக ரயில் திட்டங்கள் அம்போ!

தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு மத்தியில்உள்ள மோடி அரசு போதுமான நிதியை ஒதுக்காமல்எப்படி வஞ்சிக்கிறது என்பது மத்திய அரசு  கொடுத்துள்ள புள்ளி விவரங்கள், நிதி ஒதுக்கீடுகள் மூலமாகவே அம்பலமாகிறது.

2018 - 22018-19 க்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டாலும் ரயில்வே திட்டங்களுக்கு பிங்க் புக் என்ற திட்ட ஒதுக்கீட்டுப் பட்டியல் பிப்.6 அன்று தான் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல்படி தெற்கு ரயில்வேக்கு ரூ. 2932 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு ரூ.3610 கோடியாக இருந்தது. ரூ.700 கோடிகுறைக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தொகை அகலப்பாதை, இரட்டைப்பாதை, புதிய பாதை ஆகிய திட்டங்களோடு தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல் புதுப்பித்தல், ரயில்வே மேம்பாலங்கள் கட்டுதல், பயணிகள் வசதிகள் செய்து தருதல், ரயில்வே ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான மூலதனக் கணக்கிலான ஒதுக்கீடு ஆகும்.


அதிர்ச்சியளிக்கும் வெட்டுக்கள்
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை புதிய பாதைகள், அகலப் பாதைகள், இரட்டைப்பாதைத் திட்டங்கள் தான் முக்கிய மானவையாகும்.
n புதிய பாதை திட்டங் களுக்கு தெற்கு ரயில் வேக்கு சென்ற ஆண்டு ஒதுக்கி யது ரூ. 303 கோடி. இந்தாண்டு ரூ.159 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.
n அகலப்பாதை திட்டங்களுக்கு சென்ற ஆண்டு ஒதுக்கியது ரூ.429 கோடி. இந்தாண்டு ரூ.239 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.
n இரட்டைப்பாதைத் திட்டங்களுக்கு தெற்கு ரயில்வேக்கு மூலதனக்கணக்கில் சென்ற ஆண்டு ரூ.94 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.54 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
n மொத்தம் இந்த 3 திட்டங்களுக்கும் சேர்த்து சென்றாண்டு ஒதுக்கியது ரூ.826 கோடிதான். அதுவே இந்தாண்டு ரூ.463 கோடியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
n புதிதாகப் போடப்படும் பாதை திட்டங்களுக்கு தமிழ்நாட்டி ற்குச் சென்ற ஆண்டு ரூ.188
கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு வெறும் ரூ.49
கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. 
தேவையோ ரூ.11 ஆயிரம் கோடியாகும்.
n உதாரணமாக திண்டிவனம் -செஞ்சி புதியபாதைக்கு சென்றாண்டு ரூ.19 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு ஒதுக்கீடு ரூ.10 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
n திண்டிவனம் - நகரி திட்டத்திற்கு சென்றாண்டே பரவாயில்லை எனலாம். ரூ.47 கோடியை ஒதுக்கினார்கள். இந்தாண்டு வெறும் ரூ.10 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
n அத்திப்பட்டு - புத்தூர் திட்டத்திற்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக அதாவது ரூ.1 கோடி மட்டும் உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான தேவையோ ரூ.528 கோடியாகும்.
n ஈரோடு - பழனி திட்டத்திற்கு ரூ.603 கோடி தேவை. சென்ற ஆண்டு ஒதுக்கியது வெறும் ரூ.10 லட்சம். இந்தாண்டும் வெறும் ரூ.10 லட்சம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
n சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூருக்கு கிழக்கு கடற்கரை சாலை ரயில் திட்டத்திற்கு ரூ.2350 கோடி தேவை. சென்றாண்டு ஒதுக்கியது ரூ.10 லட்சம். இந்தாண்டு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
n மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ.1500 கோடி திட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.20 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
n திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி திட்டத்திற்கு ரூ.1500 கோடி தேவை. சென்றாண்டு ஒதுக்கியது ரூ.10லட்சம். இந்தாண்டு ரூ.10 லட்சம் கூடுதலாக மொத்த ஒதுக்கீடு ரூ.20 லட்சம்.
n மொரப்பூர் தருமபுரி திட்டமதிப்பீடு ரூ.358 கோடியாகும். இதற்கு சென்றாண்டு ஒதுக்கியது ரூ.10 லட்சம். இந்தாண்டு ஒதுக்கியது ரூ.1 கோடி.
n அகலப்பாதைத் திட்டங்களில் முக்கியமானது காரைக்கால் - பேரளம் திட்டமாகும். இதற்கு சென்ற ஆண்டு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
n இயற்கை எழில்மிக்க தென்காசி- கொல்லம் அகலப்பாதை முடிவடையும் தருவாயில் உள்ளது. சென்றாண்டு ரூ.41 கோடி ஒதுக்கப்பட்டது.இந்தாண்டு ரூ.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை கேரளாவிற்குள் செல்வதால் அந்த மாநில எம்.பி.க்கள் வலியுறுத்தியதன் பேரில் தொகை சற்று அதிகரித்திருக்கக் கூடும்.
n திண்டுக்கல் - பொள்ளாச்சி திட்டத்திற்கு ரூ.35 கோடி சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
n தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை, மன்னார்குடி பட்டுக்கோட்டை திட்டத்திற்கு சென்றாண்டு ரூ.240 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.64 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
n மதுரை - போடி நாயக்கனூர் அகலப்பாதை திட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.70 கோடியும் இந்தாண்டு ரூ.80 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக ஏ.லாசர் இருந்த போது, இந்தத் திட்டத்திற்காக போராட்டம் நடத்தியதோடு அப்பகுதியைச் சேர்ந்த அனைத்துக்கட்சித் தலைவர்களை தில்லி வரை அழைத்துச் சென்று ரயில்வே அமைச்சரைச் சந்தித்து முறையிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
ரூ.2500 கோடிக்கு வெறும் ரூ.228 கோடி
தமிழகத்தில் அனைத்து அகலப்பாதைத்திட்டங்களும் முடிவடையத் தேவையான தொகை ரூ.2500 கோடி. சென்றாண்டு ஒதுக்கியது ரூ.426 கோடி. இந்தாண்டு வெறும் ரூ.228 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.

முடியாத திட்டத்திற்கு விளம்பரப் பலகைகள்
விழுப்புரம்- திண்டுக்கல் 273 கி.மீ தூர இரட்டைப்பாதைத் திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு 3ஆவது பாதைக்கு ரயில்வே அமைச்சர் அடிக்கல் நாட்டி விரைவில் முடிக்கப்படும் என்று ஆங்காங்கே விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்கு ரூ.300 கோடி தேவை. நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனுக்கு அளித்த பதிலில் நடப்பாண்டு ரூ.113 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 
ஆனால் இந்த பட்ஜெட்டில் இதுவரை ஆன செலவு என்ற வகையில் ரூ.2.27கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கு ரூ.2 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் முடிவடைவதை பொறுத்துத்தான் செங்கல்பட்டிற்கும் தாம்பரத்திற்கும் இடையே பயணிகள் நெரிசலைத் தவிர்க்க அதிக ரயில்கள் விடுவது சாத்தியமாகும்.
இதுகுறித்த அக்கறையற்றதாக பட்ஜெட் ஒதுக்கீடுகள் உள்ளன.

கிடப்பில் போடப்படும் மதுரை -கன்னியாகுமரி திட்டம்
அடுத்த முக்கியமான திட்டம் மதுரையில் இருந்து மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு மின்மயத்துடன் கூடிய இரட்டைப்பாதை திட்டம். 
அதேபோல மணியாச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு மின்மயத்துடன் கூடிய இரட்டைப்பாதைத்திட்டம், கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கான மின்மயத்துடன் கூடிய இரட்டைப்பாதை திட்டம் என மூன்று திட்டங்களும் ஐந்தாண்டுகளில் முடிக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவித்தது. 
இந்த 3 திட்டங்களுக்கும் தேவையான நிதி ரூ.3500 கோடியாகும். 
அதாவது ஆண்டுக்கு ரூ.700 கோடி செலவு செய்யவேண்டும். அப்போதுதான் ஐந்தாண்டுகளில் இந்தத் திட்டம் முடிவடையும். ஆனால் சென்ற பட்ஜெட்டில் இந்த மூன்று திட்டங்களுக்கும் மூலதனக்கணக்கில் ரூ.110 கோடிதான் ஒதுக்கப்பட்டது. 
அதாவது ரூ.600 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டது. அடுத்தாண்டுக்கு மூலதனக்கணக்கில் ரூ.10 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத்துறையிடமிருந்து பெறுவதாக இருக்கிற கடன் தொகை வந்தால் இந்த 3 திட்டங்களுக்கும் ரூ.250 கோடி பட்ஜெட்டுக்கு வெளியில் இருந்து செலவு செய்யப்படுமாம்.
ஆர்.இளங்கோவன்,

2022இல் ஆவது முடியுமா மதுரை-குமரி திட்டம்?
அடுத்தாண்டுக்கு சென்ற ஆண்டின் பாக்கியாக ரூ.600 கோடியும் அடுத்தாண்டுக்கான ரூ.700 கோடியும் சேர்த்து அடுத்த ஆண்டுக்கு ரூ.1300 கோடி ஒதுக்கினால்தான் திட்டம் திட்டமிட்டபடி 5 ஆண்டுகளில் முடிவடையும். 

ஆனால் மூலதனக்கணக்கிலும் பட்ஜெட்டுக்கு வெளியிலும் சேர்த்து ஒதுக்கியிருப்பதோ ரூ.260 கோடி தான். எனவே எல்லாத்திட்டங்களையும் போல இந்த முக்கியமான மதுரை - கன்னியாகுமரி இரட்டைப்பாதைத்திட்டம் கிடப்பில் போடப்படும் அபாயம் எழுந்துள்ளது.

 2022 ஐ தாண்டியும் முடியுமா? என்ற கேள்வியை அதுஎழுப்புகிறது. இரட்டைப்பாதை திட்டங்களுக்கு தமிழகத்திற்கு மொத்த தேவை ரூ. 4500 கோடியாகும். ஒதுக்கியிருப்பதோ வெறும் ரூ.300 கோடிதான். சென்ற ஆண்டின் ரூ.327 கோடிக்கும் இது குறைவானதாகும். 

எனவே தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கக்கோரி தமிழக மக்கள் புலம்பிப் பயனில்லை; அரசியல் கட்சிகளும், ரயில் பயணிகள் சங்கங்களும், வணிகர்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்தால்தான் அசையமறுக்கும் மத்திய அரசை அசைக்கமுடியும்.

இதில் முக்கிய குறிப்பு ஒன்றுள்ளது.
தமிழ்நாடு உடைபட்ட தென்மாநிலங்களில்தான் முறையாக ரெயில் கட்டணம் செலுத்தி பயணம் செய்வோர் 98%.
வடமாநிலங்களில் இது 60%க்கும் குறைவே.அவர்கள் மீது நடவடிக்கையும் கிடையாது.
முன்பதிவு இருக்கையில் அமர்ந்து கொண்டு இடம் தர மறுப்பது,
விரும்பும் இடத்தில் ரெயிலை நிறுத்தி ஏறுவதும் இறங்குவதும் ,கொள்ளையடிப்பதும் அங்கு சர்வசாதாரணம்.
அப்படி பட்டவர்களுக்குத்தான் ரெயில் பட்ஜெட்டில் வசதிகள் வாரி வழங்கப்படுகிறது.
  ஆர்.இளங்கோவன்                                                                                                                                         நன்றி:தீக்கதிர், 
=======================================================================================
பிரதமரின் பிதற்றல்

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்திற்கு ஆவேசமாகப்பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்திருக்கிறார். 
உண்மையில் அவர் ஆவேசமாகப் பேசவில்லை. 
ஆத்திரத்தில் ஏதேதோ பிதற்றியிருக்கிறார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
காரணம் மத்தியில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று வரும்மே மாதத்துடன் நான்கு ஆண்டுகள் ஆகப்போகிறது. 
அடுத்தாண்டு நாடு பொதுத்தேர்தலைசந்திக்கவுள்ள நிலையில் பொருளாதாரம், வெளியுறவு உள்பட அனைத்துத் துறைகளிலும்இந்த அரசுக்கு தோல்விமுகம்தான். இந்தப்பின்னடைவை மறைக்கவே சம்மந்தம் இல்லாமல் வேறு எதை எதையோ பிரதமர் பேசி யிருக்கிறார். 

2014ஆம் ஆண்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த விலை ஸ்திரத்தன்மை நிதியம் அமைக்கப்படும், ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்தபோது கறுப்புப் பணத்தை இவர்கள் எப்படி ஒழித்தார்கள் என்பதை நாடேகண்டது.
 மணல் கொள்ளையன் சேகர் ரெட்டிவீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புத்தம் புதிய2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே அதற்கு சாட்சி.வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு என்னநடவடிக்கை எடுத்தது என்ற கேள்விக்கு பதில்அளிக்காமல் நேருவுக்குப் பதில் வல்லபாய் பட்டேல் பிரதமராகப் பதவி ஏற்றிருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இப்படி பேசியதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தனது தோல்வியைப் பிரதமரே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று தான் கருதவேண்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் பல மாநில அரசுகளைக் கவிழ்த்தது என்பது உண்மைதான்.
ஜனநாயக பாதுகாவலர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இவர்கள் என்ன செய்தார்கள்.

தலைநகர் தில்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசையும்,புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசையும் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட அனுமதித்தார்களா? 

இரண்டு மாநிலங்களிலும் துணை நிலை ஆளுநரைக்கொண்டு நித்தம் நித்தம் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 
பீகாரில்ஐக்கிய ஜனதா தளத்தை உடைத்து ராஷ்டீரியஜனதாதளத்தை கழற்றிவிட்டார்கள். 
அருணாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர்பேமா காண்டுஉள்பட ஒட்டுமொத்தமாகச்சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிகொள்ளைப்புறமாக பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளனர். 
மணிப்பூரில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சியையே காலி செய்துவிட்டுகட்சி தாவியவர்களை கொண்டு அரசுஅமைத்தார்கள். 
இப்படிப்பட்ட நாள்தோறும் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கும் பிரதமர் மோடியும் அவரதுகட்சியினரும் ஜனநாயகம் பற்றிபேசுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையாக உள்ளது.
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-09.
  • வில்லியம் மார்கன், வாலிபாலை கண்டுபிடித்தார்(1895)
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது(1900)
  •  பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது(1942)
  • பொதுநலவாய அமைப்பினுள் ஜமைக்கா விடுதலை பெற்றது(1962)
======================================================================================